ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
யாழில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார். பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று, யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும். …
-
- 9 replies
- 777 views
-
-
‘நான் ஒரு தமிழ் குடிமகன்’; நிதி நிறுவனம் வழங்கிய சிங்களத்தில் படிவத்தில் எழுதிக் கொடுத்த இளைஞன்: யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார். அத்துடன், சிங்கள மொழியிலான படிவத்தின் மேல், ‘எனது தாய் மொழி தமிழ். தமிழ் படிவம் வழங்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அந்த இளைஞன் பே…
-
- 9 replies
- 704 views
-
-
''உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் அலி சப்ரி கருத்தும், கேள்விகளும் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALI SABRY FB படக்குறிப்பு, நீதி அமைச்சர் அலி சப்ரி ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…
-
- 3 replies
- 523 views
- 1 follower
-
-
ஜெனிவா கூட்டத்தொடரில் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள கணநாதன் பேச்சு (ஆர்.யசி) இம்மாத இறுதியில் கூடவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆபிரிக்க கண்டத்தில் இருபது நாடுகளுக்கான உயர் ஸ்தானிகரும், ஆபிரிக்காவிற்கான இலங்கை பிரதமரின் சிறப்பு தூதுவருமான வேலுப்பிள்ளை கணநாதன் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுதும் அதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சகல ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் பரந்த அளவிலான பேச்சுவ…
-
- 3 replies
- 515 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - துணைவேந்தர் பேச்சுவார்த்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் முடக்கல் போராட்டத்தை இன்று காலை முன்னெடுத்துள்ள நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.ஸ்ரீ சற்குணராஜா மாணவா்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இன்று காலை முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலை மூடி மாணவா்கள் முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக செயழிழந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறு கோரியும் இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடியும் மாணவா்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் பல்கலைகழக ஊழியா்கள், ஆசிரியா்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது…
-
- 1 reply
- 439 views
-
-
இந்தியாவை தோற்கடிப்பதற்காக – இலங்கையை கட்டுப்படுத்துவதற்காக சீனா புதிய தந்திரோபாயத்தை பயன்படுத்தலாம்- கொள்கை ஆய்வுகுழு இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிற்கும் புதுடில்லிக்கும் இடையிலான இராஜதந்திர செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் இலங்கையை கட்டுப்படுத்துவதற்கு சீனா புதிய தந்திரோபாயத்தினை பயன்படுத்தலாம் என கொள்கை ஆய்வுக்குழு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் நிதியமைச்சர் அடுத்த சில நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்,பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. மார்ச் 30 ம் திகதிஇடம்பெறவுள்…
-
- 0 replies
- 181 views
-
-
மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல-கோவிந்தன் கருணாகரம் February 17, 2022 மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. அதை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறு தமிழ்க்கட்சிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெ…
-
- 0 replies
- 198 views
-
-
மைத்திரிபால சிறிசேன, யாழிற்கு விஜயம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்போது, யாழ். மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த மைத்திரிபால சிறிசேன, யாழ். மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார். https://athavanne…
-
- 2 replies
- 408 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்ப…
-
- 2 replies
- 251 views
-
-
ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்! சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளார். 2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. குறித்த அரசாங்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1267…
-
- 0 replies
- 116 views
-
-
இந்த வருடத்திற்குள் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் அபாயம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர், தற்போது சந்தையில் டொலரின் உண்மையான பெறுமதி 250 ரூபாவிற்கும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். அவரது அறிக்கையில், பொருளாதாரம் இன்னும் சீரழிந்து வருகிறது. டொலர் பற்றாக்குறை தீர்க்கப்படவில்லை. ரூபாய் பற்றாக்குறை இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று ரூபாயின் உண்மையான மதிப்பு டொலருக்கு ரூ.250 இதிலும் அதிகம்.. இதன் மூலம் ரூ. 275 வரையும் உயரும். அதோடு நிறுத்தவில்லை என்றால், அது ஆண்டு இறு…
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிங்களவரின் மூதாதையர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வரவில்லை. ஆரியர் வருகை என்பது கட்டுக்கதை. உள்நாட்டிலேயே ஆதியில் இருந்து வந்த மக்கள் தான் தமிழர்களதும் சிங்களவர்களதும் மூதாதையர்கள். இரு இனங்களும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்பது வரலாற்று ரீதியாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்து வந்த காலம் இற்றைக்கு 3000 வருடங்களில் இருந்து இற்றை வரையிலாகும். எமது மூதாதையர்களில் சிலர் சிங்கள மக்களாக மாறியது சிங்களமொழி நடைமுறைக்கு வந்த கி.பி 6ம், 7ம் நூற்றாண்டுகளிலாகும் என கூட்டிக்காட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் எம்.பி. 6 தமிழ் கட்சிகளின் கூட்டு ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த அ…
-
- 15 replies
- 898 views
-
-
இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப்பெட்டி, இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் Published by T Yuwaraj on 2022-02-15 21:55:53 (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள் மற்றும் எஞ்சின்களை பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறதால் அரச நிதி மாத்திரம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்…
-
- 5 replies
- 478 views
-
-
மாபெரும் போராட்டத்திற்கு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு! வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம். …
-
- 1 reply
- 262 views
-
-
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் நாளை முதல் யாழ்.போதனாவில் மீள ஆரம்பம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான…
-
- 0 replies
- 230 views
-
-
சர்வதேசத்தை நாடினால்... வரும் விளைவுகளை, அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கர்தினால் எச்சரிக்கை வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது. குறித்த நடவடிக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மேலும் தாம் சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அவர் கண்டனம் வெளியிட்டார். சட்டமா …
-
- 2 replies
- 566 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் ஆராய்வு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுகூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதேநேரம், ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் – தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடனான கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1267245
-
- 0 replies
- 185 views
-
-
மத்திய கிழக்கில் கைவிடப்படும் தமிழ்ப் பெண்கள் – நடவடிக்கைக்குத் தயாராகும் த.தே.ம.முன்னணி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை செய்வதற்குச் சென்று கைவிடப்படும் தமிழர்கள் விசேடமாகப் பெண்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி. இ. ஸ்ரீஞானேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்புக்களுக்காகச் செல்லும் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் சார்பாகத் தமக்குப் பல காணொளி முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு கைவிடப்பட்டுள்ள தமிழர்கள் சார்பாக தாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய க…
-
- 0 replies
- 239 views
-
-
இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம் கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்த அவரின் சடலம் கேகால…
-
- 1 reply
- 336 views
-
-
புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நபர் நிரபராதி என தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, யாழ்ப்பாணம் – விக்ணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகர் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின்படி இறுதி யுத்தகால பகுதி…
-
- 0 replies
- 152 views
-
-
இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இம்முறை கடுமையாக இருக்கும் – சித்தார்த்தன் அரசாங்கத்திற்கு ஆதரவாக விடயங்களை திரட்டம் முகமாகவே அமைச்சர்கள் அலி சப்ரி, ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் வடக்கில் நீதிச் சேவை முகாம்களை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார்.அத்துடன் இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இம்முறை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக இருக்கும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே கடிதம் ஒன்றை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ள நிலையில் அனைத்து…
-
- 1 reply
- 323 views
-
-
இனம், மதம் மற்றும் மாகாண அடிப்படையில் மக்களை நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டாம் – மனோ கணேசன் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை உண்மையாக ஏற்றுக்கொண்டால், நாட்டை இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தின் கீழ் இந்த நாட்டை அரசாங்கம் கொண்டு வர முடிந்தால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஆனால் தற்போது சிங்கள சமூகத்திற்கென தனிச் சட்டம், தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கென தனிச் சட்டம் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, இனம், மதம் மற்றும் மாகாண அடிப்படையில் மக்களை நடத்தி…
-
- 0 replies
- 125 views
-
-
அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாக்கியசோதி சரவணமுத்தூவினாலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 387 views
-
-
ஐ.ஓ.சி.யினால் வழங்கப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் கையளித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அமைச்சரவை பெப்ரவரி முதல் வாரத்தில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கையிடம் கையளித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk
-
- 13 replies
- 772 views
- 1 follower
-
-
சுஐப் எம். காசிம்- மனிதனின் வாழ்வாதாரப் பிரச்சினை, கடல்வாழ் உயிரினங்களையும் விட்டபாடில்லை. ஒருசாண் வயிற்றுக்கான போராட்டம், இன்று பலகோடி ஜீவன்களை பலியெடுக்கும் நிலைமைக்கு மாறிவருவதுதான் கவலை. இன்றைய தேவைக்காக என மனிதன் வாழ்ந்தால், இயற்கை இவ்வளவு சீரழிக்கப்படாது. இயற்கை விரும்பிகளும் இதைத்தான் விரும்புகின்றனர். அளவுக்கு அதிகமான நுகர்வு, மனிதனின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்தாவது பற்றி எவர் கருத்தில்கொள்கின்றனர்? தமிழக மற்றும் வடபகுதி மீனவர் பிரச்சினையும் இப்படித்தானுள்ளது. தொப்புள்கொடி உறவென்றும், இணைபிரியா உணர்வு என்றும் ஒன்றுபட்டுள்ள இவர்களின் பிரச்சினை, "தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதையே உணர்த்துகிறது. தலைமன்னார், தனுஷ்கோடி இன்னும் ராமேஸ்வர…
-
- 0 replies
- 248 views
-