ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
நான்கு இந்திய படகுகள் ஏலத்தில் விற்பனை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட நான்கு இந்திய படகுகள் புத்தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது கைப்பற்றப்பட்டு கற்பிட்டி ஆணவாசல் கடற்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவப்படகுகளே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் தலைமையில் படகு ஒன்று தலா 51000 ஆயிரம் ரூபா வீதம் நான்கு படகுகளும் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த படகுகள் ஏல விற்பனைக்கு யாழ்ப்பாணம், குருணாகல், வாரியாப்பொல உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20க்கு மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தன…
-
- 0 replies
- 254 views
-
-
கச்சதீவு திருவிழாவிற்கு இந்தியர்களை அழைக்க டக்ளஸ் கடும் பிரயத்தனம் : ஸ்டாலினின் சமிக்ஞைக்காக காத்திருப்பு (ஆர்.ராம்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கு இந்தியர்களை அனுமதிப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்கள் இடையே நடைபெறும் குறிப்பாக தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் நேரடியான பேச்சுவார்த்தையொன்று அவசியமாக இருந்தால் அதனை முன்னெடுப்பதற்கும் அவர் தயராக இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்தவாரத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவான…
-
- 0 replies
- 261 views
-
-
வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் நாடு ; மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்கவேண்டும் - அரசியல்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை (நா.தனுஜா) நாடு தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய வரலாறு காணாதவகையிலான மிகமோசமான பொருளாதார நெருக்கடியானது நீண்டகால மற்றும் குறுங்கால அடிப்படைகளில் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதுடன் இப்பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் மிகத்துரிதமாக முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அத்தோடு தேசிய பொருளாதாரக்கொள…
-
- 0 replies
- 155 views
-
-
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை 02 இந்திய இழுவை படகுகளுடன் கைது செய்துள்ளனர்.. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்களால் உள்ளூர் மீனவ சமூகம் மற்றும் இலங்கையின் மீன்பிடி வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கை கடற்படை வழக்கமான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வடமத்திய கடற்படை கட்டளையானது தலைமன்னாருக்…
-
- 1 reply
- 418 views
-
-
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம் இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைம…
-
- 8 replies
- 750 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்ற குறித்த அதிகாரி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தேசிய பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது பெயரிடப்பட்ட சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரன் மன்னாரில் இருந்து படகில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவுக்கு அறிவித்…
-
- 0 replies
- 216 views
-
-
"இலங்கையில் 4 அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு" - ஒப்புக்கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BASIL RAJAPAKSA FACEBOOK இலங்கையில் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கோதுமை மா, பால் மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து (சிமெண்ட்) ஆகிய நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. கோவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் அந்நிய …
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது- நாமல் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையோ அல்லது சர்வதேசசக்திகளோ சிறைக்கைதிகள் தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு பிரச்சினைகள் எழாது என குறிப்பிட்டுள்ள அவர் சிறைக்கைதிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்துவேன் என ஜனாதிபதி தனது கொள்கை உரையில் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் இடநெருக்கடியை குறைக்க தீர்மானித்துள்ளோம்,நீதிமன்ற விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப…
-
- 3 replies
- 625 views
-
-
பட்டிருப்பில் இணைந்த கணித மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நீதியான பக்கச்சார்பற்ற நடுநிலையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் ஒரு சிரேஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளர்கள் இருக்கும் போது கனிஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளரிடம் பரீட்சை மேற்பபார்வையார்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதனாலேயே பட்டிருப்பில் இணைந்த கணிதம் பரீட்சையின் போது குழறுபடி ஏற்பட்டது. மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நீதியான, பக்கச்சார்பற்ற நடுநிலையான விசாரணையை முன்…
-
- 0 replies
- 216 views
-
-
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம்! கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அந்த சங்கத்திள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின்போதே, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள்…
-
- 0 replies
- 179 views
-
-
கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் – சுமந்திரன் கடன்களை பிறிதொரு திகதியில் திருப்பிச் செலுத்துவது குறித்து ஆராய வேண்டும்..! கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணை குறித்து அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகேள் விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனும் மூன்று முக்கிய குழுக்களின் தலைவர்களுடனும் அவர் இரண்டு சுற்றுபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்…
-
- 8 replies
- 414 views
-
-
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு... வருகையின் பின்னரான, விசா அனுமதியை வழங்க நடவடிக்கை! இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ (On arrival visa) அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளதென்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களுள் 42 சதவீதமானோர் இந்திய சுற்றுலாப் பயணிளே என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு வந்ததன் பின்னர், தங்களது விசா அனுமதியைப் பெற்றுக் கொ…
-
- 0 replies
- 272 views
-
-
சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தவர் உட்பட 9 பேர் கைது – மட்டக்களப்பில் சம்பவம்! வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இன்று (சனிக்கிழமை) காலை அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டனர். இதன்போதே, முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது, ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குறித்த வ…
-
- 0 replies
- 214 views
-
-
குமாரபுரம் படுகொலையை நினைவேந்த முயன்ற மக்களை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்! – த.தே.ம.மு. கண்டனம் மூதூர் குமாரபுரம் கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் நினைவேந்தலை உறவுகள் முன்னெடுக்க முனைந்தபோது புலனாய்வாளர்கள் கடும் அச்சுறுத்தலை மேற்கொண்டதனைத் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.02.1996 அன்று சுற்றிவளைக்கப்பட்டு குமாரபுரம் மக்கள் படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய போது கர்ப்பிணிப் பெண்கள் உட்ப…
-
- 0 replies
- 150 views
-
-
“கொலைக்குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி”-வவுனியாவில் போராட்டம்! AdminFebruary 11, 2022 கோத்தபாயவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை சிறிலங்கா காவல்துறையினர் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன், காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழா நிகழ்வு பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கோத்தாவின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதனையடுத்து அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் …
-
- 0 replies
- 201 views
-
-
சர்வதேச கடன்களை மீள் கட்டமைப்பதற்கு நாடுகளுடன் பேச்சு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை கையாளவும் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில் மீள் கட்டமைப்பை செய்வது குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற நிதிக்குழுக்கள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். விரைவில் அரசாங்கத்திற்கு எழுத்துமூல அறிக்கை ஒன்றினை வழங்கவும் தீர்மானித்துள்ளனர். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடிகள் குறித்து ஆராயும் விதமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்ப…
-
- 0 replies
- 209 views
-
-
விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்பு முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆராய்வு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்பு முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த…
-
- 0 replies
- 172 views
-
-
முல்லைத்தீவில் வேப்ப மரத்தை வெட்டி அகற்றிவிட்டு அரசமரம் நட்டு வளர்க்கும் படையினர் கே .குமணன் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் மணலாறு செல்லும் பாதை பிரிந்து செல்லும் மூன்று சந்தியில் செழிப்பாக வளர்ந்துவந்த வேப்ப மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு அரச மரக்கன்று ஒன்றை அதே இடத்தில் நாட்டி வளர்க்கும் வேலையை படையினர் மேற்கொண்டுள்ளார்கள் . குறித்த பகுதியில் கடந்த சிலவருடங்களாக செழிப்பான வகையில் வளர்ந்த வேப்பமரம் ஒன்று காணப்படுத்துள்ளது. அந்த மரம் அந்த சந்தியில் இருந்ததுக்கான ஆதாரமாக 2016 ஆம் ஆண்டு கூகுள் நிலப்படங்களில் அந்த மரம் காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் அந்த சந்தியில் காணப்பட்ட வேப்ப மரம் இராணுவத்தினரால் வெ…
-
- 30 replies
- 1.4k views
-
-
இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் - புத்திக பத்திரன (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததால் இராவணன் தொடர்பாக முறை சார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை மன்னன் இராவணன் தொடர்பாக உறுதியான வரலாற்றுச் சான்றுகள் இல்லாத போதிலும், முறை சா…
-
- 1 reply
- 366 views
-
-
தங்கம் வென்ற முல்லை யுவதியை கௌரவித்த கோட்டாபய! பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமையைத் தேடித் தந்த முல்லைத்தீவு மாவட்ட வீராங்கனை கணேஷ் இந்துகாதேவியை அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கௌரவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து யுவதி அரச தலைவரால் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கணேஷ் இந்திராதேவி கடந்த மாதம் 18ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது சிறிலங்கா பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெ…
-
- 0 replies
- 490 views
-
-
தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் திறந்து வைப்பு! யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) இடம்பெற்றது. இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வவுனியா வளாகத்தை …
-
- 0 replies
- 274 views
-
-
வைத்திய சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்! சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த அதிவிசேட வர்த்தமானி…… https://drive.google.com/file/d/13ip1bxfwg-HvLme61W8RWfEgRf0ygGYR/view https:/…
-
- 0 replies
- 118 views
-
-
by கதிர் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை கைய கப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொக்கிளாய் பாட சாலை முன்பாகப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் புள்ளியான கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்க்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வளவளத் திணைக்களம் …
-
- 8 replies
- 669 views
-
-
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
-
- 32 replies
- 1.7k views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய திட்டத்தை, அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெறும் எரிபொருள் உச்சி மாநாட்டில் தான் முன்வைத்து, தனியார் துறையையும் இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிலுள்ள எம் - 02 என்ற பிரிவை ஏலத்தில் விடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஏலம் நிறைவடைந்து, நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டதன் …
-
- 6 replies
- 613 views
-