ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
பசில் ராஜபக்ஸ தலைமையில் புதிய குழு! February 8, 2022 சுங்கத்தின் வசமுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் புதிய குழுவொன்றை நியமிக்கவும் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07.02…
-
- 0 replies
- 195 views
-
-
2009ன் இறுதிக்கட்ட மோதல், தமிழ் இனப் படுகொலை அல்ல! என்கிறது இலங்கை! February 8, 2022 மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ´இனப்படுகொலை´யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது. கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டு…
-
- 0 replies
- 228 views
-
-
நெடுந்தீவு கடற்பரப்பில் 16 தமிழக மீனவர்கள் கைது! February 8, 2022 நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்றைய தினம் (07.02.22) இரவு கைது செய்யப்பட்டதுடன், இவர்களது , மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீரியல்வள திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எட…
-
- 5 replies
- 429 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-07 22:33:42 (ஆர்.யசி) இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாகவும், இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் தமிழக மீனவர் அமைப்புகள் நாளை சென்னையில் உள்ள தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். இலங்கையின் வட கடல் எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு பாரிய பாதிப்பும் அநீதியும் ஏற்படுவதாக தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்ற நிலைய…
-
- 3 replies
- 616 views
-
-
Published on 2022-02-07 11:25:04 (கே .குமணன்) தொல்லியல் அகழ்வு இடம்பெற்று விகாரை அமைக்கப்பட்டுவரும் முல்லைத்தீவு குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு சனிக்கிழமை 5 ஆம் திகதி வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி பி ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக சுந்திரத்தின நாளான கடந்த 04 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன் , சிவஞானம் ஸ்ரீதரன் , இரா .சாணக்கியன் உள்ளிட்டோர் சுதந்திர தின நாளுக்கு எதிர்ப்பை வெளியிடும் முகம…
-
- 2 replies
- 423 views
-
-
65 மில்லியன் செலவில் பட்டிப்பளை பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம்! ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரண்டு பகுதிகளுக்கான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின், பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, முதலைக்குடா மற்றும் அம்பிளாந்துறை ஆகிய பகுதிகளுக்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினை பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் …
-
- 0 replies
- 262 views
-
-
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு! பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி 2 படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர். வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, தமிழக மீனவர்களை கைது செய்தனர். அன்றைய தினம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் 1ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இன்று (திங்கட்கிழமை) வரையில் விளக்க மறியலில் வைக்க…
-
- 0 replies
- 245 views
-
-
தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தில் விற்பனை! யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இவ்வாறு ஏலத்தில் விறபனை செய்யப்படவுள்ளது. அன்மைக்காலமாக இந்திய மீனர்வர்களின் அத்து மீறல்கள் அதிகரிப்பதனை கண்டித்து மீனவர்கள் தொடர் போர்டாட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில் குறித்த ஏல விற்பனை இன்று ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1265812
-
- 8 replies
- 582 views
-
-
இரு சிங்கள கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி! February 7, 2022 அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள மண்டபமொன்றில் சிரதம்பரபுரம் கோமரசன்குளம் மதுராநகர் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடியே போது கருத்து வெளியிட்ட அவர், 2015இல் இருந்து 2019 வரையும் வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த சிங்கள குடியேற்றங்களை தாம் த…
-
- 0 replies
- 286 views
-
-
நெற்றிக்கண் | 05.02.2022 | 13வது திருத்தம்: புலிகள் ஏற்றுக்கொண்டனரா? https://fb.watch/a-EYOC2vcH/
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசலையில் ஒரு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மருத்துவ முகாமில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 71 மாணவர்களுக்கு பார்வை பிரச்சினை இருப்பதாக பரிசோதனை மேற்கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்தது. இதுவே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பாடசாலையில் கண் பரிசோதனை நடந்ததன் பின்னணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஒரு உயரதிகாரி மற்றும் கலாச்சார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் தர்மபுரம் பிரதேசத்தில் கலைஞர்கள், மதகுருமார்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்று இடம்பெற்ற போது அதில் மேற்குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்…
-
- 1 reply
- 420 views
-
-
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை - நோக்கம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PROF. G L PEIRIS/FACEBOOK இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்று இந்தியாவிற்கு மூன்று நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருவது, மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளி…
-
- 8 replies
- 631 views
- 1 follower
-
-
மீனவர்களின் கோரிக்கைக்கு நீதித்துறை மதிப்பளிக்க வேண்டும் – சுமந்திரன் நீதித்துறைக்கு மதிப்பளித்து மீனவர்கள் வீதியை மறிக்காது விட்டதைப்போல அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இழுவை மடி தடைச் சட்டத்தினை சரியாக நீதித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி சகல மீனவர்கள் சார்பாகவும் விரைவில் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம். சுப்பர்மடத்தில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும்…
-
- 2 replies
- 343 views
-
-
ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்குப் பயணம் – மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு! வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் பொறுப்பேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதுக் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/12656…
-
- 0 replies
- 195 views
-
-
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் என்றுமே எதிர்நோக்காத நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பலர் இந்த நெருக்கடியை அடையாளம் காணவில்லை. நெருக்கடியை அடையாளம் காணாது அதற்கு தீர்வு காண முடியாது. கோவிட் காரணமாக ஏற்பட்ட நெருக்கடி என பலர் கூறுகின்றனர். இது உலக நெருக்கடி என்கின்றனர். இது பொய். இலங்கை வரையறைகள் இன்றி கடனை பெற்றதே இந்த நெருக்கடிக்கு காரணம். கடன் பொருளாதாரம். நாம் வரலாறு முழுவதும் கடனை பெற்று செலவிட்ட இனம். உழைத்து செலவிடுவத…
-
- 9 replies
- 750 views
-
-
சிறீலங்காவின் 74வது தேசிய சுதந்திர நாள் விழா சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அதில் பல்வேறு விதமான அணிவகுப்புகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்றவற்றில் ஒன்றுதான் 'சிறீலங்காவின் போர் நாயகர்கள்' என்ற முகப்புப் பதாகை தாங்கிய முன்னாள் சிங்களப் படைவீரர்கள் அமர்ந்திருந்த மூதறிவர் ஊர்தி(Veterans Vehicle). இவ்வூர்தியில் சிங்களத்தின் தமிழர் தாயக (தமிழீழம்) வல்வளைப்பின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் பதாகைகளாக அடிக்கப்பட்டு ஊர்தியின் இரு மருங்கிலும் பூட்டப்பட்டிருந்தன. அந்நிழற்படங்களில் ஒன்றாக 02|09|2008 அன்று வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்…
-
- 0 replies
- 788 views
-
-
இலங்கைத்தீவின் அமைதி என்பது தமிழர்களுக்கான பரிகாரநீதியில் தங்கியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா தனது சுதந்திரநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இலங்கைத்தீவின் முழுஅமைதி என்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பரிகாரநீதியில் தங்கியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தக்கறை படிந்த சிறிலங்காவின் சுதந்திரநாளை, கரிநாளாக தமிழர்கள் எப்போதும் பார்ப்பதானது, இலங்கைத்தீவில் இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றது எனவும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்நாள் தொடர்பில் தெரிவிக்கையில…
-
- 0 replies
- 234 views
-
-
கறுப்புச்சந்தையில் டொலரை பெற்று ஆயதக்கொள்வனவு – நிதியமைச்சரின் கூற்று குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் அதிருப்தி ஜெனீவா அமர்வில் ஆராயப்படாலம் – சர்வதேச நிதியமைப்புகளின் உதவியை பெறும் இலங்கையின் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறித்து இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச அமைப்புகளும் கரிசனை வெளியிட்டுள்ளன இலங்கை அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது சர்வதேச மோதல்கள் குறித்த வழக்காறுகளை மீறு…
-
- 11 replies
- 712 views
-
-
அம்பிகாவின் கருத்து புலிகளின் செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றன – வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன் தெரிவித்த கருத்து தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். எனவே, அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்றினால் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சலுகையை இலங்கை இழந்…
-
- 1 reply
- 281 views
-
-
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை - சிரிக்கும் மனோ! " அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நாவலப்பிட்டி கெட்டபுலா உச்சிமலை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (05) இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், " இந்த நாட்டிலே விஷயம் புரியாத…
-
- 0 replies
- 262 views
-
-
கட்டுவன் மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டார் (எம்.நியூட்டன்) அடாத்தாக அமைக்கப்படும் கட்டுவன் மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பாதையில் 400 மீற்றர் பாதையை அபகரித்துள்ள படையினர் வீதியை விட மறுத்து தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் ஊடாக தற்போது பாதை அமைக்கும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டதோடு சட்டப்படி சுவீகரிக்காது நில உரிமையாளரின் சம்மதம் இன்றி அவர்களி…
-
- 0 replies
- 207 views
-
-
வாழ்வுரிமைக்கே எமது போராட்டம் தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல! மீனவர் சமூகம் அறிக்கை February 5, 2022 “எமது போராட்டம் எமது வாழ்வுரிமையை பாது காப்பதற்கே. இது தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல” என்று கடந்த ஐந்து நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் நடத்திய பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர் சமுதாய அமைப்பு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்கள், அதில் தெரிவித்தவை வருமாறு, “வட பகுதி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இந்திய படகுகளால் கடல் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. எமது த…
-
- 0 replies
- 161 views
-
-
முள்ளிவாய்க்காலில் “சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்” போராட்டம்! AdminFebruary 4, 2022 சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வடக்கு கிழக்கு வமௌஏஏலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீப்பு பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கி செல்கிறது குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல்…
-
- 0 replies
- 191 views
-
-
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாது – பொன்சேகா ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார நிபுணர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு ஊழலற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும் என்றார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தனது செயற்பாடுகளை தொடர முடியாது எனக் கூறியே பதவியை இராஜினாமா செய்தார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார். மேலும் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்தவர்கள் நாட்டில் இருந்தாலும் ஊழல் நிறைந்த சூழலில் அவர்க…
-
- 0 replies
- 110 views
-
-
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அதிரடி அறிவிப்பு வெளியானது தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி குறித்த வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 110 views
-