Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 76 ஆவது ஆண்டு நிறைவு சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58

  2. பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்…

  3. 2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும். வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்…

  4. ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன் September 26, 2025 வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களி…

  5. (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சிரித்தவாறு குறி…

  6. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்! adminSeptember 25, 2025 நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள…

  7. மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்...…

  8. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்கு காரணம் என்ன, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தவிர்ந்த பிறிதொரு காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் மக்களின் காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகைய…

  9. 26 Sep, 2025 | 05:21 PM நாட்டில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் உரிமைகள் அமைப்பான EQUAL GROUND ஆல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. EQUAL GROUND நிர்வாக பணிப்பாளர் ரோசன்னா ஃபிளேமர் - கால்டெராவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலாத் தலைவர் புத்திக ஹேவாவசம் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார். சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையை நிலைநிறுத்தவும் அதன் திறனை அங்கீகரித்துள்ளார். எங்கள் சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தவும் இந்த திட…

  10. (செ.சுபதர்ஷனி) நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்…

  11. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி 26 Sep, 2025 | 04:16 PM (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. காணியும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவில்லை. காணி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். பாராளும…

  12. யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திலீபனின் நினைவுநாளின் இறுதி நாளான இன்று உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் தமிழர் பகுதியில் இடம்பெற்ற வேளையில் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் “அரசியல் கட்சிக்கான வேண்டுகோள்” என்ற தலைப்பிடப்பட்ட நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆக்கப்பார்க்கும் சிலர் அதில் “மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். சிலர் மக்களில் எல்லா விடயங…

  13. மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்…

  14. செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான த…

  15. ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும். அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி …

  16. மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் September 26, 2025 மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் . மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் நேற்றைய தினம் முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை…

  17. லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு! adminSeptember 26, 2025 லஞ்சம் அல்லது ஊழலுக்கு ஆளாகும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, நாட்டின் பொருளாதாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் சுங்கத் திணைக்களம் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஒரு விரிவுரை ஒன்றின் போதே அவர் இந்தனைக் குறிப்பிட்டார். இலங்கை நிர்வாக வல்லுநர்கள் நிறுவனம் மற்றும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விரிவுரை, தேசிய வளர்ச்சிக்கான நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலும் கர…

  18. 26 Sep, 2025 | 11:01 AM கொழும்பு, கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் 6ஆவது மாடியில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செப்டெம்பர் 24 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் திருடர்கள் உள்நுழைந்துள்ளத…

  19. 25 Sep, 2025 | 01:34 PM (எம்.மனோசித்ரா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? கடந்த காலங்களில் இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா உற்கபத்தி திட்டம் தொடர்பில் அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அ…

  20. பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம் 25 September 2025 பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத…

  21. 2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம் இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை…

  22. யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்! adminSeptember 26, 2025 பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலிச்சுடரினை பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது. உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலீபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் …

  23. வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு! வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் ஒருவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக வெளிநாட்டில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால், குடும்பத்தினருக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மேலும் 14 இலட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெளி…

  24. 25 Sep, 2025 | 11:48 AM எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி இன்று (25) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார் காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.