Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும். இதற்கு வன்னி மாவட்ட கூட்டமைப்பினர், ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் அதனை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என கடந்த பல மாதங்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க ஆரம்பத்தில் மறுத்திருந்த போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் இடத்தில் அமைக்க உறுதி மொழி வழங்கியுள்ளது. இந…

    • 11 replies
    • 660 views
  2. தனியார்துறை ஊழியர்களிடமிருந்து 15000 முறைப்பாடுகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களில் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் 15,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூரண அறிக்கை ஒன்றை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியமை, மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படாமை, மாதாந்த கொடுப்பனவில் ஒரு பகுதி மட்டும் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கி…

  3. இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ரி.எம்.வி.பியினருக்கு சிவில் சட்டம் தொடர்பில் போதிய அறிவில்லை – கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=2129&cat=1 இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ரி.எம்.வி.பியினருக்கு சிவில் சட்டம் தொடர்பில் போதிய அறிவின்மை காரணமாக, சிவில் சட்டங்கள் தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படும் வகையில் அவர்களுக்கான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா , காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காவற்துறை மா அதிபரை நேற்று முன்தினம் (11) சந்தித்த போது கருணா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். காவற்துறை தலைமையகத்தில் காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, காவற்துறை நிர்…

  4. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே "பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" - சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 10:02 AM அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சனிக்கிழமை (21) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்…

  5. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வரலாற்றின் சிறப்பு பக்கமாக மாவீரர்நாள் நிகழ்வுகள் அமைகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 863 views
  6. பூநகரியூடான யாழ்-கொழும்பு வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்-அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க வீரகேசரி இணையம் 11/23/2008 1:09:37 PM - புலிகளிடமிருந்து அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தையும் தென்னிலங்கையையும் இணைக்கும் வீதியைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி. பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. வடக்கில் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு வரும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளின் அடுத்த கட்டமாக…

  7. இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டத்தரணிகள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டத்தரணிகளை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டிருந்தது. இப்படியான ஒரு போராட்டம் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்பாகவும் நடந்தது. சுலோக அட்டைகளை தாங்கியவாறு அவர்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்க தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்கக்கூடியவை அல்ல என்று அங்கு உரையாற்றிய பலரும் கூறினார்கள். சட்டத்தரணிகளின் போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்ப…

    • 2 replies
    • 396 views
  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் கடந்தவாரத்தில் நிகழ்தியிருந்த இருவேறு அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை குமுறவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. அந்த நகர்வுகள் தொடர்பிலான தெளிவுறுத்தலை மேற்கொள்வதற்கு தமிழ்லீடர் முற்படுகின்றது. பாராளுமன்றில் உரையாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகளை தீண்டத்தகாதவர்கள் என்ற பாணியில் சம்பந்தன் உரையாற்றியமை மற்றும் மஹிந்த விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச்சுக்களில் கலந்து கொள்ளாமை ஆகிய இரண்டு விடயங்களும் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தன. சம்பந்தனின் உரை தொடர்பில் கடும் அதிர்ப்தி அடைந்திருந்த மக்கள் மஹிந்தவின் அழை…

  9. கேரள கஞ்சா பொதிகள் மீட்பு -எஸ்.றொசேரியன் லெம்பேட் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, இன்று சனிக்கிழமை (23) காலை மீட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார். அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப்பகுதியை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 5 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. 139 கிலோ 500 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்…

  10. வன்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினரின் 120 உடலங்கள் கொழும்பில் உள்ள இரண்டு மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  11. எதிர்வரும் 26 ஆம் நாள் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவிருக்கும் சிறிலங்கா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிகெட் போட்டியை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective எனும் அமைப்பும் இணைந்து முன்னெடுக்கும் இந்த சிறிலங்கா கிரிக்கெட் அணியைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் தமிழ்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ் ஏதிலிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. 'பல்லாயிரக்கணக்கில் வேற்றின மக்கள் கூடும் இந்த விளையாட்டு நிகழ்வில் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தைச் செய்வதன்மூலம் சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவதே எமது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்' என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர்…

    • 4 replies
    • 605 views
  12. இலங்கை அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கறிஞர் அருணா லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பிரதிவாதிகளாக பிரதமர் உள்பட நூறுக்கும் மேட்பட்ட அமைச்சரவையின் அங்கத்தவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தின்படி நாட்டில் தேசிய அரசாங்கமொன்று ஆட்சியில் இருக்கின்ற போதுமட்டும் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையோன்றை நியமிக்க முடியுமென்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மனு மூலம் தெரிவிக்கப்பட்டு…

  13. கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  14. "தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்காணும் செயற்பாடுகள் குறித்து அரசு உரியவகையில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த விடயத்தில் அசமந்தப்போக்கிலேயே செயற்படுகின்றது. அத்துடன், இன ஒடுக்கல் இயந்திரத்தையும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகத் தற்போது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசின் இவ்வாறான செயற்பாடுகள், தமிழர் பிரச்சினைகளுக்கு 2013ஆம் ஆண்டிலும் தீர்வு கிடைக்காது என்றும், அது சங்கிலித் தொடராகவே செல்லும் தொடரும் என்பதையும் உணர்த்துகின்றன'' இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளரும், ஊவா மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே…

  15. ஹொரகொல்ல சமாதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு சந்திரிகா கோரிக்கை கூட்டு எதிரணியின் பாதயாத்திரை, இன்று ஹொரகொல்ல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கவுள்ளது. அதன்போது, பண்டாரநாயக்கவின் சமாதி அமைந்துள்ள பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த பாதயாத்திரையில் கலந்துக்கொள்ள வந்திருந்த ஏற்பாட்டாளர்கள் இருவர், குறித்த சமாதிக்கு சேதம் ஏற்படுத்த முனைந்ததையடுத்து, இந்த கோரிக்கையை விடுத்ததாக அவர் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/178282/ஹ-ரக-ல-ல-சம-த-க-க-ப-த-க-ப-ப-வழங-க-ம-ற-சந-த-ர-க-க-ர-க-க-#sthash.rx7Z0ViE.dpuf

  16. பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலும், இந்தியாவில் இருந்து கடல் வழியாக வரும் சட்ட விரோத படகுகளின் வருகையை தடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கை மற்றும் வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=130325

    • 0 replies
    • 393 views
  17. போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன் by : Vithushagan எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பிரதேசத்தில் மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது . இவர்களால் தமிழர்களுக்கு என்ன நடக்க போகின்றது எமத…

    • 0 replies
    • 293 views
  18. கிளிநொச்சியில் கட்டட வேலைக்கென அழைத்து வந்த 500 பேர் கட்டாய இராணுவ பயிற்சி - ஐ.தே.க. குற்றச்சாட்டு திகதி: 21.12.2008 // தமிழீழம் // [எல்லாளன்] கிளநொச்சி இதுவரை சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்படவில்லை. ஆனால், கிளிநொச்சியில் படையினருக்கான கட்டட வேலைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறி இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் குருநாகல் பகுதியில் இருந்து 500 இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பகுதிக்கென பலாலி படைத்தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என ஐ.தே.க. குற்றம்சாட்டியுள்ளது. தற்போது குறித்த 500 இளைஞர்களும் படையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனா குற்றம் சாட்டியுள்ளார். sankathi

  19. தனது சொந்த சகோதரியை கப்பம் கோரிக் கடத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கம்பஹாவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முதல் பிள்ளையான குறித்த 17 வயதுடைய சிறுவன், தனது சகோதரியைக் கடத்திச் சென்று மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் தாயார், மூன்று பிள்ளைகளையும் அவர்களின் தந்தையின் பராமரிப்பில் விட்டு, வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். தனது மூத்த மகன், இசைக் குழுவொன்றை அமைப்பதற்காக தன்னிடம் 500,000 ரூபாய் கோரியிருந்ததாகவும் தனது 15 வயதுடைய மகள் திடீரெனக் காணாமல் போனதையடுத்து அயலவர்களுடன்…

  20. 15 அடி விட்டத்தில் உழவனூரில் நில இறக்கம் திகதி: 26.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] தருமபுரம் உழவனூரில் நேற்று அதிகாலை 15 அடிவிட்டத்தில் நில இறக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. உழவுனூர் தம்பிராசபுரத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்காணி ஒன்றிலேயே 10 அடி ஆழமும் 15 அடி விட்டமும் கொண்டதாக நில இறக்கம் காணப்படுகிறது. இது தொடர்பாக இக்குடியிருப்பு மக்கள் கருத்துத் தெரிவிக்கும் போது நேற்று அதிகாலை பெரிய சத்தம் ஒன்றுகேட்டது எங்களால் அச்சத்தை ஊகித்தறிய முடியவில்லை. விடிந்தபின்பு பார்த்தபோது எமது குடியிருப்புக் காணியிலுள்ள சமதரையில் திடீரென குழிஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் நீர் காணப்பட்டது. பின்னர் இதுகொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிவிட்டது. இது இப்பொழுது பெரிய …

    • 1 reply
    • 4.6k views
  21. நாட்டின் நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த நோர்வே பிரதமர் சோல்பேர்க்கை ஜனாதிபதி வரவேற்றதுடன், இரு தலைவர்களுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைக்கும் நோர்வே அரசாங்கத்திற்குமிடையே இருந்துவரும் வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பாக நின…

  22. நீதியின் போராட்டம்... வியாழக்கிழமை, 10 ஜனவரி 2013 15:36 சிங்களவருக்கே இந்த நிலையாயின் தமிழன் 1956 முதல் எவ்வளவை அனுபவித்திருப்பான் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குறைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களையும் அதனை தடுப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண)

  23. வடக்கின் சில அரசியல்வாதிகள் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தெல்கொடவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றி அவர்களுக்கு புற்று நோய் போன்ற நோய்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக வடக்கின் சில அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு தீர்…

  24. கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதல்களால் 23 வீடுகள் முற்றாக அழிந்தும் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துமுள்ளன. முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயம் மற்றும் சேற்றுக் கண்டி மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கடும் ஷெல் தாக்குதல்களிலேயே 23 வீடுகள் முற்றாக அழிந்தும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேநேரம், இந்தப் பகுதியில் கடும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் முரசுமோட்டை ஆயுர்வேத மருத்துவமனை, நவஜீவனம் சிறுவர் இல்லம் பலத்த சேதமடைந்துள்ளன. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மக்கள் குடியிருப்புகள் மீது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானத்தாக்குதலில் இடம்பெயர்ந்து…

  25. துரோகி கருணாவின் ஒருபக்கம்! வியாழன், 15 ஜனவரி 2009, 19:44 மணி தமிழீழம் [] தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப் போரின் சாதனைகள் எல்லாவற்றுக்குமே காரணம் தானே என்றும் தற்போதைய நிலையில் விடுதலைபு புலிகள் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பத்திற்கு வித்திடவர் தான் என்றும், இப்படி பலவாறாக உண்மைக்கு புறம்பாக அண்மையில் சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியின் செவ்வி ஒன்றிலே கருணா குறிபிட்டுள்ளார். இந்த வேளையிலே கருணா கூறும் பொய்யான பல தகவல்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.