ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாமல் உயரும் நெல் விலை - என்ன காரணம்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அரிசிக்கான விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரசி 168 ர…
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே எமது எதிர்காலத்தை நோக்கிய பயணம் – ஜனாதிபதி! இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர இந்து மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தைபொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தைப்பொங…
-
- 4 replies
- 393 views
-
-
தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவம் விஷேட அறிக்கை பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள ´ஓல் செயின்ட்ஸ்´ தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவம் விஷேட அறிக்கை (adaderana.lk)
-
- 0 replies
- 387 views
-
-
விவசாயிகளின் சாபம் சும்மா விடாது’ இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள் என்று தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், விவாசாயிகளின் சாபம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது என தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் வருடாந்த பொங்கல் விழா, கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி சந்தைக்கு எதிரில் நடைபெற்றது. ஜமமு கட்சி உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர் ரெலோ கட்சி பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோருடன் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார். அங்கு மனோ எம்பி மேலும் கூறியதாவது, தை பிறந்தால் வழி பிறகும் என நாம் பாரம்பரியமாக கூறி வருகிறோம். தீர்வு பிறக்கும் எனவ…
-
- 0 replies
- 260 views
-
-
இலங்கை விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து அபிவிருத்தியை முன்னெடுக்கும் -சீனா
-
- 0 replies
- 215 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-12 16:51:47 யாழில் தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது, தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக …
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் கனகசிங்கம்! January 14, 2022 உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும், கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தெரிவின் அடிப்படையிலும், முதல் நிலையில் தெரிவு செய்யப்பட்டு, மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சின் பிரகாரம், பேராசிரியர் கனகசிங்கம் அப்பதவிக்கு ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, கிரான்குளத்தினை சேர்ந்த, கிரான்குளத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்ற பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், முகாமைத்துவ துறையில் முதலாவது பேராசிரியராக தெரிவானதுடன், திருகோணமலை வளாக முதல்வராக ஆறு வருடங்கள் பதவியும் வகித்தவருமாவார். …
-
- 0 replies
- 328 views
-
-
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் இன்று – நாட்டின் பல பகுதிகளிலும் விசேட பூஜை வழிபாடுகள்! தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியாக விசேட பூஜை வழிபாடுகளும், பொங்கல் பொங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக தைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிக்கும், விவசாயத்திற்கு உதவியமைக்காக மாட்டுக்கும், இவற்றுக்கு ஒளி பாய்ச்சி அருளித்தமைக்காக சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள். ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும். அந்தவகையில், யாழ்ப்பாணத…
-
- 1 reply
- 186 views
-
-
நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை …
-
- 32 replies
- 2.8k views
-
-
யாழில் தை பொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை – வியாபாரிகள் கவலை! திருநெல்வேலி சந்தை பகுதியில் வழமையாக பொங்கல் தினத்திற்கு முதல் நாள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் வீதி முழுவதும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படும் நிலையில் இம்முறை தைப்பொங்கலுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பொதுமக்கள் வழமைபோல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டவில்லை. யாழில் வழமையாக இடம்பெறும் வியாபாரத்தை போல இம்முறை பொங்கல் வியாபாரம் இடம்பெறவில்லை எனவும், தற்போது விலைவாசி அதிக…
-
- 0 replies
- 203 views
-
-
கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேறுமாறு சுதந்திரக் கட்சிக்கு நாமல் தெரிவிப்பு! ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனஅமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்ததாகவும் எனவே, ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அரசாங்க…
-
- 1 reply
- 317 views
-
-
இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்தையும் மாற்றியிருக்கின்றோம் – சுமந்திரன்! இந்தியப் பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடித விடயத்தில் தமிழரசுக்கட்சி ஈடுபடத்தொடங்கியதில் இருந்து அதன் பொருள் அதனுடையநோக்கம், அது எதனைக்கோருகின்றது அதன் தலையங்கம் அனைத்தையும் மாற்றியமைத்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு விஐயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஒரு ஜனநாயக விரோதசெயல். அதை முழுமையாக எதிர்க்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு நான்கு வருடத்திற்கு ஒரு …
-
- 0 replies
- 212 views
-
-
தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும் – பிரதமர்! தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத் தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது. இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா – அறுவடை விழா. இதுவே உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்ற தைப்பொங்கல் விழாவுக்கான அடிப்படையாகும். தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும்…
-
- 0 replies
- 158 views
-
-
யாழிலுள்ள பிரபல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை தவறினால் பெண் உயிரிழப்பு! யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டத…
-
- 2 replies
- 612 views
-
-
Published by T. Saranya on 2022-01-13 11:18:05 (ஆர்.யசி) நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்க…
-
- 0 replies
- 224 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை - ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல புனிதர்கள் தேவாலய’ வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில், 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று (12) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இரகசிய சாட்சியம் அளித்தார். குறித்த சிறுவன், இந்த கைக்குண்டு தொடர்பில் பல முக்கியமான விடயங்களை அறிந்துள்ளதாகவும், தேவாலயம் அருகே வசிக்கும் அச்சிறுவன் அது தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய இரகசிய வாக்கு மூலம் வழங்க விரும்புவதாகவும், விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர். இந்நிலையிலேயே அதன…
-
- 0 replies
- 226 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-13 14:00:20 அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது. சிறைக் கூண்டு போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு அதற்குள் பொங்கல் செய்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அரசியல் கைதிகளின் உறவுகள், மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல் | Virakesari.lk
-
- 0 replies
- 198 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் கொழும்பு உட்பட சில பகுதிகளில் இன்று மாலை திடீர் மின்துண்டிப்பு இடம்பெற்றது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிகமான மின்நிலையங்களில் மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அத்துடன் மின்சாரசபைக்கு தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் கிடைக்கப்பெறாததால் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 300 மெகாவோட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. அதனாலே இவ்வாறு நாட்டின் சில பகுதிகளிக்கு மின் விநியோகம் தடைப்பட்டிருக்கின்றது. அதனால் மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுத்தரும் வரை இவ்வாறு மின் விநியோகம் தொடர்ந்து தடைப்படும் என இலங்கை மின்சாரசபை ஊடக பேச்…
-
- 0 replies
- 176 views
-
-
நாட்டின் தலையெழுத்தை மாற்ற ரணிலால் மட்டுமே முடியும் – ஐ.தே.க. நாட்டின் தலையெழுத்தை மாற்ற முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வறுமையில் வாடும் குடும்பங்கள் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிப்பதால் எதிர்காலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னைய ஆட்சிக்காலத்தில் …
-
- 3 replies
- 454 views
- 1 follower
-
-
இளைஞர்கள் அரசியல் பணக்காரர்களாக வர வேண்டும் என நினைக்கிறார்கள் – விக்னேஸ்வரன்! தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய இளைஞர்கள் எடுத்த எடுப்பில் அரசியல் தலைவர்களாக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் பணக்காரர்களாக வர நினைக்கிறார்கள். என்னுடைய வாழ்காலம் என்பது இன்னும் சிறிது காலம் என்பது அனைவருக்கும் தெரியும். 80 வயதுக்கும் மேல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி நாடாளுமன்ற அங்க…
-
- 3 replies
- 478 views
- 1 follower
-
-
இலங்கைக்கு கிடைக்கவுள்ள 786 மில்லியன் டொலர் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த வருடம் இலங்கைக்கு 786 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின்துணைத் தலைவர் ஷிக்சித் சென் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும…
-
- 0 replies
- 507 views
-
-
இலங்கை: விலைவாசி உயர்வால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு - களநிலவரம் என்ன? அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ், கொழும்பு 8 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விறகில் சமைக்கும் நிலுகா தில்ருக்சி "சமையல் எரிவாயுவின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது, இதற்கு மேலும் எங்களால் சிலிண்டரை வாங்க முடியாது" என்கிறார் நிலுகா தில்ருக்சி. 31 வயதான நான்கு குழந்தைகளுக்குத் தாயான நிலுகா, தன் குடும்பத்தினருக்கு எப்போதும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்திதான் சமைத்து வந்தார், ஆனால் தற்போது விறகு மட்டுமே ஒரே வழி என்கிறார். "என் குழந்தைகளுக்கு நான் த…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன. இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள…
-
- 24 replies
- 1.6k views
-
-
Published by J Anojan on 2022-01-12 18:37:43 துறைமுகங்களை நிர்மாணித்து இந்த நாட்டை கடல்சார் கேந்திர நிலையமாக மாற்றி ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையை நாம் கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெற்காசியாவின் கடல்சார் கேந்திர நிலையமான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (12) முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதனை குறிக்கும் வகையிலான நினைவு பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வை…
-
- 7 replies
- 649 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை யாழில் போராட்டம்! உலகெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடவுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் இரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் நாளை காலை 10 மணிக்கு முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வா…
-
- 0 replies
- 185 views
-