ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142898 topics in this forum
-
வாகன இறக்குமதிக்கு, விதிக்கப்பட்ட... தடை நீடிப்பு வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக மார்ச் 2020 முதல் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1249842
-
- 0 replies
- 197 views
-
-
இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PARLIAMENT OF SRI LANKA இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மதுபானம், சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறலாம் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர…
-
- 2 replies
- 361 views
- 1 follower
-
-
சிகரெட் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானம் சிகரெட் வரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். கடந்த 3 வருடங்களாக சிகரெட் மீதான வரி அறவிடப்படவில்லை என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1249662
-
- 0 replies
- 306 views
-
-
சீன நிறுவனத்தின் இழப்பீட்டு கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்வு சேதன பசளையை ஒப்பந்தம் தொடர்பாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி சீன நிறுவனம், தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்திற்கு கடிதத்தை அனுப்பியுள்ளது. இந்த இழப்பீட்டு கோரிக்கை கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், அக்கடிதம் தொடர்பிலும், அதன் சட்ட நியாயாதிக்கம் தொடர்பிலும் சட்ட மா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக திணைக்களத்தின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் அலட்சிய நடவடிக்கையால், தமது நிறுவனத்தின் நற் பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக இந்த தொகையை குறித்த நிறுவனம் …
-
- 0 replies
- 361 views
-
-
ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிவித்தால் நடவடிக்கை – வடக்கு ஆளுநர் வடக்கு மாகாணத்தின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கே அரச கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன என சுட்டிக்காட்டிய ஆளுநர், தான் பதவியேற்றதில் இருந்து வடமாகாண அரச கட்டமைப்புக்களின் பல்வேறு மட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக கூறினார். அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக சிலர் தன்னைத் தொடர்பு கொள்ளவதற்கு அல்லது சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது என ஆளுநர் தெரிவித்தார். ஆகவே ஊழல், மோசடிகள் தொடர்ப…
-
- 0 replies
- 110 views
-
-
சுமந்திரன் நாடு திரும்பியதும் தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன் தீர்மானம்! தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணி திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான வரவொன்று இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே கூறியுள்ள நிலையில் அதுபற்றி விசேட கரிசனை கொள்ளப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மேலும் இந்தக் கலந்துரையாடலை சுமந்திரன் அமெரிக்காவிலிருந்து மீண்டும் நாடு திரும்பியதும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் இரா.சம்பந்தன் பங்காளிக்கட்சிகளிடம் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்த இந்தியப் ப…
-
- 0 replies
- 103 views
-
-
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு! இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள்குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம…
-
- 2 replies
- 271 views
-
-
வடக்கில் சமூக காவல் குழுக்கள் November 12, 2021 வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறைப் பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூக காவல்துறைப் பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் தெரித்துள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், பிரஜா காவற்துறையினர் வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வலப்புறம் வழிநடத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித் தொடர்களை தயாரித்துள்ளனர். …
-
- 1 reply
- 363 views
-
-
இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா! சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது. நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன உர நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது. https://athavannews.com/2021/1248653
-
- 15 replies
- 996 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாகத் தெரிவு! சி.எல்.சிசில்) எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர். ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், தர்மலிங்கம் பிரதீபன், தேஷெபா ராஜ், சுபாஷினி தேவராஜா மற்றும் நிரஞ்சனி முரளிதரன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர். நீதிபதிகளுக்கான பதவி நியமனத்துக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்தே இவர்கள் நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/149406 ஐவரின் பெயர் இருக்கின்றது!
-
- 2 replies
- 508 views
-
-
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி November 13, 2021 ‘மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் கோருவதாக வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணி, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ளது தமிழ்தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாவீவர் மாதத்தின் புனிதத்…
-
- 0 replies
- 338 views
-
-
2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விபரம் Ø பட்டதாரிப் பயிலுநர்களுக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம் Ø அதிபர், ஆசிாியர்களின் சம்பள முரண்பாட்டைச் சீராக்க ரூ.30,000 மில்லியன் Ø காணாமலாக்கப்பட்டோருக்கு ரூ.300 மில்லியன் இழப்பீடு Ø பழிவாங்கப்பட்டோருக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு Ø அரச அலுவலர்கள் மோ. சைக்கிள் பெற ரூ.500 மில்லியன் Ø அரச அலுவலர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக உயர்வு Ø எம்.பிக்களின் ஓய்வூதியத் தகுதிக் காலம் 10 வருடங்கள் Ø நாடு முழுவதும் தடையற்ற 5ஜி வலையமைப்பு Ø அரச அலுவலகங்களில் புதிய கட்டடங்கள் அமைக்க 2 வருடங்கள் தடை Ø அரச அலுவலர்களுக்கான எாிபொருள் 5 லீற்றரால் குறைப்பு Ø அமைச்சர்கள், அதிகாரிகளுக்கான மாதாந்த த…
-
- 0 replies
- 267 views
-
-
சோமாலியாவாக மாறும் இலங்கை - எதிர்கட்சித்தலைவர் விசனம்! “எமது நாட்டை சோமாலியா நாடுபோல் ஆக்குவதற்கான வரவு – செலவுத் திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவான திட்டங்கள், தீர்வுகள் என ஒன்றும் இல்லை.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கபட்ட வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய வரவு – செலவுத் திட்டமொன்றையே மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தெளிவற்ற வெற்று ஆவணமொன்றே நிதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை முகாமை செய்வதற்கான தெளிவான வழிகாட்டல்கள் இல்லை…
-
- 0 replies
- 377 views
-
-
ஏ-9 வீதியூடாகப் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து புடைவை வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று மாலை கிளிநொச்சி நகர் பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. கடையில் இருந்த பெறுமதியான பொருள்கள் சேதமடைந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://thamilseithy.com/2021/11/12/அதிவேகத்தால்-வந்த-வினை-ப/
-
- 1 reply
- 353 views
-
-
2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ, பிற்பகல் 2 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார். பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமது உரையின்போது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளார். இதனையடுத்து, நாளை மறுதினம் முதல் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ள ந…
-
- 1 reply
- 388 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு;குருதி தானம் வழங்குமாறும் கோரிக்கை (சி.எல்.சிசில்) யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியவில்லை என அவ்வைத்தியசாலையின் இரத்த வங்கி அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவோ 200 பைந்த் ஆகும். இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இரத்த வங்கி உள்ளது. இருக்கின்ற குருதியும் இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே போதும். அதன் பின்பு ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கோ அல்லது விபத்துகளுக்கோ, ச…
-
- 0 replies
- 156 views
-
-
மட்டக்களப்பில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு, இஞ்சி பயிர்செய்கை - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் நிதி ஒதுக்கீடு November 12, 2021 (கல்லடி நிருபர்)மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போக விவசாயத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 46 மில்லியன் ரூபா செலவில் உளுந்து, பயறு மற்றும் இஞ்சி பயிர் செய்கைக்காக நிதி ஒதுக்கப்பட்டு பிரதேச செயலக ரீதியாக விதைகள் வழங்கி வைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று…
-
- 0 replies
- 226 views
-
-
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்! November 12, 2021 இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.battinews.com/2021/11/blog-post_662.html
-
- 0 replies
- 219 views
-
-
9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்கள குடியேற்றம்- பாராளுமன்றத்தில் சிறீதரன் சுட்டிக்காட்டு November 12, 2021 தமிழர்களின் பரம்பரை நிலங்களைப் பறித்து தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்லவென்ற திட்டத்தை அரசு கச்சிதமாக முன்னெடுக்கின்றது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஒதுக்கீடுகள் என்று கூறி தமிழ் மக்களை விவசாயம் செய்ய விடாது தடுக்கின்றனர். மறுபுறம் 9000 ஏக்கர் காடுகளை அழித்து சிங்களவர்களை குடியேற்றுகின்றனர். இது தான் இந்த நாட்டின் ஒரே நாடு ஒரே சட்டமா? தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற வேலையாட்களின் குறைந்த பட்ச ஓய்வு பெறும் வயது சட்டமூலம் மற்…
-
- 0 replies
- 246 views
-
-
வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் - கஜேந்திரகுமார் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பு இடம்பெற்றுக்கொண்டுள்ள அதே வேளையில் தற்போது எல்லை மீள் நிர்ணயம் என்ற பெயரில் வடக்கு கிழக்கின் திட்டமிட்ட குடிசன வரைபை மாற்றியமைக்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் சுட்டிக்காட்டினார். வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம், வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், காணி பிறழ்வு(காணி எடுத்தல் சட்டம்) என்பது இன்று மிகப்பெ…
-
- 0 replies
- 299 views
-
-
‘வடக்கு இளைஞர்களுக்கு உதவுவேன்’ முன்னாள் புலிகளிடம், மஹிந்தானந்த உறுதி! November 12, 2021 விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், விவசாயத்துக்கு தேவையான இடம் மற்றும் உதவிகளைச் செய்ய தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், நேற்று முன்தினம் (10.11.21) விவசாயத்துறை அமைச்சரை, அவரது அமைச்சில் சந்தித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாய ரீதியில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவி…
-
- 0 replies
- 188 views
-
-
உரத்தை நிராகரித்தமையால் கொழும்பிற்கு சீனா அழுத்தம் சீன நிறுவனமொன்றிடமிருந்து உரத்தினை பெறும் செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து, பீஜிங் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக உலகளாவிய சிந்தனைக் குழுவான கொள்கை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இரசாயன உரத்தினைப் பயன்படுத்துவதை நிறுத்தி இயற்கை விவசாயத்தினை மேற்கொள்ளுதல் வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது. இதனால் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சில இறக்குமதிகளைச் செய்வதாக இருந்தால் உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியது. அத்துடன்…
-
- 0 replies
- 133 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதன்படி மனுவின் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் மறுத்தது. இந்த குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு …
-
- 0 replies
- 211 views
-
-
கதிர்காமம் கோவிலுக்கு... கிடைத்த, நன்கொடைகள் தொடர்பில் விசாரணை கதிர்காமம் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள நேர்த்திக்கடன் பொருட்கள் மற்றும் ஆலய அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த கோவிலில் இருந்த ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கல்லொன்றும், தற்போது காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இரத்தினபுரியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர், நேர்த்திக் கடனொன்றை செலுத்து முகமாகவே, இந்த மாணிக்கக்கல்லை, ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு வழங்கியிருந்தார். குறித்த மாணிக்கக்கல் காணாமல் போயிருப்பமை குறித்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிசார் தீவிர புலன் விசா…
-
- 1 reply
- 277 views
-
-
நாடு மீண்டும் முடக்கப்படும்; பொருளாதாரம் சரிந்து மிகவும் பாதிப்பு ஏற்படலாம்- ஹெகலிய நாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்புடன், இந்தத் துரதிர்ஷ்டமான நிலைமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும் எனவும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நில…
-
- 0 replies
- 247 views
-