ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு – நீதிபதிக்கு எதிரான விசாரணைக்கு தடை ! முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறி செயற்படாதவாறு பிறப்பிக்கப்படும் தடை நீதிப் பேராணையையும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் குறித்த வழக்கில் 2 ஆவது சந்தேக நபராக நீதிபதி கிஹான் பிலபிட்டியவை பெயரிட்ட சட்டமா அதிபரின் ஆலோசனையையும் வலுவிழக்கச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூ…
-
- 0 replies
- 167 views
-
-
நாடளாவிய ரீதியில்... அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்வு நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுகாதார வழிகாட்டி நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிகாட்டியின் படி, நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமலும், திறந்தவெளியி…
-
- 0 replies
- 301 views
-
-
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பொலிஸார் யாழ் நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர். இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் இவ்வாறு நேற்று இரவு ஆரம்பிக…
-
- 2 replies
- 448 views
-
-
யாழ். பல்கலைக்கு சென்ற கனடியத் தூதரக அதிகாரிகள் October 25, 2021 கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு பயணமொன்றை மேற்கொண்டது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர…
-
- 6 replies
- 601 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்! கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது. கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார். கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் க…
-
- 10 replies
- 747 views
-
-
வலி.வடக்கின், தென்னைப் பயிர் செய்கையில் இராணுவம்! October 25, 2021 யாழ்.வலி,வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்திருக்கும் படையினர் தென்னைகளை நட்டு நிரந்தரமாக காணிகளை சுவிகரிக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்.வலி, வடக்கிலிருந்து வெளியேறி 31 வருடங்களாக மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாத நிலையில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மயிலிட்டி, பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் நில விடுவிப்பு செய்யப்படாது 3500 ஏக்கர் தொடர்ந்தும் இராணு…
-
- 3 replies
- 376 views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவுசெலவு திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்…
-
- 0 replies
- 281 views
-
-
”ராஜபக்ஸக்கள்’ வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும்! October 25, 2021 இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும், எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்ஸ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பென்டோரா அக்காவும் அவரது கணவரும் சேர்ந்து 160 மில்லியன் டொலர் மோசடியாக சம்பாதித்துள்ளனர். எனவே, பென்டோரா அக்காவின் பணத்தை எடுத்தால் உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, அரிசி பிரச்சினை…
-
- 0 replies
- 368 views
-
-
இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளை இடைநிறுத்த வேண்டும் – விமல் கட்சி பரிந்துரை இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு கூடியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்தார். மேலும் புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவ்வாறு மாற்றப்படும் அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்பு…
-
- 1 reply
- 335 views
-
-
இரசாயன உரதிற்கான தடையில் திருத்தமில்லை – சசீந்திர அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேதன பயிற்செய்கையை பயன்படுத்துவதற்கான முடிவு மக்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது என்றும் அது தேர்தல்வாக்குறுதி அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பதுளையில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எவரும் விரும்பாத தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும், சுயநலமாக இந்த தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் எவ்வாறான குறைபாடுகள் இருந்தாலும் ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்றும் …
-
- 0 replies
- 135 views
-
-
நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரியாக பூஜையில் கலந்து கொண்ட குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் October 24, 2021 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினம் காலை குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார். …
-
- 4 replies
- 662 views
-
-
மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்தக் காணியை காணி உரிமையாளர் சுத்தம் செய்தவேளை, அதிகளவான வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட நிலையில், பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர் பொலிஸார் ஊடாக மேற்கொண…
-
- 0 replies
- 250 views
-
-
ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு
-
- 13 replies
- 806 views
- 1 follower
-
-
மெனிக்கே மகே ஹித்தே: பாடல் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவே காரணம்- நளின் டி சில்வா கருத்து October 23, 2021 இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்கு வதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது. இலங்கைய…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
விலைவாசி பற்றி பேச நான் பதவிக்கு வரவில்லை என்றுகூறி ஜனாதிபதி மக்களை துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார் - இடுக்கண் வருங்கால் நகுக! என்கிறார்மனோ விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச சிரிப்பு காட்டியுள்ளார். கி.மு 31ல் பிறந்து, உலகை அளந்த, எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார். அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற…
-
- 0 replies
- 311 views
-
-
இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும் கெரவலபிட்டி மின் நிலையம் அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும் என விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒ…
-
- 2 replies
- 572 views
-
-
அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அரசு உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த போராட்டமானது மன்னார் – உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளதாகவும் அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு…
-
- 0 replies
- 375 views
-
-
வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது! October 23, 2021 இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என வல்வெட்டித்துறையை சேர்ந்த இரண்டு மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த , வீ.நிமலதாஸ் மற்றும் த. கஜீபன் ஆகிய இரு மீனவர்களையும் நேற்றைய தினம் இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு மீனவர்களும் கடந்த 21ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற நிலையில் , இந்திய கோடியக்கரைக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை தாம் கைது செய்ததாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…
-
- 6 replies
- 494 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து ஒன்றிணைந்து வலியறுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முயற்சி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 2 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை யாழில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெலோவின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று இணையவழியில் இடம்பெற்ற கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் சார்பாக பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தோடு எதிர்வரும் இரண்டாம் திகதி யாழ…
-
- 0 replies
- 261 views
-
-
வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம் மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வவுனியாவில் தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்துடன் வடமத்திய மாகாண எல்லையில் உள்ள கிராமங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு – வட மத்…
-
- 0 replies
- 310 views
-
-
ஏறாவூர் பொலிசார் இளைஞர்களை தாக்கிய சம்பவம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (திருக்கோவில் நிருபர்) ஏறாவூர் பொலிஸார் பொதுமக்களை தாக்கிய சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார். ஏறாவூரில் இரு இளைஞர்களை; மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடக அறிக்கை ஒன்றை இன்று சனி…
-
- 4 replies
- 463 views
- 1 follower
-
-
நீர்வேலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , காவல்துறையினரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு புகுந்த வாள் வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.https://www.kuriyeedu.com/?p=365713
-
- 1 reply
- 462 views
-
-
வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகளுடன் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி சில கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகள் தற்போது சிறை வளாகத்திற்குள் சொத்துக்களை சேதப்படுத்தி வருவதாகவும் சிறைக் காவலர்கள் பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வா போன்றவர்கள் 5 வருடங்கள் மட்டுமே சிறைவாசம் அனுபவித்ததாகவும், சில கைதிகள் 15 வருடங்…
-
- 1 reply
- 399 views
-
-
காரைநகரில்... கடற்படை படகு மோதியதில், இந்திய மீனவரின் படகு மூழ்கியது – ஒரு மீனவர் மாயம் எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இலங்கை கடற்படையின் படகு மோதி இந்திய மீனவர்களின் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் – கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக்…
-
- 16 replies
- 1.2k views
- 1 follower
-