ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
(இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறை இன்று இல்லாமல் போயுள்ளது. அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம், அரசியல் கொடுக்கல்வாங்கள் உள்ளிட்ட காரணிகளினால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையை மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தற்போது இடம்பெறுகின்றன என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இன்றைய சூழ்நிலையில் பல பொதுப்பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் நடுத்தர மக்கள்பெரும் சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். பாடசாலைகள் தொடர்ந்து…
-
- 0 replies
- 358 views
-
-
ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே... ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது ! 019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை இரண்டுபேர் மீதுமட்டும் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் இருவரால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன் பின்னணியில் பெரிய குழு இருப்பதாகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்…
-
- 3 replies
- 442 views
- 1 follower
-
-
இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ் இலங்கை- இந்திய நட்புறவு நகர்வுகளில் உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து, பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வெளிவிவகாரதுறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாவின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லா இலங்கையில் தங்கியிருக்கும் குறித்த காலகட்டத்தில், மிகப்பெரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் கிராமங்களை பலப்படுத்தும் வேலைதிட்டங்…
-
- 1 reply
- 279 views
-
-
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது! பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் , வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை வாங்கி தண்டனைப் பத்திரம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டார். அவரது நடவடிக்கை எல்லை மீறிச் சென்றதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தனர். அதனால் அப்பகுதிய…
-
- 0 replies
- 244 views
-
-
இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர். நவராத்திரி விழாவில் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் என அறியமுடிகின்றது. இந்நிலையில், இலங்கை படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளார் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || சுப்பிரமணியன் சுவாமி கொழும்பு வருகிறார்
-
- 8 replies
- 931 views
-
-
கறுப்பு பணத்தை... பதுக்கி வைத்தவர்கள் பட்டியலில், நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் அம்பலம்! உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில் 90 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் இரகசிய உடைமைகள் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றியா நிரு…
-
- 0 replies
- 313 views
-
-
தொடர்ச்சியாக... 5 நாட்கள் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு கட்சித்தலைவர் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் பதில் வழங்க முடியாமல் போன கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. அதேநேரம், நாளை, நிதி மற்றும் வரி தொடர்பான கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன. கனிய எண்ணெய் வள சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதேவேளை, அட…
-
- 0 replies
- 173 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை... சந்திக்கும் கூட்டமைப்பு! இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் தீர்வு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2021/1242733 ############### ################ ############## இது 100, 000 மாவது சந்திப்பு என, அரசியல் அவதானிக…
-
- 0 replies
- 163 views
-
-
ஜனாதிபதி கோட்டா... அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பினார். அதன்படி, அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவே அவர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1242722 ############## ################# ############# நன்னிச் சோழன்... சொன்ன மாதிரி, கோட்டாவின் வலது கண்... சின்னனாகத்தான் இருக்கிறது.
-
- 0 replies
- 149 views
-
-
அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக... யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்து சேவை! கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தலைமை முகாமையாளர் செ.குணபாலசெல்வம் அறிவித்துள்ளார். இந்தப் பேருந்தில் பயணிக்கும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்களது திணைக்கள அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உத்தியோகத்தர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் https://ath…
-
- 0 replies
- 185 views
-
-
ஒன்பது முக்கிய... நீண்ட கொரோனா அறிகுறிகள் – புதிய ஆய்வில் அடையாளம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கூறினார். இந்தப் புதிய ஆய்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீவிரமான கொரோனா தொற்றுக்குப் பிறகு தொடரும் அல்லது உருவாகும் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளை விவரிக்க ‘நீண்ட கோவிட்’ என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். ‘நீண்ட-கோவிட் அறிகுறிகள் மருத்துவமனை…
-
- 0 replies
- 186 views
-
-
பிளவுபடாத நாட்டுக்குள்... நிலையான தீர்வை அடைய, ஒற்றுமை அவசியம் – சம்பந்தன் வலியுறுத்து. ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் நிலையான தீர்வை வென்றெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து விசேட சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிற்குள் ஒரு சிலர் பிளவுகளை ஏற்படுத்த காத்திருக்கும் நிலையில் தமது ஒற்றுமையை உறுதி செய்ய சம்பந்தப்பட்டவர்களின் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் சம்பந்தன் தெரிவித்…
-
- 5 replies
- 435 views
- 2 followers
-
-
ஆரியகுள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை – யாழ் மாநகர முதல்வர் ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக நேற்று சனிக்கிழமை ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஆரியகுளம் புனரமைப்பு என்பது என்னால் தயாரிக்கப்பட்ட திட்டம். அதில் என்ன உள்ளது என்பதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளோம். ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதத சார்பு அடையா…
-
- 1 reply
- 328 views
-
-
'மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா' என்ற பதாதைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்! By Shana மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புணானை மேற்கு அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிறவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டு பாரிய குழியில் தோண்டி கிறவல் அகழப்பட்டு வருவதாக அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மண் ராஜபக்ஸக்களின் கூடாரமா என்ற பதாதைகளுடன் சிறுவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரச அதிகாரிகளே கணிய வளத்தை சுரண்டுவதற்கு துணை போவது ஏன்? ராஜபக்சக்களின் பெயர்களால் மண் சுரண்டல்,எமது வளத்தை சூரையாடாதே.பிரதேச செயலாளரே விவசாய …
-
- 4 replies
- 377 views
-
-
யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A By Shana நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். http://www.battinews.com/2021/09/56-9a.html
-
- 16 replies
- 1.4k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசாங்கம் மேற்கொண்ட மந்தமான முயற்சிகள் குறித்து கவலை வெளியிடப்பட்டது. மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் வெளிப்படையாக இழுத்தடிப்பை செய்க…
-
- 0 replies
- 276 views
-
-
எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்க்க... ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம் இலங்கையின் எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளது. குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது வரைபில் உள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகைய…
-
- 1 reply
- 259 views
-
-
நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணம் நாக விகாரை விகாராதிபதி நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம் நேற்று கூட அனைத்து மத தலைவர்களும் இணைந்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டோம்.எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்று இணைந்து செயற்படுகின்றோம்.சிலர் தமது அரசியல் தேவைகளுக்காக மத வாதங்களை தூண்டி மக்களை குழப்பி விட யோசிக்கிறார்கள் மக்களை தூண்டி விடுகிறார்கள் எனவே இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ அனைவரும் முயற்சிக்கின்றோம்.எனவே ஒரு சிலரின் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மதங்களுடையில் ப…
-
- 0 replies
- 418 views
-
-
நாட்டை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க திட்டம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வடக்கு ,தெற்கு ,கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா (kenichi yokoyama) விடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நெடுஞ்சாலை அமைச்சர் பெர்ணான்டோவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா வுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வீதி பாதூகாப்பு, போக்குவரத்து நெரிசல் முகாமைத்துவ திட்டமொன்றை புதிதாக ஆரம்பித்தல…
-
- 0 replies
- 304 views
-
-
இந்தியா- இலங்கை இணைந்து.. மெகா இராணுவ பயிற்சி இந்தியா மற்றும் இலங்கை இராணுவங்கள் இணைந்து மித்ரா சக்தி என்ற பெயரில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் 8ஆவது கட்ட மெகா இராணுவ பயிற்சி, இலங்கையில் நாளை (திங்கட்கிழமை) முதல் 15 ஆம் திகதி வரை 12 நாட்கள் நாட்கள் நடைபெற இருக்கின்றன. இரு நாட்டு இராணுவங்களின் நெருக்கமான உறவுகளை வலுப்படுத்தவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த பயிற்சி நடைபெறுவதாக இராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இரு இராணுவத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும் எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 317 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழிற்கு விஜயம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (ஞயாயிற்றுக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில், அவர் இலங்கையில் தங்கியிருக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அதேபோல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்திய வெள…
-
- 0 replies
- 223 views
-
-
நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு! நாடளாவிய ரீதியில் உரிமம் பெற்ற அனைத்து மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கலால் திணைக்களம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினைத்தை முன்னிட்டே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1242542
-
- 0 replies
- 249 views
-
-
பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் பின்வாங்கினால் பாரிய நெருக்கடி உருவாகும் - தயான் ஜெயதிலக (ஆர்.யசி) மனித உரிமைகளை பாதுகாப்பதில், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதில், ஜனநாயக செயற்பாடுகளை கையாள்வதில், தொழிலாளர் சட்டத்தை பலப்படுத்துவது குறித்தெல்லாம் ஏன் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை ? இவ்வாறான காரணங்களை சுட்டிக்காட்டி ஜி.எஸ்.,பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் பாரிய அடிவிழும் என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவரும் பிரான்ஸ் மற்றும் யுனெஸ்கோவிக்கான முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/32191/dayan_jg.jpg தமிழ் மக்களின்…
-
- 1 reply
- 324 views
-
-
போருக்கு பின் கைவிடப்பட்டிருந்த ஆழியவளை திலீபன் வைத்தியசாலையை புனரமைத்து ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்க நடவடிக்கை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக, பிரதமரின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவினால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்கள், அங்கஜன் இராமநாதனால் ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
இவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களிற்கான அரசியலை செய்பவர்களாகயிருந்தால் ரத்வத்தையை மட்டக்களப்பிற்கு அனுப்பும் தலைமையின் முடிவை எதிர்த்திருக்கவேண்டும்- ஸ்ரீநேசன் வாழைச்சேனை அரசியற் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சரின் வருகை தொடர்பான விடயத்திற்கே தலைமையிடம் தங்கள் கருத்தைச் சொல்லவில்லை என்றால். இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எதனைப் பேசிப் பெற்றுத் தரப் போகின்றார்கள். அவர்கள் நினைக்கின்ற அரசியலைத் தான் இவர்கள் செய்ய முடியுமே ஒழிய இவர்கள் நினைக்கின்ற, எமது மக்களுக்கான அரசியலைச் செய்ய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 250 views
-