ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142678 topics in this forum
-
Published By: VISHNU 28 JUL, 2025 | 07:15 PM (நா.தனுஜா) நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும…
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
28 JUL, 2025 | 06:00 PM கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் தூவல்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கடலில் மூழ்கியதையடுத்து, அந்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் கரை ஒதுங்கி தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை (28) மன்னார் சௌத்பார், கீரி, தாழ்வுப்பாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி, அவர்களுக்கு குறிப்பிட்ட நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடல் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களை…
-
- 1 reply
- 192 views
- 1 follower
-
-
எலும்புக்கூடுகள் கழுத்தை இறுக்கப்போகின்றதென அஞ்சும் பேரினவாதம் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - ஐங்கரநேசன் 28 JUL, 2025 | 05:40 PM வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுஎனதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார் கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஆற்றியஉரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும்தமிழ் மக்களின் மனங்க…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்…
-
-
- 17 replies
- 735 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 JUL, 2025 | 06:06 AM மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர் இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/221120
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:57 AM இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது. இது குறித்து சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது காசாவில் அப்பாவி சிறுவர்கள் மீது குண்டுவீசி ,சுட்டுக்கொலை செய்த இஸ்ரேலிய இராணுவீரர்களிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இலவசவீசாவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்த…
-
- 0 replies
- 98 views
-
-
தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு! வடமராட்சி அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது. வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து தமது பிரதேசத்தில் கூடியளவில் மணல் அகழப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கிராமத்தை அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையி…
-
-
- 4 replies
- 341 views
- 1 follower
-
-
கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் காட்சிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன விடுதலைக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தப் புதிய அரசாங்கம் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்து வந்திருந்தாலும் கூட இன்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏதாவது நடைபெறுகின்றதா? தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட…
-
- 0 replies
- 104 views
-
-
500 கோடி ரூபா மோசடி; முன்னாள் அமைச்சருக்கு வலை 500 கோடி ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட் டின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்துள்ளது. பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை, தொழில் வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கியமை மற்றும் அந்த அமைச்சில் பணி புரிந்த பல ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு குறித்த முன்னாள் அமைச்சரை விரைவில் கைது செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்னைய ஆட்சியில் பாதுகாப்புப் பிரிவில் கடமைபு…
-
- 0 replies
- 90 views
-
-
புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமான குறித்த பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன வரலாற்றில் இணைகிறார். https://athavannews.com/2025/1440826
-
- 0 replies
- 78 views
-
-
கடலட்டை உற்பத்தி அதிகரித்தால் சூழல் சமநிலை சீர்குலையும்; ஆளுநர் சுட்டிக்காட்டு வடக்கு மாகாணத்திலிருந்து கடலட்டையின் ஏற்றுமதிகள் இரட்டிப்பாகியுள்ளன. எனினும் கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோதமான நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலை சீர்குலையும் என்று வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார். சினமன்குளோபல் நிறுவனம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- எங்களுடைய கடற்கரைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்ற…
-
- 0 replies
- 112 views
-
-
ஜனாதிபதி இன்று மாலைதீவுக்கு பயணம்! மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் இத்தருணத்தில், ஜனாதிபதி திசாநாயக்கவின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்…
-
- 0 replies
- 81 views
-
-
மாவை சேனாதிராசாவின் 06ஆம் மாத நினைவஞ்சலி! adminJuly 28, 2025 மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) நடைபெற்றது. தந்தை செல்வா நற்பணி மன்றமும் வட்டுக்கோட்டை பகுதி மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மாவையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரைகள் ஆற்றப்பட்டன. பின்னர் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறைந்த மாவ…
-
- 0 replies
- 62 views
-
-
முன்னாள் பெண் போராளி உயிர்மாய்ப்பு! adminJuly 28, 2025 யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) தனது உயிரை மாய்த்துள்ளார். புனர்வாழ்வு பெற்று, தடுப்பில் இருந்து வெளியே வந்து ,தனது சகோதரியுடன் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்தவர் நேற்றைய தினம் தனது உயிரை மாய்த்துள்ளார். என உறவினர்கள் மரண விசாரணையில் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218417/
-
- 0 replies
- 99 views
-
-
இனிய பாரதியின் நெருங்கிய சகா “தொப்பி மனாப்” கைது! adminJuly 28, 2025 இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரசே சபை முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27.7.25) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களில் இரண்டு தினங்களாக குற்றப் புலனாய்வாளர்கள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில்…
-
- 0 replies
- 70 views
-
-
26 JUL, 2025 | 05:08 PM யாழ்ப்பாணத்தில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்து, தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அரசியல் கட்சி ஒன்றின் தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை நாரயம்பதி மாதா தேவாலயத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மாதா சிலையையே இந்த கும்பல் அடித்து உடைத்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தேவாலயத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை (25) அரசியல் கட்சியின் தீவக அமைப்பாளரின் தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சற்று நேரத்தில் இந்த கும்பல் மது போதையில், தேவாலயத்திற்கு சென்றவர்களுடன் …
-
-
- 6 replies
- 459 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 05:05 PM தமிழர்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில் 1983 கறுப்பு ஜூலையில் வெளிக்கடையில் சிறையில் படுகொலைப்பட்டவர்களின் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 யூலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு நாள். அதற்கும் முன்னரும்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 27 JUL, 2025 | 11:28 AM கூட்டாக இனத்தை அழிக்கின்ற மனோநிலை ஸ்ரீலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இருந்திருக்கின்றது என்பதையே செம்மணி மனித புதைகுழியும் ஏனைய மனித புதைகுழிகளும் வெளிப்படுத்தியுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இதுவரையில் 89 உடல்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, மேலதிகமாகவும் பல உடல்கள் உறுதிப்படுத்தப்படக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. இந்த மனிதப்புதைகுழி என்பது கிட்டத்தட்ட 96ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம். அப்போது செம்மணியில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய சந்திரிகாகுமாரதுங்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 11:30 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உள்கட்டமைப்பு மீளாய்வு பணிக்குழு, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. இந்த பணிக்குழு…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 10:10 பாறுக் ஷிஹான் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும்அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரைசந்திரகாந்தன் தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர். இதில் அம்பாறை மாவட்டத்தில் அக்கால கட்டத்தில் பொறுப்பாளராக செயற்பட்டஇனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்ப குமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் இன்றுபயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் …
-
- 2 replies
- 200 views
-
-
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு! வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சால…
-
- 0 replies
- 127 views
-
-
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 03:50 PM வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. https://www.virakesari.lk/article/221004
-
- 3 replies
- 273 views
- 1 follower
-
-
மாணவர்கள் இடைவிலகலை தூண்டுவது வாழ்வாதாரமே! - சபா குகதாஸ் தெரிவிப்பு! மாணவர்களின் வாழ்வாதார வறுமையை ஒழிக்காமல் ஒருபோதும் கல்வியில் உயர்ச்சியை எட்ட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடையாக இருப்பது மாணவர்களின் வாழ்வாதார வறுமையே பிரதான இடம் பெறுகின்றது. அண்மைய காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வி இடை விலகலுக்கு காரணம் கொடிய குடும்ப வறுமை இதனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்விச் செயற்பாட்டில் இருந்து இடை விலகி கூலி வேலைகளுக்கு செல்வதை காணமுடிகின்றது வேறு பல மாணவர்கள் தவறான வழி…
-
- 0 replies
- 81 views
-
-
மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு! மேலும், 40 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை நீட்டிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார். ஐக்கிய இராச்சியம் உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் விசா கட்டண விலக்கு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். இந்த முடிவால் …
-
-
- 10 replies
- 547 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 26 JUL, 2025 | 06:25 PM இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளுக்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது விடுதலையை நோக்கிய “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான கவனயீர்ப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகளில் சிறைப்படுகொலை நினைவேந்தல் மற்றும் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், விடுதலை நீர் கையளிப்பு, சிறைக்கூட உணர்வு கண்காட்சி ஆகியன இரு தினங்களாக நடைபெற்று வருவதோடு, தாயகத்தின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து விடுதலை நீர் கையளிக்…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-