ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார் கோட்டாபய; அதற்கு முன் கூட்டமைப்புடன் பேச்சு? September 6, 2021 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார். கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது கூட்டம், நியூயோர்க்கில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயல…
-
- 0 replies
- 278 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளான இளம் ஊடகவியலாளர் ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற இளம் ஊடகவியலாளரே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்த பிரகாஷ், ஒரு மாற்றுத் திறனாளியாவார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன் , உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார். அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். அத்துடன் முகநூலில் உடனுக்கு உடன் உள்நாட்டு , வெளிந…
-
- 59 replies
- 2.9k views
- 2 followers
-
-
ஐ.நா வதிவிட அதிகாரியிடம், 13 பக்க ஆவணம் கையளிப்பு! September 5, 2021 13 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை ஐ.நா வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் கையளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள 48 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை கூறவுள்ளார். இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் 13 பக்கங்கள் கொண்ட ஆவணமொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அதிகாரி ஹனா சிங்கரிடம் கையளித்துள்ளார…
-
- 0 replies
- 188 views
-
-
NOORUL HUTHA UMAR - யாரும், எங்கும் சட்ட ரீதியாக குடியிருக்கலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் காணியில் அவர்கள் குடியிருக்க முழு உரிமையும் உள்ளது. ஆனால் அந்த காணியில் மதரஸா கட்டுவது பொருத்தமான ஒன்றல்ல. தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வாறு ஒரு மதரஸா அமைப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குறித்த காணிக்கு அண்மையில் மிக நீண்ட கால வரலாற்றை கொண்ட கோயில் உள்ளது. தமிழர்களின் மரபுகள், கலாச்சாரம் இதன்மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முஸ்லிங்கள் செறிந்துவாழும் பிரதேசத்தின் நடுவில் இந்துக்கடவுள் சிலைகளை நிறுவினால் எப்படி இருக்கும். அதுபோலவே இந்த செயலும் உள்ளது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். அம்பாறை ஊடக அமையத…
-
- 1 reply
- 335 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுக்கும் மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம் | Virakesari.lk
-
- 13 replies
- 1.1k views
-
-
தொப்பிகலயில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு ShanaSeptember 4, 2021 தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படும் விகாரை தொகுதியில் இருந்து 16 கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.இதனிடையே, காவன்திஸ்ஸ மன்னனினால் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பிலான கல்வெட்டும் இதி…
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
மக்கள் ஒரு நேரம் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் – சித்தார்த்தன் மக்கள் ஒரு நேரம் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றது.இந்த விலையேற்றத்திற்கு அரசாங்கம் விட்ட தவறுகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.அதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மக்கள் விடுதலை முன்னணியின் தவைர் அநுர குமார திசாநாயக்க, மிகப் பெருந்தொகையான சீனி இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்காமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சீனியின் விலைகள் அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப…
-
- 2 replies
- 324 views
-
-
கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம் 210 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. விலைவாசி உயர்வு நியாயமற்றது என்றாலும், அது குறித்து தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறியுள்ளார். இதனிடையே கொவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் பொது மக்களுக்கு சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அரசாங்கத்தின் வருமானம் கடுமையாக குறைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்துள்ளதாகவும், இந் நிலையில் விலை வீழ்ச்சியை பொதுமக்கள் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப…
-
- 56 replies
- 3.5k views
- 1 follower
-
-
மக்களை அடக்கி ஆள்வதற்கே அவசரகாலச் சட்டம் பிரகடனம்: விக்னேஸ்வரன் கண்டனம் September 4, 2021 அடக்கி ஆள்வதற்கே அவசரகாலச் சட்டம்: தமக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்துக்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:- “2243/1 அதிவிசேட வர்த்தமானி மூலம் கொரோனாவைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். உண்மையில் இவ்வா…
-
- 2 replies
- 350 views
-
-
(ஆர்.யசி) இலங்கையில் கொவிட் மரணங்களானது 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையில் அபாயகரமான கட்டத்தில் இலங்கை உள்ளதாகவும், தெற்காசியாவில் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தூரநோக்குதிட்டங்களை விடவும் மக்களை பாதுகாக்க உடனடி தீர்மானங்களை இப்போது முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தெற்காசிய வலயத்திற்கான கொவிட் நிலைமைகள் குறித்து உலக சுகாதார தாபனம் தனது அறிக்கையை முன்வைத்துள்ள நிலையில், சுகாதார தரப்பினர் அறிக்கை குறித்தும் இலங்கையில் நிலைமைகள் குறித்தும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் …
-
- 2 replies
- 403 views
- 1 follower
-
-
ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய சிறைக்காவலருக்கு இடமாற்றம்! ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய சிறைக்காவலருக்கு இடமாற்றம்! விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கியமை தொடர்பில் மகசின் சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மகசின் சிறைச்சாலையில் இருந்து வவுனியா சிறைச்சாலைக்கு குறித்த சிறைக்காவலர் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்க தொலைபேசியொன்று நேற்று முன்தினம் (02) கைப்பற்றப்பட்டது. தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்த …
-
- 0 replies
- 245 views
-
-
வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான கடன் சலுகையை இலங்கை மத்தியவங்கி டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான கடன் சலுகையை இலங்கை மத்தியவங்கி நீடித்துள்ளது.இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரைஇந்த சலுகையை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.கொவிட் பரவலினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களின் கோரிக்கைக்கு அமைய, வங்கிகள் இந்த சலுகையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
-
- 0 replies
- 194 views
-
-
யாழ்.போதனா பணிப்பாளராக மீண்டும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி September 3, 2021 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்கிறார். மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில் பிரித்தானியா சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை…
-
- 5 replies
- 663 views
-
-
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொற்றுக்கு உள்ளாகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்கள…
-
- 1 reply
- 338 views
-
-
பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரண மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர். முதலிடத்தைப் பிடித்தார் சாணக்கியன் ! | Virakesari.lk
-
- 7 replies
- 713 views
-
-
நெல்,சீனி,மா போன்றவற்றினை பதுக்கிவைத்து கொள்ளை இலாபம் தேடநினைக்கும் மாபியாக்களிடமிருந்து அவற்றினை மீட்டு பொதுமக்களிடம் வழங்கும் செயற்பாடானது மக்களின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிட்சையளிக்கப்பட்டுவரும் நோயாளிகளுக்காக பயன்படுத்துவதற்கான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (03.09.2021) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்…
-
- 0 replies
- 402 views
-
-
இலங்கை - சீனா குறித்த சர்வதேச ஊடகங்களின் செய்திகள் அடிப்படையற்றவை - கப்ரால் Published by T. Saranya on 2021-09-03 17:27:49 (இராஜதுரை ஹஷான்) சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளதால் நாட்டில் நிதி மற்றும் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது. கொவிட் தாக்கத்தினால் இலங்கை மாத்திரமல்ல பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் கூட பொருளாதார ரீதியில் ஏதோவொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட்கப்ரால் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் இம்மாதத்திற்குள் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தி சுகாதார பாதுகாப்பு கட்டுப…
-
- 0 replies
- 231 views
-
-
மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கம் மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்தும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் ஹம்டியை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் பின்னணியில் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டிற்கான ஐ.நா. குழு ஆகியவற்றுக…
-
- 0 replies
- 166 views
-
-
யாழ். பல்கலையில் மனித உயிரியல் விஞ்ஞானத் துறையை ஸ்தாபிக்க ஆணைக்குழு அனுமதி! September 2, 2021 யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் நான்காவது புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத் துறை உள்வாங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவையின் பரிந்துரையுடன், பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரத்துடன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவு கடந்த மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தர நிர்ணயக் குழு மற்றும் முகாமைத்துவக் குழு ஆகியவற்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 177 views
-
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து அலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனை, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைக்காவலர்கள் அவரது சிறைக்கூடுக்கு அருகில் சென்ற போது, அலைபேசி வெளியில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மெகசின் சிறைச்சாலையில் நேற்று (01) மீட்கப்பட்ட அலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடு குறித்து, பாராளுமன்ற உறுப்பினரை சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilmirror Online || ரிஷாட் பதியுதீனிடமிருந்து …
-
- 2 replies
- 461 views
-
-
நேரடி ஆய்வு : நா. தனுஜா நாடு முடக்கப்பட்டுள்ளமையின் காரணமாக வருமானத்தை இழந்திருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபா நிவாரணத்தொகை அனைவரையும் முறையாகச் சென்றடையாத நிலையில் தாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கொழும்பு புறக்கோட்டைப் பொதுச்சந்தையில் பணிபுரியும் நாட்கூலித்தொழிலாளர்கள் தமது கஷ்டங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டனர். பாரிய பொதிகளைத் தள்ளுவண்டியில் வைத்து இழுத்துச்செல்லும் தொழிலின் ஊடாக அன்றாடம் சுமார் 2000 ரூபா வருமானத்தை ஈட்டிவந்த மொஹமட் இஷாட் தற்போதைய முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், வாழ்க்கை சுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. க…
-
- 0 replies
- 294 views
-
-
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பகுதியில் மக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை தொடக்கம் ஒரு சிலர் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அதே நேரம் இன்னும் சிலர் எவ்வித காரணங்களுமின்றி நகர்ப் பகுதிகளை நோக்கி வருகைத் தருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதேநேரம் இன்றைய தினம் வங்கி நடவடிக்கைகளும் இடம் பெறுகின்ற நிலையில் மக்களின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றபோதும் மக்களின் நடமா…
-
- 0 replies
- 490 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படையாத அமைப்புக்கள் வலுப்பெறும். தப்லிக் ஜமாத் அமைப்பை அரசாங்கம் தடை செய்வதுடன், இஸ்லாமிய அடிப்படையாத கொள்கையுடைய அமைப்புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/61537/thumb_ganasara.jpg ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முற்றாக இல்லாமல் போயுள்ளது என்று ஒருபோதும் கருத கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவிய…
-
- 3 replies
- 468 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை நிறுவுவதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயார் – நிதி அமைச்சர் கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது.அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின் ஆதரவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.சீன சபாநாயகர் லி ஜான்-ஷுவுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட மற்ற முதலீடுகளுக்கு சீனா உதவும் என்று சீன மக்கள் காங்கிரஸின் நிலைக…
-
- 1 reply
- 290 views
-
-
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை! September 1, 2021 வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்படும் என்று வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சப…
-
- 1 reply
- 474 views
-