ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வாக்கு கேட்டு... ஊருக்குள் வந்தால், "மண்வெட்டி" பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தமது பொறுமைக்கும் எல்லை உண்டு என குறிப்பிட்ட விவசாயிகள் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அமைச்சரினால் இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்றும் அவர்கள் சவால் விடுத்தனர். இரசாயன உர பாவனைக்கு இலங்கையில் தட…
-
- 0 replies
- 252 views
-
-
யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து... பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு! இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர். உலகளாவிய ரீதியில் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் உலக பொப்பி மலர் தினம் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியாகும். கொரோனா தொற்று நிலைமை காரணமாக உலக பொப்பி மலர் தினத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மிகவும் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். பொப்பி மலர் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்ட…
-
- 0 replies
- 440 views
-
-
தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் நட்பு நாடு என்பதற்காக தரம் குறைவான உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என்பதை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். சீன இரசாயன கப்பல் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறித்து இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் கூறினார். எவ்வாறிருப்பினும் தரத்தில் குறைவான குறித்த இரசாயன உரத்தைக் கொண்ட கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பது தடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். வரலாற்று ரீதியில் …
-
- 0 replies
- 177 views
-
-
அரசாங்கத்தின் உயர் பதவி முன்னுரிமையில் கப்ராலுக்கும் 5ஆவது இடம்! மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர், பீல்ட் மார்ஷல் ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி தரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதியரசர் 5. A. எதிர்க்கட்சித் தல…
-
- 0 replies
- 133 views
-
-
(எம்.நியூட்டன்) மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலை பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றுள்ளனர். இதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் அவர்களை துரத்திப் பிடித்தனர். நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று மீனவர்கள் கேட்டபோது, "கடற்படையினர் எமக்கு இரண்டாயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறினர். எனவே அந்த இரும்பினை எடுத்துச் செல்வதற்கே நாங்கள் இங்கு வந்தோம். நங்கூரம் என்றால் என்ன என்றே எமக்கு தெரியாது." என்று தெரிவித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மீனவர்கள் இளவா…
-
- 0 replies
- 512 views
-
-
6 இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. ஐ.என்.எஸ்.மகர் & ஷர்துல் ஆகிய கப்பல்கள் கொழும்பிற்கும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகியவை திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளன. நெருங்கிய நட்புறவு மற்றும் தோழமையை வெளிக்காட்டும் மற்றொரு சந்தர்ப்பமாக இளம் உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் வினைத்திறனை மேலும் விரிவாக்கும் இலக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது https://www.tamilmirror.lk/செய்திகள்/6-இந்திய-கப்பல்கள்-இலங்கைக்கு-விஜயம்/175-283716
-
- 2 replies
- 456 views
-
-
கிளிநொச்சியில் பயிர்கள் அழிவு : இழப்பீடு கோரும் விவசாயிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தின் போது ஏற்பட்ட பயிரழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்க முடியும் என கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக 1025 ஏக்கர் நெற்செய்கை 400 ஏக்கர் வரையான வயற் பயிர்கள் 150 ஏக்கர் வரையான பழ பயிர்கள் 82 ஏக்கர் வரையான மரக்கறி செய்கைகள் என்பன அழிவடைந்துள்ளன. இந்தநிலையில் இவற்றுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இத…
-
- 0 replies
- 377 views
-
-
ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச் சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? October 26, 2021 ஈழத்தமிழரை இனவழிப்புச் செய்து தமிழரின் சுற்றுச்சூழலைச் சிதைத்த கோட்டாபய சுற்றுச்சூழல் பற்றிப்பேச தகுதியுடையவரா? என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அரசசார்பற்ற மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை சபையின் OISL விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் தமிழ்மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு முக்கிய காரணாமாக இருந்த சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவியில் இருந்த இராணுவ உயரதிகாரிகள…
-
- 0 replies
- 294 views
-
-
ஆரியகுளத்தை... உரிமைகோரும், நாகவிகாரையின்... செயற்பாட்டை அனுமதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன் கண்டனம். யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க வேண்டும் என நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர் வலியுறுத்தி வந்தார். ஆனால் தற்போது நடைபாதை அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் குளத்தைச் சுற்றுலாத் தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என்றும் மாநகர முதல்வருக்கு கடிதம் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார் என சுட்டிக்காட்டினார். குளத்தின் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரையின் இத்தகைய நாட்டாண்மையை ஒருபோதும் அனுமதி…
-
- 0 replies
- 297 views
-
-
அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஷரீஆ சட்டம் குறித்த சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டதை அடுத்து மார்ச் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246707
-
- 0 replies
- 211 views
-
-
உர இறக்குமதியில் நிதி மோசடி: ஐக்கிய மக்கள் சக்தி சி.ஐ.டி.யில் முறைப்பாடு நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். மேலும் பக்கச்சார்பின்றி விசரணையை நடத்தி இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர். ஜே.சி.அலவத்துவல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட உறுப்பினர்களே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர். https://a…
-
- 0 replies
- 167 views
-
-
ரஞ்சனின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு – நீதிபதிக்கு எதிரான விசாரணைக்கு தடை ! முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறி செயற்படாதவாறு பிறப்பிக்கப்படும் தடை நீதிப் பேராணையையும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் குறித்த வழக்கில் 2 ஆவது சந்தேக நபராக நீதிபதி கிஹான் பிலபிட்டியவை பெயரிட்ட சட்டமா அதிபரின் ஆலோசனையையும் வலுவிழக்கச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூ…
-
- 0 replies
- 175 views
-
-
நாடளாவிய ரீதியில்... அமுலில் இருந்த சில கட்டுப்பாடுகள் தளர்வு நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் தளர்த்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சுகாதார வழிகாட்டி நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதார வழிகாட்டியின் படி, நாட்டில் தற்போது அமுலில் உள்ள இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான நடமாட்டத்தடை நீக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் மண்டபத்தின் மூன்றில் ஒரு பங்கு கொள்ளவில் 100 பேருக்கு மேற்படாமலும், திறந்தவெளியி…
-
- 0 replies
- 318 views
-
-
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பொலிஸார் யாழ் நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர். இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் இவ்வாறு நேற்று இரவு ஆரம்பிக…
-
- 2 replies
- 455 views
-
-
யாழ். பல்கலைக்கு சென்ற கனடியத் தூதரக அதிகாரிகள் October 25, 2021 கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டனர். கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு பயணமொன்றை மேற்கொண்டது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர…
-
- 6 replies
- 614 views
-
-
கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்! கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது. கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார். கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் க…
-
- 10 replies
- 755 views
-
-
வலி.வடக்கின், தென்னைப் பயிர் செய்கையில் இராணுவம்! October 25, 2021 யாழ்.வலி,வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்திருக்கும் படையினர் தென்னைகளை நட்டு நிரந்தரமாக காணிகளை சுவிகரிக்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, யாழ்.வலி, வடக்கிலிருந்து வெளியேறி 31 வருடங்களாக மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாத நிலையில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மயிலிட்டி, பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் நில விடுவிப்பு செய்யப்படாது 3500 ஏக்கர் தொடர்ந்தும் இராணு…
-
- 3 replies
- 391 views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரவுசெலவு திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்…
-
- 0 replies
- 285 views
-
-
”ராஜபக்ஸக்கள்’ வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும்! October 25, 2021 இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும், எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்ஸ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பென்டோரா அக்காவும் அவரது கணவரும் சேர்ந்து 160 மில்லியன் டொலர் மோசடியாக சம்பாதித்துள்ளனர். எனவே, பென்டோரா அக்காவின் பணத்தை எடுத்தால் உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, அரிசி பிரச்சினை…
-
- 0 replies
- 385 views
-
-
இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளை இடைநிறுத்த வேண்டும் – விமல் கட்சி பரிந்துரை இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு கூடியபோதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்தார். மேலும் புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவ்வாறு மாற்றப்படும் அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்பு…
-
- 1 reply
- 344 views
-
-
இரசாயன உரதிற்கான தடையில் திருத்தமில்லை – சசீந்திர அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேதன பயிற்செய்கையை பயன்படுத்துவதற்கான முடிவு மக்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது என்றும் அது தேர்தல்வாக்குறுதி அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பதுளையில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எவரும் விரும்பாத தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும், சுயநலமாக இந்த தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் எவ்வாறான குறைபாடுகள் இருந்தாலும் ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்றும் …
-
- 0 replies
- 140 views
-
-
நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரியாக பூஜையில் கலந்து கொண்ட குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் October 24, 2021 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினம் காலை குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார். …
-
- 4 replies
- 669 views
-
-
மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்தக் காணியை காணி உரிமையாளர் சுத்தம் செய்தவேளை, அதிகளவான வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட நிலையில், பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர் பொலிஸார் ஊடாக மேற்கொண…
-
- 0 replies
- 255 views
-
-
ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சந்தைகளில் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு
-
- 13 replies
- 813 views
- 1 follower
-