Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.மனோசித்ரா) பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்தவொரு தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயற்பாடுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் உயர்தர இராணுவ படையணியாக புதிய படையணியொன்று உறுவாக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படையணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து 'முதலாவது இலங்கை இராணுவ படையணி' உருவாக்கப்பட்:டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சாலியபுர கஜபா படையணித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இராணுவத் தளபதியின் முன்னோக்கு வழி மூலோபாய 2020 - 2025 திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் கு…

  2. குற்றவியல் நடைமுறைக்கோவைத் திருத்தங்களினால் ராஜபக்ஷக்களுக்கு எதிரானவர்கள் இலக்குவைக்கப்படலாம் - கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து (செய்திப்பிரிவு) குற்றவியல் நடைமுறைக்கோவைத் திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில், எதிர்வருங்காலங்களில் அதனால் யார்வேண்டுமானாலும் பாதிப்படையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படக்கூடியவர்களை இலக்குவைத்து எவ்வித இன, மத, மொழிபேதங்களுமின்றி அதனைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது அமுலில் உள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திர…

  3. நில அபகரிப்பு விவகாரம்- மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் October 20, 2021 மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணியை சிலர் அபகரிக்க முற்படுவதாகத் தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தாறுமூலை கிழக்கு தேவாபுரம் என்னும் பகுதியில் உள்ள மக்களே இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல்துறையினரே சட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்து, விளையாடுவதற்கு மைதானம் தரவேண்டும்,ஏறாவூர்பற்று பிரதேசசபையே எமக்கான விளையாட்டு மைதானத்தினை பெற்றுத் தாருங்கள்,விளையாட்டு மைதானத்திற்கான நிரந்தர தீர்வினை தாருங்கள்,50வருட எங்கள் உரிமையினை மீறாதே போன்ற வாசகங்…

  4. லசந்த கொலை உள்ளிட்ட பல வழக்கு விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய சில வழக்குகளின் விசாரணைகள் குறித்து மௌனமாக இருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஏன் மௌனமாக உள்ளதென ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் முன் வழக்குகள் அல்லது சட்டமா அதிபரால் கையாளப்படுவது குறித்து அரசாங்கம் கருத்து தெரிவிக்காது என்று கூறினார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் மற்றும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் கட்டாய காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வ…

  5. ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்து: டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் கம்மன்பில 3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 5 வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் 20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். உலகளாவில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார். தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 35 ரூப…

  6. இலங்கையில், மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்/கட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆ…

  7. 13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வன…

  8. ரம்பேவ - சங்கிரிகம, சிறிபாபுர பிரதேசத்தில் நேற்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை மற்றும் உரப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) போன்ற தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். https://tamilwin.com/article/protest-at-rambeva-1634632265

  9. இலங்கைக்கு... இந்தியா, கால அவகாசம் வழங்க வேண்டும்- சுப்ரமணிய சுவாமி! இலங்கை இந்தியாவிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த, மேலும் கால அவகாசத்தை இந்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கையை இந்தியா மாற்றியமைக்கவேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய – இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1245452

  10. பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், தனது அரசியல் வாழ்க்கையில் சோகமான நிகழ்வு இந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலே என்றும் குறிப்பிட்டார். இது மிகவும் சிக்கலான பிரச்சினை என சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன இந்த சம்பவம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சுமார் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தன்னால் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்த…

    • 2 replies
    • 417 views
  11. ’ஊழலை மறைக்கவே சுமந்திரன் உழத் தொடங்கினார்’ -க. அகரன் ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (19), தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் எனவும் நிமலராஜன் படுகொலை, தமிழ் ஜனநாயகத்தை கொன்றது எனவும் கூறினார்.…

  12. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 180 நாட்களில் 4,743 முறைப்பாடுகள் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந…

  13. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் விடுத்துள்ள வேண்டுகோள் (எம்.நியூட்டன்) மாணவரின் கல்விக்காக ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரிய சங்கம் தெரிவிக்கையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. குறிப்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். கொடிய யுத்தம் நடந்த காலத்தில்கூட இத்தகைய வீழச்சி வந்ததில்லை. இது திட்டமிட்டு செய்யப்படுகின்ற சூழ்ச்சி. …

  14. அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பயிர்நிலங்களை அரசு விடுவிக்க வேண்டும் – ரவிகரன். October 19, 2021 தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை நிலங்களையும் அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் திணைக்களத்தின் முன்பு நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்த…

  15. "திவி நெகும" மோசடி வழக்கு : சட்டமா அதிபருக்கு கடிதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான திவி நெகும மோசடி குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக தொழில் நிபுணர்கள் தேசிய முன்னணி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. குற்றப்பத்திரிகைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறித்த கடிதத்தில்சுட்டிகாட்டப்பட்டுள்ளது. எனவே, அவரது அறிவுறுத்தலின் பேரில் திரும்பப் பெறப்பட்ட வழக்கின் எண்ணையும், திரும்பப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்திய முந்தைய வழக்கு எண்ணையும் வழங்குமாறு சட்டமா அதிபரை தொழில்நிபுணர்கள் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. …

  16. அமைச்சர்கள், வெளிநாடு செல்லத்தடை! எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஜனாதிபதி செயலாளரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நவம்பர் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிதி அமைச்சரின் உரை இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம…

  17. கெரவலபிட்டிய மின் நிலைய ஒப்பந்தம் : இடைக்கால தடை உத்தரவு கோரி மனுதாக்கல் கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோரால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உட்பட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். செப்டம்பர் 6 ஆம் திகதி கூறப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சரவையில் எட்டப்பட்ட முடிவை இரத்து செய்து, விண்ணப்பம் மீதான விசாரணை முடியும் வரை ஒப்பந்தம் அமுல்படுத்தப்படுவதைத்…

  18. நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதி! நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். 9 இலட்சம் ஹெக்டேருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1245616

  19. விவசாயிகளிற்கு ஆதரவாக திங்கட்கிழமை போராட்டம் – சுமந்திரன் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திங்கள் கிழமை வடக்கு கிழக்கில் நடத்த உள்ள போராட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும…

  20. கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை ( 18 ) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத…

  21. அமைச்சர் டக்ளஸின் செயற்பட்டால் தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் – இரா. சாணக்கியன் இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.எனவே, மீன்பிடித்துறை அமைச்சர் வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அமைச்சரின் இந்த அசமந்தச் செயற்பாடானது தமிழ் நாடு மற்றும் வடக்கு- கிழக்கு வாழ் மீனவர்களுக்கிடையில் பிரச்சினைகள…

  22. இலங்கை அரசு கடந்த 4 நாள்களில் மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அச்சிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர் இதுவரை 15 ஆயிரம் கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய மற்றும் தென் மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன், அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்ற பின்னர், 15 ஆயிரத்து 842 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 36 ஆகியரத்து 805 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது. அரசின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பில் அல்லது பணம் அ…

  23. தமிழர்களை தொடர்ந்து முஸ்லிம்களையும் விட்டு வைக்காத பயங்கரவாத தடைச்சட்டம் : அம்பிகா சற்குணநாதன் ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது பயன்படுத்தப்பட்டபோதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பயன்படுத்தப்படுகின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எத்தனையோ நபர்களுக்கு எதிராக வழங்கு தொடுக்கப்படவில்லை. அவ்வாறு வழக்கு தொடுக்கப்படவும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. அவர்களின் குற்றங்களை கண்டுபிடிக்க 10 - 12 வருடங்களுக்கு மேல் உரிய தரப்பினருக…

    • 4 replies
    • 553 views
  24. திருகோணமலை ஆலங்கேணியைச் சேர்ந்த செல்வி கேதீஸ்வரன் சாமினி (வயது17) என்ற மாணவி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜா கபில்ராஜ், உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்திருந்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக இம்மாதம் 15 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணை 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் இம்மாதம் 25 ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இக்கொலைச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அன்று அதிகாலை 3.00 மணிய…

  25. கிளிநொச்சி வைத்தியசாலையில் 1.9 கோடி ரூபாவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் நேற்று (17.10.2021) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட இரத்த சுத்திகரிப்பு தேவையுடையவர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகரித்த போக்குவரத்து செலவுகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த நிலைமை காணப்பட்டது. இந்த இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையத்தின் மூலம் இவர்களுடைய பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.