Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்! October 6, 2021 மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று உரிமம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாதத்தில் மேலும் சுமார் 1500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்ப…

  2. அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை... யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன் சபையில் வலியுறுத்து! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம். நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக…

  3. நிவாட் கப்ராலின்... பொறுப்பில் இருந்த, இராஜாங்க அமைச்சின் பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகிப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றார். இதனையடுத்து அந்த அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக்கள், மு…

  4. வன்முறை கும்பலை சேர்ந்தவரை... தப்ப விட்ட, சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை! பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அழைப்பாணை அனுப்பியுள்ளார். ஏழாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவித்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய போது, வன்முறைக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் போது அக்கும்பல…

  5. LTTE இன்... புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர், சென்னையில் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்…

    • 6 replies
    • 862 views
  6. இலங்கையில் புதிதாக... எரிபொருள் நிறுவனம் ஒன்றை, உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி! இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி, திரவப் பெற்றோலிய எரிவாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில், குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை எரிசக்தி அமைச்சரினால், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1243272

  7. ஆபாசப் பேச்சுகளுக்கு... விரைவில் தடை! ஆபாசப் பேச்சுகளை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு …

  8. யாழில்... பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள், பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு! ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர். அத்துடன் தாளையடி…

    • 5 replies
    • 469 views
  9. வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை இன்று முதல் நீடிப்பு தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இந்த விசா செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பிரிவுக்கான விசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துட…

  10. நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு... இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அந்த ஆணைக் குழ…

  11. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடனாக 47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போன்றதொரு தொகையே உள்ள நிலையில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளங்களை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிருக்கின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். இவ்வாறான தேசிய வளத்தை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாற…

    • 9 replies
    • 770 views
  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பெற்றோலிய வளங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவிருந்தது நிலையில் வெள்ளைப்பூண்டு, லிற்றோ காஸ் தொடர்பில் அரச, எதிர்க்கட்சியினரிடையில் நீண்ட நேரமாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் முக்கியமான விவாதம் இருப்பதாகவும் அமைச்சர் நேரத்தை வீணடிப்பதாகவும் கூறி இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அரசு தரப்பினர் அமைச்சருக்கு விளக்கமளிக்கும் உரிமை உள்ளதென வாதிட்டு அமைச்சரை விளக்கமளிக்க அனுமதிக்குமாறு ச…

  13. 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் வட மாகாணத்திற்கு 20 வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது - சார்ள்ஸ் நிர்மலநாதன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரையில் 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதிசேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ் காரணமல்ல. நிதி அமைச்சின் தவறான கொள்கையும் வழிகாட்டலுமே பொருளாதாரம் வீழ்ச…

  14. புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி! இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பி…

  15. போருக்குப் பின்னரான... முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதி போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக இலங்கை உறுதியளித்தது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், அமைதி மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான அனைத்து பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார். இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அந்த …

  16. அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை(வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1243178

    • 1 reply
    • 289 views
  17. பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமை…

  18. லங்கா சதொச நிறுவனத்தில்... மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல – பந்துல லங்கா சதொச நிறுவனத்தில் பாரிய வெள்ளைப்பூண்டு மோசடி நடந்திருப்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். மேலும் லங்கா சதோசாவில் இதுபோன்ற மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல என்றும் முந்தைய ஆட்சியின் போது இதுபோன்ற மிகப்பெரிய மோசடிகள் தொடர்பான ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த பூண்டு மோசடி சதொச தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறினார். இந்த மோசடி தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நடத்தப்படுவதாகவும்…

  19. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் - கஜேந்திரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அமெரிக்காவுக்கு சென்று அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்தக் காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூலத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்…

  20. அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன் அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்றைய தினம் பாராளுமன்றத்தில். 13வது சட்டத் திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வினை பற்றி நாம் கதைத்துக் கொண்டிருக்கும் அதேவேளை அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்கள…

  21. காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? பாராளுமன்ற உறுப்பினர் - கோ.கருணாகரம் ஜனா ShanaOctober 5, 2021 (துதிமோகன்) காணாமல் போனவர்களுக்கு நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கலாம். ஆனால், உங்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? உங்களிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நீங்கள் மரணச் சான்றிதழ் கொடுக்கப்போகின்றீர்கள் என்றால் நீங்கள் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள், நீங்கள் கொலைக் குற்றவாளிகள், நீங்கள் தண்டனை பெற வேண்டியவர்கள் என்பதை நீங்களே ஏற்றுக் கொள்கின்றீர்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஐநா உரை …

  22. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் சிறுவர்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமைக்கூட இலங்கையில் பறிக்கப்படுகின்றது இறுதி யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பிரபாகரனின் இளைய மகன் என்கிற ஒற்றைக் காரணத்தினாலேயே 12 வயதுடைய பாலச்சந்திரனை அரசாங்கம் படுகொலை செய்தது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் குற்றம்சாட்டிய நிலையில் அரச தரப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் பேசியபோது, இம்மாதம் முதலாம் திகதி சிறுவர் தி…

  23. ”சீனாவுடனான தொடர்புகள் தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம்”: இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு! சீனாவுடனான தொடர்புகள் பற்றி எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி கூறியுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் இன்று (05) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்ப…

  24. யாழ். பல்கலைக்கழக நிகழ்நிலைப் பட்டமளிப்பு வியாழன்று October 5, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதனை நிகழ் நிலையில் நடாத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் ப…

  25. அரவிந்தா திஸாரா ரதுவிதான பிபிசி 'ஒரு நாள் நான் பேருந்து தரிப்பிடத்தில் பகல் வேளையில் நின்று கொண்டிருந்த போது, போலீஸார் என்னை அழைத்து சென்றனர். எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றியே என்னை அழைத்து சென்றார்கள். இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைத்திருந்தார்கள். இரவு 11 மணிக்கே வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார்கள். பிறகு வீதியில் அலைந்து திரிந்ததாக குற்றம்சாட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்கள்." வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள ஏன் இரவு வரை காக்க வைத்தார்கள் என்பதை பின்னரே நான் அறிந்துக்கொண்டேன். "இரவு வேளையிலேயே இவரை நாம் கைது செய்தோம் என நீதிமன்றத்தில் அப்போது தானே உரக்கக் கூற முடியும். போலீஸாரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.