Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்! இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையில் பரஸ்பர வரிகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதனால், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இணைந்து கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு…

  2. போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது! நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவின் பேரிலும், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஒருங்கிணைப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையில் 254,679 மில்லி கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21,1…

  3. 2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்! இந்த ஆண்டு (2025) இதுவரை 57 திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீடுகள் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் 101% அதிகரிப்பைக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து வளர்ச்சிக்கு மாறி வருவதாகவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் வருகையை அனுமதிக்கும் வணிகத்தை எளிதாக்குவதில் அரசா…

  4. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது July 21, 2025 10:17 pm விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் இருந்து தகவல் வரும் வரை ஹோட்டல் அறையில் ரமேஷ…

  5. 21 JUL, 2025 | 05:34 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன. அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக…

  6. Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என பரிந்துரைத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள …

  7. Published By: DIGITAL DESK 2 21 JUL, 2025 | 01:43 PM வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் துறை, கதையாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய உரையாடல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது. அதில் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். குறித்த நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே துணைத்தூதுவர் மேற்கண்…

  8. உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்! முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கை எத…

  9. 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ். ”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள் உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழல…

  10. செம்மணி செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்! இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன. மொத்தம…

  11. கசூரினா கடற்கரையில் பாரிய தீ விபத்து! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம்(21) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள் , பனை மரங்கள் என்பன தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1439919

  12. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு July 21, 2025 10:50 am வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

      • Like
    • 2 replies
    • 175 views
  13. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இருப்பினும், அரசியலமைப்பு வரைவுக் குழுவை நியமிப்பதோ அல்லது அது தொடர்பான எந்தவொரு ஆரம்ப வேலைகளோ இதுவரை செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…

      • Like
    • 2 replies
    • 230 views
  14. "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம் 21 Jul, 2025 | 10:53 AM கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுப் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில், நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’ என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகா…

  15. செம்மணிப்புதைகுழி வழக்கைக் கையிலெடுத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு; அகழ்வில் இன்று பிரசன்னமாவர் செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று அகழ்வு நடவடிக்கைகளின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட…

  16. மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவரும் அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக …

    • 1 reply
    • 93 views
  17. ஜெனீவாவில் முறையிட, ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தீர்மானம்! adminJuly 21, 2025 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே,“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறி தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்…

  18. கசூரினா கடற்கரையில் தீ! adminJuly 21, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218136/

  19. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை இன்றைய தினம் தெரிவு செய்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு கிழக்கின் தலைவி யோகராஜா கனகரஞ்சினியும், செயலாளராக சி. ஜெனிற்றாவும் தெரிவு செய்யப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவராக சி. இளங்கோதை, மட்டக்களப்பு மாவட்டம் வ.அமலநாயக…

  20. வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு Published By: VISHNU 20 JUL, 2025 | 09:21 PM யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் சனிக்கிழமை (19) தினம் ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது…

  21. 20 JUL, 2025 | 05:10 PM கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம் எனவும் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினார். பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருப்பதாகவும் பொலிஸார் தங்களது வாக்குமூ…

  22. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 12:42 PM திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழம…

  23. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை! யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம், ஜூலை 17ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதி பின்வருமாறு விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்: 4.5 கோடி ரூபாய் புனரமைப்புப் பணிகளுக்காக (பொது கழிவறை அமைத்தல் உட்பட) 2 கோடி ரூபாய் டிஜிட்டல் சேவைகளுக்காக * 3.5 கோடி ரூபாய் கணினிகள் …

  24. மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரனுக்கு உயர் பதவி மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது சிங்கப்பூரில் உள்ள “விஸ்டம் ஓக்” என்ற முன்னணி முதலீட்டு நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டு நிபுணராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முதலீடுகளைக் கட்டுப்படுத்துதல், நிதி வளங்களை நிர்வகித்தல், பங்குச் சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல் ஆகியவை அவரது முக்கிய பொறுப்புகளில் அடங்கும் என்பதை சமூக ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. 2016இல் …

  25. யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது! Vhg ஜூலை 20, 2025 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் போலி கடவுச்சீட்டு, போலி விமான அனுமதி அட்டை (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரைகளுடன் பிடிபட்டுள்ளார். யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட இந்த யுவதி, குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி டுபாய் வழியாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. போலித் தகவல்களை வழங்கியமை, உத்தியோ…

    • 3 replies
    • 299 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.