Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அரசாங்கம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுப்பிய கடிதத்தில், தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 1948 இல் இராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவுடனான இலங்கையின் உறவு தொடங்கும் பேணப்படுவதாகவும் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த உறவை வலுப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொர…

    • 2 replies
    • 285 views
  2. தமிழ்த் தேசியத் தளத்திலுள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து செல்ல முடிவு: மாவை,செல்வம், சித்தார்த்தன் இடையே தொடரும் பேச்சுவார்த்தை (ஆர்.ராம்) தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியத்தளத்தில் கூட்டமைப்பு வெளியில் உள்ள கொள்கை அளவில் உடன்பட்டு இணைந்து பணிப்பதற்கு கூடிய சகல தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென்றும் மாவை, செல்வம், சித்தார்த்தன் ஆகியோர் இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. …

    • 1 reply
    • 260 views
  3. அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது - வைத்தியர் ரவி ரன்னன் எலிய எச்சரிக்கை (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை மேலும் 14 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ …

  4. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ! கே .குமணன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது. தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் இடம்பெறும் இடத்தில் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவினர்களுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கான ஏற்பாடுகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார…

  5. கொழும்பு துறைமுக நகரை... பார்வையிட, மக்களுக்கு வாய்ப்பு! கொழும்பு துறைமுக நகர வளாகம் நாட்டு மக்களுக்காக திறக்கப்படும் என துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக பூங்கா மற்றும் கரையோரப் பகுதிகளை மக்கள் அடுத்த மாதம் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை துறைமுக நகர் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பந்து விக்ரம கூறினார். https://athavannews.com/2021/1226608

    • 1 reply
    • 463 views
  6. இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் ஆலோசனை நடத்தினார். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் நேற்று புதுச்சேரி சென்ற போது, ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருநாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பேசினர். புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர் ஆகியோர் குறித்தும், புதுச்சேரியின் சிறப்புகள் குறித்தும் துணைத் தூதரிடம் ஆளுநர் விளக்கினார். புதுச்சேரி தூய்மையான நகரமாக இருப்பதா…

    • 1 reply
    • 198 views
  7. தமிழீழ வனவளப் பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாக்கப் பட்ட தேக்கம் காடுகள் அழிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிப்பு கிராமத்தை அண்டியுள்ள நாகஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ச்சியாக தேக்கமரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்கின்றமை குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக வனவள பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடனேயே குறித்த தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற நிலைமை தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் கடந்த 2009ம் ஆண்டுக்கு முன் தமிழீழ வனவளப்பாதுகாப்பு பிரிவினரால் நடப்பட்டு பாதுகாக்கப்பட்ட குறித்த தேக்கம் காடுகள் தொடர்ச்சியாக அழ…

  8. இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி – மனோ கணேசன் எக்ஸ்பிரஸ் – பேர்ள்’ கப்பல் மூலமான இரசாயனக் கழிவினால் இலங்கைக் கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்தியக் கடற்படை கப்பல் ‘சர்வேக்ஸக்’ மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி பாராட்டத் தக்கது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்பிரஸ் – பேர்ள்’ கப்பலின் இரசாயனக் கழிவுகளை ஆய்வு செய்து, இலங்கைக் கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு தனது கடற்படை மூலம் செய்து வரும் உதவிகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறுகையில், “வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத பேரழிவு, இலங்கைக் கடல் வளத்துக்கு, எக்ஸ்பிரஸ்-பேர்…

  9. நாம் ஏற்கமுடியாத பூகோள அரசியல் நடவடிக்கை என்றாலே சீனாவின் வருகையை எதிர்ப்போம்; கஜேந்திரகுமார் “வடக்கில் அமைக்கப்படும் கடல் அட்டை பண்ணைகள், நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கத்துடன் – பூகோள அரசியல் நோக்கங்களுடன் எடுக்கும் அரசியல் நடவடிக்கையாக நாங்கள் கருதினால், நிச்சயமாக எதிர்ப்போம்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந் தொற்றால் புதுக்குடியிருப்பில் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உலருணவு வழங்கும் திட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று முன்தினம் மாலை முன்னெடுத்தது. இதில் கலந்து கொண்ட போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். மேலும், கொ…

  10. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் — நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கனகராசா சரவணன் கல்முனையில் தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்கள் முஸ்லீம் நபர்களால் அபகரிக்கப்படுவது இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அரச காணியில் சட்டவிரோதமாக மண் நிரப்பப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கை இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டு தடுத்து நிறுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரி…

    • 13 replies
    • 545 views
  11. வட பகுதி கடல்வளத்துறை... இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்! இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம் இறக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் வடபகுதி கடல்வளம் அந்நியரால் விழுங்கப்பட வடபகுதி மீனவர்களோ பிச்சைப்பாத்திரம் ஏந்தும் பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றனர். தென்னிந்திய திராவிடர்கள் தென் இந்திய திராவிடர்கள் ,அழிவை ஏற்படுத்துகின்ற இழுவைமடியினை( bottom trawl net) பாரிய இயந்திரப்படகுள் கொண்டு பாக்கு நீரிணை,பாக்கு குடாப்பகுதிகளை ஆக்கிரமிக்க …

    • 6 replies
    • 921 views
  12. இந்திய இழுவைப் படகுகளினால் வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பு இந்திய இழுவைப் படகுகளினால், வடமராட்சி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவரும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உப தலைவருமான வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.அத்துடன் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் கடற்படைக்கு அறிவித்து, இந்திய இழுவை படகுகள் எமது எல்லைக்குள் வராமல் தடுப்பது அவசியமானதாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் கடந்த 2 மாதமாக இப்பகுதிகளுக்கு வரவில்லை.ஆனால் கடந்த புதன்கிழமை இரவு , கடந்த வியாழக…

  13. பஸில் பாராளுமன்றம் செல்வது தாமதமாகும்; ஜூலை நடுப்பகுதியிலேயே எம்.பி.யாவார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற வருகை பிற்போகக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் பதவி துறக்கவேண்டும். அதன் பின்னர் பஸிலின் பெயர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட வேண்டும். இவ்வாறான நடைமுறைகளால் ஜூலை நடுப்பகுதியிலேயே பஸில் பாராளுமன்றம் வரக்கூடும் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, ராஜபக்‌ஷ குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றுள்ளது. ஜ…

  14. யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாத…

    • 8 replies
    • 922 views
  15. மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கையில் ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் தொற்று காரணமாக குறித்த செய்கையினை முழுமையாக அழிக்கும் நிலைக்கு தோட்டச் செய்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலையடி புதுக்குளம், பாலப்பெருமாள் கட்டு, குருவில் ஆகிய கிராமங்களில் மேட்டு நில பயிர்ச் செய்கையான தோட்டச் செய்கை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வருடம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து மற்றும் கச்சான் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றிற்கான உரம், மற்றும் கிருமி நாசினி போன்றவற்றிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகள் காரணாக உளுந்…

  16. புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் த…

  17. அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – சாணக்கியன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின் வாழ்வாதாரத்தினை பலப்படுத்துவதுடன் உண்மையான அபிவித்தி எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் கண்டறியும் வகையில் அப்பகுதிக்குச் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சென்றிருந்தார். …

  18. (ஆர்.யசி) பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்…

  19. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம் எம்பி சாடல் ! By கிருசாயிதன் July 3, 2021 கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சுகாதார பிரிவினர், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்கதோர் விடய…

  20. தென் இலங்கை மீனவர்களின் பொறுப்பற்ற செயலால் முல்லைத்தீவுக்கு ஆபத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் தென்பகுதி மீனவர்களால் முல்லைத்தீவு மீனவ சமூகம் பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது. இங்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சடடவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை மிக பாரதூரமான விளைவுகளை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது தற்போதைய கொரோனா அபாய சூழலில் முல்லைத…

    • 1 reply
    • 466 views
  21. காகத்தை கொன்று அதன் ஒரு இறக்கையை தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சத்தில் மௌனமாகிவிடுவார்கள் – அரசாங்கத்திற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச காகமொன்றை கொன்று அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பல்வேறுஸ்தாபனங்களே ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமஹராமா வாவி திட்டம்…

    • 3 replies
    • 816 views
  22. செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு July 2, 2021 Share 24 Views செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு – அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாத சுமார் 3750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காண…

  23. அரசியல் கைதிகள் விவகாரம் – சுமந்திரனிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கோமகன் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.. சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவுமாறு கோரி அனை…

  24. 1600 ஆவது நாளை நெருங்கும் போராட்டம் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டமானது எதிர்வரும் திங்கள்கிழமை 1600ஆவது நாளை எட்டவுள்ளது. எனவே அந்த நாளைக் குறிக்கும் வகையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். இன்று வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”எதிர்வரு…

  25. கௌதாரிமுனைக்கு சிறிதரன் குழுவினரை ஏற்றிச் சென்ற படகோட்டி இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணை கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கெளதாரிமுனையில் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கெளதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கெளதார…

    • 1 reply
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.