Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே 18 -நாகர்வட்டை கடற்கரையில் அஞ்சலித்த 10பேர் கைதாகினர்! May 19, 2021 மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவற்துறைப் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை நேற்று (18.05.21) கைது செய்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வை தலைமை வகித்தவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு அவருடைய வீட்டிற்கு 3 தடவைகள் காவற்துறையினர் சென்ற போதும், அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் மனைவியார் அதனை பெறமாட்…

    • 2 replies
    • 610 views
  2. அம்பலமாகியது வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று, அவை தற்போது வட மாகாண கணக்காய்வுத் திணைக்களத்தினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை அமைக்கும் காலத்திலிருந்து இன்றுவரை கட்டுமானப் பணிகள் பொருட் கொள்வனவு, உணவு வழங்கல் உள்ளிட்ட பல விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி முறைகேடுகள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளாருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இந்த முறைகேடுகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து தற…

    • 4 replies
    • 849 views
  3. புற்றுநோயை... ஏற்படுத்தக் கூடிய, தேங்காய் எண்ணெய் நாட்டில் தற்போது இல்லை – அரசாங்கம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் உள்ளதாக கண்டறியப்பட்ட தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் எதுவும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை சுங்கப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். https://athavannews.com/2021/1216844

  4. இனப்படுகொலை ஊடாக நாம் வேண்டி நிற்பது ஓர் நிரந்தரமான அரசியல் தீர்வையே – பேராசிரியர் இராமு.மணிவண்ணன் 34 Views முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணனுடனான நேர்காணல் கேள்வி: இலங்கை, தமிழினப் படுகொலை சொல்லும் செய்தி என்ன? பதில் – தமிழீழத்தில் தமிழினத்திற்கு எதிராக நடந்தேறிய இனப்படுகொலை, தமிழ் சமூகத்திற்கு ஒரு அரசியல் செய்தியையும், எதிர்கால சந்ததியினர் இதை மறக்கவே கூடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாக தெளிவு படுத்துகின்றது. அதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் சிங்களப் பேரினவாதம், சிங்கள அரசு, சிங்கள இராணுவம் போன்றவற்றை உள்ளடக்கிய…

  5. நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த இறுதிக்கட்ட போரின்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை இராணுவம் முற்றுகையிட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் முளள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்ள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன், செல்வம்…

  6. மூன்று இணையத்தளங்களை இலக்குவைத்து சைபர்தாக்குதல்; தமிழ் ஈழ சைபர் படையணி தாக்கியதாக தகவல் 35 Views தமிழ் ஈழ சைபர் படையணி என்ற அமைப்பு பல இணையத்தளங்களிற்குள் ஊருடுவி அவற்றை செயல்இழக்கச்செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கணிணி அவசரநிலை குழுவினர் இதனை அறிவித்துள்ளனர். மூன்று இணையத்தளங்களை இலக்குவைத்து சைபர்தாக்குதல் இடம்பெற்றதாக அந்த குழு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் இணையத்தளம் இலங்கைக்கான சீன தூதரகத்தின் இணையத்தளம் ரஜரட்ட பல்கலைகழகத்தின் இணையத்தளம் ஆகியன மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. விடுதலைப்புலிகளின் கொடிகளுடன் தமிழ் ஈழம் சைபர் படையணி முள்ளிவாய்க்கால் என குறிப்பி…

  7. கொரோனா பரவலுக்கு மத்தியில்... 35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை! கொரோனா பரவலுக்கு மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்திய விமானமொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகைதந்துள்ள ஏர் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானத்தில் 19 இலங்கையர்களும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்கள் உட்பட 35 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இலங்கைக்கு வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://athavannews…

  8. உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முல்லை மாவட்டத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரதான சுடர் ஏற்பட்டு விடுதலைப் பயணத்தில் உயிர் துறந்த அத்துணை உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. போரின் வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் முல்லை மண், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டுள்ளதோடு, முப்படையினரினதும், பொலிஸாரினதும், புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பு வ…

  9. முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களை நினைவு கூருவது எங்களின் அடிப்படை விடயம் – அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் 90 Views “முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவு கூருவதை தடுக்கின்ற நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது” என நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார், அவர் மேலும் தெரிவிக்கையில், முப்பது ஆண்டுகாலப் போர் மு…

  10. மாணவர்கள் ஏற்றிய சுடரை காலால் தட்டிவிட்ட காவலாளி! May 18, 2021 யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி காலினால் தட்டி அகற்றியுள்ளார். இச் செயலை பல்கலைக்கழக மாணவர்கள் வன்மையாக கண்டித்து உள்ளத்துடன் , தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி உயிரிழந்த எம் உறவுகளுக்கு நாங்கள் உணர்வு பூர்வமாக ஏற்றிய சுடரினை காவலாளி காலினால் தட்டி அப்புறப்படுத்திய செயலானது எமது இறந்த உறவுகளை அவமதிக்கும் செயலாகும். என கவலையுடன் மாணவர்கள் தெரிவித்தனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவிடாது தடுக்கும் நோக்குடன் நேற்…

    • 19 replies
    • 1.9k views
  11. வடக்கு, கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம் - பாராளுமன்றில் தமிழில் தெரிவித்தார் பிரதமர் வடக்கு, கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் பாராளுமன்றில் தமிழில் தெரிவித்தார். மனிதாபிமான செயற்பாட்டின் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2021.05.18) பாராளுமன்றத்தில் உரையொன்றை ஆற்றிய போது மேற்கண்டவாறு தமிழில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில், “இன்று விசேடமானதொரு நாளாகும். நாம் முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழித்து இன்றுடன் பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. 2009 மே மாதம் 18ஆம் திகதி…

    • 5 replies
    • 627 views
  12. கர்ப்பிணிப் பெண்ணிடம் நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு கூறிய ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை! நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு இளம் கர்ப்பிணித் தாய்க்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் தெரிவித்த விடயம் காணொளியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற ஒரு இளம் கர்ப்பிணி தாய்க்கே படையினர் இவ்வாறு கூறியுள்ளனர். இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கர்ப்பிணிப் பெண் மாதாந்த கிளினிக் சென்றுள்ளார். இதன் போதே அவரை வழிமறித்து சோதனை செய்த படையினர் வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்து இவ்வாறு அநாகரிகமாக பேசியுள்ளனர் என அங்கு நின்ற மக்கள…

    • 3 replies
    • 921 views
  13. பாலஸ்தீனிய மக்களுக்கு... ஒரு நியாயமான, அரசுக்கான... உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ஷ. பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள பதற்ற நிலைமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதலின் காரணமாக அப்பிராந்தியங்களிலுள்ள மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளமை மிகவும் கவலையளிக்கிறது. குறித்த மோதல் நிலைமை, அண்மையிலுள்ள பிராந்தியங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகின்ற…

    • 6 replies
    • 590 views
  14. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலான இணையவழி கூட்டு நினைவேந்தல் May 18, 2021 தமிழ்த் இனத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இன்றைய நினைவேந்தல் நிகழ்வை கொவிட்-19 பேரழிவு வைரஸ் பரவல் காரணமாக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றாகத் திரண்டு நினைவேந்த முடியாத நிலையில் வீடுகளில் இருந்து நினைவேந்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்தது. அதன் பிரகாரம் வீடுகளில் இருந்து தமிழின அழிப்பு நினைவேந்தலை மேற்கொண்டவாறு சூம் (ZOOM) இணைய செயலி ஊடாக இணைந்து கூட்டுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந் நிகழ்வு இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக இடம்பெற்றிருந்தது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் நூற்றுக்கும் …

  15. முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வு; ஊடகவியலாளர்களுடன் மல்லுக்கட்டிய பொலிஸார் முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் மல்லுக்கட்டலில் ஈடுபட்டனர். வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதனை செய்தியாக்க சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மல்லுக்கட்டிதுடன்,அடையாள அட்டையை காண்பிக்குமாறு அச்சுறுத்தியிருந்தனர். …

  16. பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி நந்திக்கடலோரத்தில் சுடரேற்றி அஞ்சலி May 18, 2021 முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு நந்தி கடலோரம் எம்.கே.சிவாஜிலிங்கம் , பீற்றர் இளஞ்செழியன் , நிசாந்தன் ஆகியோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். https://globaltamilnews.net/2021/161086/

  17. யாழ். பல்கலையைச் சுற்றி இராணுவத்தினர் குவிப்பு – நினைவேந்தலைத் தடுப்பதற்கு முயற்சி 2 Views முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் இன்று ஏற்பாடு செய்வார்கள் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன எனக் கூறி, பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் நேற்று குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகளை அடுத்து, இம்மாதம் தொடக்கத்தில் இருந்து, நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டமையை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்திலும் அத்தியாவசியப் பரீட்சை செயற்பாடுகள், ஆய்வு நடவடிக்க…

    • 2 replies
    • 451 views
  18. முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதற்கமைவாக கடந்த 13 ஆம் திகதி நீதிமன்று நினைவேந்தலில் ஈடுபட தடையுத்தரவு வழங்கியிருந்தது. இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளை அனுசரிக்காது அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்…

    • 2 replies
    • 545 views
  19. 24 மற்றும் 25ஆம் திகதிகள்... அரச விடுமுறை தினங்களாக அறிவிப்பு! இலங்கையில் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2021/1216514

  20. நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழிக்க முடியாது – யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் 5 Views இவ்வாண்டு மே 18 தமிழினப் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவு கூறலை நாங்கள் எதிர்கொள்கின்றோம் என மே 18 தமிழ் இனப்படுகொலையின் நினைவு நாள் குறித்து யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழி விட…

    • 1 reply
    • 508 views
  21. பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்! நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்ப…

    • 12 replies
    • 1.2k views
  22. வவுனியா நைனாமடுப் பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல் பொருள் திணைக்களம் 65 Views வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டிட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீட்டர் உயரமுள்ள தூண் ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட இராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்…

    • 2 replies
    • 775 views
  23. வடக்கு மாகாணத்தில் இன்று (16) புதிதாக 55 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு மருத்துவமனையில் 8 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும் என 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வவுனியா வளாக மாணவர்கள் 6 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வளாக மாணவர்கள் 31 பேருக்கு ஏற்கனவே சில நாள்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் போதனா…

  24. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொலைகாணொளி ஊடாக அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு! மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழர்கள் அனைவரும் தொலைகாணொளி ஊடாக அதாவது Zoom வழியாக அனுஷ்டிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று (திங்கட்கிழமை) தனது முகப்புத்தகத்தில் காணொளியொன்றைப் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றுகூடி நினைவுகூர முடியாமலிருப்பது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார். எனினும் தொழில்நுட்பத்தின் உதவியோடு (Zoom) இணை…

    • 0 replies
    • 647 views
  25. தேர்தல் சீர்திருத்தம் - தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது! ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும். அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். …

    • 0 replies
    • 319 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.