ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
06 Jul, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது மு…
-
- 1 reply
- 129 views
-
-
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்! இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரச…
-
- 0 replies
- 98 views
-
-
11 JUL, 2025 | 07:07 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது. குறித்த நிகழ்வு 2 வது நாளாக சனிக்கிழமையும் (12) இடம்பெற உள்ளது. மேலும் இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல், சமயம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
11 JUL, 2025 | 04:28 PM மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (11) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
11 JUL, 2025 | 02:56 PM கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பி…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
11 JUL, 2025 | 02:30 PM செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் …
-
- 0 replies
- 69 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும். ஆனால், "கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?" என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே. வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். க.பொ.த உயர்தர…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார். "பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார். இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். "அவர் ஒரு மருத்துவராக …
-
- 5 replies
- 486 views
- 1 follower
-
-
மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்! மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறிவிட்டது, இதன் காரணமாக நாடு பெரும் கடனை எதிர்கொள்கிறது. குறிப்பாக இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொள்கிறது. இதனிடையே, மத்தள விமான நிலையத்தை விமானங்கள் தரையிறங்கி புறப்படும் ஒரு செயல்பாட்டு நிறுவனமாக மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த விமான நிலையத்திற்கான செலவு மற்றும் கடன் செலுத்துதல்க…
-
- 1 reply
- 136 views
-
-
செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம்ப…
-
- 2 replies
- 228 views
-
-
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு! இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இலகுபடுத்தும் நோக்கிலும், பிரித்தானிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், இந்த புதிய வர்த்தக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு, இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் …
-
- 0 replies
- 93 views
-
-
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு Published By: VISHNU 11 JUL, 2025 | 05:43 AM சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் விடுத்துள்ளார். இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக …
-
- 1 reply
- 120 views
-
-
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்! adminJuly 11, 2025 மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளா நேற்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது. யுத்தம் நிறைவ…
-
-
- 2 replies
- 179 views
-
-
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் ! 11 JUL, 2025 | 10:00 AM மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். இதேவேளை, தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்த…
-
- 0 replies
- 116 views
-
-
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு 11 July 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இலங்கை விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஜேர்மி லோரன்ஸ் (Jeremy Laurence) இந்த விடயத்…
-
- 0 replies
- 113 views
-
-
கல்பிட்டியில் கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள். கல்பிட்டி, தளுவ பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படையினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். எனி…
-
- 0 replies
- 78 views
-
-
யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி 10 Jul, 2025 | 05:25 PM யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார். மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்க…
-
- 1 reply
- 207 views
-
-
Published By: DIGITAL DESK 2 10 JUL, 2025 | 05:24 PM ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் புதன்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்த…
-
- 1 reply
- 118 views
- 1 follower
-
-
10 Jul, 2025 | 10:27 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனித புதைகுழி விவ…
-
- 0 replies
- 96 views
-
-
10 Jul, 2025 | 12:24 PM இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாந…
-
- 0 replies
- 115 views
-
-
செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் …
-
- 1 reply
- 111 views
-
-
10 Jul, 2025 | 07:58 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை விரிவான பதிலளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவி…
-
- 0 replies
- 94 views
-
-
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்? 10 July 2025 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, குறித்த பதுங்கு குழியை அகழ்வு செய்வதற்கு முன்பாக, நீதவான் நேற்றைய தினம், குறித்த இடத்திற்குச் சென்று, கள ஆய்வில் ஈடுபட்டார். நீதவானின் ஆலோசனைக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும…
-
- 1 reply
- 214 views
-
-
10 JUL, 2025 | 09:35 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது…
-
- 0 replies
- 113 views
- 1 follower
-
-
09 JUL, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தேசப்பற்றாளர்களின் அதிகாரத்திற்கு அச்சப்பட்டே அரசாங்கம் மனித புதைகுழிகள் விடயத்தில் கவனம் செலுத்தாது இருக்கின்றது., செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. அதாவது செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினம…
-
- 0 replies
- 136 views
- 1 follower
-