ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
வவுனியாவில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பூர்த்தி செய்யப்படாமையால் மக்கள் கவலை 17 Views வவுனியாவின் பல கிராமங்களில் கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் 120 வீடுகள் இவ்வாறு கட்டி முடிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இப்பகுதியில் கொட்டகைகளில் வாழ்ந்த மக்களிற்கு வீடுகள் வழங்குவதாக தெரிவித்து அவர்களின் பங்களிப்புடன் வீடுகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலையில் காணப்படுவதாக கவலை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை அன்றாடம் கூலித்தொழிலை…
-
- 0 replies
- 543 views
-
-
யாழ். குடத்தனையில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு ; வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்…
-
- 0 replies
- 300 views
-
-
மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடலுக்குத் தடை! நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வழிபாட்டு தலங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடியது 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா பரவலையடுத்து கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூதனசாலையின் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/…
-
- 0 replies
- 291 views
-
-
பொதுமக்கள் தாங்கள் விரும்பும்.. கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தெரிவுசெய்ய முடியாது – சுகாதார அமைச்சு! பொதுமக்கள் தாங்கள் விரும்பும் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தேர்வு செய்ய முடியாது என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை இதுவரை அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பயன்படுத்தியது. சீன சினோபார்ம் தடுப்பூசியின் பங்குகள் தற்போது இலங்கையில் உள்ளன. அதனை உள்ளூர்வாசிகள் பயன்படுத்த அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் இலங்கைக்க…
-
- 3 replies
- 345 views
-
-
போர்க் குற்றம் : இலங்கை உயர் ஸ்தானிகராக சுமங்கல டயஸின் நியமனத்தை நிராகரித்தது கனடா 65 Views முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கல் டயஸ், தமது நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகாரக நியமிக்கப்பட்டதை கனடா நிராகரித்துள்ளதாக “தமிழ் கார்டியன்“ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் கனேடியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த முடிவுக்காக சுமங்கல டயஸை நிராகரிக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கனேடிய அரசாங்கம் அவரது நியமனத்துக்கு உடன்படவில்லை. டயஸ் தற்சமயம் இத்தாலியில் துாதராகப் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் விமானப்படை தளபதி டயஸ் , ஆயுத மோதலின் இறுதி கட்டங்களில் சிரேஸ…
-
- 3 replies
- 476 views
-
-
இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஊடுருவல்? கடற்படையினர் கடும் பாதுகாப்பு இந்தியாவில் கொரோனாத் தொற்று மோசமடைந்திருப்பதால் அதற்கு அஞ்சி அங்கிருந்து பொதுமக்கள் இலங்கைக்குள் ஊடுருவலாம் எனக் கருதப்படுகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தமது கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இலங்கைக் கடற்படையின் இந்தக் கெடுபிடிகளால் இலங்கை மீனவர்கள் – குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் – அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்திருக்கின்றது என விசனம் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பேசாலை மீனவர்கள் கடற்படையினரிடம் பதிவு செய்தே இனிக் கடலிற்குள் செல்ல முடியும் எனக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதற்கமைய பேசால…
-
- 0 replies
- 407 views
-
-
(எம்.மனோசித்ரா) இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறப்பு விமானத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்து சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கிய ந…
-
- 10 replies
- 785 views
- 1 follower
-
-
வடக்கின் சுற்றுலா வரைபடங்களில் தமிழினத்தின் வரலாறு திரிபுபடுத்தல் – சீ.வீ.கே. கடிதம் 52 Views வடக்கு மாகாண சுற்றுலா வரைபடங்களில் தமிழ் இனத்தின் வரலாறு, கலாசாரம், சமயம் சார்ந்த விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. வடக்கு மண்ணினதும், மக்களினதும் வரலாற்று விடயங்களை பாதுகாக்க வேண்டிய வடமாகாண சபை நிர்வாகம் அவற்றை திரிபுபடுத்துவதற்கு ஒருபோதும் பங்காளியாகஇருக்க முடியாது. இவ்வாறு குறிப்பிட்டு, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், வடக்கு மாகாண சுற்றுலா வரைபடங்களில் தவறுகள் தொடர்பில் சங்கானை – மதவடியை சேர்ந்த க. தீபன் என்பவர் முற…
-
- 0 replies
- 348 views
-
-
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் போட்டியிடுவேன் -சாணக்கியன் 35 Views வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…. “சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சனையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும்,முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடய…
-
- 2 replies
- 457 views
-
-
"மண்டேலா" திரைப்படத்தை வடமாகாணத்தில் திரையிட்டால் போராட்டம்..! சிகை அலங்கரிப்பாளர்கள் எச்சரிக்கை.. அண்மையில் வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை நீக்கவேண்டுமென வடமாகாண அழகுக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தென் இந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படமானது அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் முகமாகவும் அவர்களின் தொழிலை 30 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் முகமாக காட்சிகள் அமைக்க…
-
- 10 replies
- 903 views
-
-
இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று! இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 953ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 95 ஆயிரத்து 83 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடுகளுக்கு திருப்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 9 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் மேலும் 6 மர…
-
- 1 reply
- 271 views
-
-
முஸ்லிம் செயற்பாட்டாளர்களை விடுவிக்க சர்வதேச மனுக்கள்! April 29, 2021 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்கள் வழக்குகளை நீக்கிக்கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆதரவைக் கோரி சர்வதேச மன்னிப்புச் சபை இரண்டு மனுக்களை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020 ஏப்ரல் முதல் குற்றச்சாட்டுகள் இன்றி தடுப்புப் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் 2020 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ரம்சி ராசிக் 2020 செப்டம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு குறித்த நன்கு அறியப்பட்ட சட்டத்தரணி…
-
- 0 replies
- 332 views
-
-
டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து மீனவர்களிடையேயான மோதலுக்கே வழிவகுக்கும் – அன்டனி யேசுதாசன் 9 Views இலங்கையின் குறிப்பாக வடபகுதி கடற் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதும் அவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்குவதும், படுகொலை செய்வதுமான சம்பவங்கள் பல தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல்களால் 500 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழக தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதி கூட இன்னும் கிட்டவில்லை. இந்த நிலையில் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன் பிடிக்க அனுமதிப்பது என சிறீலங்கா அரசின் ஆதரவு அமைப்பான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னண…
-
- 1 reply
- 364 views
-
-
தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவைப்படும் காலம் குறித்து இராணுவத் தளபதியின் தகவல் (எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தேவைப்படும். எவ்வாறிருப்பினும் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அனைவருக்கும் சிகிச்சையளிக்க வைத்தியத்துறை உள்ளிட்ட தரப்புக்கள் தயாராகவுள்ளன என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறிய இராணுவத்தளபதி மேலும் குறிப்பிடுகையில் , நாளொன்றுக்கு 1000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்…
-
- 1 reply
- 303 views
-
-
பந்துல குணவர்த்தனவின் 1000 ரூபா பொதி சர்ச்சையின் பின்னணியில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பை காரணமாக்கி கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டு 19ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றூண்டிச்சாலைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், சிறையில் வைத்து சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார். இதனை அவரது மகள் ஆக்ரா தினேந்திரி, மக்கள் சக்தி அமைப்பின் சுதேஷ் நந்திம சில்வா ஆகியோர் வெளிப்படுத்தியதுடன், சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவும் அறிக்கையிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. சம்பவம் தொடர்ப…
-
- 1 reply
- 638 views
-
-
இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!! இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சரத் வீரசேகர ப…
-
- 30 replies
- 2k views
-
-
வடக்கு மாகாண தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் ,போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மாவட்ட அரச அதிபர்கள் ,சுகாதாரப் பிரிவினர் , முப்படையினர் கலந்துகொள்ளவுள்ளார்கள் நாளைய கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு கொரோனா நிலைமை தொடர்பில் ஆராய அவசர கூட்டம் | Virakesari.lk
-
- 0 replies
- 227 views
-
-
மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களுக்கு பரிசோதனை 15 Views மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடை முறைகளைப் பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார பிரிவினர் வழங்கிவரும் நிலையில் அவற்றினை உதாசீனம் செய்யும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இதனை கருத்திக்கொண்டு முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்கள் இன்று அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் மட்டக்களப்பு நகரில் உள…
-
- 0 replies
- 244 views
-
-
நயினாதீவு விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜை April 27, 2021 நயினாதீவு நாக விகாரையில் சித்திரை பௌர்ணமி விசேட பூஜையும் , மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மத வழிபாட்டு இடங்களில் 50க்கும் குறைவானவர்களே அனுமதிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களும் குறித்த சித்திரை பௌர்ணமி விசேட பூஜை நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை கடந்த 24ஆம் திகதி நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாயத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அ .பத்திநாதன் , வடமாகாண கல்வி அமைச்சின் செய…
-
- 1 reply
- 438 views
-
-
ரிஷாத், ரியாஜ்ஜின் மனைவிமார் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ரிஷாத் பதியுதீனின் மனைவி, சிஹாப்தீன் ஆய்ஷா, ரியாஜ் பதியுதீனின் மனைவி பாத்திமா இஷ்ரத் ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து தனது கணவரான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி …
-
- 0 replies
- 236 views
-
-
சுமந்திரன் விலக வேண்டும்!! மணிவண்ணன் களமிறங்க வேண்டும் மணிவண்ணன் மேயராக வருவதற்கு தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய ஒருவர் முழுமையான ஆதரவு வழங்கியிருந்தமை அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எம்.ஏ.சுமந்திரன் மணிவண்ணனை சந்தித்து மேயர் பதவிக்கு நிற்பதற்கு ஆலோசனை வழங்கியிருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “களம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். செவ்வியின் முழுமையான விடயம் காணொளியில், https://www.meenagam.com/சுமந்திரன்-…
-
- 0 replies
- 630 views
-
-
நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட குழு இன்று ஆராய்வு அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில், விசேட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் முழுமையாக ஆராயப்பட்டு சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இந்த கூட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் …
-
- 0 replies
- 268 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கின் சில பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலை மாற்றப்பட்டு இப்போது ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் காணப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார். தற்போது சீன காலனியாக கொழும்பு துறைமுக நகரம் மாறினால் அது போரின் போது பிரப…
-
- 9 replies
- 726 views
-
-
Makkal Nanban Ansar -- இந்தியா செய்திகள் விநோதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வெகு வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, மருந்துகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகளையடுத்து இந்தியாவில் வசிக்கும் பணக்கார குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தனி ஜெட்டில் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் சற்றே குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்திலிருந்து 3.25…
-
- 3 replies
- 537 views
-
-
சகல பாடசாலைகள், தனியார் வகுப்புகளுக்கு பூட்டு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. Tamilmirror Online || சகல பாடசாலைகள், தனியார் வகுப்புகளுக்கு பூட்டு
-
- 2 replies
- 403 views
-