நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்? தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 4 தம்ளர் உளுந்து - 1 டம்ளர் வெந்தயம் - 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அர…
-
- 1 reply
- 4.1k views
-
-
பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி அனைவருக்கும் விருப்பமான பிரியாணியில் பல்வேறு வெரைட்டி உள்ளது. இன்று பெங்களூர் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ அரிசி - 1 கிலோ எண்ணெய் - 100 கிராம் தக்காளி - அரை கிலோ வெங்காயம் - அரை கிலோ தயிர் - 1 கப் சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி நெய் - 150 கிராம் இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன் பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் கொத்தமமல்லி …
-
- 0 replies
- 796 views
-
-
இப்படி மீன் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!!!
-
- 0 replies
- 815 views
-
-
முள்ளங்கி இறால் குழம்பு செய்வது எப்படி குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முள்ளங்கி வைத்து அருமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - அரை கிலோ முள்ளங்கி - கால் கிலோ வெங்காயம் - 200 கிராம் தயிர் - அரை கப் பச்சை மிளகாய் - 4 தக்காளி - 200 கிராம் உப்பு - தேவையான அளவு தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி பட்டை - 2 லவங்கம் - 2 இஞ்சி - சிறிய துண்டு துண்டு பூண்டு - 4 பல் கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை : இறாலை நன்றாக சுத…
-
- 2 replies
- 833 views
-
-
சிம்பிளான வெண்டைக்காய் பொரியல் வெண்டைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அத்தகைய வெண்டைக்காய் அதிக ருசியுடனும் இருக்கக்கூடியது. மேலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை கொடுப்பது மிகவும் நல்லது. அதிலும் அதனை பொரியல் செய்து கொடுப்பது இன்னும் சிறந்த வழி. இங்கு வெண்டைக்காய் பொரியலை தேங்காய் பயன்படுத்தி எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 15 (பொடியாக நறுக்கியது) சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1/2 கப் மிளகாய் - 2 பூண்டு - 2 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரக…
-
- 6 replies
- 3.2k views
-
-
தே.பொ 1/2கிலோ அரிசிமா 1/2கிலோ சர்க்கரை 1/4கிலோ சீனி 3 தேங்காய் 100கிராம் பயறு 25கிராம் கஜு செய்முறை: அரிசியை அரைத்து மாவை எடுக்கவும். அதில் கப்பிப்பாலை விட்டுக் கலந்து சீனியும்,சர்க்கரையும் சேர்த்துக் கலக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றி கைவிடாமல் துளாவிக்கொண்டிருக்க வேண்டும். நீர் வற்றும் பதத்தில் முதல்பாலை சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். சிறிது நேரத்தின் பின் பயற்றையும்(வறுத்து தீட்டியது) உடைத்தகஜுவையும் போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம். ஆக்கம் கௌசி . :oops: :arrow: நீங்களும் செய்து பார்க்கவும்
-
- 69 replies
- 15.1k views
-
-
எந்த உணவுகளில் நெய் சேர்த்துச் சாப்பிடலாம்? நெய் உடலுக்கு நல்லது. இந்த நெய்யை ஆரோக்கியமான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருள், நெய். நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறது. `இது தவறான கருத்து. நெய் நல்லதுதான். ஆனால், அது சுத்தமான பசுநெய்யாக இருக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள். பசு நெயில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குப் பல வழ…
-
- 0 replies
- 731 views
-
-
பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்! ”பனங்காய் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே” என்ற ஈழத்து துள்ளலிசைப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். கேட்கும்போதே பனங்காய் பணியாரத்தின் வாசனையும் சுவையும் கற்பனையில் ஊறி நாவிலே தேன் சுரக்குமல்லவா? இன்றைக்கு நாம் பனங்காய் பணியாரம் பற்றிப் பார்க்கப்போகிறோம்.... பனங்காய் பணியாரம் ஈழத் தமிழரின் தனித்துவமிக்க ஒரு சிற்றுண்டி வகையாகும். இதன் சுவையும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். ஈழத்தில் பனங்காய் பணியாரத்திற்கு பேர்போன இடமென்றால் யாழ்ப்பாணம் என்றுதான் சொல்லமுடியும். அதற்கு காரணமும் இருக்கிறது. இலங்கையின் சகல மாவட்டங்களி…
-
- 2 replies
- 999 views
-
-
சூப்பரான மட்டன் குடல் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள அருமையான மட்டன் குடல் குழம்பை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டு குடல் - முக்கால் கிலோ வெங்காயம் - 4 தக்காளி - 4 தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் ) இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம் மிளகாய்த்தூள் - தேவையான அளவு மல்லித்தூள் - ஒரு ஸ்பூன் கரம் மசாலா - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு செய்முறை : …
-
- 0 replies
- 1.2k views
-
-
நாடோடி மக்களின் உணவு வகைகள்! அபூர்வம்இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் ‘சேர்வராய்ஸ்’ கதிரவன் அந்தக் காலத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் பிரசித்திப் பெற்ற உணவுகளின் தொகுப்பு இது. தற்போதும் தமிழ்நாடு (ஊட்டி, ஏற்காடு), அருணாச்சலப்பிரதேசம், ஒரிசா, நாகலாந்து, ஏற்காடு போன்ற மாநிலங்களில், இந்த உணவுகள் நடைமுறையில் சமைத்து பரிமாறப்படுகின்றன. தேன் அடை தேவையானவை: பொட்டுக்கடலை - 100 கிராம், தேன் - 100 மில்லி, உப்பு தேவையான அளவு செய்முறை: பொட்டுக்கடலையை நன்றாக இடித்து, அதனுடன் உப்பு , தேன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காயவைத்து எடுத்தால், சுவையான தேன் அடை தயார். புஃலின் தேவையானவை: அரிசி மாவு - …
-
- 0 replies
- 924 views
-
-
சிக்கன் வடை செய்ய தெரியுமா...! தேவையான பொருள்கள்: கோழி - கால் கிலோ முட்டை - ஒன்று பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 6 இஞ்சி - ஒரு அங்குலம் பூண்டு - 10 பல் தேங்காய் பூ - 1 கப் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கொத்தமல்லி - ஒரு மேச…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிக்கன் வடை தேவையான பொருள்கள் கோழி – கால் கிலோ முட்டை – ஒன்று பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 6 இஞ்சி – ஒரு அங்குலம் பூண்டு – 10 பல் தேங்காய் பூ – 1 1/2 கப் மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி – ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் – கால் கப் உப்பு – ஒரு தேக்கரண்டி கறி மசாலா – ஒரு தேக்கரண்டி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி மி…
-
- 2 replies
- 1k views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான டெவில் சிக்கன் சிக்கனில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து சூப்பரான சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு - 10 கிராம் முட்டை - ஒன்று மைதா மாவு - 50 கிராம் கார்ன்ஃப்ளார் - 100 கிராம…
-
- 2 replies
- 907 views
-
-
கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் : சிக்கன் – அரைக்கிலோ சின்னவெங்காயம் – 150 கிராம் தக்காளி – 2 மிளகுதூள் – 4 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 3 டீஸ்பூன் தேங்காய்பால் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – ஒரு கொத்து கொத்தமல்லித்தழை சிறிதளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் செய்முறை : * …
-
- 16 replies
- 2k views
-
-
அசைவப் பிரியர்களுக்கு.. என்னதான் வீட்டில் அற்புதமாக அசைவம் சமைத்தாலும் ஓட்டல்களில் கிடைக்கும் வித்தியாசமான சுவைக்காக உயர்தரமான அசைவ ஓட்டல்களை நாடிச் சென்று சாப்பிடும் ஆட்கள்தான் நம்மிடையே அதிகம். அங்கு கிடைக்கும் வெரைட்டியான சுவை மட்டுமல்லாமல் அங்கு கிடைக்கும் வெரைட்டியான வகைகளும்தான் அதற்கு ஒரு காரணம். அப்படி என்னதான் இருக்கு ஸ்டார் ஓட்டல் அசைவ உணவில்? அதை எப்படி வீட்டில் எளிமையாக செய்து சாப்பிடலாம் என அசைவப் பிரியர்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களின் ஸ்பெஷலான அசைவ உணவுகளை சமைத்துக் காட்டி இருக்கிறார்கள் ஸ்டார் ஓட்டல்களின் செஃப்களான சஞ்சீவ் ரஞ்சன் (Courtyard by Marriott Chennai), சீதாராம்பிரசாத் (Grand chennai by grt hotels), ரவி சக்சேனா (Dabha by Clarid…
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
UNSEEN Chinese Street Food BREAKFAST TOUR in DEEP Sichuan, China | STREET FOOD Tour through China! சீன தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 741 views
-
-
ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் …
-
- 4 replies
- 2.2k views
-
-
விவசாயத்தில் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும் ரசாயன நஞ்சுகளால், விளைபொருள்கள் விஷமாகிக் கிடக்கின்றன. இதனால் மனிதர்கள் நடமாடும் நோய் தொழிற்சாலைகளாக மாறியிருக்கிறார்கள். விதவிதமான நோய்கள், வீதிக்கு வீதி மருத்துவமனைகள் என மருந்து, மாத்திரைகளை உண்டே வாழ்வை நகர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இப்படி மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது, சில நாள்களில் மருந்தே பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆக, நோய்க்கு உண்ணும் மருந்தும் விஷமாகும் காலகட்டத்தில் மனித இனம் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து விடுபட தற்போது பலரும் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மருத்துவ முறைகளில் முக்கியமான பொருளாக இருப்பது தேன். இயற்கையாக காட்டில் மலரும் பூக்களிலிருந்து தேனீக…
-
- 0 replies
- 587 views
-
-
சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் சமஸ் அவர்களின் சாப்பாட்டுப்புராணம். பாலஹனுமான் அவர்களின் பதிவுகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகளை பகிர்ந்திருந்த போது வாசித்தவுடன் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சிக்கு சென்ற போது எதுவும் நினைவில் இல்லை. எதேச்சையாக ஒரு பதிப்பகத்தில் (எங்கு என்று நினைவில்லை! பாலகுமாரன் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தனவே? நர்மதாவா?) பார்த்தவுடன் வாங்கிக் கொண்டேன். (வாங்கிக் கொடுத்த சீனுவுக்கு நன்றி. காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை) திருச்சி வந்தவுடன் என்னவரும் நானுமாக மாற்றி மாற்றி வாசித்து ருசித்தோம்! தினமணி கொண்டாட்டத்தில் ஈட்டிங் கார்னரில் கட்டுரையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டுள்ளார் சமஸ் அவர்கள். மன்னார்குடியைச் …
-
- 3 replies
- 4.4k views
-
-
‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! - ஓர் உண(ர்)வுப் பயணம் அறிமுகமே தேவையில்லாதவர். ‘ஒரு கைப்பிடி அளவு’ என்று சொல்லி, முதல் முறை சமைப்பவர்களுக்குக் கூட புரிந்துவிடக் கூடிய எளிய மொழியில் சமையல் படைக்கும் வாத்தியார். இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பி.ஹெச்.டி பெற்ற முதல் செஃப் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் புரோகிராம்களை நடத்தி ஹிட்டடித்து வருபவர். நமக்காக ‘ஃபுட் டிராவல்’ பற்றி பேசவிருக்கிறார். அவர் பயணித்த பாதைகள், அங்கு நடந்த சுவையான சம்பவங்கள், அங்கே கற்ற புது ரெசிப்பிகள் என்று உங்களுடன் இனி ஒவ்வொரு இதழிலும் உண(ர்)வுப்பூர்வமாக பயணிக்க வருகிறார், செஃப் தாமு. தின…
-
- 8 replies
- 3.3k views
-
-
உலகம் சுற்றும் செட்டிநாடு கைமுறுக்கு! சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், செட்டிநாடு பலகாரம் என்றாலே அதற்கென்று தனி மவுசும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். செட்டிநாடு கட்டடக்கலைக்கு மட்டும் புகழ்பெற்றது இல்லை. பலகார வகைகளுக்கும் கடல் தாண்டி விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறது இதன் பெருமை. அந்த அளவுக்குப் புகழ்பெற்று விளங்கிக்கொண்டிருக்கிறது, செட்டிநாடு பலகாரம். செட்டிநாடு பலகாரங்கள் பட்டியலில், தேன்குழல் முறுக்கு, கைமுறுக்கு, சீப்புச்சீடை, பாசிப்பருப்பு உருண்டை, பொடிசீடை, மனோலம், அதிரசம், எள்ளுஅடை எனச் சிறப்புப் பலகாரங்களின் பட்டியல் நீண்டது. செட்டிநாடு பலகாரத்தின் தோற்றமே ஒரு வரலாறுதான். அந்தக் காலத்தில் செட்டிநாடு வீடுகளில் ஆச்சி…
-
- 0 replies
- 714 views
-
-
இட்லி , தோசையுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது உள்ளி சட்னி. அத்துடன்... உள்ளியில், கொலஸ்ரோலை கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் உள்ளது.
-
- 4 replies
- 904 views
-
-
பழந்தமிழர் பாரம்பரிய பதார்த்தங்கள் பனங்காய் பணியாரம் தேவையானவை: பனம்பழம்-2 கோதுமை மாவு-அரை கிலோ சர்க்கரை-400 கிராம் உப்பு-தேவையான அளவு தண்ணீர்-தேவையான அளவு தேங்காய் எண்ணெய்-பொரிக்க செய்முறை: பனம்பழத்தைத் தோல் உரித்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விட்டு சதைப்பகுதியை மட்டும் (நார் நீக்கி) ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அல்வா பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் தாச்சியை (இரும்பு கடாய்) வைத்து பிசைந்த பனம்பழம், சர்க்கரை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை கிளறி ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும், இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை குழைக்கவும். சூடான எண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம்? மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாக வரும். சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். சாதம் வடிக்கும்போது சற்று குழ…
-
- 0 replies
- 2.4k views
-
-
விளையாட்டு வீரர்களின் விருப்பமான ரெசிப்பிக்கள் செஃப் லிங்க் சேகர்... 'ஒரு டாக்டராவோ, இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய நான், ஒரு செஃப் ஆனதே பெரிய ஆக்சிடென்ட்தான்'' எனச் சிரித்தபடியே சொல்லும் சேகருக்கு, இந்தத் துறையில் அனுபவம், முப்பது ஆண்டுகள்! 'பார்க் கோரமண்டல்’ ஹோட்டல் முதல், தற்போதுள்ள ஐ.டி.சி வரை இவரது கைமணம் மணக்காத ஸ்டார் ஹோட்டல்களே இல்லை. அப்துல் கலாம், சச்சின், தோனி, விராட் கோலி... என்று இவரின் உணவை டேஸ்ட் செய்த வி.வி.ஐ.பிக்கள் லிஸ்ட் நீள்கிறது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த, 'ஆஹார்’ உணவுத் திருவிழாவில் நான்கு கோல்டு மெடல்களை வென்றுள்ள இவருக்கு வந்த பெரிய சேலன்ஜ், 2010ம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான மாநாட்டில் ஆறாயிரம் பேருக்கு ஆன் த ஸ…
-
- 0 replies
- 647 views
-