நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தாபா சிக்கன் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோழி துண்டுகள் - கால் கிலோ வெண்ணெய் மற்றும் எண்ணெய் - தலா 2 மேசைக்கரண்டி பூண்டு மற்றும் இஞ்சி - தலா அரை மேசைக்கரண்டி தக்காளி - கால் கிலோ மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி சீரக தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி கெட்டி தயிர் - அரை கப் கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு - அரை மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 (விருப்பமிருந்தால்) மல்லி இலை, இஞ்சி - அலங்கரிக்க உப்பு - தேவையான அளவ…
-
- 0 replies
- 926 views
-
-
ஆஹா, என்ன மணம்... அடடா, என்ன ருசி! கம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்... அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா?!’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்... ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு - மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, ஒரு `பிரியாணி மேளா’வையே இங்கு நடத்திக்காட்டி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.…
-
- 0 replies
- 3.1k views
-
-
-
- 0 replies
- 785 views
-
-
நேற்று இதனை வீட்டில் செய்து கொடுத்தேன், அனைவரும் சாப்பிட்டனர். படம் எடுக்க நேரம் கிடைக்கவில்லை. இவ் காணொளியில் கேரளப் பெண் குட்டி, கொஞ்சி கொஞ்சி பேசும் மலையாளம், கறியை விட சுவையாக இருக்கின்றது ; மலையாளப் பெண்களைப் போன்று..
-
- 1 reply
- 805 views
-
-
-
- 0 replies
- 771 views
-
-
முருங்கைப்பூ முட்டை சாதம் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ – ஒரு கைபிடி கொழுந்து முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி வெங்காயம் – 1 பூண்டு – 3 முட்டை – 1 முழு சீரகம் – 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி வேகவைத்த சாதம் – பாதி கோப்பை உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு. செய்முறை : • வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது காய்ந்தவுடன் சீரகம் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் நன்கு வதக்கவும். அத்துடன் சுத்தம் செய்து கழுவிய முருங்கைப்பூ, கொழுந்து முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். •…
-
- 0 replies
- 696 views
-
-
வாழைக்காய் புட்டு : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் வாழைக்காய் – 2 உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – 3 கறிவேப்பிலை செய்முறை : * வாழைக்காயை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். * வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை…
-
- 3 replies
- 636 views
-
-
30 வகை கோடை உணவுகள் ‘இந்த முறை எப்படி வாட்டி எடுக்கப் போகுதோ...' கோடை தொடங்கும்போதே மக்கள் மனதில் இந்த பீதியும் தொடங்கிவிடும். ”மற்ற சீஸன்களைப் போலவே கோடையும் என்ஜாய் பண்ண வேண்டிய ஒன்றுதான். நீண்ட விடுமுறை, புது இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு, நெருங்கிய உறவினர்களைச் சந்தித்து மகிழ்தல் என கோடை பல சந்தோஷத் தருணங்களை உங்கள் வாசற்படிக்கு கொண்டுவந்து சேர்க்கும். இந்த பருவத்துக்கேற்ப நம் பழக்கவழக்கங்கள், உணவு முறையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதிக சிரமமின்றி எளிதில் கடந்துவிடலாம்'' என்று கூறும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், உடலுக்குக் குளிர்ச்சி தரும் பொருட்களைக் கொண்டு 30 வகை கோடை உணவுகளை இங்கே வழங்குகிறார். ஹேவ் எ நைஸ் சம்மர்…
-
- 1 reply
- 5k views
-
-
பாசிப்பருப்பு பொரித்த முட்டை : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று (சிறியது) வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு) இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் மேசைக்கரண்டி சீரகத் தூள் - கால் மேசைக்கரண்டி மல்லித் தழை - சிறிது முட்டை - 2 மிளகுத் தூள் - கால் மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - கால் மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பரு…
-
- 1 reply
- 662 views
-
-
கடந்த வாரம் சீன உணவகம் ஒன்றில் சாப்பிட்ட இவ் சாப்பாடு நன்றாக இருந்தமையால் அதனை வீட்டில் செய்து பார்த்தேன். செய்முறையின் அடிப்படையை இணையத்தில் வாசித்த பின் எனக்கேற்ற மாதிரி மாற்றியுள்ளேன் தேவையானவை: 1. கொஞ்சம் அளவில் பெரிய இறால் 1 இறாத்தல் 2. உள்ளி 5 பற்கள் 3. சோயா சோர்ஸ் (Soya sauce) 1.5 மேசைக் கரண்டி 4. உறைப்பு Chili Sauce 1.5 மே.க 5. சீன அரிசி வைன் (Chinese rice wine): 2 மே.க 6. சீன நல்லெண்ணெய் (Chinese sesame oil)- 1. மே.க 7. ஒலிவ் எண்ணெய் 1. மே.க 8. Non fat சோளம் எண்ணெய் 9. சீனி 1. மே.க செய்முறை: 1. இறாலை தோல் உரித்து, கழுவி வைத்துக் கொள்ளவும் 2. உள்ளியை இடிச்சு பசை மாவாக (Garlic Paste) ஆக்கவும் …
-
- 22 replies
- 4.6k views
-
-
உருளைகிழங்கு ரெய்தா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : உருளைகிழங்கு – 100 கிராம் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 ஸ்பூன், கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்ப கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு செய்முறை : * முதலில் உருளைகிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும் * கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு தாளித்து அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நன்றாக கிளறவும். * ஒரு பாத்திரத்தில் வதக்கிய உருளைக்கிழங்கு கலவை, உப்பு, தயி…
-
- 2 replies
- 899 views
-
-
எலுமிச்சை சாதம் பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி செ.மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 கடலை பருப்பு - 1 மே.கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி கடுகு - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 1 நெட்டு உப்பு - தேவைக்கேற்ப வறுத்த கச்சான் - 1மே .கரண்டி எலுமிச்சம்பழம் - பாதி செய்முறை:- * பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும். * அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும். * எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். * கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து…
-
- 1 reply
- 1.6k views
-
-
மத்தி மீன் கேரள வறுவல் தேவையான பொருள்கள்: மத்தி மீன்...1 /2 கிலோ மிளகு..10 தேக்கரண்டி சீரகம்......1 தேக்கரண்டி சோம்ப.......1 /2 தேக்கரண்டி இஞ்சி... 2 இன்ச் நீளம் பூண்டு..... 20 பல் எலுமிச்சை சாறு....1 தேக்கரண்டி தயிர்..1 /2 தேக்கரண்டி உப்பு...தேவையான அளவு எண்ணெய் ....200 மில்லி கறிவேப்பிலை ....அலங்கரிக்க செய்முறை: 1.மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். 2. இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் + உப்பு போட்டு நன்கு கலந்து, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக…
-
- 0 replies
- 1.6k views
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு இவ்வுலகிலேயே இல்லை எனலாம். அந்த அளவில் தேவாமிர்தம் போல் இருக்கும்.இங்கு பலருக்கும் பிடித்த நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: நொத்திலி கருவாடு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) தக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
நண்டு கறி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: நண்டு - 6 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி - 3 அரைத்த மிளகு - ஒரு தேக்கரண்டி அரைத்த சீரகம் - அரை தேக்கரண்டி அரைத்த சோம்பு - ஒரு தேக்கரண்டி அரைத்த பூண்டு - 8 பல் அரைத்த இஞ்சி - ஒரு துண்டு அரைத்த மிளகாய் வற்றல் - 4 புளி சாறு - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். அத…
-
- 0 replies
- 2.9k views
-
-
மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: மீன் 500 கிராம் கறுப்பு மிளகு – 2 தே.க மிளகாய் தூள் 2 தே.க உப்பு –- தே.அளவு இஞ்சி – 2 தே.க பூண்டு – 2 தே.க எலுமிச்சை சாறு –3 தே.க கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு தண்ணீர் – தே.அளவு அரிசி மா/கட.பருப்பு – 2 தே.க தேங்காய் எண்ணெய் – தே.அளவு செய்முறை: முதலில் ஒரு மிக்ஸியில் அரிசி மா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் கறுப்பு மிளகு, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் சிறிது அரிசி மா…
-
- 1 reply
- 712 views
-
-
பிரெட் பீட்சா : செய்முறைகளுடன்...! என்னென்ன தேவை? துருவிய கரட் - – சிறிது குடை மிளகாய் - – 1 நெய் -– 1 தே.க வெங்காயம் - – 1 துருவிய சீஸ் –- தே.அ பிரெட் - – 2 துண்டு பீட்சா ேசாஸ் - – தே.அ எப்படிச் செய்வது? பாத்திரத்தில் நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் கரட், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிரெட் ஸ்லைஸை வட்ட வடிவமாக வெட்டி, அதில் 1 தே.க பீட்சா சோஸை பரவலாக ஊற்றவும். அதன்மீது வதக்கிய காய்கறிகளைப் போட்டு, சீஸ் தூவவும். இதை மைக்ரோவேவ் அவனில் 1-2 நிமிடம் வைத்து, சீஸ் உருகியவுடன் எடுக்கவும். பிரெட் பீட்சா ரெடி.
-
- 1 reply
- 839 views
-
-
சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தினைக் கடந்தவுடன் வருகிற முதல் இடப்புற தெருவான 16 வது குறுக்குத்தெருவில் க (Green cafe ) என்ற பெயரில் Organic Veg. restaurant ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நண்பர் பவா.செல்லதுரையின் பரிந்துரையால் நேற்று மாலை அங்கே குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன். சென்னையில் இதுவரை நான் சாப்பிட்ட சைவ உணவகங்களில் மிகச்சிறந்த ஒன்று இதுவென்பேன். சிறுதானியங்களைக் கொண்டு இத்தனை விதங்களில் உணவு தயாரிக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. சுவையும் தரமும் இனிய உபசரிப்பும் கொண்ட சிறப்பான உணவகமது. இந்த உணவகத்தையும் அத்துடன் இணைந்த இயற்கை வேளாண்மைப் பொருட்களுக்கான அங்காடியும் பார்வையிட்டேன். அந்த அங்காடியின் ஒரு பிரிவாகப் புத்தகக் கடை ஒன்று இ…
-
- 0 replies
- 1k views
-
-
சிக்கன் தால் சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி கிரேவி, மசாலா என்று செய்து அழுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பாசிப்பருப்பு சேர்த்து சமையுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைத் தரும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.சரி, இப்போது அந்த சிக்கன் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். .தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது தக்காளி - 1 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு பாசிப்பருப்பு - 1/2 கப் தண்ணீர் - 2-3 கப் கொத்தமல்லி - சிறிது…
-
- 7 replies
- 849 views
-
-
காளான் ஃப்ரைட் ரைஸ் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - 1 கப் பட்டன் காளான் (நீளமாக நறுக்கியது) - 1 கப் பழுப்பாக்கிய (Caramelized sugar) சீனி - 1 டேபிள்ஸ்பூன் சோயா சோஸ் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன் வெங்காயத்தாள் -1 டேபிள்ஸ்பூன் முட்டைக்கோஸ் நீளமாக நறுக்கியது - 1/2 கப் செய்முறை : அடிகனமான பெரிய பாத்திரத்தில் அரிசிக்கு தேவையான நீர், உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக நீர் கொதித்தவுடன் அரிசியைக் கழுவி போடவும். முக்கால் பதம் அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து …
-
- 3 replies
- 856 views
-
-
மட்டன் முகலாய் மசாலா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ எண்ணெய் - 4 மேசைக்கரண்டி நெய் - 4 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி வெங்காயம் - 250 - 400 கிராம் பச்சை மிளகாய் - 3 காஷ்மீரி சில்லி - 4 - 5 பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 3 கிராம்பு - 3 மல்லி - 3 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தயிர் - ஒரு கப் புதினா, கொத்தமல்லித் தழை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்யும் முறை : தேவையான பொருட்கள…
-
- 2 replies
- 687 views
-
-
இஞ்சி பெப்பர் சிக்கன் விடுமுறை நாள் வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நன்கு வாய்க்கு சுவையாக பிடித்த சமையலை சமைத்து சாப்பிட முடியும். அதில் பெரும்பாலானோர் அசைவ உணவைத் தான் செய்து சுவைப்பார்கள். இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி செய்து சுவைக்க நினைத்தால், இஞ்சி பெப்பர் சிக்கன் செய்யுங்கள்.இங்கு அந்த இஞ்சி பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (நறுக்கியது) க…
-
- 2 replies
- 945 views
-
-
சுவையான வெஜ் பிரியாணி தேவையானபொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சை மிளகாய் – ஒன்று கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ மீல் மேக்கர் – சிறிது தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக) – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி நெய் – ஒரு தேக்கரண்டி பட்டை – சிறு துண்டு கிராம்பு – 2 ஏலக்காய் – ஒன்று பிரிஞ்சி இலை – ஒன்று பொடிக்கு: மிளகு – 10 சீரகம் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி செய்முறை அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவு…
-
- 6 replies
- 4k views
-
-
தமிழ்ப் புத்தாண்டு ரெசிப்பிக்கள் தமிழ்ப்புத்தாண்டு அன்று மதியம் எல்லோருடைய வீட்டிலும் வடை பாயாசத்தோடு துவங்கும் ரெசிப்பிக்களை இங்கே உங்களுக்காக வழங்கியிருக்கிறோம். அவற்றில் நான்கு அட்டகாசமான ரெசிப்பிக்களுக்கான செய்முறை வீடியோக்களும் இங்கு உள்ளன. தேவையானவை: பலாப்பழம் - 15 வெல்லம் - அரை கப் கெட்டியான தேங்காய் பால் - அரை கப் இரண்டாம் தேங்காய் பால் - அரை கப் முந்திரி - 10 நெய் - 3 டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் தேங்காய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை செய்முறை: பலா பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு, குக்கரில் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த உடன் மிக்ஸியில் சேர்த்து அரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டர் பூரி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: கோதுமை - 2 கப் ரவை – 1 கரண்டி ப.பட்டாணி – 1 கப் கொத்தமல்லி தழை – கொஞ்சம் உப்பு – தேவைக்கேற்ப ஓமம்– 1 கரண்டி பச்சை மிளகாய் – தேவைக்கேற்ப பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – ஒரு சிறு துண்டு எண்ணெய் – பொரிக்க செய்முறை : பச்சைப்பட்டாணி, ஓமம், இஞ்சி, கொத்தமல்லி தழை, பெருங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வேண்டும். மைதா/கோதுமை மாவினை தேவையான உப்பு, இரண்டு கரண்டி எண்ணெய், ஒரு கரண்டி ரவை [பூரி மொறுமொறுவென இருக்க] ஆகியவற்றை தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு பிசைந்து கொள்ளவும். அரைத்து வைத்த விழுதினை மாவிலேயே போட…
-
- 4 replies
- 1k views
-