நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தர்பூசணி நீர்மோர் தேவையானப்பொருட்கள்: தர்பூசணி (விதை நீக்கி நறுக்கியது) - 1 கப் தயிர் - 1/2 கப் எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை புதினா - சிறிது சாம்பார் வெங்காயம் - 2 செய்முறை: தர்பூசணித்துண்டுகள், தயிர், இஞ்சி, புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்தெடுத்து, அத்துடன் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து குறைந்தது அரை மணி நேரம் குளிர விடவும். கண்ணாடி தம்ளர் அல்லது கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய சாம்பார் வெங்காயம், புதினா மற்றும் இரண்டொரு தர்பூசணித்துண்டுகளைத் தூவி பரிமாறவும். கவனிக்க: வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
காலிஃபிளவர் மசாலா தேவையானப்பொருட்கள்: காலிஃபிளவர் - 1 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு சிறு துண்டு பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5 கசகசா - 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 20 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - 4 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லித்தழை - சிறிது செய்முறை: காலிஃபிளவரை தண்டு நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டியத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் மற்றும…
-
- 2 replies
- 1.1k views
-
-
தட்டை (அ) எள்ளடை தேவையானப் பொருள்கள்: புழுங்கல் அரிசி_2 கப்புகள் பொட்டுக்கடலை_1/2 கப் கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப) பூண்டு_2 பற்கள் பெருங்காயம்_சிறிது உப்பு_தேவையான அளவு எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினம…
-
- 4 replies
- 3.3k views
-
-
புதினா வடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் புதினா (பொடியாக நறுக்கியது) - 1/2 கப் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உளுத்தம் பருப்பை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவில், மிளகு, சீரகப் பொடி, நறுக்கியப் புதினா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும். எண்ணையை ஒரு வாணலியில் ஊற்றி காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறம…
-
- 11 replies
- 2k views
-
-
வெஜிடபுள் மன்சூரியன். மன்சூரியன் செய்ய: காரட், காப்சிகம், செலெரி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் - 2 கப் இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) வெங்காய தாள் - அரை கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரித்தெடுக்க சாஸ் செய்ய: சீரகம் - அரை தேக்கரண்டி பூண்டு - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது) சோள மாவு - ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் - 4 தேக்கரண்டி சர்க்கரை -…
-
- 0 replies
- 956 views
-
-
அன்னாசிப்பழ பானகம் தேவையானப்பொருட்கள்: அன்னாசிப்பழம் - பாதி இஞ்சி - ஒரு சிறு துண்டு புதினா - சிறிது பச்சை கொத்துமல்லி - சிறிது வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு, மூன்று துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதியை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, புதினா, கொத்துமல்லி, வெல்லம், சிறிது தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். அதை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக வடிகட்டவும். பின்னர் அதில் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். எடுத்து வைத்திருக்கும் அன்னாசிப…
-
- 0 replies
- 951 views
-
-
தேவையானப்பொருட்கள்: கேழ்வரகு மாவு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4 சீரகம் - 1 டீஸ்பூன் வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன் செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட…
-
- 0 replies
- 2.8k views
-
-
மிளகு சீரக மெதுவடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரித்தெடுப்பதற்கு செய்முறை: உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம். அரைத்த மாவில், பொடியான நறுக்கிய வெங்காயம், கொரகொரப்பாக பொ…
-
- 0 replies
- 1k views
-
-
மாங்காய்+கத்திரிக்காய்+முருங்காய் சாம்பார்.. தேவையான பொருட்கள்: மாங்காய் - 1 முருங்கைக்காய் - 1 கத்திரிக்காய் - 1/4 கிலோ. தேங்காய் - 1/2 முடி பூண்டு – 3 பல் துவரம் பருப்பு- 1 டம்ளர் மல்லி தூள் – 1 தேக்கரண்டி சாம்பார் தூள் – 1 /2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி தாளிப்பதற்குத் தேவையானவை கடலை எண்ணை - 100. நல்லெண்ணை - 100 கடுகு - 1 டீஸ்பூன் உ.பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பில்லை - 15 இலைகள். கொத்தமல்லி - ஒரு கீற்று. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி அதில் துவரம் பருப்பை இட்டு அதில் சிறிதளவு தண்ணிர் இட்டு வேகவைத்து…
-
- 0 replies
- 6k views
-
-
Posted by சோபிதா on 01/06/2011 in புதினங்கள் | 0 Comment உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில் அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே. நம்மில் பெரும்பாலானோருக்கு அது இளவயதினராக இருந்தாலும் சரி அல்லது முதியவர்களாக இருந்தாலும் சரி, ஆணோ அல்லது பெண்ணோ கீரையை உணவில் எடுத்துக் கொள்வது என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. அதே சமயம் கீரையின் மகத்துவத்தை பற்றி மருத்துவர்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
Chicken Devil தேவையானவை: சிக்கன்.குடைமிளகாய்,வெங்காயம்,கறிமிளகாய்,தக்காளி சோஸ், சில்லி சோஸ், நல்ல எண்ணை,உப்பு, மஞ்சள்,சில்லிபவுடர், தேவையனாளவு: சிக்கென் 1/4kg வெங்காயம் 2 குடைமிளகாய் 2 கறிமிளகாய் 4 தக்காளி சோஸ் 5 table spoon சில்லி சோஸ், 3 table spoon நல்ல எண்ணை 4 table spoon சில்லிபவுடர், 2 table spoon மஞ்சள் பவுடர் 2 table spoon உப்பு தேவைக்கேற்ப செய்முறை: சிக்கன், மஞ்சள்,சில்லிபவுடர்,உப்பு ஆகியவற்ரை நீரில் அவித்து எடுக்கவும்,பின்பு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்,அதன்பின் ஒரு சட்டியில் எண்ணையை விட்டு மெல்லிய சூட்டில் பிரட்டி எடுக்கவும் அதன் பின் சிக்கனுடன் தக்காளி சோஸ், சில்லி சோஸ், வெட்டிய குடைமிளகாய்,கறிமிளகாய்,வெங்காயம்,சேர்த்…
-
- 0 replies
- 1.3k views
-
-
பூண்டு சட்னி தேவையான பொருள்கள்: பூண்டு - 200 கிராம் பச்சை மிளகாய் - 10 தக்காளி - மூன்று தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 10 இலைகள் கொத்தமல்லி - 7 இலைகள் செய்முறை: சிறிதளவு எண்ணெய் ஊற்றி உரித்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் தக்காளி (நன்கு பிழிந்தது) ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும். நன்கு ஆறியபின் பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அந்த சட்னி விழுதை வாணலியில் மிதமான சூட்டில் வாணலியில் சூடு பண்ணவும். தனியொரு பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி க…
-
- 2 replies
- 1.6k views
-
-
corn flakesஇல் வடை செய்யும் முறை http://www.youtube.com/watch?v=5pD7MtRStgU
-
- 11 replies
- 1.9k views
-
-
வெண்டைக்காய் புளி குழம்பு தேவையானவை வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 1/2 கறிவேப்பிலை பூண்டு - 5 பல் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் புளித்தண்ணீர் - 1/4 கப் உப்பு பெருங்காயத்தூள் - சிறிது தேங்காய்ப்பால் -1/4 கப் கடுகு வெந்தயம் உப்பு எண்ணெய் செய்முறை * வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும். * கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். * அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்…
-
- 14 replies
- 11k views
-
-
வார விடுமுறையாக இருந்ததால், இன்று ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றவே, சமையலைப் பக்கத்தை எட்டிப் பார்த்தேன். கண்ணுக்கெட்டியவரை கறிகளே காணப்படவில்லை. போன வாரம் சமைத்தது போக மீதியை வெட்டி ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு பிறீசரில் இருந்தது. (இருந்தவை: கோழி இறைச்சி, வெட்டிய ரொட்டி, கோவா, வெண்டிக்காய், வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய்), முட்டை இவற்றை வைத்து உறைப்பாக எதாவது சமைக்கலாம் என்று யோசித்ததால் திடீர் ஐடியா உருவானது. செய்து பார்த்தேன் நன்றாக வந்தது, அதனால் செய்முறையை இணைத்துள்ளேன். நீங்களும் நேரம் இருக்கும் போது செய்து பார்த்து சொல்லுங்கள். 1) வெண்டிக்காய் 2) வெங்காயம் 3) பச்சை மிளகாய் 4) சுருள் கோவா 5) கருவ…
-
- 13 replies
- 1.9k views
-
-
வெஜிடபிள் புரோட்டா குருமா தேவையானப் பொருட்கள் காரட் - 100 கிராம் பீன்ஸ் - 100 கிராம் பச்சைப்பட்டாணி - 100 கிராம் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 2 பெரியது தக்காளி - ஒன்று நறுக்கியது கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் - ஒரு மூடி கிராம்பு - 2 பட்டை - சிறிதளவு மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை * காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் பச்சைபட்டாணி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். * துருவிய தேங்காயை அரைத்து கொள்ளவும். …
-
- 0 replies
- 5.4k views
-
-
அவரைக்காய் பொறிக்குழம்பு தேவையான பொருள்கள்: • அவரைக்காய் - 1/4 கிலோ • வெங்காயம் - 1 • தக்காளி - 1 • கறிவேப்பில்லை - 4 இலை • கொத்தமல்லி - சிறிதளவு • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி • தனியா தூள் - 1/2 தேக்கரண்டி • புளி - சிறிய எலுமிச்சை அளவு • உப்பு - 2 தேக்கரண்டி • பூண்டு -5 பல்கள் தாளிக்க: • கடுகு - 1/2 தேக்கரண்டி • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி • எண்ணெய் - 1 தேக்கரண்டி • சோம்பு - 1/2 தேக்கரண்டி செய்முறை: • முதலில் அவரைக்காய் நுனிகளை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். • பூண்டை உரித்து லைட்டாக நசுக்கு வைத்து கொள்ளவும் • வெங்காயம…
-
- 3 replies
- 3.5k views
-
-
ஆட்டு கால் சூப்பு (எ) எலும்பு ரசம் செய்யத்தேவையானவை: ஆட்டு எலும்பு: 1/4 கிலோ,கொழுப்பு விருப்பபட்டால் சேர்த்துக்கொள்ளாம். இஞ்சி,பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி இஞ்சி-சிறு துண்டு(தட்டிக்கொள்ளவும்) சாம்பார் வெங்காயம்- 10(சிறிதாக தட்டிக்கொள்ளவும்) பூண்டு- 8 பல் (சிறிதாக தட்டிக்கொள்ளவும்) சோம்பு-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) சிரகம்-1 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) மிளகு-2 மேசைக்கரண்டி(லேசாக அரைத்துக்கொள்ளவும்) மஞ்சள் தூள்-2 தேக்கரண்டி மிளகாய் தூள்-காரத்துக்கு மல்லி தூள்-1 மேசைக்கரண்டி மல்லி இலை- 1 பிடி கறிவேப்பிலை- 1 கொத்து புதினா இலை- 1 கொத்து(விரும்பினால்) தக்காளி -3 நறுக…
-
- 1 reply
- 1.6k views
-
-
இட்லி செய்யும் முறை 1 இது வரை இட்லி என்னை கைவிட்டதில்லை. நான் எந்த விதமான ஊக்கிகளும் சேர்ப்பதில்லை - சில நேரங்களில் அவை அமிலத்தன்மையை அளிப்பதுண்டு. தமிழர்களின் அற்புதமான இந்த உணவு வகை - கொஞ்சம் பழகினால் நன்றாக வரும். வெந்தயம் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எதற்கும், செய்முறை இங்கே பச்சரிசி - 1 அளவு புழுங்கலரிசி - 4 அளவு வெந்தயம் - 1/8 அளவு 1.மேற்கண்டதை ஒன்றாக சேர்த்து நன்றாக அலம்பி, 8 மணி நேரமாவது ஊற வைக்கவும். 2.தோலில்லாத முழு உழுந்து - 1 1/2 அளவு - நன்றாக அலம்பி, தனியாக 8 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீர் தாராளமாக இருக்க வேண்டும். 3.முதலில் உளுந்தை போட்டு நன்றாக அறைக்கவும். நன்றாக பொங்கி வர வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக …
-
- 19 replies
- 3.3k views
-
-
மைசூர் பாகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் மைசூர் பாகு செய்யும் முறையைப் பார்ப்போம். செய்யத் தேவையானவை கடலை மாவு - 250 கிராம் சோடா உப்பு - 1 சிட்டிகை சர்க்கரை - 3/4 கிலோ டால்டா அல்லது நெய் - 3/4 கிலோ செய்யும் முறை கனத்த பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு காய்ச்சி கம்பிபதம் வந்தவுடன் கடலை மாவை ஒரு கையால் தூவிக் கொண்டே கட்டி சேராமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் நெய்யை இளக வைத்து இடையிடையே கலவையில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும்போது சிறிது சோடா உப்பு போட்டு கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி கரண்டியால் தேய்த்து …
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
முடக்கத்தான் இலை ரசம் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு 25 கிராம் முடக்கத்தான் இலை - கிள்ளியது 2 கைப்பிடி புளி அல்லது தேசிக்காய் - தேசிக்காய் - 1 (அல்லது) புளி கோலி உருண்டை அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1 டீஸ்பூன் தக்காளி- நாட்டு தக்காளி - 1 (பெங்களூர் தக்காளியாகின் 2) மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் செய்முறை: துவரம் பருப்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். முடக்கத்தான் இலை எடுத்துத் தண்ணீர்விட்டு வேக வைக்கவும். பிறகு கடைந்து கொள்ளவும். அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளி எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், தக்காளி இவைகளைப் போட்டுத் தண்ணீர் விட…
-
- 6 replies
- 5.5k views
-
-
முள்ளங்கி சாம்பார் தேவையானவை முள்ளங்கி_1 துவரம் பருப்பு_ 3/4 கப் சின்ன வெங்காயம்_10 தக்காளி_2 புளி_சிறு கோலி அளவு பூண்டு_3 பற்கள் மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன் மிளகாய்த் தூள்_2 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லி இலை_1 கொத்து உப்பு_தேவையான அளவு தாளிக்க: எண்ணெய்_2 டீஸ்பூன் கடுகு_கொஞ்சம் உளுந்து_கொஞ்சம் சீரகம்_கொஞ்சம் வெந்தயம்_கொஞ்சம் பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை_5 இலைகள் செய்முறை: துவரம் பருப்பைக் குழைய வேகவிடு. புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவை.முள்ளங்கியைக் கழுவி சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வை.வெங்காயம்,தக்காளி நறுக்கு. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
புளியோதரை என்ற புளிசோறு.. தேவையான பொருட்கள். புளி - இரண்டு கோலி உருண்டை பெருங்காயம் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி- தேவையான அளவு வெந்தயம் - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 5 (கிள்ளியது) சீரகம் - 1 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் (தேவையானால் வேர்கடலையும் சேர்த்து கொள்ளலாம்..) உளுந்தபருப்பு - 1 ஸ்பூன் எண்ணைய் - தேவையான அளவு செய்முறை: அன்றனறு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு கொஞ்சம் மீந்துவிடும் அல்லவா அதற்கான வழிமுறைகளை தொகுத்து தரலாம் என உத்தேசித்துள்ளேன் போக இந்த தோழர் சோத்துவத்தல் பற்றி தனியே பதிவு பதிவு செய்யபடும்.. இங்கிட்டு புளியோதரைக்கு வருவம்.. முதலி…
-
- 3 replies
- 5.4k views
-
-
முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்யலாம் முட்டை பப்ஸ் தேவையான பொருட்கள்: முட்டை 2 பஃப்ஸ் ஷீட்ஸ் - 4 (ரெடிமேடாகவே கிடைக்கிறது) இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள் - தலா 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 1 கப் வெங்காயம் - 5 தக்காளி - 1 கறிவேப்பிலை, கரம்மசாலா தூள் - சிறிது செய்முறை: முட்டையை வேக வைத்து தோல் உரித்து இரண்டு பாகமாக வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வத…
-
- 2 replies
- 2.6k views
-
-
சில்லி சிக்கன் தேவையானவை கோழிக்கறி - 500 கிராம் பூண்டு - 5 பச்சைமிளகாய் - சிறிதளவு எண்ணெய் - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி உப்பு - சிறிதளவு செய்யும் முறை கோழிக்கறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டை அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை அரை மணிநேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளை போட்டு வதக்கி மிதமான தீயில் வேக விடவும். சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்த…
-
- 0 replies
- 1.4k views
-