நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இனிப்பில் நாட்டம் குறைவாக இருப்பதால், இனிப்பு பலகாரங்களை நான் இப்பொழுது தான் எப்படி செய்வது என்று யோசிக்கவே ஆரம்பித்திருக்கேன். அதிலும் இனிப்பு வகைகள் செய்யும் போதும் கரண்டியும் கையுமாக இருக்க வேண்டும். இல்லையேல் இனிப்பும் போய், சட்டியும் போய், கையும் போய்விடும். இதனாலேயே இனிப்பு வகைகளை சமைக்க பழக நாட்கள் ஆகிவிட்டன. இன்று கிமீக்காவின் டயமன்ட் பர்பியை ஒரு கை பார்த்துவிடுவது என ஆரம்பித்தது, என்ன நடந்தது என்பதை பார்ப்போமா! தேவையான பொருட்கள்: கச்சான் - 1 கப் சீனி - 1 1/2 கப் பால் - 1 1/2 கப் தட்டிற்கு போடுவதற்கு கொஞ்சமா நெய் செய்முறை: 1. பச்சை கச்சானை வறுத்து தோலுறித்தி எடுத்து கொள்ளனும். 2. பாலில் கச்சானை 2 மணித்தியாலங்களுக்கு ஊற வைக்க வேணும். 3.…
-
- 11 replies
- 5.6k views
-
-
"பலூடா சர்பத்" தயாரிப்பது எப்படி???? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 4 replies
- 11.8k views
-
-
இன்று நான் எழுத இருப்பது என் அப்பாச்சியிடம் இருந்து நான் கற்ற ஒரு செய்முறை. பொன்னாங்காணி வறை அப்பாச்சி சமைத்தால், நானும் அப்பப்பாவும் சாப்பிட அழைக்க முன்னரே சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருப்பம். அத்தனை சுவை. இதை உண்டவர்களுக்கு தான் அருமை தெரியும். கீரைல அத்தனை சுவையா என கேள்வி கேட்பவர்கள் ஒரு தடவை இதை சமைத்து சாப்பிட்டால் விடை சுலபமா கிடைக்கும். பொன்னாங்காணி என பெயர் வர காரணம் என்ன? "பொன் ஆம் காண் நீ" என்பது மருவி தான் பொன்னாங்காணி ஆகிவிட்டதாம். இதைக் கண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாய் எனப் பொருள் வருமாம். அது எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் சுவை அதிகம் தான். இந்த கீரைல சுவையை தவிர என்ன பயன்கள் என பார்த்தால்: கண்ணிற்கு நல்லது, பசியை தூண்டும், மலச்சிக்கலை போக்கு…
-
- 29 replies
- 8.4k views
-
-
அன்னாசி அல்வா அன்னாசிப்பழம் 1 பால் 200 மி.லி சர்க்கரை ஒன்றரை கப் திராட்சை 8 ஏலப்பொடி சிறிது நெய் 200 மி.லி கேசரிப்பவுடர் கால் தேக்கரண்டி உப்பு ஒரு சிட்டிகை அன்னாசியைத் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு இட்லி பானையில் வைத்து சிறிது நேரம் ஆவியில் வேகவைக்கவும். பழம் வெந்தபின், அவற்றை சிறிது நேரம் ஆறவைத்து, பின் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு 100 மி.லி. தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகாக காய்த்துக் கொள்ளவும். பாகு கெட்டியாய் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அன்னாசி விழுதினைப் போட்டு, ஏ…
-
- 3 replies
- 3.1k views
-
-
தாளித்த இட்லி மிகவும் பிரபலமானது இந்த இட்லி. நீங்கள் சில இடங்களில் இசை சுவைத்திருப்பீர்கள். சுற்றுலா செல்பவர்கள் எடுத்துச் செல்வதும் பெரும்பாலும் இந்த வகை இட்லிகள்தான். தேவையானவை இட்லி மாவு - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - சிறிதளவு கடலைப் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 4 தேங்காய் - ஒரு கப் கடுகு - சிறிது கருவேப்பிலை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போடவும். பின்னர் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். அதிலேயே கருவேப்பிலையையும் போட்டு தாளித்து எடுத்து மாவில் சேர்க்கவும். அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் கைப்பிடி உளுந்து, கைப்பிடி கடலைப் பருப்பைப் போட்டு …
-
- 5 replies
- 3.4k views
-
-
வல்லாரை கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒன்றரை கப் சிவத்தை பச்சை அரிசி ( நாம் புக்கை செய்யும் அரிசி தான் ) இரண்டு கட்டு வல்லாரை தேசிக்காய் பசுப்பால் ஒரு கப் வறுத்த பயறு நான்கு மேசைக்கரண்டி உப்பு அரிசியையும் பயறையும் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் துப்பரவு செய்த வல்லாரையை சிறிது நீர் விட்டு தண்டுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் ( தண்டில்தான் கூடிய சத்து உள்ளது ) இப்போது தேவையான உப்பை சேர்த்துக்கொள்ளவும் அரிசி நன்கு வெந்தவுடன் இளம் சூட்டில் அடித்த வல்லாரையையும், பாலையும் விட்டு மூன்று நிமிடத்தில் இறக்கவும் ( கனக்க கொதிக்கவிட்டால் வல்லாரையில் உள்ள சத்து வீணாகிவிடும் ) கோப்பையில் பரிமாறும் போது அவரவர் சு…
-
- 12 replies
- 5.3k views
-
-
அரியதரம் செய்வது எப்படி? நல்ல மென்மையாக இருக்கனும் . தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லித்தரலாமே
-
- 20 replies
- 20k views
-
-
மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல.. தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் புளி கரைசல் 2 மே.க எண்ணெய் 4 மே.க மஞ்சள் தூள் - 1 தே.க வற்றல் மிளகாய் 5 கடலை பருப்பு 1 தே.க துவரம் பருப்பு 1 தே.க உளுத்தம் பருப்பு 1 தே.க பெருங்காயம் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். 2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல…
-
- 14 replies
- 5.7k views
-
-
"நாங்கெல்லாம் எதுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டோம்ல" என வீட்டில வசனம் பேசிட்டு இருக்கிற ஆளு நான். எத்தனை தான் துணிவாக இருந்தாலும், பெரிய ரௌடி போல கதை பேசிட்டு திரிந்தாலும்; பாகற்காய்க்கு பயந்து ஓடிய காலம் உண்டு. அதிலும் சின்ன வயதில், அடிக்கடி கனடாவில் இருந்து எங்களை பார்க்க ஒஸ்திரேலியாவிற்கு வரும் பெரியம்மா என்றாலே பயம் தான். சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா என்னையும் பாகற்காயை வைத்து அவதிப்பட வைத்துவிடுவார். ஆனால் பெரியப்பா துணையுடன் என்று எங்க வீட்டு தோட்டத்தில் பாகற்காய் வந்துதோ, அன்றிலிருந்து பாகற்காயிற்கும் நான் பயப்படுவதில்லை. இனி இந்த பாகற்காயை வைத்து நான் பண்ணிய வீரகாவியத்தை பார்க்கலாம்: தேவையானவை: பாகற்காய் 1 வெங்காயம் 1 மிளகாய் 2 தேசிக்காய் புளி …
-
- 10 replies
- 4.4k views
-
-
புதினா சட்னி புதினாகீரை(மின்ட்) இரண்டு பிடி செத்தல் மிளகாய் 2 அல்லது 3 உழுந்து ஓரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூ இரண்டு கைபிடி உப்பு புளி மிளகு வெங்காயம் புதினா இலையைக்கிள்ளி எடுத்து கழுவி வைக்கவும். சிறிது எண்ணெயில் மிளகாயயைப்பொரித்து தனியாக வைத்துவிட்டு புதினா இலையை வதக்கி எடுக்கவும். பின் வெறும் கடாயில் உழுந்தை பொன்னிறமாக வறுக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாகபோட்டு ஒன்றாக அரைக்கவும். சுடச்சுட சோற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். தயிருடன் சாப்பிடும்போது புதினாம் சேர்த்து சாப்பிட்ட சுவையாக இருக்கும். இதைச் சொல்லித்தந்த எனது அன்னைக்கு நன்றி.
-
- 5 replies
- 4.1k views
-
-
சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின…
-
- 11 replies
- 3.1k views
-
-
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வ…
-
- 16 replies
- 4.7k views
-
-
வெஜ் கேசடீயா - மெக்சிகன் முறை (Veg quesadilla - Mexican Style) இது ஒரு மெக்சிகன் உணவு. தேவையானப் பொருட்கள் வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla) ஃபுரோஸன் சோளம் - 1/4 கப் கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப் வெட்டிய வெங்காயம் - 1/4 கப் உள்ளி- 3 பல்லு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு எலுமிச்சை - பாதி சீஸ் கலவை - 1 கப் (பார்மஜான், மொற்சரில்லா, செடார்) ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப் எண்ணெய் செய்முறை கறுப்பு பீன்ஸை உப்பு போட்டு அவித்து வைக்கவும். உள்ளியை நசித்து வைக்கவும். வெறும் சட்டியில் ஃபுரோசின் சோளத்தைப் போட்டு வறுத்து வைக்கவும். ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்த…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆறு, குளங்களில் கிடைக்கும் நண்டைவிட கடல் நண்டில் சுவை அதிகம். எடுத்து உடைத்து சாப்பிட சற்று சிரமமான உணவு இது. இதனாலே பலர் இதனை தவிர்த்து விடுகின்றனர். அதிக மணம் கொண்டது. நண்டில் கால்சியம் அதிகம். அவை பெரும்பாலும் நண்டு ஓட்டில்தான் இருக்கின்றன. நாம் விரும்பி உண்ணக்கூடிய சதைப் பகுதிகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. நண்டினை உடைத்த உடன் சமைத்துவிட வேண்டும். உடைத்து நீண்ட நேரம் வைத்திருந்தால், நீர் விட்டு, வீணாகிவிடும். அமாவாசை காலங்களில் பிடிபடும் நண்டுகளில் சதை இருக்காது என்ற கருத்து உள்ளது. 100 கிராம் நண்டில் அடங்கியுள்ள சத்துக்கள் சக்தி (Energy) 59 கலோரிகள் ஈரப்பதம்/நீர் (Moisture) 83.5 கிராம் புரதம் (Protein) 8.9 கிராம் கொழுப்பு (Fat) 1.1 கிர…
-
- 23 replies
- 6.4k views
-
-
கன நாளா லட்டு செய்யவேணும் எண்டு யோசிச்சு யோசிச்சு செய்ய நேரமில்லம விட்டிட்டன். இப்ப தான் ஒரு கிழமை விடுமுறை. என்ன வித்தியாசமா செய்யிறது கன நாளா செய்யோணும் எண்ட லட்ட தான் செய்ய முடியும் எண்டு செய்தன். இது உங்களுக்கான பங்கு. சாப்பிட்டு பாத்து சொல்லுங்கோ
-
- 10 replies
- 6.8k views
-
-
தாய்லன்ட் கார்லிக் சிக்கன் (தாய்லாந்து முறையில் உள்ளியுடனான கோழி) தேவையானப் பொருட்கள் சிக்கன் லெக்ஸ்- பத்து வெங்காயம்-இரண்டு பூண்டு-ஆறு பற்கள் காய்ந்தமிளகாய்-நான்கு லெமன் கிராஸ்- ஒன்று எண்ணெய்-கால்க்கோபை கொத்தமல்லி-ஒரு பிடி சின்னமன் பவுடர்-கால் தேக்கரண்டி சிக்கன் ஸ்டாக்-ஒன்றரை கோப்பை உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி மிளகுத்தூள்-ஒரு தேக்கரண்டி புளி பேஸ்ட்-இரண்டு தேக்கரண்டி மீன் சாஸ்-இரண்டு மேசைக்கரண்டி வறுத்த வேர்க்கடலை-கால்க்கோப்பை பீனட் பட்டர்-ஒரு மேசைக்கரண்டி செய்முறை சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்துக் கொள்ளவும். லெமன் கிராஸ்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்…
-
- 15 replies
- 3.9k views
-
-
சிக்கன் கறி. தேவையான பொருட்கள். *1 கிலோ கோழி இறைச்சி *3 பெரிய வெங்காயம் *5 பல் பூண்டு *2தக்காளிப்பழம் *1 மேசைக்கரண்டி மிளகாத்தூள் *1 தேக்கரண்டி மசலாத்தூள் *3 தேக்கரண்டி தயிர் *இஞ்சி சிறியதுண்டு *தேவையான அளவு எண்ணெய் *தேவையான அளவு உப்பு. செய்முறை. கோழியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ளவும். தயிரைக் நன்றாக கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். பின்பு அதனுடன், அரைத்த இஞ்சி பூண்டையும் சேர்த்து வதைக்கிக் கொள்ளவும். பின் கோழி இறைச்சி, தயி…
-
- 1 reply
- 4.2k views
-
-
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம். உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வக…
-
- 3 replies
- 4.3k views
-
-
தேவையான பொருட்கள்: ரவை 1 கப் பெரிய வெங்காயம் 2 கேரட் நறுக்கியது 1 கப் தக்காளி 2 பச்சை மிளகாய் 5 பீன்ஸ் நறுக்கியது 1 கப் பச்சை பட்டாணி அரை கப் முந்திரி பருப்பு எலுமிச்சை சாறு சிறிதளவு லவங்கம், பட்டை, மஞ்சள் தூள் கொத்துமல்லி, கறிவேப்பிலை டால்டா அல்லது வெண்ணெய் செய்முறை: முதலில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணியை நன்றாக அவித்து எடுத்து கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி முந்திரி பருப்பை நன்றாக சிவக்க வறுக்கவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி நன்றாக வதக்கவும். இதனுடன் அவித்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.…
-
- 3 replies
- 3k views
-
-
குறைந்தவிலையில் தசை ஏறுவதற்கான உணவுபாணம். 1 வாழைப்பழம், 1 முட்டை, 1 கப் முளை விட்ட கொண்டல், 500மில் கின்னஸ் அல்லது சுப்பர் மோல்ட். இவையனைத்தயும் மிக்ஸியில் நன்றாக அடித்து மூக்கை பொத்திக்கொண்டு காலையில் குடிக்கவும். ஒரு மாதத்தில் பெரிய வித்தியாசம் தெரியும். குறிப்பு... கண்டபாட்டுக்கு தசை வைக்கும்... இரவில் சோற்றை சுத்தமாக் தவிர்க்கவும் (நைட் வேலை எண்டா ஓகே!) வயிற்றுக்கான கடின எஸ்ஸர்ஸைஸ் மிக முக்கியம். (செய்யாவிட்டால் ஸிக்ஸ் பக்ஸுக்கு பதிலா ஸிங்கில் அப்ரைட் பக் வரும் பாத்து............... ) (முளை விட்ட கொண்டல்) ----- ஓர்கானிக் கொண்டலை இரண்டு நாள் ஊறவைத்தால் முளைவிடும். குட்லக்குங்கோ!
-
- 15 replies
- 4k views
-
-
தேவையான பொருட்கள்: கோழிக்கறி - கால் கிலோ. தயிர் - கால் கப் இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு ஏலக்காய் - 3 மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு வெண்ணெய் - சிறிது செய்முறை: கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும். தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும். இந்த கலவையி…
-
- 2 replies
- 2.6k views
-
-
ஈழத்து கேபாப் கொத்து'' தேவையான பொருட்கள்! கோழிச்சதை500கிராம் தக்காளி 1 வெங்காயம்2 குடமிளகாய்2 முட்டை 3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவை…
-
- 8 replies
- 3.7k views
-
-
தேவையான பொருட்கள்! கோழிச்சதை-500கிராம் தக்காளி -1 வெங்காயம்-2 குடமிளகாய்-2 முட்டை -3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் -5ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவையான அளவு போடவும் நட…
-
- 9 replies
- 3.1k views
-
-
-
பிட்சா தேவையானப் பொருட்கள் அடி பாகம் செய்ய: ------------------- மைதா மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு சக்கரை - 1 மேஜைகரண்டி ஈஸ்ட் - 1 சிட்டிகை அலங்காரம் செய்: ------------------ தக்காளி பேஸ்ட் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை குடமிளகாய் - 1/2 சிவப்பு குடமிளகாய் - 1/2 காளான் - 6 அன்னாசிபழம்( நறுக்கியது) - 1 கப் சிஸ் ( துறுவியது) - 1 கப் செய்முறை ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சக்கரை, உப்பு ஆகியவற்றை கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். 5 நிமிடம் தனியே வைக்கவும். அதில் bubbles வந்தால் பிட்சா நன்றாக வரும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மாவில் ஈஸ்ட் கலவையை கொட்டி 10 நிமிடம் போல் நன்றாக பிசையவும். பிசைந்த மாவு உள…
-
- 4 replies
- 6.2k views
-