நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
11ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11ம் திகதி வடக்குகிழக்கில் முழுமையான ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. https://thinakkural.lk/article/103812
-
- 3 replies
- 500 views
-
-
-
எதிர்வரும் மே18ம் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான பிரான்சின் முதலாவது அறிமுக அரங்கம் இடம்பெறவுள்ளது. முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக்கொத்தும்- தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதற்கான அவசியம் குறித்த கையேடும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 16:30மணிக்கு 59 Rue Barb�s(Place de le Republique) 93100 Montreuil / Metro : ROBESPIERRE / Ligne: 9 எனும் இடத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் பிரான்சில் செயற்பட்டுவருகின்ற தமிழர் அமைப்புக்கள் ஊர்ச்சங்கங்கள்- தமிழீழச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என் தம…
-
- 0 replies
- 494 views
-
-
சர்வதேச திருக்குறள் மாநாடு நாளை யாழ்.பல்கலைகழகத்தில் ஆரம்பம்..! 200ற்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், பேராளர்கள் வருகை. சர்வதேச திருக்குறள் மாநாடு-2020 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக நாளை ஆரம்பமாகவுள்ளது.யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.இந்த மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை தஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கவிஞர் உடையார்கோவில் குணா யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடாத்தியிருந்தார். இதன் போது அவர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் அறக்கட்டளை சார்பாக பல்வேறு தமிழ் இலக்கியப் பணிகளை உலகளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் திருக்…
-
- 0 replies
- 494 views
-
-
மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது. கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது. வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகினறன. இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப…
-
- 0 replies
- 493 views
-
-
யாழ்ப்பாணம் அனலைதீவு ஸ்ரீ ஹரிகரபுத்திர ஐயனார் ஆலயத் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. https://newuthayan.com/story/16/அனலைதீவு-ஐயனார்-ஆலய-தேர்.html
-
- 0 replies
- 491 views
-
-
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் நிகழ்வு மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது பிறந்த நாள் இன்று (03) மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது சுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன் அவர்களால் சுவாமியின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண…
-
- 0 replies
- 487 views
-
-
பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் இன்று – யாழில் சிலை திறந்து வைப்பு December 11, 2021 இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில் அமைத்து பாரதியாரின் திருவுருவ சிலைக்கு இந்திய துணைத்தூதரக , துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , ஆணையாளர் ஜெயசீலன் , யாழ்.தமிழ் சங்க தலைவர் லலீசன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூபி மரியாதை செலுத்தினர். அதேவேளை , மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139வது பிறந்தநாளா…
-
- 1 reply
- 486 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.09.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், அண்டம் எனத் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் Universe என்பர். Universe ஆகிய இம் மேலை இந்தோ ஐரோப்பியச் சொல்லின் வரலாற்றினை விளக்குவதே இச்சொற்பொழிவாகும். மேலும் ‘ஒன்று-வட்டம்’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் திரிபே universe சொல். இக்கருத்தை முனைவர் கு.அரசேந்திரன் மூலமொழி ஆய்வில் விளக்குகிறார். ஒன்று-ஒன்னு என்ற தமிழ் பத்துப் பதினைந்தாயிரம் ஆண்டின் முன் மேற்கில் oi-no என ஓர் தொல் இந்தோ ஐரோப்பிய வடிவமாக(Proto Indo European form) மாறியது. இந்த oi-no பிறகு இலத்தீனி…
-
- 0 replies
- 485 views
-
-
மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு! மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹாதர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்த மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெவுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்திய எழுச்சிப் பேரணி, மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஆரம்பமாகி மன்னார் நகர மண்டபத்தை சென்றடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சைவ எழுச்சி மாநாடு இடம்பெறும். குறித்த மாநாட்டில் ஈழத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்…
-
- 0 replies
- 485 views
-
-
வவுனியாவில் புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு.! வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் வேறு நாடுகளுக்கு, பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார். https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/95259/
-
- 0 replies
- 484 views
-
-
வரலாற்று புகழ் மிக்க திருமங்களாய் சிவன் கோவிலை நோக்கிய ஒரு பயணம் – மட்டுநகர் திவா அதிகாலை 4 மணிக்கு அம்மா போட்டு தந்த தேனீரை அருந்திவிட்டு நல்ல குளிர் தாங்கக் கூடிய சேட்டும், அந்த நேரம் கொறோனா என்றதால முகக்கவசமும் போட்டுகொண்டு பகத்து வீட்டு சக்தி அண்ணாவையும் அழைத்துக்கொண்டு மூதூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தேன். மட்டக்களப்பு – வாழைச்சேனை – நாவலடி சந்தி – வாகரை – செருவில தாண்டி திருகோணமலை பக்கம் வாருகிற நேரம் மூதூர்க்கு செல்ல முதல் நீலாபொல என்று ஒரு பெயர் பலகையோட ஒரு சந்தி வரும். முதல் பாரதி புரம் என்று தான் அந்த இடத்தில் பெயர் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு இப்ப கொஞ்ச நாளாக தான் நீலாபொல என்ற சிங்கள ஊர் பெயர் பலகையை வைத்தார்களாம். (ஊர் மக்கள் தெரிவித்தார்க…
-
- 0 replies
- 481 views
-
-
விபுலானந்தாவில் பிறந்த நாள் பொன் விழா. ShanaJuly 15, 2022 காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் 1988, 1991 காலப் பகுதியில் கபொத. சா.த மற்றும் உ.தரம் பயின்ற மாணவர்களின் பிறந்தநாள் பொன் விழா நிகழ்வு நேற்று முன்தினம் காரைதீவில் நடைபெற்றது . காரைதீவு விபுலானந்த கலாச்சார மண்டபத்தில் பொன் விழாக் குழுத் தலைவர் எல்.ஏ.ராஜேந்திரகுமார் தலைமையில் பொன்விழா நடைபெற்றது . விழாவில் சிறப்பம்சமாக இந்த அணியினருக்கு கற்பித்த ஆசிரியர்கள் 24 பேரும் அதிதிகளாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஆசிரியர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு மாலைசூட்டி, நினைவு பரிசு வழங்கி கௌரவித்திருந்தமை பலரையும் ஈர்த்திருந்தது. மேலும், முன்ன…
-
- 2 replies
- 479 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 92 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 26.12.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஆறாவது சொற்பொழிவில், கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரையாற்றவுள்ளார். அவுஸ்திரேலியா நேரம்: இரவு 23:00 மணி (AEST) மலேசியா / சிங்கப்பூர் நேரம்: மாலை 20:00 மணி (SST) இந்தியா / இலங்கை நேரம் : மாலை 17:30 மணி (IST) இங்கிலாந்து நேரம்: …
-
- 0 replies
- 474 views
-
-
சபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜைக்காக முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்தது - தேவஸ்தானம் தகவல் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதுபோக பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலையில் பூஜை வழிபாடு கட்டணம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:- …
-
- 0 replies
- 473 views
-
-
திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர் சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வரா கல்லூரி நூற்றாண்டு வ…
-
- 0 replies
- 472 views
-
-
தமிழே தமிழரின் முகவரி லண்டனிலிருந்து சூம் உரையாடல் .. இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தின் ஏற்பாட்டில் தமிழே தமிழரின் முகவரி உரையாடல் இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களை உள்ளடக்கிய அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சூம் அப்ஸ் ஊடாக இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் மாணவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ள முடியும். https://vanakkamlondon.com/world/london/2020/08/79300/
-
- 0 replies
- 472 views
-
-
தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை அண்டி அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் அடையாளங்களையும் வரலாறுகளையும் ஆராயும் கண்காட்சி நேற்று இடம்பெற்றது. அதிகார நிலை, சலுகை, எங்கள் வீதிகளின் வரலாறுகள், கடந்த காலக் கதைகள், ஆவணப்படம் கிளிநொச்சியிலிருந்து கலை, வெவ்வேறு கோணங்களில் கடந்த காலம் உள்ளிட்ட தலைப்புக்களில் கண்காட்சி அம்சங்கள் உட்பட இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. இந்த கண்காட்சியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள், சமாதான ஆர்வலர்கள் மூத்த பிரஜைகள், உட்பட துறைசார்ந்தோரும் கலந்து கொண்டன…
-
- 0 replies
- 471 views
-
-
ஈழத்து இந்துக் கோயில்களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய, விவகார அமைச்சின் வழிகாட்டலில் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு “இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஈழத்து இந்துக்கோயில்கள் – தொல்பொருட்களும் இலக்கிய மரபுகளும்” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்து சமயத்தைப் பொறுத்தவரையில் கோயில்கள் பிரதான இடம் வகிப்பன. இந்து கலாசாரம் கோயிலை மையப்படுத்திய கலாசாரமாகவே விளங்குகின்றது. அழிந்தனவும் அழியாதனவுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்பொருட்கள், இலக்கிய…
-
- 0 replies
- 467 views
-
-
புங்குடுதீவு பெருங்காடு கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகாகும்பாபிசேகம்
-
- 0 replies
- 463 views
-
-
ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையை நிறுவ பேரழைப்பு.! இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு வலுசேர்க்கும் முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலண்டன் பல்கலைக்கழகம், SOAS இல் தமிழ்த்துறை அமைவதற்கு பல்வேறு தரப்பினரும் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதுடன் இந் நடவடிக்கைக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்த நிலையில் இதன் இன்னொரு முயற்சியாக கிளி மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொண்டு நிறுவனங்களும் ஐக்கிய இராச்சிய தமிழ்த்துறையும் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. https://vanakkamlondon.com/world/london/2021/02/103335/
-
- 0 replies
- 461 views
-
-
மாந்தையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் – விசேட தேவையுடையோர் தின நிகழ்வு November 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தினம் நேற்று புதன் கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றது. இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த நிகழ்வில் விருந்தினராக மடு வலயக்கல்வி ப…
-
- 0 replies
- 461 views
-
-
திருக் கார்திகை திருவிழா | நல்லூர் 2020 காலை
-
- 0 replies
- 458 views
-
-
மாந்தை மேற்கில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா- 8 கலைஞர்களுக்கு விருதுகள் : November 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ‘பிரதேச இலக்கிய விழா’ நேற்று (2) வெள்ளிக்கிழமை மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது …
-
- 0 replies
- 457 views
-
-
நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் – நீங்களும் இணையலாம்! November 9, 202000 SHARE0 கிளிநொச்சி பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பின் கல்வி துறையினரால் மருவிப்போகும் வாசிப்பு திறனை மீள் செயற்படுத்தவும், ஆங்காங்கே காணப்படும் புத்தகங்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினரின் இவ் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஆவணப்படுத்தப்பட தேவையான தங்களிடம் உள்ள கதைப் புத்தகங்கள், பாடவிதானப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், ஆவணப் புத்தகங்கள், வரலாற்று சான்றுப் புத்தகங்கள் மற்றும் ஆண்டு வெளியீடுகள் போன்ற சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க முன்வருமாறு க…
-
- 0 replies
- 457 views
-