நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் – நீங்களும் இணையலாம்! November 9, 202000 SHARE0 கிளிநொச்சி பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பின் கல்வி துறையினரால் மருவிப்போகும் வாசிப்பு திறனை மீள் செயற்படுத்தவும், ஆங்காங்கே காணப்படும் புத்தகங்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினரின் இவ் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஆவணப்படுத்தப்பட தேவையான தங்களிடம் உள்ள கதைப் புத்தகங்கள், பாடவிதானப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், ஆவணப் புத்தகங்கள், வரலாற்று சான்றுப் புத்தகங்கள் மற்றும் ஆண்டு வெளியீடுகள் போன்ற சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க முன்வருமாறு க…
-
- 0 replies
- 465 views
-
-
மாந்தையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் – விசேட தேவையுடையோர் தின நிகழ்வு November 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தினம் நேற்று புதன் கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றது. இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த நிகழ்வில் விருந்தினராக மடு வலயக்கல்வி ப…
-
- 0 replies
- 465 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்... வருடாந்த, தேர்த் திருவிழா இன்று! வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது. இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை ஆயிரக…
-
- 6 replies
- 463 views
-
-
தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள் இன்று ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவ…
-
- 0 replies
- 459 views
-
-
‘இன்று சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்’ Editorial / 2019 ஜூன் 12 புதன்கிழமை, மு.ப. 08:09 Comments - 0 சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. சமுதாயத்தில் சிறுவர்களின் வருங்காலத்தை கட்டியெழுப்பும் தேவை அனைவருக்கும் உண்டென்ற வகையில், அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை விடயமான கட்டாயக் கல்வியை வழங்குதல் அவசியமானதாகும். ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் தங்களது புதிய கனவுகளை அடைய வாய்ப்புகளை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். எந்தவொரு சிறுவரையும் தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக, அருகில் உள்ள பொலிஸ் நி…
-
- 0 replies
- 456 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா! பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றன. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது. அதனைத் …
-
- 0 replies
- 455 views
-
-
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று! கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது. 60 நாட்டு படகுகள் மூலமாகவும், 16 இழுவை மடி படகுகள் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும், இலங்கையிலிருந்து கடற்படையினரின் படகுகள் மூலம…
-
- 1 reply
- 455 views
-
-
"சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]] சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய் சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய் ! மாடு இரத்ததைப் பாலாய்க் கொடுக்கும் மாமனிதன் நீயோ இரத்தத்தை பாசமாக மாறாத அன்பை வியர்வை உழைப்பாக மாட்சிமை கொண்ட வாழ்வு தந்தாய்! நல்லூரில் பிறந்து அத்தியடியில் வாழ்ந்தாய் நட்பு உலகில் 'க க' என்று பெயரெடுத்தாய் நம்பிக்கை ஒன்றே உன் ஆயுதம் நன்மை ஒன்றே உன் நோக்கம்! மானம் பெரிதென எமக்கு போதித்தாய் மாதா பிதா இருவருமே கடவுளென்றாய் மாலுமியாய் எமக்கு வலி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது எனோ? சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் …
-
-
- 4 replies
- 453 views
- 1 follower
-
-
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025] "பெப்ரவரி இரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய இளையமகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "அன்னை வளர்ப்பில் அறிவோடு வளர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து உன்னை அறிந்து பிறரை உணர்ந்து இன்று கொண்டாடுகிறாய் அகவை நாளை!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும், மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பிறந்த நாள் இன்று உனக்காம் பிரகாசமாய் வாழ்வு…
-
-
- 5 replies
- 453 views
-
-
மாணவர்களை உற்சாகப்படுத்த ’நல்ல பிள்ளை’விருது; ஒரு வித்தியாச முயற்சி.! சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு வைபவம் அரியாலையிலுள்ள மன்ற வளாகத்தில் எளிமையானமுறையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சாதனைகளை ஈட்டிய யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான செல்வன் ரைற்றஸ் துகிஷ் அவர்களுக்கு, இவ்வாண்டுக்கான ’நல்ல பிள்ளை’ விருதினை, முதன்மை விருந்தினர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் தம்பதியினர் வழங்கிக் கௌரவித்தனர். ஏனைய விருந்தினர்களான, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கு.கேதீச்வரன்,சுடர் நிலா புத்தகசாலை உரிமையாளர் தி…
-
- 0 replies
- 452 views
-
-
கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ள ஆடிவேல் உற்சவத்தை பார்வையிட பொதுமக்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆட…
-
- 0 replies
- 448 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத தரப்பினருடன் கலந்துரையாடல்! 17 Views ‘ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம்’ எனும் தொனிப் பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால், அரசியல், இன, மத பாகுபாடு கடந்து மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊடக அறிக்கையில், “சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில், கருணை அடிப்படை…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 5 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு இன்று 28.11.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய சொற்பொழிவில், ‘உல்’ என்பது ஓர் பழந்தமிழ் வேர்ச்சொல். இதற்குச் ‘சுற்றுதல், சுழல்தல், உருள்தல்’ என்பன வேர்ப்பொருள்கள். ‘உல் -> உர் -> உருள் -> உருளை’, ‘உருளை -> உருடை’ என்ற சக்கரம் குறிக்கும் சொற்கள் வரலாறும் இவ்வேரிலிருந்துதான் உருவாகின. தமிழில் சக்கரத்தினைக் குறித்த சொல் பிறகு அச் சக்கரத்தினை உடைய வண்டியினையும் குறித்துள்ளது. ‘உருடை’ என்ற தமிழ்ச்சொல், தெலுங்கில் ‘ரோட’ என்று திரிந்துள்ளது. இலத்தீனில், ‘r…
-
- 0 replies
- 443 views
-
-
கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் வழங்கும் ரொறன்ரோ நகரத் தலைவர் வேட்பாளரிடையேயான விவாதம் எதிர்வரும் யூலை 15 ஆம் நாள் இசுகாபரோவில் இடம்பெறவுள்ளது. கனடிய வரலாற்றில் முதன் முறையாகக் குமுக அமைப்பொன்று இத்தகைய நிகழ்வை நடத்துவது இதுவே முதற் தடவை. 2.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, கனடாவின் மிகப்பெரும் நகரான ரொறன்ரோவிலேயே அதிக எண்ணிக்கையான தமிழர் வாழ்கின்றனர். முன்னணிப் போட்டியாளர் ஐவரும் இவ்விவாதத்திற் கலந்துகொள்ள இருக்கின்றனர். தற்போதைய நகரத் தலைவர் திரு றொப் போட், மறைந்த தலைவர் யக் லேடன் அவர்களின் இணையர் திருமதி ஒலிவியா சௌ, முன்னாள் ஒன்ராறியோ பிசி கட்சியின் தலைவர் திரு யோன் ரோறி, தற்போதைய நகரசபை உறுப்பினரும் ரி ரிசியின் தலைவருமான கரன் இசுரின்சு மற்றும் முன்னாள் நக…
-
- 0 replies
- 443 views
-
-
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் தங்கரத திருவிழா 24.08.2020
-
- 0 replies
- 441 views
-
-
வவுனியாவிலிருந்து நல்லூருக்கு வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை வவுனியாவிலிருந்து வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேல்தாங்கிய நடைபாதை யாத்திரை இன்று வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியது. வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் 9ஆவது தடவையாக இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை நோக்கிய வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை ஆரம்பமாகியது. வவுனியாவிலிருந்து பிரதான ஏ9 வீதியால் செல்லும் குறித்த நடைபாதை யாத்திரை வீதியிலுள்ள ஆலயங்களில் தரித்து நின்று செல்லவுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்தினத்தன்று நல்லூர் திருத்தலத்தை சென்றடையவுள்ளது. பிரதான வீதியிலுள்ள ஆலயத்தின் நிர்வாக சபையினர் வேல்தாங்கிய பாதையாத்திரையில் க…
-
- 0 replies
- 439 views
-
-
யேர்மனி வாழ் ஈழத் தமிழ் அகதிகளுக்கான நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் – ஈழத்தமிழர் அமைப்புகள் 43 Views கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையிலான எமது ஈழத் தமிழ் உறவுகள் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்காக அதிரடியாக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் Duldung விசாவை மட்டுமே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றோம். இவ்விடயம் சார்ந்து யேர்மனியில் உள்ள மனிதவுரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். நாளைய தினம் (28) யேர்மனியில் உள்ள அகதிகளுக்கான முக்கிய அமைப்புடன் கைதுசெய்யப்பட்டு உள்ள உறவுகளுக்கான அர…
-
- 0 replies
- 439 views
-
-
பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் கலந்து சிறப்பிக்கும் யாழ். இசை நிகழ்ச்சி - காணொளி. (09.10.2016)
-
- 0 replies
- 439 views
-
-
Toronto Tamil International Film Festival 2023 நான்காவது Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வழமைக்கு மாறாக இம்முறை சிறப்புற நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 14 நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் , குறுந்திரைப்படங்கள் தெரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 60 படங்கள் காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எமது நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு Markham Civic centre 1 01 Town centre Blvd Markham இல் September 8, 2023 அன்று 7 pm to 11 pm இடம்பெறும் அதைத்தொடர்ந்து September 9 & 10 ஆம் திகதிகளில் York Cinemas திரை அரங்கில் மதியம் 12 pm முதல் இரவு 11 pm வரை தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.…
-
- 1 reply
- 439 views
-
-
காரைதீவில் எளிமையாக நடந்தேறிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74வது சிரார்த்ததின நிகழ்வு! (வி.ரி.சகாதேவராஜா)உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 74 வது சிரார்த்ததின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவு மண்ணில் எளிமையாக நேற்று (19) நடந்தேறியது. காரைதீவு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் சுகாதாரமுறைப்படி மட்டுப்படுத்தப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு பணிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக இந்துக்களின் கொடியான நந்திக்கொடியை தலைவர் வி.ரி.சகாதேவராஜா ஏற்றியதும் புஸ்பாஞ்சலி செலுத்தி கீதம் இசைக்கப்பட்டது. மணிமண்டப வளாகத்திலுள்ள சுவாமியின் திருவுர…
-
- 1 reply
- 438 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 78 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான பத்தாவது சொற்பொழிவு எதிர்வரும் 24.04.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பத்தாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், “பந்தம்” – கட்டுதல், பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினை யும் விளக்குகிறார். தமிழ்நாடு நேரம் : மாலை 17:30 மணி (IST) சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு க…
-
- 0 replies
- 438 views
-
-
கோண்டாவில் குமரகோட்டம் பேச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிசேகம் 15.03.2021
-
- 0 replies
- 438 views
-
-
"கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... " "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருப்பை தனதாக்கி மற்றவனை தாழ்த்தி இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்லவே !" "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமற்ற காட்டு மிராண்டிகள் அவர்களல்ல இந்நாட்டின் பூர்வீக குடிகளில் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ உரிமை உடையவர்களே ! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற கறுப்புமனமே …
-
- 1 reply
- 431 views
-
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி.! எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமானது உலகளாவிய ரீதியில் பலராலும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. விசேடமாக தமிழ் மக்களுக்கு இந்நாள் துயரத்திலும் துயரமான நாளாகவே பார்க்கப்படுகின்றது. இந்நாளை அனுஸ்டிக்கும் முகமாகவும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் அதிகவனம் செலுத்தி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அன்றைய தினம் காலை 10.00 மணியளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவிருந்து யாழ் கச்சேரியடி வரையிலும், கிழக்கு ம…
-
- 0 replies
- 425 views
-
-
யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா! யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், பாடல் மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்…
-
- 0 replies
- 424 views
-