நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
636 topics in this forum
-
ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா! December 9, 2024 பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த. கலைச்செல்வனிடம் கற்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியற்றுறை சிரேஷ்ட பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய த. கல…
-
- 0 replies
- 304 views
-
-
27/11/2024: "திருமண நாளில் ஒரு நினைவுகூரல்" [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம்] "எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து எடுப்பாய் குடும்பத்தில் இரண்டறக் கலந்து எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!" "மனதைக் கவர்ந்து அன்புமழையில் நனைத்து மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து மகரிகை தொங்க வலதுகால் வைத்த மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!" "வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து வயிறு நிறைய உபசாரம் செய்து வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!" "கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி…
-
-
- 3 replies
- 300 views
- 1 follower
-
-
"அன்பால் ஆள்வோம்” [27/11/2024] "அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! இன்பம் துன்பம் சமமாக மதித்து கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோமே!" "உரிமை உள்ள மனிதனாக பெருமை கொள்ளும் இனமாக வறுமை அற்ற குடியாக சிறுமை போக்கி நகருவோமே!" "ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும் ஆக்கம் கொண்ட சமூகமும் ஈவிரக்கம் காட்டும் அரசும் தரமான உலகைத் தருமே!" "பாசம் உலாவும் கண்களாய் மோசம் செய்யா இதயமாய் எங்களை நாங்கள் ஆக்கினால் தேசம் ஓங்கிச் சிறக்குமே!" "எங்களுக்காக உயிர்க்கொடுத்த தியாகிகளையும் தன்னலமற்று தாய்நாட்டுக்காக வாழ்ந்தவர்களையும் மனத்திலேற்றி தீபமேற்றி வணங்குவோமே ஒருகனமாவது அவர்களைச் சிந்தி…
-
- 1 reply
- 531 views
-
-
"கார்த்திகை தீபம்" இன்று கார்த்திகை தீபம், 2023. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பு…
-
- 0 replies
- 145 views
-
-
"என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024] "நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் நவீன உலகில் புத்தன் அழுகிறான் நலிந்த மக்கள் விடிவை நோக்கினம் நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!" "வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" "அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் [அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] அன்பு கொண்ட உலகம் கண்டேன் அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!" "அயராது உழைக்கும் தந்தை உடன் அனைவரையும் அணைக்கும் தாய் உடன் அண்ணன் அக்கா துணை உடன் அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!" …
-
-
- 11 replies
- 872 views
- 1 follower
-
-
வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் இனச்சுத்திகரிப்பிருந்து மீளெழுவோம் வடக்கு முஸ்லிம் மக்கள் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. நிகழ்வின் பிரதான விருந்தினர்களாகவும், பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். …
-
-
- 3 replies
- 340 views
-
-
"தலைத் தீபாவளி" [இன்று மலரும் தீபாவளியை முன்னிட்டு] எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை எனக்குத் நன்றாக முதலே தெரியும். அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்குத் தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். கு…
-
- 0 replies
- 230 views
-
-
"தாத்தாவின் ஆசீர்வாதம்" [செவ்வாய், 29 அக்டோபர் 2024] / A Granddad’s Blessing [Tuesday, 29 th October, 2024] "இன்று மலர்ந்த மழலைச் செல்வமே இன்பம் பூத்த இனிய புன்னகையே இசை அமுதமாய் அழுகை ஒலிக்க இதயம் மகிழ்ந்த வாழ்த்து உனக்கு!" "ஆறாவது பேரன் அழகிய குழந்தையே ஆனந்தம் கொடுக்கும் குட்டிப் பயலே ஆடிப்பாடி அண்ணன் இருவரும் கொண்டாட ஆசை வைத்து உன்னை ஆசீர்வதிக்கிறேன்!" "மூத்த அண்ணா புத்திசாலி திரேன் மூதறிவு கொண்ட பலமான அண்ணா மூங்கில்தோள் கொண்ட கம்பீர நிலன் மூதேவியை துரத்தி தம்பியை வாழவைப்பான்!" "அம்மா உன்னால் இன்று பிரகாசிக்கிறார் அனைவரும் உன்னில் பாசம் காட்டினம் அநீதி அழிக்க ஆண்டவன் தோண்றினானாம் அன்பு கொட்டிட பேரன் தோன்றினான்!" …
-
- 0 replies
- 460 views
-
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024] [அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நிலனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ] "நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் நான் யாரென்று உணரும் நாளிது! நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" "இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" "நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!" "அச்சம் தவிர்த்து துணிந…
-
-
- 16 replies
- 992 views
- 2 followers
-
-
"பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் …
-
- 1 reply
- 193 views
-
-
"ஆசிரியர்" [உலக ஆசிரியர் தினம் 2024 அக்டோபர் 5 சனிக்கிழமை / World Teachers' Day 2024 Saturday 5 October] "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனம…
-
- 0 replies
- 151 views
-
-
எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் நீயம்மா -என் கண்கண்ட தெய்வமும் தாயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே.... நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே.... வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என் வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா.... தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான…
-
- 1 reply
- 517 views
-
-
உண்மைக் கதை: "நிழலாக ஆடும் நினைவுகள்" [எங்கள் சிறிய அண்ணாவின் மகளின் பிறந்தநாள் நினைவு இன்று, 03 அக்டோபர்] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே…
-
-
- 2 replies
- 170 views
- 1 follower
-
-
"சர்வதேச சிறுவர் தினம் (ஆக்டோபர் 1)" "கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கருப்பு வெள்ளை பாரா மனம் கயமை பகைமை அறியா நெஞ்சம் கற்றுத் தேறி அறிஞன் ஆகவேண்டும்! "ஆசை வேண்டும் ஒழுக்கம் வேண்டும் ஆடிப் பாடி மகிழவும் வேண்டும் ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும் ஆலமர நிழல்போல் வாழ வேண்டும்!" "ஆச்சாரம் அறிந்து ஒழுக வேண்டும் ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் ஆடை நேர்த்தியாக உடுக்க வேண்டும் ஆதரித்து அனுசரித்து உதவ வேண்டும்!" "ஆதிக்க வெறி தவிர்க்க வேண்டும் ஆயுதம் தவிர்த்து அன்பால் இணையவேண்டும் ஆசி பெற்று மனிதனாக வளரவேண்டும் ஆக்டோபர் ஒன்று சிறுவர்தின வாழ்த்துக்கள்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 958 views
-
-
இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம். உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில் இதே திகதியில் (11/ 09/2001) காலை 8:46 மணியளவில் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்கள் மீது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று மோதியது. 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் வொஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு மோதியது. எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இவ் விபத்தினால் அமெரிக்காவே அதிர்ந்துபோய் இருந்த நிலையில் தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில்அதாவது காலை 9:03க்கு…
-
- 1 reply
- 404 views
-
-
கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது, செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில், நடைபெற்ற நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398568
-
- 0 replies
- 205 views
-
-
ஈழத்தின் புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று. ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம் நாளான இன்று காலை 6.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியதை தொடர்ந்து பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா கோக்ஷம் முழங்க தேர் திருவிழாவில் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார் தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு நல்லுார் கந்தனின் அருளாசியைப்பெற்றிருந்தனர். இதேவேளை, ஆ…
-
-
- 2 replies
- 617 views
-
-
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் ! தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சேனாதிராசா, தமிழ்மணி அகளங்கன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது. htt…
-
- 0 replies
- 300 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். இதேவேளை, சூரிய திருவிழாவான இன்றையதினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் திருவிழாவின் நேரடியான காட்…
-
- 1 reply
- 402 views
-
-
பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு! வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியனின் 221 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மற்றும் பண்டார வன்னியன் விழா குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலத்துக்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://at…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம். இதிகாச சிறப்பு பெற்ற கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இன்று அதன் இரத உற்சவம் சிறப்பாக மக்கள் அலைக்கு மத்தியில், அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத…
-
- 1 reply
- 355 views
-
-
"கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... " "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருப்பை தனதாக்கி மற்றவனை தாழ்த்தி இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்லவே !" "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமற்ற காட்டு மிராண்டிகள் அவர்களல்ல இந்நாட்டின் பூர்வீக குடிகளில் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ உரிமை உடையவர்களே ! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற கறுப்புமனமே …
-
- 1 reply
- 422 views
-
-
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 " இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின்…
-
-
- 1 reply
- 369 views
-
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் ம…
-
-
- 12 replies
- 669 views
- 1 follower
-
-
ஆரம்பமானது ஆடிப்பிறப்பு! ஜூலை மாதம் 17ஆம் திகதியான இன்று தமிழர்கள் விமர்சையாக ஆடிப் பிறப்பினைக் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்த புலவர். அவர் ஆடிப்பிறப்பின் சிறப்பு மற்றும் ஆடிக்கூழ் காய்ச்சும் முறை தொடர்பாக எழுதிய ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே… கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. எமது முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். …
-
- 0 replies
- 120 views
-