கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி செப்ரெம்பர் 17, 2012 மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி , கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும் சிலசமயம் அவர்களை நம்புவேன். “அவள் தனது தம்ஷ்த்ராவால்(கோரைப்பற்களால்) உன்னைக் கிழித்துவிடுவாள்.பிறகு உன் இரத்தத்தை ஒரே மூச்சில் குடித்துவிடுவாள். அப்புறம் உன் எலும்புகள்? அவற்ற…
-
- 0 replies
- 1.8k views
-
-
மறுபிறவி! எனக்கும், வாணிக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின் நிகழ்ந்த சந்திப்புகளில், நான் அதை அவ்வளவாக கவனித்ததில்லை. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக, ஏற்காடு போயிருந்த போது தான், ஓட்டல் அறையின், எல்.ஈ.டி., பல்ப் வெளிச்சத்தில், அவள் கழுத்தில் மின்னிய அந்த மெல்லிய தங்கச் சங்கிலி, என் கண்ணில் பட்டது. நான், கிரிதர்; வயது, 27. சென்னையில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனத்தில் வேலை. பெற்றோருக்கு ஒரே மகன். வாணியும், ஒரு ஐ.டி., நிறுவனத்தில், ஹெச்.ஆர்., அலுவலராக பணிபுரிகிறாள்; வீட்டிற்கு ஒரே பெண். என் எதிரே புன்னகையுடன் நைட்டியில் வந்தமர்ந்த அவள், என் வாலிப கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள். அருகே இழுத்து அணைத்த போது தான், அந்த தங்கச் சங்கிலியை மிக அருகில் பார்த்தேன்; நேர்த்…
-
- 0 replies
- 1.3k views
-
-
TN 00 E - 1111 குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! - ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி யில் அவனை இறக்கி விட்டுவிட்டு, இவன் தன் பள்ளிக்குப் புறப்பட்டுப் போவான். இன்றுவரை மகனது நம்பிக்கையில் இவனும் ஒரு மாணவன்தான். தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ’ செக்ஷன் படிக்கிறான். அதுவும் பல வருடங்கள் அதே தேர்ட் ஸ்டாண்டர்டில் ஃபெயிலாகி ஃபெயிலாகி 'கே’ செக்ஷனில் இருந்து இப்போதுதான் 'எ’ செக்ஷன் வந்திருக்கிறான். பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர் களது உரையாடல் இப்படித் தொடங்கும். 'அப்பா... ஹோம்வொர்க் பண்ணிட் டீங்களா?’ 'அய்யோ மறந்திட்டேன் ராஜா!’ 'போச்சு. நல்லா மாட்டிக்…
-
- 0 replies
- 2.8k views
-
-
மனிதம் ரிஷபன் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான். 'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில். "வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன். மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான். "கேசட் கொண்டு வந்தியா" குரல் என்னையும் மீறி பரபரத்தது. வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்.. "பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்…
-
- 0 replies
- 927 views
-
-
சாத்தானின் கால்கள். - சாதனா தேவனின் முழுப் பெயர் தேவகாந்தன். என்னைக் காட்டிலும் பதினான்கு வருடங்கள் இளையவனான அவனை நான் ஏசு என்ற பெயரிலேயே அழைப்பதுண்டு. நானொரு எழுத்தாளன் என்பதாலும் என்னிடமிருக்கும் புத்தகங்களை இரவல் வாங்கிச் சென்று படிப்பதற்காகவும் வாரத்தில் மூன்று நாட்களாவது என்னைச் சந்திக்க அவன் வருவதுண்டு. ஏசு எப்போதெல்லாம் என் வீட்டுக்கு வருகிறானோ அப்போதெல்லாம் அவன் கையில் ஒரு திராட்சை ரசப் போத்தலிருக்கும். நாமிருவரும் அதை அருந்தியபடியே மணிக்கணக்காக இலக்கியம் பேசுவோம். நான் மௌனமாக ஏசுவையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய உதடுகள் வழக்கத்துக்கு மாறாக இறுகியிருந்தன. உன்னிப்பாக அவதானித்தபோது அவன் உதடுகள் எதையோ உச்சரித்துக் கொண்டிருப்பதையும் …
-
- 0 replies
- 523 views
-
-
அதிதி நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: ஸ்யாம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது. காற்றின் போக்குக்கு ஏற்ப, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டியின் தாள்கள் அசைந்துகொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந் தவர்களை போர்வைக்குள் இருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து அவரின்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் ) சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அப்பா அம்மா மகள் - நா.கோகிலன் வேலை அதிகமாக இருந்த போது காயத்ரியின் செல்ஃபோனிற்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்தது. மாதத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகம். இந்த நேரத்தில் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தால் மேனேஜர் திட்டுவார். ஓயாமல் அழைப்பு வரவே எடுத்து “ஹலோ!” என்றாள். “அக்கா! எவ்ளோ நேரம் ட்ரை பண்றது?” மறுமுனையில் அழுகை சத்தம் கேட்டது. “அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாங்க...” பணிப்பெண் திவ்யாவின் குரல். அம்மா இறந்து விட்டாள் என்பது நெஞ்சில் அறைந்தது. அதன்பிறகு எப்படி இயங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவளின் முகத்தில் எழுந்த திடீர் அதிர்ச்சியைப் பார்த்தே ‘துயரமான செய்தி’ என்பதை வங்கியிலிருந்த அனைவரும் அறிந்தார்கள். கால் டாக்ஸி வரவழைத்து காயத்ரியை…
-
- 0 replies
- 25.9k views
-
-
கவனம் வங்கியில் ரொம்பவே கூட்டம்... நெரிசல் குறையட்டும் என்று ஓரமாக நின்ற மைதிலியை நெருங்கினார் ஒரு டிப் டாப் ஆசாமி. ‘‘என் மூக்குக் கண்ணாடியை கார்ல விட்டுட்டு வந்துட்டேன்... கொஞ்சம் இந்த சலானை பூர்த்தி செய்து தர முடியுமா?’’ என பணிவாகக் கேட்டார். ‘‘சாரி சார்! நான் பேங்க்ல பணம் கட்ட வந்திருக்கேன். இப்ப உங்களுக்காக செலான் எழுதிக்கிட்டிருந்தா என் கவனம் சிதறும். அதைப் பயன்படுத்தி யாராவது பணத்தை அடிச்சிடலாம். மன்னிச்சிடுங்க... என்னால முடியாது!’’ - உறுதியான குரலில் மறுத்தாள். மறுநாள்... இன்டர்வியூ ஹால்... தன்னுடைய முறை வந்தவுடன் உள்ளே நுழைந்த மைதிலி, வங்கியில் சந்தித்த அதே டிப் டாப் ஆசாமி இன்டர்வியூ குழுவில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். நிச்சயம் தனக்கு வேலை …
-
- 0 replies
- 1.6k views
-
-
எழுதியவர் உமா வரதராஜன் இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பத்தில் (பிரேமதாசா காலம்) நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வந்த கதை. இக்கதை வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது. மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நட…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனது முகப்பு புத்தகத்தினூடாக பேராசிரியர் காலமாகிய செய்தி அறிந்து நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத எனது பள்ளி தோழனுக்கு தொலைபேசி செய்தேன். தொலைபேசி அழைப்பு அமைந்த பொழுது எனது குரலை அறிந்து கொண்ட அவனது குரலும் வறண்டு கர கரத்தது . அவன் எனது பெயரை விளித்து நீ அறிந்தியோ தெரியாது .என்று தொடங்க. விசயம் அறிந்து தான் எடுத்தேன் என்று சொல்வதுடன் சம்பாசணை தொடங்கியது.சம்பாசணையில் அவரை பற்றிய நினைவுகளும் விவரங்களும் வேறு விடயங்களும் தொடர்ந்தது.அவன் வேறு யாருமல்ல சிவத்தம்பி அவர்களின் நெருங்கிய உறவினன்.அவன் ஹாட்லி கல்லூரியில் உயர்தர வகுப்பில் என்னோடு ஒன்றாக படித்தவன்.உயர்தர, வகுப்பு படிக்கும் பொழுது தான் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு 16 அல்லது 17 வயதுகள் தான் …
-
- 0 replies
- 755 views
-
-
இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா By சஞ்சீவி ராஜா - பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத் தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும் வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர் ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கைய…
-
- 0 replies
- 886 views
-
-
கடவுளின் மரணம் - செல்வன் | "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது. ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர். "ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர். அவரது உடல…
-
- 0 replies
- 735 views
-
-
உங்களுக்கும் அந்த நாயைத் தெரிந்திருக்கும். உங்கள் தெருக்களிலும் அது உலவி இருக்கும். மிகக்கரிய நிறத்தில் உடல் இளைத்து என்பு தெரிய அலையும். அதன் கண்கள் மட்டும் வேட்டையாடும் ஓநாயினுடைய தீர்க்கமான பார்வையைப் பெற்றிருக்கும். எனக்குத் தெரிந்து அந்த நாயின் முழுநேர வேலை உலாத்துதல்தான். கடந்த 2 நாளில் என்னையும் என் தோழர்களையும் போல் அதுவும் உலவுவதை நான் கண்டு கொண்டேன். ஒருவேளை அந்த நாய் எங்களை பின் தொடர்ந்திருக்கவும் கூடும். பழைய தமிழ் சினிமாவில் வரும் இச்சாதாரிநாகம் போல, எனக்குப் புரியவில்லை. அந்த ஓநாயின் பார்வை கொண்ட கருநாயின் 5 பெரும் தென்படுதல்களை நான் உங்களுக்கு சொல்லப்போறன். தென்படுதல் ஒன்று: நகைக்கடைகாரருக்கு பிறகு. “வணக்கம் சேர். நாங்கள் யாழின் கரங்கள் அமைப்பின் மாணவர்…
-
- 0 replies
- 883 views
-
-
கடவுள் எழுதிய கவிதை! கடவுள் எழுதிய கவிதை! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அ வள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி... தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப் பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்துவிட்டது... அவ…
-
- 0 replies
- 3.1k views
-
-
வருகை கே.ஜே.அசோக்குமார் புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிக கவனமாக கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்த கவலையும் இன்றி தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்து. தான் குறட்டை விட்டிருந்தால் அது அறிந்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகமும் பயமாகவும் …
-
- 0 replies
- 730 views
-
-
திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும் கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுக…
-
- 0 replies
- 818 views
-
-
பாம்பு - சிறுகதை சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம் வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’ அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம். உ…
-
- 0 replies
- 2.3k views
-
-
பிரபஞ்சனின் சிக்கின் பிரியாணியும் சிறிதேவி சினிமாவும் என்ற கதையை ஒரு எழுத்தாளனின் பார்வையினூடாக கேட்கலாம் -தியா -
-
- 0 replies
- 700 views
-
-
----------------------------------------------- -----------------------------------------------
-
- 0 replies
- 1.4k views
-
-
மைக்கேல் மைக்கேல் வா ழ்க்கையில் சந்திக்கும் அனைவரது முகமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கமான நட்போ, உறவோ இல்லாத நிலையிலும் சிலரது முகம் எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படி மறக்கமுடியாத முகம் மைக்கேலின் முகம். ‘‘பாக்க றவன் எல்லோருமே கொஞ்ச தொலவு போயிட்டுத் திரும்பிப் பாக்குறான். இது இன்னா, மனுஷனா கொரங்கா... அதுக்குத்தான பாக்குறாங்க..?’’ என்று பேசியதுதான் அவனுடைய முத்திரை. டக்கென்று என் மனசில் அவனுக்…
-
- 0 replies
- 1k views
-
-
அரளிக்கொட்டை நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள். …
-
- 0 replies
- 490 views
-
-
ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக…
-
- 0 replies
- 652 views
-
-
ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை. வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஆசி பெண் குழந்தையுடன் அம்மன் கோயிலுக்கு சந்தோஷமாக வந்த கணவன் மனைவியிடம் ``அடுத்தமுறை ஆண் குழந்தையுடன் வரணும்’’ என ஆசி வழங்கினார் கோயில் பூசாரி! - கே.மணிகண்டன் ஓய்வு “நாளைக்கு சண்டே. கொஞ்சம்கூட ரெஸ்ட் கிடைக்காது’’ என்றார் சலூன் கடைக்காரர்! - பிரகாஷ் ஷர்மா நாடகம் ‘தடியடி’ நடத்திவிட்டுக் காவல்துறையினர் நான்கு பேர் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகினர்! - இரா.இரவிக்குமார் ஸ்டேட்டஸ் நண்பனின் பெருமைகளைக் கவிதைகளாக எழுதி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினான், அவனின் சாவுக்குப்போக நேரமில்லாத வரதன்! - பெ.பாண்டியன் சண்டை “வாய்ல வைக்க முடியல... என்னடி சமைச்சிருக்கே…
-
- 0 replies
- 1.6k views
-