Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    வருகை கே.ஜே.அசோக்குமார் புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக‌ இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிக கவனமாக கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்த கவலையும் இன்றி தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்து. தான் குறட்டை விட்டிருந்தால் அது அறிந்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகமும் பயமாகவும் …

  2. திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும் கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுக…

  3. பாம்பு - சிறுகதை சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம் வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’ அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம். உ…

  4. பிரபஞ்சனின் சிக்கின் பிரியாணியும் சிறிதேவி சினிமாவும் என்ற கதையை ஒரு எழுத்தாளனின் பார்வையினூடாக கேட்கலாம் -தியா -

    • 0 replies
    • 711 views
  5. ----------------------------------------------- -----------------------------------------------

    • 0 replies
    • 1.4k views
  6. Started by நவீனன்,

    மைக்கேல் மைக்கேல் வா ழ்க்கையில் சந்திக்கும் அனைவரது முகமும் நமக்கு நினைவில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கமான நட்போ, உறவோ இல்லாத நிலையிலும் சிலரது முகம் எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். எனக்கு அப்படி மறக்கமுடியாத முகம் மைக்கேலின் முகம். ‘‘பாக்க றவன் எல்லோருமே கொஞ்ச தொலவு போயிட்டுத் திரும்பிப் பாக்குறான். இது இன்னா, மனுஷனா கொரங்கா... அதுக்குத்தான பாக்குறாங்க..?’’ என்று பேசியதுதான் அவனுடைய முத்திரை. டக்கென்று என் மனசில் அவனுக்…

  7. அரளிக்கொட்டை நீட் தேர்வு ரிசல்ட் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். கமலாவின் நெஞ்சு "பட பட' வென்று அடித்துக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வேண்டிக் கொண்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தக் கிராமத்தில் நாம் தான் முதல் டாக்டர் என்ற கற்பனை அவளை வானத்தில் பறக்க விட்டுக் கொண்டிருந்தது. டாக்டர் ஆகி இதே கிராமத்தில் இலவச வைத்தியம் பண்ணினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் வைத்திய வசதி இல்லாததால்தான் தன் அப்பா திடீர் நெஞ்சு வலியில் செத்துப் போனதையும், அது போல் இங்குள்ள யாரும் செத்துப் போகாமல் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பார்த்தாள். …

  8. ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக…

  9. Started by வீணா,

    ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை. வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்…

  10. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஆசி பெண் குழந்தையுடன் அம்மன் கோயிலுக்கு சந்தோஷமாக வந்த கணவன் மனைவியிடம் ``அடுத்தமுறை ஆண் குழந்தையுடன் வரணும்’’ என ஆசி வழங்கினார் கோயில் பூசாரி! - கே.மணிகண்டன் ஓய்வு “நாளைக்கு சண்டே. கொஞ்சம்கூட ரெஸ்ட் கிடைக்காது’’ என்றார் சலூன் கடைக்காரர்! - பிரகாஷ் ஷர்மா நாடகம் ‘தடியடி’ நடத்திவிட்டுக் காவல்துறையினர் நான்கு பேர் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகினர்! - இரா.இரவிக்குமார் ஸ்டேட்டஸ் நண்பனின் பெருமைகளைக் கவிதைகளாக எழுதி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினான், அவனின் சாவுக்குப்போக நேரமில்லாத வரதன்! - பெ.பாண்டியன் சண்டை “வாய்ல வைக்க முடியல... என்னடி சமைச்சிருக்கே…

  11. சயனைடு - சிறுகதை ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம் சயனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை. மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்க…

  12. 1. கடல் கொண்ட கோவில் நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும். நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட…

  13. உயர்ந்த உள்ளம் கல்யாணம் செய்து கொடுத்திருந்த மகள் வாணியை, ஆடிக்கு அழைத்து வந்திருந்தாள், ஜெயா. மகளை, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததில், ஜெயாவுக்கு பெரிய நிம்மதி. சம்பந்தி, திருச்சியில் இருக்க, இளைய மகன், பெங்களூரில், சாப்ட்வேர் இன்ஜினியராகவும், பெரியவன், சென்னையில், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய, நல்ல வசதியான குடும்பம். அந்த வீட்டில், தன் மகள் வாணியை, இரண்டாவது மருமகளாக, மணமுடித்துக் கொடுத்திருந்தாள் ஜெயா. ''வாணி... உன் மாமியார் நல்ல குணம்; 'ஆடிக்கு அழைக்கணும்; திருச்சிக்கு வந்து சீர் வைக்கிறேன்'னு சொன்னதுக்கு, 'தேவையில்லை சம்பந்தி... எதுக்கு அலையுறீங்க. நீங்க, பெங்களூரு போய், வாணிய கூட்டிட்டு வாங்க; அந்த சம்…

  14. Started by ஏராளன்,

    அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். “தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து…

  15. முதன்முறை எப்போது.. ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது. அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலைக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்துக் கொண்டது என் சிற்றறிவு. மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்து போனதற்…

  16. மீச - சிறுகதை தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் வானம் இன்னும் அடைசலாகத்தான் இருந்தது. சில நேரம் மனதின் நிறங்களுக்குத் தக்க, சூழலின் நிறங்கள் மாறும் என இவள் திண்ணமாக எண்ணினாள். புதிதாக அரைத்த காபித்தூள் வாங்கி வந்து மணத்துடன் கொதிக்க வைக்கும்போது ஒரு ப்ரவுன் கலர் பூனை ஜன்னலில் கடக்கும். அது ஏன் ஒரு வெள்ளைப் பூனையாக இல்லாமல், காபி நிறத்திலான பூனையாக இருக்க வேண்டும். அப்படியானால் அந்த காபி நிறப் பூனைதான் கடவுளா? ஒருமுறை இதை செபாஸ்டியனிடம் சொன்ன போது அவன், அவள் நெற்றி முடியை ஒதுக்கியவாறு ``கர்த்தாவே... உனக்கு மட்டும் எப்படித் தோன்றுகிறது இப்படி. கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைச்சிருக்கார் கர்த்தர் ஒன்ன படைக்கிறப்ப'' என்றான். அவன் நக்கல் அவளுக்கு விருப்பமாயில்லை. ஒ…

  17. அடையாளம் - சிறுகதை சிறுகதை: சிவபாலன், ஓவியங்கள்: செந்தில் `Let me explain’ அந்தக் குறுஞ்செய்தி பாரதியின் செல்போனில் வந்து விழும்போது மணி ஆறு இருக்கலாம். அந்த அரங்கத்தில் அவ்வளவு ஒன்றும் பெரிதான கூட்டம் இல்லை. அதை அந்த இளம் எழுத்தாளன் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ரசித்து ரசித்து தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தான். பாரதி எந்த சுவாரசியமும் அற்று அமர்ந்திருந்தான். அந்த அரங்கில் இருபதிலிருந்து முப்பது பேர் வரை இருக்கலாம்; யாருக்கும் அந்த நிகழ்வில் எந்த ஓர் ஈர்ப்பும் இருப்பதாய் தெரியவில்லை. எல்லோரும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் பேரில் வந்திருப்பதாய் பட்டது. பாரதி அரங்கிலிருந்து மெதுவாய் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே நடந்தான். அந்த அரங்கத்தின் வெளியே வந்து ஒரு …

  18. Started by கிருபன்,

    பவித்ரா அ.முத்துலிங்கம் நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் பெண்ணுக்கு தம்பதியரைப் பார்த்ததும் ஏதோ விசித்திரமாகப்பட்டது. ஆனால் அது என்னவென்று அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரைப் பார்க்க பலதரப்பட்ட மனிதர்கள் வந்துபோவதை அவள் அவதானித்திருக்கிறாள். இதுவும் அதுபோல என்று நினைத்துப் பேசாமலிருந்தாள். அவர்கள் முறை வந்தபோது மருத்துவர், சூடு வெளியே போகாமல் இருக்க கதவை கீறலாகத் திறந்து, ’அடுத்தது’ என்றார். வரவேற்பாளினி தம்பதியரை உள்ளே…

  19. மலை சாயும்போது! மாலை நேரம் - ஏரிக்கரை சாலை வழியாக, நானும், சந்திரனும், நிதானமாக நடந்து கொண்டிருந்தோம். வீட்டு மனை ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக, சென்னை வந்திருந்தேன்; வந்த வேலை, நண்பர் சந்திரன் உதவியுடன் முடிந்தது. மறுநாள் காலையில் தான் ஊருக்கு, பஸ். அதனால், சந்திரன் வீட்டில் இரவு தங்குவது என்று முடிவாகி, பையை அவர்கள் வீட்டில் வைத்து, டிபன் சாப்பிட்டு, வெளியில் காலாற நடந்து கொண்டிருந்தோம். பல விஷயங்கள் பேசிக்கொண்டு நடந்த போது, சட்டென, கந்தசாமி நினைவு வர, ''கந்தசாமிய பாக்கிறதுண்டா... இந்த பக்கத்தில்தானே அவர் இருந்தார்,'' என்று சந்திரனிடம் கேட்டேன். '…

  20. விடுபடுதல் - மஹாத்மன் மனதை ஒருநிலைக்குள் கொண்டு வருவதற்குள் தாமதம் ஏற்பட்டுவிட்டது. கைவிரல்களின் பதற்றம் போகவில்லை. நேரம் போகப்போக பதற்றம் இன்னும் அதிகரித்தது. கடந்த இரு தினங்களாய் கண்காணித்து வந்ததில் அப்படியொன்றும் கஷ்டப்படத் தேவையில்லை என்று தெரிந்தும் செயல்படவேண்டிய நேரத்தில் பதற்றம் வந்துதொலைக்கிறது. மென்தாள் ஒன்றை உருவி நெற்றி வியர்வையைத் துடைத்து வீசினேன். பார்வையைப் பரவலாகப் படரவிட்டேன். சாலையில் வாகனங்களும் பேருந்துகளும் விரைந்துகொண்டிருந்தன. மனித உருவங்களின் நடமாட்டம் குறைவாகத்தான் இருந்தது. கீழ்த்தளக் கடைகளின் இழுவைக் கதவுகள் திறக்கப்படும் ஒலி. எனக்கு நேரெதிரில் சாலையின் அந்தப்பக்கத்தில் பணமீட்பு இயந்திர அறைக்குள் செல்லும் இருவர். முன்பு கிள்ளான் பட்டண…

  21. ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் தாய்+அம்மா தாயம்மா செத்துட்டா. ஊரே திர…

  22. வேட்டை - வா.மு.கோமு உச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது. ‘‘ஏப்ரல்லயே வெய்யொ இந்தப் போடு போட்டா, இன்னமும் மே மாசமுன்னு ஒண்ணு முழுசாக் கிடக்கே டைவரே! ஒடம்புல இருக்குற எல்லா மசுருகளும் கருகிப்போயிரும். கருகல் வாசம் நம்ம மூக்குக்கே அடிக்கும் பாரு, வடைச் சட்டி தீயுற வாசமாட்டொ” டைகரிடம் சொல்ல…

  23. அத்தை - சிறுகதை சிறுகதை: அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு செப்டம்பர் 1, 1939-ம் ஆண்டு, நாங்கள் சின்னக் கிராமம் போய்ச் சேர்ந்தோம். எனக்கு வயது எட்டு. அப்போது தான், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியிருந்தது. 5-ம் தேதி, எங்கள் அத்தையின் கணவர் சுப்பைய்யருக்கு, சஷ்டியப்தபூர்த்தி. அத்தை, என் அப்பாவின் மூன்று அக்காக்களில் மூத்தவள். அவளுடைய இரண்டு தங்கைகளும் விதவைகள். `மெயின் லைன்' எனச் சொல்லப்படும் ரயில் மார்க்கமாகச் சென்றால், மாயவரம் தாண்டி அடுத்த ரயில் நிலையம் மல்லியம். அங்கு இருந்து ஒரு கட்டைவண்டியைப் பிடித்து எட்டு மைல் சென்றால், சின்னக் கிராமம் என்றொரு கிராமம் வரும். அங்குதான் எங்கள் அத்தை இருந்தாள். சின்னக்…

  24. புலி பதுங்குவது... எழுத்தாளர் முன்கோபி தன் வீட்டின் பக்கவாட்டு அறையிலிருந்து வாசலை மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தார். அரை மணி முன்பு பார்த்த அந்த இரு குண்டர்களும் சிகரெட்டைக் கையில் வைத்துக்கொண்டு இன்னமும் அங்கேயேதான் நின்று கொண்டிருந்தனர். வயிற்றைக் கலக்கியது எழுத்தாளருக்கு. காட்சி புரியாதவர்களுக்காக சின்ன அறிமுகம். எழுத்தாளர் முன்கோபி தமிழ் கூறும் நல்லுலகம் புகழும் ஒரு வீரமான எழுத்தாளர். அறச்சீற்றம் கொண்டவர். சமூகக் கொடுமைகளைச் சாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஆனால், அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று படிப்பவர்களுக்கும் புரியாது, அவருக்கும் தெரியாது. சென்ற வாரம் பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு கந்து வட்டிக்காரனைப் பற்றிக் காரசாரமாக எழுதியிருந்தார். அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.