Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    கள்ளி இளங்கோ-டிசே ஏதோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான். ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உ…

  2. தேவதைகளின் உலகம் விநாயக முருகன் என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். பெண்களுக்கு இதயத்தை கடன் கொடுத்தாலும் கொடுக்கலாம். பணத்தை மட்டும் கடன் கொடுக்கவே கூடாது. அதுவும் அழகான இளம்பெண்களுக்கு கடன் கொடுக்கவே கூடாது. அவர்களிடம் வசூல் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. திருப்பி கேட்க நமக்கு மனசு வராது. நான் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் கிளையலுவலகம் ராமாபுரம் எதிரே இருக்கும் டிஎல்எப் வளாகத்தில் உள்ளது. டிஎல்எப் வளாகத்தை சுற்றி அழகான மரங்களுக்கும்,குளுமைக்கும் பஞ்சமே இருக்காது. சென்னையிலேயே போயஸ் கார்டனுக்கு பிறகு நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இடம் இது. இங்கு பரங்கிமலையும், கூவம் ஆறும், நிறைய மரங்களும் இருப்பதால் கோடைக்காலத்தில் கூட அவ்வளவாக சுகமாக இருக்கும். தவி…

  3. எல்லாம் எனக்கே! ""செல்வி, இங்கே வாம்மா.'' செல்வியின் அம்மா மலர்விழி, அழைப்பது கேட்டது செல்விக்கு. செல்வி இப்போதுதான் வணிகத்தில் முதுகலைப் படித்துவிட்டு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். தனக்குப் பிடித்த பொருள்களைப் பிறர் தொடுவதைக் கூட விரும்பாத சுயநலம் மேலோங்கும் எண்ணம் கொண்டவள். அவளுடைய எண்ணத்தில் வன்மம் ஏதும் இல்லை என்றாலும், கிடைப்பதில் அரிதானவையோ அல்லது அழகானவையோ தனக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு சிறுவயது முதல் இருந்துவருகிறது. ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதெல்லாம் நடந்துவருகிறது. ""செல்வி'' மீண்டும்…

  4. எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா? வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித்தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தி…

  5. வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை ! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள் . ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்கா…

  6. சிவப்பு மச்சம் - சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக்கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். ``சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். ராக்கி, படிகளில் உரத்து சத்தமிட்டபடியேதான் இறங்கிப் போனாள். விவசாயம் பொய்த்துப்போய் கடன் தொல்லையால் தற்கொலை செய்து…

  7. “சேர் உதால போகலாமோ” என நான் கேட்க, ம், ம் போங்க போங்க என அந்த ஆமிக்காரன்; கூறினான். நானும் நண்பனும் மோட்டார் சைக்கிளில் வெள்ளந்தியாய் சிரித்தபடி , “தாங்கியூ சேர்” என்று கூறியபடி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நோக்கி விரைகின்றோம். யாழ். இந்து மைதானத்தை நெருங்கும்போது மைதானத்தில் ஒரே கூட்டம். வழமையாகப் பூட்டிக் கிடக்கும் மைதானத்து வைரவர் கோவில் கேற்றுக்கள் திறந்து விடப்பட்டிருந்தன. உள்ளே ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சகிதம் நிறைய பேர் கவலை தோய்ந்த முகத்துடன் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்குது என்று, நானும் நண்பனும் மின்னல் நேரத்தில் மோட்டார் சைக்கிளை நீராவியடி பிள்ளையார் கோவிலடி வீதிக்கு திருப்பினோம். சந்திய…

  8. தலை நகரத்து வாழ்வுக்குக் காலத்தைப் பின்னோக்கி நகர்த்தல்- டி.சே தமிழன் கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன், சில உறவினர் வீடுகள் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி இருந்தது. முக்கியமாய் கொழும்பில் எனது எல்லைகளை விரிவாக்கிப் பார்க்காமையிற்கு சிறிலங்கா பொலிசும், ஆமியும் பிடித்து உள்ளே போட்டுவிடுவான் என்ற பயத்தோடு என…

  9. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஸீட்! தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்! - கண்ணன் பணம் பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்! - கட்டுமாவடி கவி கண்மணி தமிழன்டா! சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!” - சுந்தரம் ராமசாமி திருட்டு! ``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொ…

  10. ஆட்டம் - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: செந்தில் உள்ளங்கைகளைத் தேய்த்து கண்களுக்குக் காட்டி எழும்போதே தயாளனின் முகம் கண் முன் வந்தது. இதோ அதோ என நான் இழுத்தடித்துவிட்டாலும் இன்று எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும் தயாளனிடம். பல் துலக்கிக்கொண்டே செடிகளைப் பார்த்தேன். இப்போது, இந்தப் புதுக்கிறுக்குப் பிடித்திருக்கிறது எனக்கு. ஏதோ ஒரு ஸ்பேம் கால் அது. எப்போதும் எடுப்பதில்லை என்றாலும், அன்று எடுத்ததன் விளைவு அந்த அழைப்புக்குரல் என்னைப் பேசவைத்து, என் கண் முன்னே மொட்டைமாடித் தோட்டத்தை விரியவைத்து, என் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் வரை ஓயவில்லை. ஒரு நல்ஞாயிறு காலையில் வேன் வந்து நின்றது வீட்டுவாசலில். தரையைச் சுத்தம் செய்துவிட்டு, பச்சை நிறத்தில்…

  11. "பாகப்பிரிவினை" குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும் அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி 4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக …

  12. An open letter to the World Leaders and Non- Governmental Organizations! The world has an obligation to help Eelam Tamils World War I and World War II began betweentwo countries and spread to otherparts of the world in due course.It quickly developed into a multi-frontal war fought across continents before itended. The war against the Tamils,like any other war, initially commenced between the Tamil Nation and the Sinhala Nation, but it ended with manymilitarily powerful countries aligning themselves with the Sinhala Nation. In his interview to the press, after the war, President Mahinda Rajapakse thanked twenty countries for helping SriLanka to win the war.…

  13. நான்காம்முறைப் பயணம் - சிறுகதை போப்பு, ஓவியங்கள்: செந்தில் ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர் வாசனையை நினைவூட்டியது. வண்டியுடன் வந்த சுமை இறக்குவோர், பைகளை இரண்டு, மூன்றாகத் தலையில் தூக்கிக்கொண்டு மெல்லோட்டம் போட்டுவந்து, மளமளவென்று இறக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயங்கும் வேகமும் லாகவமும் நாட்டிய பாவம்போல் இருந்தன. அவர்களது மீசை, தலைமுடி, புருவம், கை-கால் முடி... என உடல் எங்கும் சீராக வெள்ளைப் பனித்துகள்கள்போல தூசி படிந்து இருந்தது. உடலில் எங்கு தொட்டாலும் பவுடர். அவர்கள் மீது படிந்தி…

  14. கடவுள் காத்திருப்பார்! மிகவும் பழமையான வீடு, 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது, அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது, அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள். அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம், அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த பாரம்பரிய வீட்டை இடித்து அதே இடத்தில் ஒரு Apartment கட்டி ஆளுக்கொரு flat எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற முடிவோடு ஒன்று கூடி இருக்கிறார்கள், தாத்தாவும் ஒப…

  15. நேற்று முதல்… நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயிலிலும், இன்பாக்ஸிலும் 100க்கும் மேற்பட்ட வாசகவாசகிகள் தொடர்பு கொண்டு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் சிமிர்னா தொண்டு நிறுவனம் வெளியிட உள்ள “மனிதம்” நூலுக்காக பகிர்ந்து கொண்ட, இந்த உன்னத நிகழ்வினை, எளிதில் படிப்பதற்கு வசதியாக தட்டச்சு செய்து வெளியிடச் சொல்லி கோரிக்கைகள் வைத்ததைத் தொடர்ந்து இதோ இங்கே அனைவரின் விருப்பப்படியே பதிவாகிறது : எது மனிதம்? அழுகிற விழிகளைத் துடைக்க விரல்களை நீட்டுவதா? பசிக்கிற குழந்தைக்கு பன் வாங்கித் தருவதா? துக்க வீட்டில் பிணம் தூக்கி பூ வீசுவதா? கோடையில் வாசலில் தண்ணீர் பந்தல் வைப்பதா? கிழவி பாதை கடக்க கரம் பிடித்து போக்குவரத்தை நிறுத…

  16. Started by நவீனன்,

    சொந்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்ட…

  17. உன்னை அறிவேன் மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்…

  18. அன்பின் நிழல் - சிறுகதை செந்தில் ஜெகன்நாதன் - ஓவியங்கள்: ஸ்யாம் மனம் மிகவும் சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் முதன்முறையாக மது குடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதோ இந்த ஐந்தாவது மாடியிலிருந்து அப்படியே குதித்துவிடலாமா என்றிருக்கிறது. சற்று முன்னர் சுவரில் மோதிக்கொண்டதால் தாங்க முடியாத தலைவலி இருந்துகொண்டேயிருக்கிறது. இதயத்துடிப்பு இப்போது என்ன வேகத்தில் இருக்கிறது என்றெல்லாம் தெரியவில்லை. அது துடிக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை. ஏன் இப்படி மனக்கிலேசத்துடன் அல்லாடுகிறேன்? ஏன் இப்படிப் புலம்புகிறேன்? காரணம், என் அப்பாவை இப்போதுதான் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆம், என்னைப் பெற்ற தந்தையைத்தான்! அவரின்…

  19. மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான…

  20. அருட்பெருஞ் சோதி அந்த மனித வாழிடம் அமைக்கப்பட்ட கோளிற்கு ஜோதி என்று பெயர் வைத்து நூறு வருடங்கள் ஆகின்றன. இரண்டு சூரியன்களில் ஒன்று மறைந்து மற்றொன்று வடமேற்கே உதித்துக் கொண்டிருக்கிறது. மொத்தம் ஆறு நிலவுகள். எதுவுமே முழு நிலாவாகத் தெரியாது. நிரந்தர பிறைகள். இரு சூரியன்களும் மாறி மாறி களைப்பின்றி வழங்கும் ஒளி வெள்ளம். இருள் வராதது என்பதால் ஜோதி என்று ஒரு காலத்தில் மனிதன் அறிந்த முதல் புவியை ஒத்த இந்த கோளுக்கு பெயர் வைத்தார்கள். பூமிகா நடுங்கிய இதயத்தோடு ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளது அண்ணன் துபிவிய போர் வீரர்களின் பிடியில் சிக்கி திமிறிக் கொண்டிருந்தான். இதை அவளால் ஏற்க முடியாது. தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். ஆதவன் வலியைப் பொறுத்துக் கொண்டு பல்…

  21. தொடரும் ............ (மன்னிக்கவும் தவறுதலாக அழிபட்டு விட்டது )

  22. ஒரு நிமிடக் கதை: உண(ர்)வு ‘‘கெஸ்ட்டுக்கு ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் வாங்கி வைக்கச் சொல்லிட்டு, இப்ப ஏதோ அவசர வேலை.. வரமுடியலைன்னு மேனேஜர் சொல்லிட்டார்டி. இப்ப என்ன பண்றது சுமி..? ’’ - ரம்யா அங்கலாய்க்க... ‘‘அடடா, வழக்கமா வீட்ல இருந்து அடைச் சுக் கொண்டு வந்ததை நாமளும் இப்பத்தானே கொட்டிக்கிட்டோம்! ச்சே...வடை போச்சே..!’’ என வடிவேலு குரலில் புலம்பிய சுமி, ‘‘ஹூம்... நம்ம கவுரிக்குதான் கொடுப்பினை! கூப்பிட்டு கொடுத்திடு’’ என்றாள். உடனே கவுரியை அழைத்து விஷயத்தைச் சொன்னாள் ரம்யா. ‘‘அடடா, இப்பதான் சாப்பிட்டேன்மா! வேணா நம்ம வாட்ச்மேனுக்கு கொடுத்திடலாம்மா’’ என கவுரி சொல்ல... ‘‘சர…

  23. பெத்த மனசு ( சிறுகதை) செந்தமிழ்ச்செல்வி தம்பி மதியழகா... நான் உன் கிளி சின்னம்மா பேசுறன்பா.... உன் அம்மாவ ஒருதடவ வந்து பார்த்துட்டு போயிடப்பா... மருந்து மாத்திரை எதுவும் சரியாகல... எதுவும் சொல்லமுடியாதுப்பா.... என்று பேசிய கிளி சின்னம்மாவின் பேச்சை சிலைபோல் கேட்டுக்கிட்டே இருந்தன் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் கொட்டியது... சரிம்மா... நான் சீக்கிரமா வரன்.. என்றவாறு பதிலுக்காக காத்திராமல் தொலைபேசியை வைத்துவிட்டு எனது அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் அப்பா எனக்கு ஆறு வயசிலயே விபத்தில இறந்திடாரு... அப்போ தங்கை றேனுவிற்கு மூனு வயசு. அப்புறம் எங்களுக்கு எல்லாமே அம்மாதான்... அம்மா படிகல ஆனா பக்குவமானவங்க.. நல்லது கெட்டது எல…

  24. இதுவும் ஒரு காதல் கதை! நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், 'என்ன பாரதி..…

  25. பறவைகள் கத்தின பார் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... க.சீ.சிவகுமார், ஓவியம்: டிராட்ஸ்கி மருது தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று, வடக்கு திரும்பி மேலும் மேற்கு நோக்கிப் போகிற கார், 10-ம் நாள் காரியத்துக்குப் போகும் அஞ்சலி மௌனத்தை அவ்வப்போது சுமக்கிறது. அம்மாவின் ஊரைச் சமீபித்தாயிற்று. வேலுச்சாமி மாமாவின் இழவுக்குப் போக முடியாத நான், 10-ம் நாள் காரியத்துக்குப் போகிற விதமாக இந்தப் பயணம் நேர்ந்திருக்கிறது. ''அண்ணன எரிச்சது இந்த இடத்துலதான்'' - கார், கணக்கன்பரப்பைக் கடக்கும்போது ராம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.