கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
தேவதையின் கதை - சிறுகதை சிறுகதை: குமாரநந்தன், ஓவியங்கள்: ஸ்யாம் மாதம்மாள் ரக ரகமான அரிசிகளை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, சந்தைகளுக்குப் போவாள். ஒவ்வொரு சந்தையிலும் பிரதான இடத்தில் அவள் கடை இருக்கும். மூட்டைகளை இறக்கி அடுக்கும்போதே வியாபாரம் ஆரம்பித்துவிடும். வேலைப்பாடு மிக்க வெள்ளிக்காப்பு அணிந்த கைகளால் படியில் அரிசியை அளக்க ஆரம்பித்தால், இரவு சந்தை கலையும் வரை ஓய்வே இருக்காது. காசுக்குக் கொண்டு வந்து தருகிறவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துக்கொள்வாள். மதிய நேரம் வண்டிக்கார முத்துவிடம் “சித்தநேரம் கடைய பாத்துக்குங்க, சாப்பிட்டு வந்துடறேன்” என, அதிகாலையில் ருக்மணி அம்மாள் ஆக்கித் தந்த சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அதே களையுடன் வந்து கடையி…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஞாயிறு என்பது விடுமுறை நாளல்ல... காலை நேர பரபரப்பில் உழவர் சந்தை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காய்கள் வாங்கிய பையை எடுத்துக் கொண்டு சந்தையைவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தான் சிவகுமார். ""சார் ...சார் ...சாரோய் ...'' யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தன்னைத் தான் கூப்பிடுகிறார்களா என்றபடி மெல்ல திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தவன், தன்னைத்தான் என்பதை உணர்ந்து ""என்னம்மா என்னையா கூப்பிட்டே?'' என்றவாறு அங்கே கடை போட்டிருக்கும் பெண்மணியைப் பார்த்துச் சென்றான். என்ன சார் ...போன வாட்டி வந்தப்பவே நாட்டு பப்பாளி இல்லையான்னு கேட்டே... இன்னிக்கு ஒனக்காகவே வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன் கண்டுக்க…
-
- 0 replies
- 945 views
-
-
கதையாசிரியர்: பிரசன்னா நீலகண்டன் “இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 40 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!” இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் . அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்…? மனம் துணுக்குற்றாள் அம்மா . “என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!” “அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தா…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
வெள்ளை நிற பள்ளிச் சீருடை சயந்தன் December 30, 2018 மிருதுவான கன்னத்தில் பிஞ்சு விரல்களைப் பொதித்தபடி நிச்சலனத் தூக்கத்திலிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொல்வதே காலத்திற்குச் செய்கின்ற நீதியாயிருக்குமென்று இளமாறனுக்குத் திடீரென்று தோன்றிற்று என்றெழுதிய கதைசொல்லி இக்கதைக்குப் பயன்படுமென்று கருதிய ஆவணங்களையும், கடிதங்களையும், கத்தரித்த செய்தித் துணுக்குகளையும் தொடர்ந்து வாசிக்கலானான். 1999.05.16 ஹொட்டஹேன பொலிஸ் நிலைய ஆய்வாளர் ஆரியரட்ணவினால் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரதி. (வலது மூலையில் பச்சை நிறப் பேனாவால் “நல்ல பொலிஸ்காரன்” என்று எழுதப்பட்டிருந்தது.) …பெயர் அரங்…
-
- 0 replies
- 1.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி பிஸி! ``மேனேஜர் ரொம்ப பிஸி. போன் பண்ணா எடுக்க மாட்டார். வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணுங்க. உடனே பதில் போடுவார்'' என்றான் ராகுல். - கே.சதீஷ் ட்ரிப் ``இந்த சம்மர் லீவுக்கு, நல்ல ஒரு ரிசார்ட்டா பார்த்துத் தங்கணும்'' என மகன் சொன்னதும் திடுக்கிட்டார் அரசியல்வாதி. - கோ.பகவான் சமாளிப்பு ``படத்துல பெருசா கண் வெச்சுக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டு வந்துச்சுல்ல... சத்தியமா அதாண்டா பேய்!'' என்றான், பேயைக் காட்டச் சொல்லி அழுத மகனிடம். - கோ.பகவான் பாராட்டு மகன் வரைந்த பெயின்டிங்கைப் பார்த்து வாய்விட்டுப் பாராட்டாத அப்பா, அதை அவன் ஃபேஸ்புக் புரொஃபைல் போட்டோவாகப் வைத்தபோது லைக் ப…
-
- 0 replies
- 782 views
-
-
லூக்கா 22:34 அ. முத்துலிங்கம் ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப…
-
- 0 replies
- 767 views
-
-
தோணி! … ( சிறுகதை ) … வ.அ.இராசரத்தினம். June 21, 2018 சிறப்புச் சிறுகதைகள் (3) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘தோணி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஓரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் ப…
-
- 0 replies
- 4.4k views
-
-
கடல் யோசித்தது…! - செ.டானியல் ஜீவா ‘எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கென வாழாத் தலைவன்!’ என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான். குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே எப்போதும் வலம் …
-
- 0 replies
- 966 views
-
-
ரொறன்ரோவில் அது ஒரு கோடைகாலம் வானொலிகளும் டிவிக்களும் மார்க்கம் மைதானத்தில் மாறி மாறி போட்டி போட்டு பண்டிகை செய்யும் காலம்.. ஆம்... வளமைபோல அந்த குடும்பமும் பண்டிகை காண உற்றார் உறவினரோடு பண்டிகை நடைபெறும் மார்க்கம் மைதானத்தை வந்தடைந்தது.. அவர்களைக் காணும் நண்பா்களும் உறவினா்களும் இந்தியாவிலிருந்து அந்த நடிகையும் வந்திட்டாவாம் - அந்த பாடகரும் வந்திட்டாராம் என்ன..! என குசு குசுத்தபடி தமது தமது பிள்ளைகளுக்காக சவாரிகளுக்காக பற்றுச் சீட்டுக்களை பெற்று தமது பிள்ளைகளை சந்தோசப்படுத்தியவாறு அந்த மைதானத்தின் ஒரு பக்கத்தை சுற்றிவருகிறார்கள்.. மைதானத்தினுள் மக்கள் திரள் திரளாக வருகிறார்கள் அந்தச்சிறுவனது தாயாருக்கு எச்சரிக்கை உணா்வு மேல…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிணக்கு - ஜெயகாந்தன் மெட்டியின் சப்தம் டக்டக்கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்பளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கை அறைக்குள் நுழைவது தெரிந்தது. தன் மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழந்தது. கிழவருக்குக் கொஞ்சம் குறும்பு அதிகம் தான்! கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின்தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். ‘கிரீச்’சென்ற ஒலியுடன் கதவு மூடியதும், மேலே செல்ல முடிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
10 செகண்ட் கதைகள் பயம் திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன். - வேம்பார் மு.க.இப்ராஹிம் விளக்கம் 'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா. - வேம்பார் மு.க.இப்ராஹிம் திட்டம் கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார். - ரா.ராஜேஷ் ஷவர் `எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை. - சங்கரி வெங்கட் வேலை `இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி. - கி.ரவிக்குமார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
நினைவின் நிழல் நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். உடலில் ஒரு அசைவும் இல்லை. பத்து குதிரைத்திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தை போல கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவைக்கொண்டு தீர்மானமாகச் சொன்னார்கள். நெடிய உருவம் கொண்ட ஆங்கிலேயரை நினைவுபடுத்தும் தோற்றம் உள்ள அந்த மருத்துவர்& இது அவருடைய குரலை வைத்து நான் செய்த கற்பனை& என்னை ஏறத்தாழ இறந்துவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஸ்நேகிதி சத்யராஜ்குமார் இதோ இவன்தான் அனிதாவின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கியவன். அந்த அமெரிக்கப் பெருநகரத்தில் திடுமென அவள் எதிரில் நிற்கிறான். அவனுடைய அரைக்கை சட்டைக்குக் கீழே மணிக்கட்டில் இன்னமும் அந்தத் தழும்பு ஒரு கருப்புக் கோடாய் அப்படியே இருக்கிறது. நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள். இது அனிதாவின் சுபாவம். அவளுக்குக் கோபப்படத் தெரியாது. இந்தச் சுபாவம்தான் அவள் வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது. “டேய் ரஞ்சித்? அமெரிக்காவிலா இருக்கே? எப்படா வந்தே?” சான் …
-
- 0 replies
- 1k views
-
-
காதலர் தினச்சிறுகதை: காதல் ரேகை கையில் இல்லை! குரு அரவிந்தன் எனக்கு என்ன ஆச்சு, எதுவும் புரியவில்லை. ஒரு பெண்ணைக் கண்டவுடன் ஏற்படும் ஈர்ப்பு இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அவளையே பார்க்கத் தூண்டிய மனசு அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தது. மனசும் ஒரு தேனீ போலத்தான் இருக்குமோ என்ற நினைத்தேன். மொட்டாக இருந்தால் உதாசீனம் செய்வதும், மலரப் போகிறது என்று தெரிந்தல் சுற்றிச் சுற்றி வருவதும், மலர்ந்து விட்டால் தேனை அருந்தி விட்டு விலகிச் செல்வதும் தேனிக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கின்றேன் ஆனால் இப்படியொரு ஈர்ப்பு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சினிமாப் படங்களில் சில நடிகைகளைப் பார்க்கும் போ…
-
- 0 replies
- 548 views
-
-
பசி பிப்ரவரி 2019 - பிரதீப் · சிறுகதை அவளின்ர பெயர் கூடத் தெரியாது. அம்பகாமம் காட்டுக்க தான் முதல் முதலா அவள சந்திச்சனான். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சண்டைல எல்லாம் ஆமிக்காரனுக்கு பெரிய பலமாவும் எங்களுக்குப் பெரிய தலையிடியாவும் அவங்களின்ர ஆழ ஊடுருவும் படையணி (LRRP) இருந்தது. அம்பகாமம் காடு எங்களுக்கு மட்டுமில்ல, அவங்களுக்கு நல்ல பாதுகாப்பான இடமா இருந்துச்சு. உவங்கள அடிக்கிறதுக்கென்டே ஆமிக்காரன்ட லைனுக்கும் எங்கட லைனுக்கும் இடையில இருக்கிற சூனியப் பிரதேசத்தில, இல்லாட்டி சில நேரம் அவன்ர லைனத் தாண்டி உள்ளுக்க போயும் அம்பூஸ் படுப்பம். அம்பூஸ் படுக்கிறதென்டால் வழமையா அவன் போய்வார பாதையில மறைவா படுத்துக்கிடந்து திடீர் தாக்குதல் நடத்துறது. அப்பிடியொர…
-
- 0 replies
- 769 views
-
-
எனக்குப் பிடித்த கதைகள் 30 மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் •• இரண்டு புத்தகங்கள் மலையாள மூலம் : அசோகன் செருவில் தமிழில் : சுகானா மறுநாள் இரவு …
-
- 0 replies
- 1.8k views
-
-
கதையாசிரியர்: குரு அரவிந்தன் கதைத்தொகுப்பு: சமூக நீதி புளோரிடாவில் உள்ள ‘போட் லாடடேல்’ கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு, கரையோர வெண்மணற்பரப்பில் சற்றுத் தூரம் நடந்தேன். குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்தபடியே நடந்து கொண்டிருந்த எனது பார்வை அங்கிருந்த அந்தப் பதாகை மேல் பட்டது. கறுப்பு நிற பதாகையில் வெள்ளை நிறத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை வாசிக்க விரும்பியதால் அருகே சென்று வாசித்து…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
சாலையெங்கும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு, சில ஆரவாரம். சிறைச்சாலை வாயிலில் இருந்து அரண்மனை வாசல் வரை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்துச் சென்றது ஒரு மாட்டுவண்டி அனைவரது கண்களும் அவன்மேல். வண்டியின் மத்தியில் நடப்பட்டக் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞன், தினவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, அழகிய முகம், முறுக்கிய மீசை, உடலெங்கும் காயத்தழும்புகள் அவன் வீரத்தைப் பறைசாற்ற, கோபத்தால் சிவந்த கண்களின் வெறித்தப்பர்வை மட்டும் அரண்மனையை நோக்கியபடியே. விசாரணை மன்றம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அரசன் பலபீமனும், முதல் மந்திரியாரும் ஆலோசனையில் இருக்க, பிற மந்திரிகளும் மக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டதால் மன்றமெங்கும் இ…
-
- 0 replies
- 599 views
-
-
பனி நிலா - சிறுகதை சிறுகதை: அராத்து, ஓவியங்கள்: செந்தில் கார் டயர் டொம்ம்ம் என்று வெடித்து வண்டி 130 டிகிரி திரும்பித் தேய்த்துக்கொண்டு போனது. மதிய நேரமே இரவுபோலக் காட்சியளித்தது. கடும் மழையால் இப்படி இரவு போல இருந்தாலும், இப்போது மழை பெய்யவில்லை. இந்தக் குளிரிலும் இரண்டு குளிர்ந்த பியர் அடித்துவிட்டு தன் உயர்ரக ஏசிக்காரை புகையிட்டு நாறடித்துக்கொண்டு வந்த தரண், முன்னால் சென்ற காரின் டயர் வெடித்ததைப் பார்த்ததும், பதமாக பிரேக் அடித்தான். டயர் வெடித்த காரிலிருந்து பதற்றமேயில்லாமல் ஒருத்தி இறங்கினாள். பார்ப்பவர்க்கு ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருப்பதுபோலத் தோன்றினாலும், அது ஒரே கவுன். உடலுடன் ஒட்டியில்லாமல் படர்ந்து இருந்தது. தரண் அவளைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
இக்போ இனத்தவர் சொல்வதுண்டு - ‘முதிர்ந்த கழுகின் இறகு எப்பொழுதுமே அப்பழுக்கற்று இருக்கும்’ என. சிறுகுறிப்பு; நைஜீரிய, பெண் எழுத்தாளர் சிமமாண்டா அடிச்சீயின் நாவலுக்கு (சொல்வனத்தில் அவரைப்பற்றியும் அவரது நாவல் பற்றியும் வந்த கட்டுரை இங்கே) முன்னோடியாக அவரே எழுதிய சிறுகதை இங்கே மத, இன வேறுபாட்டில் தொடங்கும் பிரிவினைக் குரல், போராட்டத்தில் இறங்கி, இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் பின்னே பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கிறது. பெருந்துயரத்தினூடே வளரும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சுயநலத்தையும் துவேஷத்தையும் லட்சியவாதத்தையும் அவர்கள் பார்வையினூடே விவரிப்பது மட்டுமல்லாமல், மனித மனங்கள் இந்த சுயநலத்தை நியாயப்படுத்துவதையும் கூட அடிச்சீ கதையில் விவரித்த…
-
- 0 replies
- 921 views
-
-
ஆத்மராகம் - சிறுகதை சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம் மஹா அக்காவை நான் அங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. முதலில் அது அவள்தான் என்றே தெரியவில்லை என்றாலும், அவள் உதடும் என் உள்ளுணர்வும் அவளைப் பற்றிய விவரங்களைத் தேடத் தூண்டின. கிடைத்த விவரங்கள், எனக்குள் அதிர்ச்சியையும் மனபாரத்தையும் ஏற்றின. அங்கிருந்த செவிலியிடம், ``இவங்களை யாரு, எப்போ இங்கே சேர்த்துவிட்டாங்க?’’ என்றேன். ``ஒரு வாரம் ஆச்சும்மா. ஒரு பொண்ணு கூட்டிவந்துச்சு. இப்போ வேலைக்குப் போயிருக்கு’’ என்றாள். ``வேலைக்கா?’’ என்றேன். ``ஆமாம்மா. எங்கேயோ திருச்சி பக்கமாம். இந்த அம்மாவோட மகதான் கூட்டிட்டுவந்துச்சு. நம்ம சென்டரைப் பற்றி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜுன் 20 / உலக அகதிகள் தினம் ========================= ஈழத்தமிழ் அகதிகளின் வலிகளைக் சொல்லும் தமிழ்நதி அவர்களின் "என் பெயர் அகதி" சிறுகதை
-
- 0 replies
- 704 views
-
-
பச்சை விளக்கு - சிறுகதை ஹேமி கிருஷ் - ஓவியங்கள்: செந்தில் தூறல் ஆரம்பித்திருந்தது. நல்ல வேளை, மழை வலுப்பதற்கு முன்னர் அலுவலகத்தில் இருந்து கிளம்பியாயிற்று. ஜெயதேவா பேருந்து நிறுத்தத்துக்கு அவசரமாக ஓடினேன். சாலையோரக் கடைகளின் மசாலா வாசனை, பசியைக் கிள்ளியது. `ராகவன் சார் வடை வங்கிக்கொண்டு வந்திருப்பார்' என்று நினைத்தபோதே, உதட்டில் சிரிப்பு பிறந்தது. `இன்னைக்கு வடைக்காரம்மாவைப் பற்றி என்ன சொல்லப்போறாரோ?' என, முகம் அறியாத வடைக்காரம்மாவைப் பற்றி சம்பந்தம் இல்லாத நான் நினைப்பது எல்லாம், நொடிப்பொழுது சுவாரஸ்யத்துக்காக மட்டுமே. ஜெயதேவாவில் இருந்து சில்க் போர்டு செல்ல வேண்டும். சில்க் போர்டில் இருந்து இன்னொரு பேருந்து பிடிக்க வேண்டும். சில்க் போர்டு வந…
-
- 0 replies
- 2.2k views
-
-
கார்குழலி ‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான். அதற்குள் ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய...’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான். உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உ…
-
- 0 replies
- 2.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பால் ``இந்தப் பால்காரன், `பசும்பால்’னு சொல்லி எந்தப் பாலைக் கொடுக்கிறானோ தெரியலை?’’ என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலில் பாலை ஊற்றினாள்... சமீபத்தில் அம்மாவாகியிருந்த கோமதி! - நெய்வேலி தேன்ராஜா படிந்த பேரம் நாற்பதில் இருந்து ஐம்பது தொகுதிகளாக உயர்த்தியும் படியாத கூட்டணி பேரம், நான்கே பெட்டிகளில் படிந்தது! - அஜித் ஸ்டார்நைட் ``ரஷ்யாவுல ஒரு பாட்டுக்கு நயனோடு டான்ஸ் ஆடுறேன்” - சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மனைவியிடம், ஹீரோவாக நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமல் குரூப் டான்ஸரான கோவிந்த்! - பெ.பாண்டியன் முள் ``கால்ல சின்னதா ஒரு முள்ளு கு…
-
- 0 replies
- 1.5k views
-