கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
10 செகண்ட் கதைகள் கெடுதல் ``எப்பப் பாரு டிவி பாத்தா கண்ணு என்னத்துக்குடா ஆகும்..?” எனச் சத்தம் போட்டார், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா! - சி.சாமிநாதன் வீடு “தண்ணி வசதி இல்லாட்டியும் பரவாயில்ல.. கொசு இல்லாத வீடா பாருங்க’’ என்றான், தரகரிடம் ராகுல் . - எம். விக்னேஷ் கல்வி ``மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’’ எனக் கேட்ட மகனிடம் இரண்டுமே முக்கியம் இல்லை என்றார் தனியார் பள்ளி நடத்திவந்த அரசியல்வாதி! - கே.சதீஷ் அறிவுரை ``பேரன்டிங் ரொம்ப முக்கியம். குழந்தைகளைத் திட்டாதீங்க. அன்பா இருங்க’’ என்ற பள்ளி ஆசிரியை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அடி பின்னியெடுத்தார். - கே.சதீஷ் ரகசியம் பஸ்சில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி தமிழ்நதி -கனடா மூத்த மகனுடைய கையால் கொள்ளி வாங்குவதற்காக அருணாசலத்தார் நடுக்கூடத்தில் காத்துக் கிடந்தார். மகன் கந்தசாமி செய்தி கேட்ட அன்றிரவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். வெள்ளைவேட்டி சால்வை, அருணாசலத்தாருடைய கறுப்பு நிறத்தை அடர் கறுப்பாக்கிக் காண்பித்தது. தலைமாட்டில் குத்துவிளக்கின் சுடர் காற்றின் திசைக்கேற்ப சாய்ந்து மாய்ந்து அழுதுகொண்டிருந்தது. நகரத்திற்குப் போகும்போது மட்டும் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கமுள்ள அவருடைய கால்களில் வெள்ளைக் காலுறைகள் மாட்டப்பட்டு, இரண்டு பெருவிரல்களும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. ஆள் திடகாத்திரன்தான். இருந்துமென்ன… நெஞ்சுவலி சாய்த்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் விடிகால…
-
- 2 replies
- 717 views
-
-
கி.ரா. கதைகள் கி.ரா. கதைகள் ஒரு தலை அவளைப் பார்த்தான் அவன். …
-
- 0 replies
- 1.6k views
-
-
மஞ்சள் அழகி? சண்மூவின் உள்ளங்கை தவளையின் உட்புறத்தில் இருப்பதைப் போலவே எப்பொழுதும் வியர்வையின் ஈரத்தன்மையுடன் இருக்கும்... நான் கீத்துவிடம் சொல்வேன்... "சண்மூவோட உள்ளங்கையைப் பிடிச்சுப் பாரேன். லேப்ல தவளையைத் தொடற மாதிரியே இருக்கும்.' அவள் என்தலையில் செல்லமாக அடித்து, "ஏய் உனக்கு கம்பேர் பண்ண வேற ஒண்ணும் கிடைக்கலையா?' என்றாள். சண்மூவிடமே சொல்லி இருக்கேன்... முறைத்துக் கொண்டு அடிக்க வருவாள்…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாகுபலி 2 - ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அந்த வீட்டு வாசல் அருகேயிருந்த வேப்ப மரத்தடியில், காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கியவுடன், எனது கிளிப்பச்சை நிற சில்க் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டேன். வேட்டியை இறுக்கிக் கட்டியபடி கார்க் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கால்வாசி வளர்ந்து, பின்னர் தனது வளர்ச்சியை நிறுத்தியிருந்த மீசையை ஒரு முறை தடவி விட்டுக்கொண்டேன் கழுத்தில் மாட்டியிருந்த செயினிலிருந்த புலிநக(?) டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு, புரோக்கரிடம், “எப்படி இருக்கேன்?” என்றேன். “உங்களுக்கு என்னண்ணே... அப்படியே ‘வின்னர்’ வடிவேலு மாதிரியே இருக்கீங்க...” என்று கூறிய புரோக்கரை முறைத்தபடி, “இந்தப் பொண்ணுக்காச்சும் என்னைப் பிடிக்குமாய்யா?” …
-
- 1 reply
- 2.3k views
-
-
பிங்க் - சிறுகதை அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா? ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண…
-
- 1 reply
- 2.5k views
-
-
உக்காந்து யோசிப்பாய்ங்களோ! பிரபல டைரக்டர் சந்திரனை மிகுந்த சிரமத்துக்குப் பின் சந்தித்துப் பேசினான் ரகு. ‘‘சார், நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த மாதிரியே அச்சு அசலா நிறைய ஸீன்கள் இப்ப வர்ற படங்கள்ல வருது’’ என்ற வன், தன் ரசனையும் ஐடியாக்களும் சமீபத்திய ரிலீஸ் சினிமாக்களில் இடம்பெற்ற சூப்பர் ஸீன்கள், கிராஃபிக்ஸ் உத்திகள், க்ளைமாக்ஸ் திருப்பம் எனப் பல விஷயங்களில் பொருந்தியிருப்பதை உதாரணங்களோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டான். பின்பு, ‘‘சார், என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டீங்கன்னா ரொம்ப ‘யூஸ்’புல்லா இருப்பேன்...’’ என்றான். ‘‘ஸாரி பிரதர், எனக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
கேளடி கண்மணி! ''பாரதி... நான் இவ்வளவு சொல்றேன், ஏன் காது கொடுத்து கேக்க மாட்டேங்குற...'' என்றார், அப்பா ராகவன் சலிப்பாக! ''நீங்கதாம்பா என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க...'' ''ஏண்டி... கல்யாணமாகி, ஆறு மாசம்கூட ஆகல; அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிக்குற...'' என்றாள் ஆற்றாமையுடன், அம்மா. ''ஓ... அதுதான் உன் பிரச்னையா... உன் மக, வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துடுவாளோ, அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு பதில் சொல்லணுமே... இதுதானே உன் பயம்...'' என்றாள், பாரதி. ''அம்மா சொல்றத விடு. விஜய் நல்ல பையன்; எந்த கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. கல்யாணமான இந்த குறுகிய காலத்துல, அவரை, நீ …
-
- 2 replies
- 940 views
-
-
புத்திசாலிகள்! துபாயில் இறங்கிய பத்து நாட்களில் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்தாயிற்று. 10 நாட்களுக்குத்தான் கம்பெனி சார்பில் ஹோட்டலில் தங்க வைப்பார்கள். அதற்கு மேல் என் பாடு.அங்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆபீஸ் லன்ச் டைமின்போது ஒன்றாக அமர்ந்திருந்த ஒரு பன்னாட்டுக் கலவையான குரூப்பிடம் கேட்டேன். ‘‘எனக்கு வீடு தேட ஹெல்ப் பண்ண முடியுமா?’’ ஒருவன் கேட்டான், ‘‘கார் பார்க்கிங்குடன் வேண்டுமா?’’ என் பதில், ‘‘எனக்கு கார் வாங்கும் ஐடியாவே இல்லை!’’ அடுத்து பட்ஜெட், ஏரியா, ரூம் போன்ற வழக்கமான கேள்விகள். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, லெபனான், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தாங்கள் தங்கியிருக்கும் பில்டிங்கிலேயே ஏதாவது வீ…
-
- 1 reply
- 1.4k views
-
-
நான் நீ மற்றும் கடல்! - சிறுகதை அனுராதா ஆனந்த் - ஓவியங்கள்: ஸ்யாம் நித்யா காரைத் திறந்து உள்ளே ஏற எத்தனிக்கும் போதுதான் சட்டெனக் கவனித்தாள். வேப்ப மரமெங்கும் மல்லிகைப் பூ மொட்டுகள் தெறித்துவிட்டதுபோல் கிடந்தன. நெற்றி சுருங்க ஆச்சர்ய மாய்ப் பார்த்தாள். அருகிலிருக்கும் பந்தலையும் தாண்டி மரத்திலேறி அதன் கிளையெங்கிலும் பெரிய பச்சைப்பாம்பைப் போல் சுற்றிக் கொண்டு மல்லிக்கொடி படர்ந்திருக் கிறது . அந்தக் காலை நேரத்தில் அது அவ்வளவு வாசனையை அந்தத் தெருவுக்கு வழங்கிக்கொண்டிருந்தது. அருகில் போய் கைக்கெட்டும் கொஞ்சம் மொட்டுகளைப் பறித்து மூக்கின் அருகில் வைத்து மனசு கொள்ளுமளவுக்கு அதன் வாசத்தை நுகர்ந்துகொண்டாள். பின் காருக்குள் நுழைந்து அந்த மொட…
-
- 0 replies
- 4.8k views
-
-
ஒரு விஷயமாக! ‘வா ழ்க்கை என்பது சஸ்பென்ஸ்களின் தோரணம்!’ என்ற பொன்மொழியை எங்கோ, எதிலோ படித்திருக்கிறேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே! மறுக்கிறவர்கள் தயவு செய்து டி.வி-யில் வரும் மெகா சீரியல் களைப் பார்க்கவும். ஒவ்வொரு எபிஸோடின் இறுதியிலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் கட்டாயம் இருக்கும். அது சாதா சஸ்பென்ஸாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது கூட நமது ஆவலை எக்கச்சக்கமாகத் தூண்டிவிட்டு விடும். …
-
- 1 reply
- 1.4k views
-
-
காதுள்ள கடவுள் நா ச்சியார் தனியே வந்திருந்தாள். இருக்கன்குடி ஆறு வெயிலோடிக்கிடந்தது. பனைகளில் அமர்ந்திருந்த குருவி மட்டும் யாரோ தெரிந்தவரை அழைப்பது போல கூப்பிட்டுக்கொண்டு இருந்தது. தொலைவில், ஆற்று மணலில் உறை தோண்டி, தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்கள். ஒதுங்குவதற்குக்கூட நிழலே இல்லாத வெம்பரப்பின் கீழாக, அவள் வேகவேகமாக நடந்துகொண்டு இருந்தாள். பிடறியில் கை வைத்துத் தள்ளுவது போல, சூரியன் கூடவே வந்துகொண்டு இருந்தது. …
-
- 1 reply
- 2.2k views
-
-
தேவிச்சித்ரா சொன்ன பதில்... தேவிச்சித்ரா தன் அறையில் ஆளுயரத்திற்கு இருந்த கண்ணாடி முன்பாக நின்று தன்னையே அதில் உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள். சென்ற வருடத்தைக் காட்டிலும் சோபை இழந்து விட்ட முகமாக தன் முகவடிவு மாறியிருப்பதைக் கண்டாள். ஐயம்பாளையம் கிராமத்தில் நூற்றி ஐம்பது வீடுகள் இருக்கின்றன. தேவிச்சித்ராவின் வீடு ஊரின் கிழக்குக் கடைசியில் காட்டுக்குள் நின்றிருந்தது. இவளின் சித்தப்பா ஊருக்குள் மெத்தை வீடு கட்டிக்கொண்டு போய் ஐந்தாறு வருடங்களாயிற்று. இங்கிருந்து அவர் அண்ணனோடு பாகம் பிரித்துக் கொண்டு சென்ற நாளில் இருந்தே அவர் குடும்பம் மகிழ்ச்சியாய் இருப்பதை ஊரே பேசிக்கொண்டு தானிருக்கிறது, இன்றுவரை. மெத்தை வீடு கட்டி குடி புகுந்த ராசியோ என்னவோ, அவரின் இரண்டு…
-
- 0 replies
- 860 views
-
-
தெளிவான தேர்வு மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான். அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்!’’ ‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
‘அவனை அழிக்கிறேன் பார்’ சூழுரைத்தல், சபதமேற்றல் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல; நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனச் சபதமேற்பவர்களை விட, “அவனை அழிக்கிறேன் பார்” என எதிரிகளை அழிக்கச் செய்ய, சபதம் எடுப்போர் தொகைதான் அதிகம். உலகம் அழுக்காகி வருகின்றமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இன்று உலக நாடுகள்கூட, மக்களை அழித்து, உரிமைகளை அடக்கும் செய்யும் வண்ணம், வெளிப்படையாக சூழுரைகளும் மறைமுகமாகச் செய்யும் கழுத்துறுப்புகளையும் மக்கள் பார்த்து, இரசிக்கின்றார்கள். வலு இழந்த மக்கள் போராட்டம் செய்ய, எந்த அரசுமே அனுமதிப்பதில்லை. நீதியைக் காப்பாற்று வதைவிட, தங்கள் ஆணவ அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். போலியான ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாற வேண்டாம்! சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்... தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்... ‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு!’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? …
-
- 1 reply
- 1.6k views
-
-
இது இன்னொரு வாழ்க்கை! பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியைப் பிரித்து, இவர் அருகில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணை மறுபுறமாய் அமர வைத்தார். பக்கத்தில் வந்து அமர்ந்த அந்த நபர், கொஞ்சம், பருமனாக இருந்தார். கூடவே, அவருடைய பத்து வயது மகனை, மடி மீது உட்கார வைத்ததும், கலியமூர்த்தி…
-
- 4 replies
- 1.6k views
-
-
மரண அறிவித்தலும் மணமகன் தேவையும் சிறுகதை- மறைமுதல்வன் சாவுகள்! எத்தனை வகையான சாவுகள்? மனிதர் எப்படி எப்படியெல்லாம் சாகிறார்கள்! முன்பெல்லாம் சாவென்றவுடன் ஞாபகம் வருவன விபத்துகள்தாம். வீதியில் கார் விபத்தில் ஒருவர் அகப்பட்டுச் செத்துப் போனால் ஐயோ பாவமென்றிருக்கும். யாராவது யாரையாவது கொலை செய்து விட்டதாகக் கேள்விப்பட்டால்,மனதில் 'திக்'கென்றிருக்கும். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று மனம் அதிரும். லட்சுமிகாந்தன் என்பவனின் கொலைபற்றித்தான் நான் முதலில் கேள்விப்பட்டது. அதுவும் கொஞ்சம் அரசல் புரசலாக. எனது பெரியப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த போது காதில் விழுந்தது. அவருக்கு பாகவதருடன் அறிமுகம் இருந்தத…
-
- 0 replies
- 840 views
-
-
-
‘பங்க்’ குமார்: கல்லூரி மாணவர்..ரவுடி ஆன கதை ! | பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறிய மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, பாலியல் வல்லுறவு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டன இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டன ?
-
- 0 replies
- 1.6k views
-
-
ஃபாதியா - சிறுகதை சிவகுமார் முத்தய்யா - ஓவியங்கள்: ஸ்யாம் பாலக்காடு ரயில்வே நிலையத்தில் இறங்கி மூர்த்தி செல்லைப் பார்த்தான். பின்னிரவு மூன்று மணியைக் கடந்திருந்தது. பயணிகள் சிலர் அங்கங்கே இருக்கும் சிமென்ட் பெஞ்சுகளில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டேசனை விட்டு இறங்கி எதிரேயிருந்த டீக்கடையில் ஒரு சாயா குடித்தான். மீண்டும் ஸ்டேசன் வந்து கடைசியில் இருந்த வடக்குப் பார்த்த இருக்கையில் அமர்ந்தான். குழப்பம், பதற்றம், பயம் மாறி மாறி ஆட்கொண்டன. முடிவு எடுக்க முடியாத ஒரு மனக் குலைவு. இவற்றையெல்லாம் தாண்டி ஃபாதியா ஒரு பறவையைப் போல தோளில் அமர்ந்தாள். மூர்த்தி வேங்கரையில் நின்று திரும்பி…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஒரு நிமிடக் கதை பழக்கம் காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது. ‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ - பொங்கலைத் துப்பியபடி கேட்டான். ‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான். ‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ - போனில் கேட்டான். ‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா. அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
அதிகாலை ஆஸ்பத்திரி கூச்சலும் குக்குரலுமாக பதறிக்கொண்டிருந்தது பிறப்பு , இறப்பை தீர்மானிப்பதல்லவா இந்த ஆஸ்பத்திரி பிரசவத்திற்காக சர்மிதாவும் தனது முதல் பிரசவத்திற்காக அலறியே துடிதுடித்துக்கொண்டிருந்தாள் அவளுடனும் பல பெண்கள் அன்றைய நாள் பிரசவத்திற்க்காக கையில் கட்டப்பட்ட இலக்க மட்டைகளை அணிந்து படுத்திருந்தனர் அவளின் முதல் பிரசவம் அவளை கட்டிலில் உளத்த செய்தது அவளோ ஐயோ ஐயோ அம்மா என துடிதுடித்துக்கொண்டிருந்தாள். அவள் கணவனோ ஆறுதல் சொல்ல முடியாமல் அவள் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தான் வலி அதிகரிக்கும் போது அவளோ அவன் கைகளை கடிக்க தொடங்கினாள் வலியின் வேதனையால் பிரசவ விடுதியின் முன்பு அவளை அழைத்து செல்ல ஆயத்தமாக அவனோ ஆயிரம் கடவுள்களை வேண்டி நின்றான் அவளுக்காகவும் அவள…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஒரு நிமிடக் கதை பார்ட்டிக்குப் பாட்டியா? பார்ட்டிக்குப் பாட்டியா? ‘‘என்னங்க, சொன்னா கேளுங்க. நாளைக்கு நியூ இயர் பார்ட்டிக்கு உங்கம்மாவையெல்லாம் கூட்டிட்டுப் போக வேணாம். அவங்களும், அவங்க கண்டாங்கிப் புடவையும், தொளதொள ரவிக்கையும், இழுத்து இழுத்துப் பேசும் கிராமத்துத் தமிழும்... நம்ம மானமே போயிடும்!’’ …
-
- 1 reply
- 1k views
-
-
ஒரு நிமிடக் கதை சாட்டிங் சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத். ‘‘டே சிவா, பிஸியா?’’ ‘‘இல்லை பரத், சொல்லு!’’ ‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’ ‘‘ஆமா!’’ ‘‘எனக்கொரு ஹெல்ப்...’’ ‘‘சொல்லுடா?’’ ‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க...’’ ‘‘நைஸ்... கங்கிராட்ஸ்!’’ ‘‘பொண்ணு ெடல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’ ‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’ ‘‘இல்லை... அவ சென்னைக்கு வந்துடுவா!’’ ‘‘நான் என்ன பண்ணணும்?’’ ‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’ ‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’ ‘‘டன்!’’ ஒரு வாரம் கழித்து... ‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’ ‘‘ம்...’’ ‘‘எப்படி இருக…
-
- 1 reply
- 1.3k views
-