கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
பர்மா ராணி சிறுகதை: லஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் 2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக்கிடந்த கடந்த காலத்தின் ரகசியப் பக்கங்கள், இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்துசெல்வதைக் கண்கூடாகப் பார்த்தான். அவன் தேடும் தனியொரு மனிதராக அல்லாமல், ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறியிருந்தார் ஜாவேத். புதிய புதிய சுவாரஸ்யங்களைத் தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத, விநோதமான பாத்திரம் இவன். `தமிழ் சினிமா – நேற்றின் நிழல்’ என்னும் பெயரில், சினிமாவின் கடந்த காலத்தைக் கொண்டாடும்விதமாக நடக்கும் நிகழ்வின் அபூர்வமான ஒரு தருணத்தில்தான், ஜாவேதைப் பற்றி முதலில் தெரிந்துகொண…
-
- 1 reply
- 2.3k views
-
-
கானகி - அகரமுதல்வன் கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு நிமிடக் கதை: தயக்கம் காலையில் அலுவலகம் வந்து தன் இருக்கையில் அமரும்வரை ராஜன் தெளிவாகத்தான் இருந்தான். தன் அறையின் கண்ணாடி தடுப்புக்கு வெளியே ராணி தாண்டிப்போகும் போது அவன் கவனம் சிதறத் தொடங்கியது. “சே.. என்ன இது.. அவளைப் பார்த்ததும் திரும்பி அதே எண் ணம்!” என்று சலித்துக் கொண் டான். இரண்டு நாட்களாகவே மனதுக் குள் ராஜன் புழுங்கிக் கொண்டு தான் இருந்தான். இந்த விஷயத் தைப் பற்றி ராணியிடம் எப்படி பேசுவது என்று. ராணி எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் அவனுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. உடன் பணிபுரியும் அசோக் கிடம் கேட்டபோது, “சங்கடப்படாம இந்த விஷயத்தைப் பத்தி அவ கிட்ட கேட்டுடு” என்றான். …
-
- 3 replies
- 856 views
-
-
பாவாய்... பூம்பாவாய்! - சிறுகதை ஓவியம்: ஸ்யாம் விறுவிறுவென வீசிக்கொண்டிருந்த ஊதக்காற்றோடு போராடி, திமிலர்கள் கரை நோக்கி திமிலைச் செலுத்திக்கொண்டிருந்தனர். இன்னும் சில வங்கங்களும் வல்லங்களும் நாவாய்களும் கடலில் மிதந்து கொண்டிருந்தன. பரதவ குலப் பெண்கள் இரவு ஆகாரத்துக்காகப் புளியும் மிளகும் சேர்த்துக் குழம்பு செய்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே இருளை விரட்ட தீச்சுளுந்துகள் ஏற்றப்பட்டிருந்தன. கடலோடிவிட்டு வந்த பரதவர் கைகளில் விரால், கனவா, மத்தி மீன்களும், சிலரிடம் சிவப்பு இறால்களும் நிறைந்திருந்தன. இரை தேடிச் சென்ற குருகுப் பறவை கூட்டங்களும், கடலின் மேற்பரப்பில் நீந்திய மீன்குஞ்சுகளைப் பசியாற உண்டுவிட்டு, புன்னைத் தோப்புக்கு விரைந்துகொண்டிருந்தன. ந…
-
- 0 replies
- 2.6k views
-
-
துரோகங்கள் - சிறுகதை அசோகமித்திரன், ஓவியங்கள்: ஸ்யாம் இதற்கு முன்னர் பல முறை அந்த பங்களா கேட்டைத் தாண்டியபோது அவனை மீறி வந்த காய்ச்சல் உணர்வு இப்போது இல்லை. தோட்டத்தைத் தாண்டி பங்களா போர்ட்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெரிய காரைச் சுற்றிக்கொண்டு அவன் பங்களா வராண்டாவை அடைந்தான். “சார்... சார்...” என்று அழைத்தான். தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆள் ஓடிவந்தான். நீலகண்டனைப் பார்த்து, “சின்ன அம்மாவைக் கூப்பிட்டீங்களா?” என்று தெலுங்கு மொழியில் கேட்டான். “இல்லை. பெரிய ஐயாவைப் பார்க்கணும்” என்றான். “பெரிய ஐயாவையா? சரி, சேர்ல உக்காருங்க. நான் சொல்லிட்டு வரேன்.” நீலகண்டன் வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். சி…
-
- 0 replies
- 3.2k views
-
-
ஜெயமோகனின் ‘நீர் நிலம் நெருப்பு’ ஆவணப்படம் எழுத்தாளர் ஜெயமோகனை தெரியாதவர்கள் நவீன இலக்கிய உலகில் இருக்க முடியாது. கணிசமான இலக்கிய வாசகர்கள் காலையில் எழுந்தவுடன் அவரது வலைதளம் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஜெயமோகன் தனது முதல் நாவலான ‘ரப்பர்’ தொடங்கி விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு, ஏழாம் உலகம், கொற்றவை ஆகிய நாவல்களால் பரவலான வாசகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அவரது ‘அறம்’, ‘வெண்கடல்’ சிறுகதை தொகுதிகளும் இலக்கிய உலகில் நன்றாகப் பேசப்பட்டன. தற்போது, ‘வெண்முரசு’ என்ற தலைப்பில் மகாபாரதம் குறித்த தொடர் நாவல்களை எழுதி வருகிறார். ஜெயமோகன் இலக்கிய உலகில் மட்டுமல்ல; திரைப்பட உலகிலும் பரிச்சயமானவர். இயக்குநர் லோகிததாஸின் ‘கஸ்தூரிமான்’ தொடங்கி…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆனந்தியும் அவனும் 'தனி'த்துவ காதலும்! என் மௌனத்தைப் புரிந்துகொள்கிறாய் என் அமைதியையும் மகிழ்ச்சியையும் ரசிக்கிறாய் என் அழுகையைச் செவிமடுக்கிறாய் என் விம்மலைக் கூர்ந்து கவனிக்கிறாய் என் பதற்றத்தை உணர்ந்து கொள்கிறாய் நிராகரிக்கப்பட்டு வலியில் துடிப்பதை உணர்ந்து பதறுகிறாய் ஒவ்வொரு முறையும் நேசித்தவர்களால் நேசிக்கப்பட்டவர்களால் கைவிடப்படுகையில் எனக்காக கண்ணீர் சிந்துகிறாய். எ…
-
- 2 replies
- 1.4k views
-
-
அதிதி நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: ஸ்யாம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சம், அறையை முழுமையாக வியாபித்திருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மின்விசிறி மெதுவாகச் சுழன்றுகொண்டிருந்தது. காற்றின் போக்குக்கு ஏற்ப, சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள்காட்டியின் தாள்கள் அசைந்துகொண்டிருந்தன. அதிதி மட்டும் உறக்கம் வராமல் நெளிந்து கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந் தவர்களை போர்வைக்குள் இருந்து கவனித்தாள். உறங்கிக்கொண்டிருந்த வர்கள் மீது நீல வண்ணம் கவிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம் அவளுக்கு தந்தையின் நினைவைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து அவரின்…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுற்றிச் சுழலும் ரொமான்ஸ்கள்! சுத்தேசி ரொமான்ஸ் படத்தில் சுஷாந்த் சிங், பரினீத்தி சோப்ரா தற்கொலைக்கு முயல மாட்டேன் ஒருபோதும் - நான். அது கோழைகளின் பேராயுதம். நான் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் மீது எதிர்வாகனம் எதுவும் வந்து மோதி எனை கொல்லட்டும். * என் பேருந்துப்பயணத்தில்... அதிவேக ஓட்டுநரின் அலட்சியத்தால் அந்த பாலம் பிளந்து பேருந்து சுக்குநூறாகி சிதைந்து அழியட்டும் என்னையும் பலியாக்கி. * நீண்டதூர ரயில் பயணத்தில் நியாயமான கோரிக்கையி…
-
- 0 replies
- 1k views
-
-
பாஸ்வேர்டு சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப…
-
- 0 replies
- 1.6k views
-
-
என் மனைவி என்னை பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் பல்லி அடிக்க என்று அர்த்தம். சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம். கல்யாண வீட்டில் ”என்னங்க” என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம். துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம். வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால் பூவாங்க வேண்டும் என்று அர்த்தம். மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால் மருத்துவரிடம் என்ன பேசவேண்டும் என்று அர்த்தம். வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம். …
-
- 30 replies
- 4.9k views
- 1 follower
-
-
மான்டேஜ் மனசு 9 - காதலுக்கு மரியாதை செய்தவர்கள்! ''எல்லோரோட காதலையும் எழுதுற உனக்கு என் காதல் ஞாபகத்துக்கு வரலையாண்ணே!'' உரிமையுடன் கேட்டான் ஜான். ''அப்படி எல்லாம் இல்லை ஜான்.'' ''என் காதல் எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சும் எழுதாம இருக்கீங்க. உன்னதமான காதலுக்கு நீங்க தர்ற மரியாதை இதுதானா? இது நியாயமா? ஒன்பது கிரகத்திலும் உச்சம் பெற்ற ஒருவன் காதலை நீங்கள் கண்டுகொள்ளாமல் போனால், ஆதாம் உங்க கண்ணைக் குத்திடுவார். பார்க்குறீங்களா? பார்க்குறீங்களா?'' என்று சொல்லிச் சிரித்தான். ''இந்த முறை உன் கதை தான்டா'' என்றேன். ''அப்படி வாங்க வழிக்கு'' என்று குதூகலமாய் பேசினான். ஜான் - ஜெனி காதல் நி…
-
- 0 replies
- 1.6k views
-
-
இமயம் நோக்கி மீண்டும்… மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம். ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை. ஆனால் பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டது. கொஞ்சநாள் மலையேற்றத்துக்…
-
- 3 replies
- 822 views
-
-
எலிப்பொறி - சிறுகதை வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம் ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல்…
-
- 1 reply
- 2.7k views
-
-
ஸ்டீயரிங் வீல் சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெர…
-
- 1 reply
- 1.5k views
-
-
சலனம்! - சிறுகதை கமலி பன்னீர்செல்வம், ஓவியம்: பிரேம் டாவின்ஸி மணி ஐந்தைத் தொட மூன்று நிமிடம் இருந்தது. கம்ப்யூட்டர் திரையைச் சுருக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள் மேரி. மீண்டும் தன் இருக்கைக்கு வரவும், மணி ஐந்தாகவும் சரியாக இருந்தது. ``மணி அஞ்சாய்டுச்சுனா டான்னு கிளம்பிடுங்க” என்று சற்றே நக்கல் கலந்த தொனியில் மேனேஜர் கோவிந்தராஜ் சொல்ல, மேரி பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கோப்புகளில் இல்லாத பிழைகளை அவர் பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். கோவிந்தராஜுக்கு வயது 63. பிள்ளைகள் இருவரும் மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்க, மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். மனைவி வீடு திரு…
-
- 2 replies
- 2.5k views
-
-
உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்…
-
- 1 reply
- 1.7k views
-
-
உதிரிப்பூக்கள் - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் ‘‘மத்தவங்கள்லாம் வரலையா?” - அனுஷா கதவைத் திறந்தவுடன் பிரகாஷ் கேட்டான். ‘‘மொதல்ல உள்ள வா. எல்லாரும் வர்ற நேரம்தான். வந்ததும் வராததுமா ‘எப்படி இருக்கே’னு கேட்கத் தோணுதா உனக்கு?” “எப்படி இருக்கே அனு? பார்த்து ரொம்ப நாளாச்சு.” ‘இப்ப கேளு ட்யூப் லைட்... மர மண்டை’ -நினைத்ததைச் சொல்லாமல் அடக்கிக் கொண்டாள். அவளை சந்தோஷத்துடன் பார்த்தான் பிரகாஷ். ஜீன்ஸ் பேன்ட் சர்ட்டில் இன்னமும் கல்லூரிப் பெண்போலத்தான் இருந்தாள். நிறம்கூட கல்யாணத்துக்குப் பிறகு இன்னும் மினுமினுப்பாக மாறியிருந்தது. அனுஷாவின் பின்னாலே நடந்து, அவள் சோபாவில் அமர்ந்ததும் அவளுக்கு எதிரே இருந்த ஓர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்தா…
-
- 0 replies
- 3k views
-
-
வீடும் கதவும் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ம.செ.,நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பெரியார் நகரில் பாவேந்தர் தெருமுனைக்கு வந்ததும், எத்தனையாவது வீடு என்ற குழப்பம் சகுந்தலாவுக்கு வந்தது. ஐந்தாவது வீடு என்ற நினைவு இருந்தது. `போன் போட்டுக் கேட்கலாமா?' என யோசித்தாள். போனை எடுத்தாள். அதற்குள், `அஞ்சாவது வீடுதான். வடக்குப் பார்த்த வீடு' என நினைவுக்குவந்த மாதிரி சொன்னாள். ஆனாலும் சந்தேகத்துடன் நடக்க ஆரம்பித்தாள். மேற்கில் இருந்து நடந்துவந்து ஐந்தாவது வீட்டின் முன்பாக நின்றாள். வீட்டின் தோற்றம், அவள் முன்னர் பார்த்ததற்கும் இப்போதைக்கும் பெரிய மாற்றத்துடன் இருந்தது; குழப்பத்தை உண்டாக்கிற்று. வீட்டின் எண்ணைப் பார்த்தாள். `80' என இருந்தது. வீ…
-
- 6 replies
- 2.9k views
-
-
மான்டேஜ் மனசு 8 - விண்ணைத் தாண்டி வருபவர்கள்! ரொம்ப நாட்களுக்குப் பிறகு கௌதமை சந்தித்தேன். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு வழக்கம் போல சினிமா பற்றி பேச்சு திரும்பியது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தான். டைம் மெஷின், டைம் டிராவல் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பெருமைப்படும் 'இன்று நேற்று நாளை' படத்தையும் பேச்சுவாக்கில் தொட்டுச் சென்றான். ''ஃபேன்டஸி படமா இருந்தாலும் அளவா, கச்சிதமா, எந்த எல்லையும் மீறாம இருந்தது ரொம்ப நல்ல அனுபவம்'' என்றான். என் மனசு 'இன் டைம்' படத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. 2011-ல்…
-
- 0 replies
- 1.9k views
-
-
நிர்மலாவின் இதயத்தில் ராகுல் - சிறுகதை சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அப்பா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்ததை எல்லாம் காதில் சரியாக வாங்கினேனா என்பது, எனக்கே புரியவில்லை. இருந்தும் அவர் நான்கைந்து முறை அழைத்ததாகச் சொன்னார். போக, ``இப்படி உன்னை அடிக்கடி நான் பார்த்துட்டே இருக்கேனேம்மா'' என்றார். ``ஒண்ணும் இல்லைப்பா, சும்மா ஒரு யோசனையில் இருந்துட்டேன்'' என்றபடி சாப்பிட அமர்ந்தேன். வழக்கம்போல அப்பா உப்புமாதான் செய்திருந்தார். `இன்னிக்கும் உப்புமாவாப்பா?' எனக் கொஞ்சம் சிணுங்கட்டாம் போடலாம்போல் இருந்தது. இருந்தும் `பி.எஸ்ஸி கடைசி வருடம் சென்றுகொண்டிருக்கும் பெண், சாப்…
-
- 0 replies
- 3.2k views
-
-
1- ‘இனியெண்டாலும், குடிகாரற்றை உறைப்பைக் கொஞ்சம் குறையுங்கோ, வயித்திலை அல்சர் முத்தி, கான்சர் வரப்போகுது’ என, இரவுச் சாப்பாட்டின் போது பல்லவியைத் துவங்கினாள் மனைவி. திருவாளர் வீரசிங்கமோ மனைவியின் ஆரோகணத்தை காதில் வாங்குவது கிடையாது. சாப்பாட்டு விஷயத்தில் வீரசிங்கம் சமரசம் செய்வதில்லை. அவருக்கு நல்ல உறைப்புக் கறி வேணும். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அவர் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும், காரசாரமான கறி சோறு இல்லாவிட்டால், அவருக்கு அன்று நித்திரை வராது. ‘தாய் பழக்கின பழக்கம்’ என்று மனைவி புறுபுறுப்பாள். புருஷனுக்கு உறைப்புக்கறி, தனக்கும் பிள்ளையளுக்கும் காரம் குறைந்த பால் கறி என்று, தினம்தினம் சமையல் அறையில் அவள் படும் பாடு, அவளுக்குத்தான் தெரியும். சனிக்கிழமைகளில், பல்லின …
-
- 0 replies
- 1k views
-
-
க்ரைம் தொடர்கதை.... ஒன் + ஒன் = ஜீரோ - அத்தியாயம் 1 -ராஜேஷ்குமார் விவேக் கூகுளில் வலைவீசி 'ஸ்காட்லாந்து யார்ட்' போலீஸ் பற்றிய ஒரு தகவலைத் தேடிக் கொண்டிருக்க, ரூபலா கையில் அன்றைய நாளிதழோடு பக்கத்தில் வந்து நின்றாள். "என்னங்க?" "சொல்லு ரூபி" "இந்த பேப்பர்ல போட்டிருக்கிற செய்தி உண்மைதானா?" "என்ன போட்டிருக்கான்?" "நீங்களே படிங்க" ரூபலா நாளிதழை நீட்ட விவேக் வாங்கிப் படித்தான். "மீன் நல்ல உணவுதான். ஆனால் அந்த மீனும் இப்போது சிறிது சிறிதாக விஷத்தன்மை அடைந்து கொண்டிருக்கிறது. இதில் ஆபத்தானது கடல் மீன்கள். பூமியில் உருவாகும் அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேர்கின்றன. ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு இருக்கிறது. எதையு…
-
- 41 replies
- 11.7k views
-
-
மான்டேஜ் மனசு 7 - அழகல்ல காதல்... காதலே அழகு! வஸந்த் இயக்கும் படங்கள் மனசுக்கு நெருக்கமானவை. ஒவ்வொரு படமும் செதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும். மிக மென்மையாக கடந்துபோகும் அந்த கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் நிஜ வாழ்வில் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி சந்திக்கும் நபர்கள் சிலாகிக்கும் உறவாக மனதில் பதியமிடும். பொதுவாக வஸந்த்தின் படங்களில் பெண் கதாபாத்திரத்துக்கு தனித்துவம் இருக்கும். ஹீரோ - ஹீரோயின் கதாபாத்திர வடிவமைப்பு, லாஜிக் மீறல் பற்றிப் பேசப்படும் இந்த தருணத்தில் வஸந்த் பட ஹீரோயின்கள் அதை அநாயசமாக கடந்து போவார்கள். 'ஆசை' சுவலட்சுமி, 'ரிதம்' மீனா, 'சத்தம் போடாதே' பத்மப்ரியா என்று அந…
-
- 0 replies
- 2.4k views
-
-
எழுத்தாளர் முனிராஜின் S பட்டன் - சிறுகதை அதிஷா, ஓவியங்கள் ஸ்யாம் இது ஒரு கணினியின் கதை. ஒரு கணினிக்காக எழுதப்படும் கதை. அதே கணினியில்தான் இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தக் கணினி என்னுடையது அல்ல… பிரபல எழுத்தாளர் முனிராஜுடையது. என்னைப் போலவே 90-களில் வளர்ந்த இளைஞர்கள் பலருக்கும் எழுத்தாளர் முனிராஜ் மிகப்பெரிய ஆதர்சம். அவருடைய துள்ளலான கதைகளும், தீராத இளமைத்துடிப்புமிக்க எழுத்து நடையும் வாசிக்கிற யாரையுமே உள்ளே இழுத்து, நான்கு சாத்து சாத்தி, கை வாயைப் பொத்தி, அடிமையாக்கி உட்காரவைத்துவிடும். அப்படி உட்காரவைக்கப்பட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன். முனிராஜ், முழுநேர எழுத்தாளர் எல்லாம் இல்லை. மருந்து ஆராய்ச்சி நிறுவன அதிகாரி. அவரின…
-
- 0 replies
- 2.1k views
-