கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் எதிர்முனையில் எவனோ ஒருவன்..! காலையில்.…
-
- 0 replies
- 1k views
-
-
மான்டேஜ் மனசு 12: காதல் கடத்தும் அழகிய தீ! ஃபேஸ்புக்கை திறந்தால் இன்று மணிகண்டன் பிறந்த நாள் என்ற அறிவிப்பு ஒளிர்ந்தது. அப்புறம் வாழ்த்தலாம் என்று நினைத்து மறந்துபோகும் மோசமான வியாதி எனக்கும் இருப்பதால் உடனே செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். இரவு விருந்துக்கு கண்டிப்பாக வந்துவிடவேண்டும் என்று சொல்லிவிட்டான். தம்பி பேச்சுக்கு மறு பேச்சா? கிளம்பத் தயாரானேன். அண்ணா சாலையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை செல்ல எப்படியும் அரை மணிநேரம் ஆகுமே. அதுவும் 18k பஸ் தயவு பண்ணி தரிசனம் கொடுத்தால்தான் உண்டு. இந்த இடைவெளியில் உங்களுக்கு மணி - சரண்யாவை அறிமுகப்படுத்திவிடுகிறேன். தமிழ் சினிமாவின் லட்சத்து …
-
- 0 replies
- 2.3k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் டெக்னாலஜி... டெக்னாலஜி! `கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்! - பர்வீன் யூனுஸ் ஆட்டம்... அதிரடி! தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்! - தினேஷ் சரவணன் திருடன் ``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்! - பெ.பாண்டியன் ஏட்டு சுரக்காய் ``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
நகர்வலம் காலை 5:30 மணிக்கெல்லாம் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பறக்கும் கூட்டத்தைக் கடக்கையில் , வண்டியை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் , “இந்த நேரத்துலயும் இவ்ளோ அவசரமா எங்கதான் போறீங்க?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. கதிரவனது உறக்கம் கலைவதற்கு முன்னான இருளில் அப்பெருநகரை ரசித்தவாறே தியோசஃபிகல் சொசைட்டியை அடைந்தோம். மரங்களும் செடிகொடிகளுமாய் மலர்களின் சுகந்தத்தைக் காற்றில் குடிகொள்ளச் செய்த அந்த அழகிய வனம் மனதிற்கு அமைதியையும் முற்றிலும் வேறோர் உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையும் தந்தது. மனோகரன் மாமா நடைப்பயிற்சியைத் துவக்க, அவர்களுக்கு ஈடு கொடுக்க அண்ணன், மதினி, நான் – மூவரும் ஓட வேண்டியிருந்தது. 58 வயதின் நடைவேகத்தை 26 வயதின் ஓட்டம் கூட…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - பயணங்கள் 11 ஏப்ரல் 2025 நடு இரவில் தெரியும் சூரியன்! ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் …
-
- 0 replies
- 439 views
-
-
கடமை ‘‘டேய்... மாதவா! முதல்ல இந்தக் காபியைக் குடிடா. அப்பா வந்தபிறகு ஸ்கூல் ஃபீஸ் விஷயமா பேசிக்கலாம்...’’ வேண்டா வெறுப்பாக காபியை வாங்கிக் குடித்தான் மாதவன். அப்போது வெளி வாசலில் நுழைந்துகொண்டிருந்தார் அப்பா. ‘‘அப்பா வந்தாச்சு! ஸ்கூல் ஃபீஸ் பத்தி கேட்கணும்னு சொன்னியே... இனி உன் பாடு, உன் அப்பா பாடு...’’ என சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கலா. தயங்கியபடி அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தான் மாதவன். ‘‘அப்பா! ஃபர்ஸ்ட் டேர்ம் ஸ்கூல் ஃபீஸ் இருபதாயிரம் ரூபா கட்டணும். ஒரு செக் தந்தா போதும்...’’ மாதவனை முறைத்தார் அப்பா. ‘‘என்னாலே ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் தரமுடியாது. அதெல்லாம் நீயே பாத்துக்க வேண்டியதுதான்...’’ கறாராகச் சொன்னார் அப்பா. ‘‘இப்படிச் சொன்னா எப்படிப்பா? உங்களுக…
-
- 0 replies
- 1.4k views
-
-
நான்காம் தோட்டா - சிறுகதை “பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.” பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை. டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள். நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி. ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி க…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி - மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கன…
-
- 0 replies
- 563 views
-
-
கொடை வீட்டில் ஒரு வாரமாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டது ரகுதான். "" பாருங்கப்பா இந்தம்மாவை, புரியவே மாட்டேங்குது. நான் எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சி திட்றாங்க'' எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யா. ""அம்மாதானே சொல்றாங்க... விடும்மா. நான் பேசிக்கிறேன்'' என்றான். ஆனால், மனைவியிடம் பேசி எளிதாகச் சம்மதிக்க வைக்க முடியாது என்பது அவனுக்குத்தான் தெரியும். ""நீங்க ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க, ரொம்ப மாறீட்டா. சரியில்லை. அவ செய்ய நினைக்கிறதை சாதிச்சிடுறா, அதுக்…
-
- 0 replies
- 899 views
-
-
-
- 0 replies
- 898 views
-
-
படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந…
-
- 0 replies
- 443 views
-
-
உயிர் சோறு - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம் சரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே. வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக…
-
- 0 replies
- 3.8k views
-
-
காதலில் விழுவது. [நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.] நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள். John steinback with his son முதலில் நீ காதலிக்கிறாய் என…
-
- 0 replies
- 834 views
-
-
ஒரு நிமிடக் கதை: அவரவர் கவலை! ''கலா.. கிளம்பறேன்" என தன் மனைவியிடம் கூறிவிட்டு கிளம்பினான் ராஜா. "என்னங்க.. இன்னைக்காவது ஸ்கேன் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்." கர்ப்பிணியான மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், "கண்டிப்பா முதலாளிக்கிட்ட அட்வான்ஸ் கேட்கிறேன் கலா" என்று சொல்லிவிட்டு கிளம்பினான். இரண்டு அடி எடுத்து வைத்தவன், திரும்பி தயங்கியபடி "கலா.. ஒரு நூறு ரூபாய் இருந்தால் கொடேன். செலவுக்கு கையில் பணமே இல்லை" என்றான். தனக்கு மாத்திரை வாங்க வைத்திருந்த பணத்தை கணவனிடம் கொடுத்தாள் கலா. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு கார் டிர…
-
- 0 replies
- 1.3k views
-
-
மரையாம் மொக்கு! .. மருதூர்க்கொத்தன். November 18, 2018 சிறப்புச் சிறுகதைகள் (19) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – வீ.எம்.இஸ்மாயில் (மருதூர்க்கொத்தன்) எழுதிய ‘மரையாம் மொக்கு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். சுமக்க முடியாமல் சுமந்து வந்த கயிற்று வலைப்பந்தை கீழே போட்ட காத்துமுத்துவின் உடலெல்லாம் சொர்க்க சுகம் பரவியது. வருஷக்கணக்காய் கடல் நீரில் குளித்து ஆனமட்டுக்கும் உப்பை உறுஞ்சிய கொண்டடி வலைக்காலொன்றின் தும்புக்கயிற்று வலையைச் சுற்றிய பெரும்பந்து அதைத் தோளில் சுமந்து தொத்தல் உடம்பு இறால் கருவாடாய் வளைய, கடற்கரைக் கொதிமணலில் கால்கள் புதைய, காய்ச்சிய இர…
-
- 0 replies
- 1.1k views
-
-
"சாதகப் பறவைகள்" அத்தியடி, யாழில் எங்கள் வீட்டுக்கு அருகில் இரு வயது போன தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இருவரும் மாலை நேரத்தில் படலைக்கு அருகில் வீற்றிருந்து வருவோரையும் போவோரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இருவரும், வாயில் பற்கள் இல்லாத, பொக்கு வாய் என்பதால், பொதுவாக கஞ்சி குடிப்பதே தமது உணவாக கொண்டும் இருந்தார்கள். எனக்கு அவர்களை காணும் போதெல்லாம் 'சாதகப் பறவைகள்' ஞாபகம் தான் வரும். ஏன் என்றால் புராண, இதிகாசங்களில் இந்தப் பறவையை மழை நீரை மட்டுமே அருந்தும் என்றும் [இங்கு கஞ்சி நீர்] மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் [இங்கு மக்களை பார்த்து] என்றும் வர்ணிப்பதை பார்த்து இருக்கிறேன். …
-
- 0 replies
- 353 views
-
-
வேதியின் விளையாட்டு (சிறுகதை) ‘ அது சரிவராது போலத்தான் இருக்கு…,’ என்ற மனைவியின் பதிலால், பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது! பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர…
-
- 0 replies
- 994 views
-
-
புகார் தெருவில் தையல் மெஷினோடு சென்றவனை உரக்க அழைத்தாள் ராதா. சில புதிய புடவைகளுக்கு பார்டர் தைக்க வேண்டியிருந்தது. கொண்டுவந்து கொடுத்தாள். வாசலிலேயே மெஷினைப் போட்டு அவனும் தைக்க ஆரம்பித்தான். அப்போது ராதாவின் மாமியார் பூரணி, சில நைந்த புடவைகளோடு வந்தாள். அதிலுள்ள கிழிசல்களை தைத்துத் தரச் சொல்லி அவள் கேட்க, ராதா குறுக்கிட்டாள். ‘‘அதல்லாம் ஒண்ணும் தைக்க வேணாம். ஏம்பா, உன்னை நான்தானே கூப்பிட்டேன். அவங்க புடவைகளை திருப்பிக் கொடுத்துடு!’’ என்றாள் கோபமாக. பூரணிக்கு மருமகள் மேல் கோபம். ‘ஆபீஸ் விட்டு என் மகன் கணேஷ் வரட்டும்... சொல்றேன்!’ என முணுமுணுத்துக் கொண்டாள்.மாலை மணி ஆறு. வீடு திரும்பிய கணேஷ் கையில் ஒரு பார்சல் இருந்தது. நேராக அம்மாவிடம் சென்றான். மக…
-
- 0 replies
- 1.2k views
-
-
சில வித்தியாசங்கள்... - சுஜாதா 1969-ல் ஆனந்தவிகடனில் வெளியான சிறுகதை நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டென்ட்டாக 210-10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க் கார் என்னும் மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித் தது எம்.ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந் தைக்கு பால், விடமின் சொட்டுக்கள், 'ஃபாரெக்ஸ்' வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும்..…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆடு இல்லை ஆடுவேன்.. ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும் செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன். ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல் கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில் முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது…
-
- 0 replies
- 664 views
-
-
லியோன் பேராலயம் டேவிட் அல்பாஹரி தமிழில்: சுகுமாரன் டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியா…
-
- 0 replies
- 489 views
-
-
'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை] தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்! நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் …
-
- 0 replies
- 431 views
-
-
சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும்…
-
- 0 replies
- 252 views
-
-
அனிதாக்களின் காலனிகள்! நட்பு காதலாக மலரலாமா? பார்த்த உடனே வரும் காதலைக் காட்டிலும், பழகிப் பார்த்து வரும் காதல் நிலைக்கும்தானே என்பது பேசிப் பேசி தீர்த்தாலும், இன்றும் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால், தோழி காதலியாவது ஆகச் சிறந்த வரம் என்றுதான் சொல்வேன். ராஜா - ஜெனி காதல் அப்படிப்பட்டதுதான். மிகச் சிறந்த காதலர்களாக, தம்பதிகளாக அவர்கள் வாழ்வதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். எந்த மிகைத்தன்மையும் இல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். அவர்கள் வாழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் காதலிக்கத் தோன்றும். 'எப்போ பார்த்தாலும் அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியேப்பா. உன் …
-
- 0 replies
- 1.5k views
-
-
மண்டை மாக்கான் சுகுணா பிறந்தது 1998-ல் மார்ச் மாதத்தில் விடிகாலையில் என்று அவளே என்னிடம் சொன்னபோது கணக்கில் தகராறு நிரம்பிய நான் விரல்களில் ஒவ்வொன்றாய்த் தொட்டு மனக்கணக்கு போட்டேன். இப்போது 2017ல் இருக்கிறோம் அல்லவா! எப்படியோ கல்யாணம் கட்டிக் கொள்ளும் வயதில் சுகுணா இருக்கிறாள். இங்கே சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திலோ அல்லது கோபி காவல் நிலையத்திலோ சுகுணாவும் முருகேசனும் மாலையும் கழுத்துமாக தஞ்சமடையும் வயதுதான். முருகேசன் என் பள்ளித் தோழன். கொளப்பளூர் நடுநிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை என் பக்கத்திலேயே வகுப்பறையில் அமர்ந்து படித்தவன். மண்டை மாக்கான் என்றொரு பட்டப் பெயரும் பள்ளியில் அவனுக்கு இருந்ததாக ஞாபகம். மண்டை மாக்கான் என்ற பட்…
-
- 0 replies
- 1.1k views
-