கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
காக்கைச் சிறகினிலே அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை, இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா? அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர். சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிரு…
-
- 0 replies
- 898 views
-
-
சாந்தமு லேகா - சிறுகதை “ராத்திரி 10 மணிக்கு மேல கேட்டைப் பூட்டிருவோம். கரன்ட் பில் யூனிட்டுக்கு இவ்வளவு குடுக்கணும். வெஜிட்டேரியன்ஸ்க்கு மட்டும்தான் வீடு. சினிமாக்காரங்களுக்கு வீடு கிடையாது. அபார்ட்மென்ட்ல நாய் வளர்க்கக் கூடாது.” இதுபோன்ற எந்த கண்டிஷனும் இல்லாத வீடு சென்னையில் வாடகைக்குக் கிடப்பது கனவிலும் நடக்காத விஷயம். வீடு என்றால் ஃபிளாட். பல மாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட். சின்மயா நகரிலுள்ள ‘சாந்தலேகா அபார்ட்மென்ட்ஸ்’க்குக் குடிவந்த புதிதில் ஷைலஜாவுக்கு இந்த சுதந்திரத்தை முதலில் நம்பவே முடியவில்லை. முகப்பில் வரையப்பட்டிருந்த வீணை ஓவியத்தைப் பார்த்ததுமே அவள் சௌந்தரிடம் சொல்லி விட்டாள். ‘எனக்கு இதைப் பார்க்கும் போதே நல்லதா தோணுது.’ நல்லதாகத்தான் நட…
-
- 0 replies
- 2.4k views
-
-
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! இந்திரா பார்த்தசாரதி வா சல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்த…
-
- 0 replies
- 938 views
-
-
நிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க! இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது. அதற்குள் புடவை மாற்றி, முக டச்சப் செய்து, லேசாக வெள்ளை தெரிய ஆரம்பித்த முடி ஆரம்பங்களைக் கறுப்பு மை இட்டு மறைத்து... படப்படப்போடு கையும் படபடத்தது. "நந்தினி, அம்மா நந்தினி.... நெஞ்சு கரிக்குது, இருமல் நிக்காம வருது பார்...கொஞ்சம் சுக்கு வெல்லம் தட்டிப்போட்டு சுடு தண்ணீ எடுத்தா...." உள் அறையில் இருந்து கேட்டது குரல். அலங்காரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள். "என்ன நந்தினி...ரெடியா? மசமசன்னு சமையல் அறையிலே நிக்குற. நேர…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 916 views
-
-
இனிமேல் என்பது இதில் இருந்து... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வண்ணதாசன், ஓவியங்கள்: ஸ்யாம் மழை விட்டுவிட்டதா என்று ஆவு கையை நீட்டிப் பார்த்தபடியே தெருவாசல் நடைப்பக்கம் கழற்றிப்போட்டிருந்த செருப்புகளுக்குள் காலை நுழைத்துக்கொண்டிருந்தாள். வெளிச்சம் இல்லை. கரன்ட் போயிருந்தது. நனைந்த செருப்பில் இருந்து தோல் வாடை அடிப்பதாக, எப்போதோ நுகர்ந்த வாசனை அவள் முகத்துக்குள் வந்தது. புளியங்கொட்டை அளவுகூட இராது... ஒன்றை அடுத்து இன்னொன்றாக குட்டிக்குட்டித் தவளைகள் தெருவில் இருந்து வாசல் பக்கம் குதித்து நகர்ந்து வந்தன. கோமு இதுவரை அசையாமல், தந்தி போஸ்ட் பக்கம் கெட்டுக்கிடையாகத் தேங்கியிருக்கும் தண்ணீரில் மழைப்புள்ளி விழுவதையே பார்த்துக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அவள் அப்பா இறந்து போன தினத்திலிருந்து. ராத்திரி தூங்கப் போகும் போது அப்பா , அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும் போது உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள் . அப்போது அவளுக்கு வயது எட்டு. அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன. அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை. யாருடைய கட்சி சரியென்று இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான் . காலை ஏழு மணி , பகல் ஒன்றரை மணி , மாலை மூன்று மணி என்று சொல்லிவைத்த மாதிரி தெருமுனைக்குச் சென்று திரும்புவான் . திரும்பி வரும் போது அவனிடமிருந்து ஒரு விநோத வாசனை வரும். ” என்னடா இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இருள்களி - தெய்வீகன் நல்லதண்ணி கிணற்றடிப்பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து அவள் எனது சைக்கிளை மறித்தாள். மறித்தாள் என்பது மரியாதைக்குரியதாக செயலாக கருதப்படலாம். உண்மையைச் சொல்வதானால், சைக்கிளின் கைப்பிடி நடுஇரும்பின் மீது தனது ஒரேகையை அதிகாரத்தோடு அழுத்தி நிறுத்தினாள். அதற்கு நான்கைந்து விநாடிகளுக்கு முன்னர் “அண்ணா, அண்ணா…” – என்று இரண்டொரு தடவைகள் அவள் அழைத்த குரலுக்கு திரும்பிப்பார்த்து, நானாகவே அவள் பக்கத்துக்கு சைக்கிளைத் திருப்பியிருந்தால், எனது மரியாதைக்கு இவ்வளவு கேடு ஏற்பட்டிருக்காது. கிணற்றடிக்கு அருகாக உள்ள நெல்லிமரத்துக்குக்கீழிருந்து கச்சான் விற்கின்ற அந்தக்கிழவி அன்றில்லை. பாடசாலைவிட்டு வரும்வழியில் தாமரை பிடுங்குவதற்காக குளத்துக்குள் இறங்கும்ப…
-
- 0 replies
- 933 views
-
-
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 அகரன்November 02, 2018 in: நிகழ்வுகள் கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும் முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.) இரண்டாவது பரிசு இலங்கை …
-
- 0 replies
- 2k views
-
-
ஆகாசப் பூ - சிறுகதை பிரபஞ்சன், ஓவியங்கள்: ஸ்யாம் அவள் புரண்டு படுத்தாள். இப்போது எல்லாம் இப்படி அடிக்கடி புரண்டு புரண்டு படுத்து, அறுந்துபோகும் உறக்கத்தின் இழையைத் துரத்திச்சென்று விடியும் வரை அவஸ்தைப்பட வேண்டியிருந்தது அவளுக்கு. மூன்று மூன்றரை மணிக்கு, இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். காதுகளுக்கு அருகில், விளங்காத சத்தங்கள், மொழிச்சொற்கள், யாரோ பக்கத்தில் இருந்துகொண்டு பேசுவதுபோல. என்ன பேசுகிறார்கள் என்றுதான் விளங்கவில்லை. ஏறக்குறைய உறக்கத்தில் ஆழ்ந்தாள். உலகம் விடிந்துகொண்டிருந்தது; சத்தமாகத் தெரிந்தது. பால் வெளிச்சம் படரும்போது, தோட்டத்து மரங்களில் இருந்து பறவைகள் பேசத் தொடங்கிவிடும். உணவுவிடுதிக்குக் கறந்து தர மாடுகள் நடக்கும் ஓசை, பால…
-
- 0 replies
- 2.1k views
-
-
‘என் பெயர் அகதி!’ - வலிகளைச் சுமந்தலையும் தமிழ்நதியின் சிறுகதை #WorldRefugeeDay வி.எஸ்.சரவணன் ஜூன் 20: உலக அகதிகள் நாள். ஆப்பிரிக்காவில் ஜூன் 20 அன்று அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, அந்த நாளையே ஐ.நா அவை உலக அகதிகள் தினமாக அறிவித்தது. தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு ஒருவர் வலுகட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு ஒப்பான துயர் வேறில்லை. அதுவும் போரால் தம் உறவுகளைப் பிரிந்து, கிடைக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டிய சூழல் கொடுமையானது. ஆனால், உலகின் பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அந்த வலியை மற்றவர்களால் உணர்ந்துகொள்ள வைக்கச் செய்பவை கலைப் படைப்புக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்றிப் பெடியன் தவாண்ணை யாழ்ப்பாணம் ரவுணுக்கை சைக்கிள் கடை வச்சிருந்த வேலாயுதம் மாமாவுக்கு பெரிய வீடு, வளவு. ஊருக்குள்ளை ஒரு பெரிய அரண்மனை மாதிரியிருக்கும். எண்பத்தேழில இந்தியன் ஆமி வந்த கையோட வேலாயுதம் மாமா குடும்பம் கொழும்புக்குப் போய் அப்பிடியே கனடாவுக்குப் போயிட்டினம். சண்டை மூண்ட பிறகு இந்தியன் ஆமி காம்ப் ஆக வேலாயுதம் மாமா வீடு இருந்தது. இந்தியன் ஆமிக்காறர் போன கையோட பூட்டிக் கிடந்த வீட்டை இயக்கக்காறர் எடுத்திட்டினம். ஆனால் இயக்கப் பெடியள் அங்கே நிரந்தரமாகத் தங்குவதில்லை. இருந்திட்டு எப்பவாவது ட்றக்கில குவியலா வருவினம். ரெண்டு மூண்டு நாளிலை ஆக்களைக் காணேலாது. வெளி மாவட்டத்தில இருந்து சண்டைக்காக வாற பெடியள் எண்டு கந்தையா அண்ணை ஒருமுறை அப்பாவின் காதில் கு…
-
- 0 replies
- 467 views
-
-
மஞ்சள் சுவாலை (சிறுகதை) .................................................... அன்று நாங்களொரு தீர்மானத்திற்கு வந்திருந்தோம். பரந்தனில் இருந்து கரடிப்போக்கு சந்தியை நோக்கி ஜீவனேசன் தன் லுமாலாவை வேகமாக மிதித்துக்கொண்டிருந்தான்.நான் அவனுக்கு உதவியாக பெடல் போட்டபடி அவனுக்கு பேச்சு கொடுத்து கொண்டிருந்தேன். இடைக்கிட அவன் வியர்வை என் கன்னத்தில் சிந்தியது . மூச்சிரைக்க என்னை ஏற்றிக்கொண்டு கரடி போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இருக்கும் வயல் வெளியின் எதிர்காற்றுக்கு ஈடுகொடுத்து சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தான் ஜீவனேசன்.அவன் பருத்த தேகத்தின் பலத்திற்கு முன்னால் எதிர்காற்று ஒரு பொருட்டல்ல என்றே தோன்றியது எனக்கு “டேய் குண்டா எனக்கு பயமாகிடக்கு ” “ஏன் டா” “மாட்டினம் உ…
-
- 0 replies
- 745 views
-
-
Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இரு…
-
- 0 replies
- 427 views
-
-
-
மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்! | நிஜம் - நிழல் - புனைவு அடங்கிய புதிய ஆன்லைன் தொடர் | ஆறு வருடங்கள் கழித்து அவளிடமிருந்து இப்படி போன் கால் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ''ஹலோ'' குரல் கேட்ட சில நொடிகளிலேயே அவள்தான் என்பதை உணர முடிந்தது. ஆனால், நம்ப முடியாதவனாய் சிறிது நேர மவுனத்துக்குப் பின் ஹலோ என்றேன். பரஸ்பரம் நல விசாரிப்புகளுக்குப் பிறகு, எதையோ சொல்ல வந்தவள் தயங்கித் தயங்கி நின்றாள். அந்த ஒரு நிமிடத்துக்குள் நான் அவளை... முதன்முதலாகப் பார்த்த 22 வயசுப் பையனாகவே மாறியிருந்தேன். நெருடல் உடைத்து சரளமாகப் பேசினேன். ''மணி கிட்டே பேசினேன்'' என்றாள். …
-
- 0 replies
- 1.8k views
-
-
நள்ளிரவு. மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள், தைரியத்தை வர வழைத்துக் கொண்டு ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘நில்..! நெருங்காதே, என்னைக் கொல்லப் போகிறாயா?’ என்றாள். ‘ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாத்! நீ உயிரோடு இருக்கக் கூடாது!’ நெருங்கினான். ‘இதோ பார், நான் கொரானாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப் பட்டிருக்கேன்…! உனக்கும் தொற்று பரவிவிடப் போகிறது…! உன் கையால் சாவது எனக்கு சந்தோஷம்தான். நான் சாகலாம்..! ஆனால், நீ சாகக்கூடாது. உன்னை எந்த அளவு காதலித்திருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.!’ அவள் பேசப் பேச, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, …
-
- 0 replies
- 700 views
-
-
முடிவற்ற கண் – ஜிஃப்ரி ஹாசன் அதிகாலை ஆரவாரங்களுக்கிடையே மனிதக் குரல் போல ஒரு சத்தம் தொனித்தது. அந்தரித்து வெளியேறும் ஈனக் குரல் போன்ற ஒலி. வாசலில் ஒரு சிறுமி பிளாஸ்டிக் வாளியுடன் நின்றிருந்தாள். அவளது ஒருபக்க கன்னம் தீயில் வெந்து சதைகள் உருக்கி வார்த்த ஈயக்குழம்பாட்டம் பொத்தென்று நின்றது. ஒரு கண் இருக்கிறதா இல்லையா என்பதை நன்றாக உற்றுப் பார்த்தால்தான் விளங்கும் போல் இருந்தது. அந்தப் பக்கப் புருவமும் சீரின்றி தழும்பு போல தெரிந்தது. இலேசாக தலை ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு சீரற்ற அசைவு போலிருந்தது. பேசும் போது எதையோ மென்று முழுங்குவது போல தொண்டை அசைந்தது. சில கணங்கள் திடுக்கிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பஷீர். வீட்டுக்கூரையில் காகங்கள் எழுப்பும் சன்னத ஒலியை…
-
- 0 replies
- 455 views
-
-
பிறழ்வு ( சிறுகதை ) : ஜீ.முருகன் அது நடிகை மோனிகா பெலூச்சிதான். ஒரு கட்டிலில் அவள் அமர்ந்திருக்கிறாள். மரக்கட்டிலா இரும்புக்கட்டிலா ஞாபகம் இல்லை. மேக்கப் பூசிய அந்த முகம், உதட்டுச் சாயம் சற்றே கலைந்த உதடுகள், வெறுமையான கைகள், கீழாடை விலகி வெளிர்ந்த தொடையுடன் நீண்டிருக்கும் கால்கள்… அதற்குக் கீழே அவன் அமர்ந்திருக்கிறான், ஆமாம் கீழேதான். அவன் சொல்கிறான், “இப்படியும் சில அழகிகள் இருக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் கொஞ்சம் பகட்டாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். இதில் தப்பில்லை…” சற்று தள்ளி முறத்தில் ஏதோ புடைத்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா சிரிக்கிறாள். மோனிகா பெலூச்சியைப் பார்த்து அவன் கேட்கிறான், “உங்களை முத்தமிட்டுக்கொள்ளலாமா?” அவன் …
-
- 0 replies
- 1.3k views
-
-
பகையின் உச்சக்கட்டம்: ஆலடி அருணா கொலை வழக்கு | நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்? வடக்கன்குளம் S.A ராஜா என்பவர் பல கல்லூரிகள் நடத்திவந்தார். அவருக்கு போட்டியாக ஆலடி அருணா கல்லூரி திறக்க முடிவு செய்தார். அங்கு ஆரம்பித்தது பகை. அது விஸ்வரூம் எடுக்க 31.12.2004 ஆலடி அருணா கொலை செய்யப்பட்டார். இறுதியில் ராஜா விடுதலையும் ஆனார்.
-
- 0 replies
- 1.4k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 5) ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதுதான் நான் செய்த பெரும் பிழை. எவ்வளவோ அடி, உதை சித்திரவதைகளைச் சுமந்தவன் அன்றைக்கும் பல்லைக் கடித்தபடி அவர்களின் தாக்குதலைத் தாங்கி இருக்கலாம். இல்லையேல், அவர்களின் தாக்குதலில் உயிரையே விட்டிருக்கலாம். ஒப்புதல் வாக்குமூலம்... உலுக்கும் உண்மைகள்! ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதுதான் நான் செய்த பெரும் பிழை. எவ்வளவோ அடி, உதை சித்ரவதைகளைச் சுமந்தவன் அன்றைக்கும் பல்லைக் கடித்தபடி அவர்களின் தாக்குதலைத் தாங்கி இருக்கலாம். இல்லையேல், அவர்களின் தாக்குதலில் உயிரையே விட்டிருக்கலாம். அன்றைக்கே மண்ணோடு மண்ணாகிப் ப…
-
- 0 replies
- 857 views
-
-
பார்வதி (2007 ஜூன் 28, குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு கச கசா வித்துக்களைப் போட்டு சர்பத் செய்து தந்தாள். மிகவும் அழகான பெண்ணுடல் ஒன்று ஆணின் நடையில் செல்வதை நான் பார்த்திருந்தேன்.” பார்வதிக்கு 36 வயதுதான் ஆகிறது. EPRLF இலிருந்து விலகிய ஒருவரைத் திருமணம் செய்திருந்தாள். அந்தக் காலத்தில் அவள் கோராவலியில் வாழ்ந்தாள். குடும்பி மலையடிவாரத்தில் காணப்படும் ஒரு ஊர் இதுவாகும். 1990 ஆண்டுக் கலவரத்தின் போது வீடுவாசலைக…
-
- 0 replies
- 814 views
-
-
நான் - A அவள் - Z By பட்டுக்கோட்டை பிரபாகர் | 'ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!' - என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்? எனக்கு கவிதைகளே அலர்ஜி, அவள் மனதுக்கு அவை தான் சாப்பாடு. வீடா ஹவ் ஸ்மார்ட்! ஹவ் இன்டெலிஜெண்ட்! என்ன என்னவோ நிறைய படிப்பாள். அந்த ஆசிரியர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. வேதா ரொம்ப சிம்பிள். ஐ- ப்ரோ கூட வைத்துக் கொள்ள மாட்டாள். மாவு அப்பா மாட்டாள். உதட்டை ரணப்ப…
-
- 0 replies
- 526 views
-
-
"குடும்பத் தலைவி" என்னுடன் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான், இன்று என் அண்ணாவை திருமணம் செய்யப் போகிறவர். அவளின் பெயர் 'தமிழ்', அவள் படிப்பிலும் அழகிலும் சாதாரணமே. ஆனால் நல்ல பண்பாடும் மற்றும் கலைகளிலும் ஈடுபாடு உள்ளவள். நான் அதற்கு எதிர்மாறு. படிப்பிலும் மற்றும் அழகிலும் முன்னுக்கு நிற்பவன். அதனால் கொஞ்சம் இறுமாப்பும் உண்டு. படிக்கும் காலத்தில் நான் அவளை கணக்கிலேயே எடுப்பதில்லை. சிலவேளை கொஞ்சம் அவள் கவலை அடையக் கூடியதாக, பலரின் முன்னிலையில் பகிடி கூட செய்துள்ளேன், அவள் அது எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து, பொருட் படுத்தாமலே விட்டு விடுவாள். நான் இறுதி பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, உதவி விரிவுரையாளராக அதே பல்க…
-
- 0 replies
- 860 views
-
-
கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ₹250 கடன் வாங்கினான். சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான் . சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டாள். . மனைவியிடம்..நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான். மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... கணவனின் பல மன்றாடுதலுக்குப்பிறகு மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை . 1). *Rs. 2 5 0* 2). *Rs. 2 5 0* ------------------ *Rs. 4 10 0* ------------------ ஆக மொத்தம் ர…
-
- 0 replies
- 545 views
-