கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
முயல் சுருக்கு கண்கள் - சிறுகதை அகரமுதல்வன் - ஓவியங்கள்: செந்தில் மிகப்பரந்த மாலையில் நடந்துவரும் கிழவருக்கு, மெலிந்த அந்தியின் ஒளி மேற்கில் இருந்து கூசியது. ஒரு சாயலில் கண்களை மூடித் திறந்தார். கோடுபோல நடந்துபோகும் தனது நிழலை ஊடறுத்துப் பறக்கும் மணிப்புறாவைப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை. மணிப்புறாவின் அலகில் கிழவர் தொங்கி நின்றதைப்போல அந்தரத்தின் அழகு நிழல் காட்டியது. பாலையின் குரலாகத் தொய்வற்று முன்னேறும் அவரின் பின்னே, நடந்துபோகும் அமலனின் வலதுபக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உடும்பு. மூச்சிரைக்க நடக்கும் அவன் காலடிக்கு இடையில் காடு பெருகுகிறது. கிழவர், காலைக் கழுவி, குதிக்காலைத் திருப்பிப் பார்த்து வீட்டுக்குள் சென்றார். உடும்பை வ…
-
- 0 replies
- 2.9k views
-
-
உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்…
-
- 0 replies
- 820 views
-
-
கலைமகள் ராமரத்னம் குறு நாவல் போட்டி-2011 பரிசு பெற்ற கதை 1983ம் ஆண்டு யூலை மாதம் நடந்த சம்பவத்தை எழுத்தாளர் குரு அரவிந்தன் கதையாக்கியிருக்கின்றார். . அது கொழும்பு துறைமுகம்… ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்க…
-
- 0 replies
- 716 views
-
-
சமூகக்குற்றம்! எழுதியவர்: கடல்புத்திரன் ராதா,வாகனத்தில் கண்ணுக்கு நேரடியாக சூரிய ஒளி வருவதை தடுப்பதற்காக உள்ள மேல்பகுதி மட்டையை இழுத்து விட்டான். கைத்தோலில் படும் வெய்யில் பூதக்கண்ணாடியினூடாக வருகிற மாதிரி சுடுகிறது. 'டாக்ஸி'யில் இருக்கிற ஓட்டி 'ஒவனு'க்குள் இருக்கிற மாதிரி துன்பப்பட வேண்டியிருக்கிறது.பின்னால் இருக்கிறவர்களுக்கு ஒருவித சொகுசுப் பயணம். 'டாக்ஸி' விரைவு வீதியில் விரைந்து கொண்டிருந்தது.'பிளக்பெரி' வந்த பிறகு பயணியின் தொண தொண அலட்டல்கள் எல்லாம் இல்லை. எங்கட பிரச்சனையே தீறவில்லை. இவர்களூக்கு எங்கட அரசியலும் தெரியாது.அதை அறிவதிலும் அக்கறை காட்டுவதில்லை . இவன் தனக்கென கீறின வட்டத்தை விட்டு வெளிய போவதில்லை. இந்த நிலையில் இவன்ட வியாபாரமும் பிரச்சனையும், எமக்கு மட்…
-
- 0 replies
- 728 views
-
-
வீட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ஒரு திருப்தி இருக்கவில்லை. ஏன் அந்த அதிருப்தி என்றும் விளங்கவில்லை. சில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. அடிமனதில் உறைந்துபோன வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் திருப்தியீனத்துடன் வெளியே செல்வதற்கு விருப்பமில்லை. அப்படிச் செல்லாமல் இருப்பதற்கும் இயலவில்லை. மிக முக்கியமான காரியம். அதனை எப்படித் தவிர்த்துவிட இயலும்? தவிர்த்து விட்டு பின்னர் அதற்கென்ன நியாயம் சொல்லிக் கொள்ளலாம். அவன் மனம் அவனுக்குப் புரியவில்லை. மனதின் விந்தை விளையாட்டு இதுதான். இதனை விளையாட்டென்று சொல்ல இயலாது. மனதின் எச்சரிக்கையாகவும் அது இருக்கக்கூடும். அந்தச் சமிக்ஞை, முன்னெச்சரிக்கை என்ன என்று உணராது, மீறி நடந்து, ஆபத்தில் போய் வீழ்ந்துவிடவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒத்தக் கம்மல் காது - அல்லிநகரம் தாமோதரன் ‘‘ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்...’’ சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன. கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே அரட்டைக் கச்சேரிதான் மிரட்டிக் கொண்டிருந்தது. சிவகாமிக்கும் இந்தச் சம்பவம் ஆச்சரியத்திற…
-
- 0 replies
- 766 views
-
-
எங்க ஊர் -கலைச்செல்வி ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ‘‘நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ் பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்...’’ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர். சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரப் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில…
-
- 0 replies
- 1k views
-
-
ஒருபோதும் தேயாத பென்சில் - சிறுகதை வண்ணதாசன் “வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு'' - உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ''கீச்சுன்னு கதவு திறந்து மூடின சத்தம்கூட நிக்கலை. அதுக்குள்ள எப்படி ராஜி வீடு பிடிச்சுப்போச்சு?'' என்று அவளை உட்காரவைக்கப் போவதுபோல், தன் பக்கம் இழுத்துச் சேர்த்துக்கொண்டு சந்திரா நின்றாள். சந்திராவுக்கு ஏற்கெனவே பெரிய கண்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாகி அவை ராஜியை அகலமாகப் பார்த்தன. ''பாருங்க அணில் குஞ்சு மாதிரியே தோள்ல தொத்த ஆரம்பிச்சுட்டா'' என்று ராஜி என்னிடம் சொன்னபோது பிடித்து இருந்தது. ஓர் அணிலாக சந்திராவை நினைத்துப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. நரை விழ ஆரம்பித்து இருந்த 60 வயது அணி…
-
- 0 replies
- 2.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் கடன் ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை. - நந்தகுமார் மனசு 'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ. - வி.வெற்றிச்செல்வி தீர்ப்பு நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!” - விகடபாரதி புரிதல் கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை. - வேம்பார் மு.க.இப்ராஹிம் பேய…
-
- 0 replies
- 1.7k views
-
-
தந்திரம் ‘‘மாப்பிள்ளையோட லேட்டஸ்ட் தனி போட்டோ இல்லையாம். ஃபிரண்ட்ஸோட இருக்கிற குரூப் போட்டோதான் இருக்காம். கொடுத்தாங்க. இதுல நடுவில இருக்கிறவர்தான் மாப்பிள்ளை... ஓகேயானு சொல்லுங்க!’’ என்று தரகர் நீட்டிய போட்டோவை வாங்கிப் பார்த்தார் வெங்கட். நண்பர்கள் மத்தியில் பார்க்கிறார் போல் இருந்தார் மாப்பிள்ளை. ஓகே சொல்லி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. உள்ளேயிருந்து ‘விர்’ரென வந்த ஜா போட்டோவை வெடுக்கெனப் பிடுங்கிப் பார்த்தாள். அவள் உதடு பிதுங்கியது. ‘‘இது ஒரு தந்திரம் டாட்! ரொம்ப குள்ளமா வத்தலும் தொத்தலுமா கன்னம் ஒட்டி இருக்கிறவங்க மத்தியில நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா, சுமார் மூஞ்சி குமாருகூட பார்க்கிறாப்புலதான் தெரிவான்! அதான் தனி போட்டோ தராம, இப்பிடி ஒரு …
-
- 0 replies
- 1.4k views
-
-
மழை நண்பன் - சிறுகதை ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். 'ஏன் நான் வரலையா? நீயெல்லாம் அவ்ளோதான்!’ என்பான். ''15 நாள் இம்ப்ளிமென்ட் புரொகிராம். பெங்களூர் வர்றேன். உன் அட்ரஸ் சொல்லு'' - மாலை வேளை ஒன்றில் அலைபேசியில் அழைத்தான். ''முதல்ல உன் ஆபீஸ் எங்கேனு சொல்லு!'' ''பெலந்தூர்ல!'' ''அய்யோ நான் ஒயிட் ஃபீல்ட்ல இருக்கேன். அது ரொம்பத் தூரம். நீ அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஒரு காமன் பிளேஸ்ல மீட் பண்ணலாமா?'' பெங்களூர் வந்ததும் சத்யா திரும்பவும் அழ…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் ஃபிகராம் ஃபீகர்! ப் ளஸ் டூ படிக்கிற தன் மகன் சுரேஷ§க்கு டெர்ம் ஃபீஸ் கட்டிவிட்டு வெளியே வந்தார் பாஸ்கரன். மாணவி கள் மார்போடு ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
கைபேசிக்குள் நுழைந்த கடல் திமிங்கலம் அப்படியொரு ராட்சச ஜந்துவை இதுவரை அவன் பார்த்ததில்லை. அதன் பிளந்த வாயில் இருந்து கூரிய பற்கள் நீட்டிக் கொண்டு இருந்தன. சற்றுமுன் அதன் வாய்க்குள் விழுந்த இரையைக் கடித்து விழுங்கியதற்கான ரத்த வாடை அவனைச் சுற்றி பரவிக் கொண்டிருந்தது. ஆனாலும் பசி தாளாமல் இவனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது, அந்த ஜந்து. "நிச்சயமாக இந்த ஜந்துவுக்கு இரையாகிவிடுவோம்' என்றதொரு பயம் இவனை முழுமையாகப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஜந்துவிடமிருந்து தப்பிக்கும் லாவகம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. அதை அவன் விரும்பவில்லை. அதே சமயம் மாட்டிக்கொள்ளவும் விருப்பமில்லை. இன்னத…
-
- 0 replies
- 1.1k views
-
-
குடை - க.கலாமோகன் வீதியில் இறங்கும்போது அது துக்ககரமான நிழலைக் கொண்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. காலநிலைச் செய்தியை நேற்று கேட்டிருந்தால் இன்று காலை மக்கராக இருக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்குமா? டிவி தரும் காலம் பற்றிய சாத்திரத்த்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம். வெயிலென அது சொன்னால் அன்று குளிர். அது குளிர் என்றால் சூடு. இந்த நிழல் தோற்றம் கூட சுவையானது. மனதை மப்பும் மந்தாரமுமான ஓர் வெளிக்குள் இழுத்துச் சென்றுவிடும். மனித நடமாட்டங்களை இருள் நிறத்துள் பார்க்கும்போது ஓர் மத்திய காலச் சுவாசிப்புக்குள் நான் நுழைந்துவிடுவதுண்டு. என்றும்போல வீதியில் நிறைய அசைவுகள். திடீரென மழை பெய்யத்தொடங்கியது. "அசிங்கமான காலம்" என மழையைத் திட்டியபடி பலர் என்னைக் கடந்து …
-
- 0 replies
- 1.7k views
-
-
காளீஸ்வரன் “அக்கா… அக்கோவ்” சற்றே தயக்கம் தொனித்தாலும் வலுவாக எழுப்பப்பட்ட குரல் குமரேசனின் தூக்கத்தைக் கலைத்தது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை சரிப்படுத்திக்கொண்டு, படுத்தவாறே அண்ணாந்து கெடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு. கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெரிவது பூஜையறை. தலைவாசல் நெலவும் பூஜையறை நெலவும் கிட்டத்தட்ட ஒரே அகலம். வீட்டுக்குள் நுழையும்போதே பூஜையறையும் அதன் மையமாய் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனி முருகன் படமும் கூடவே குமரேசனின் குலதெய்வம் படமும் தென்படும். பூஜையறையை ஒட்டியபடி அகன்ற ஆசாரம். எப்போதுமே ஆசாரத்தில் படுப்பதுதான் குமரேசனின் விருப்பம். குமரேசன் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் பார்த்தான். சாமியறை முன்பாக அம்மிணியக்கா ந…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
"காதல் அழிவதில்லை" யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில் சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்ப…
-
- 0 replies
- 465 views
-
-
"வறுமையின் நிறம் சிவப்பு" கொழும்பு, காலி முக திடலில், வறுமையை ஒழிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து ஐம்பது நாள் தாண்டியும் மக்களின் போராட்டம் முடிவற்று இன்னும் தொடர்கிறது. சிவப்பு கொடிகள், கருப்பு கொடிகள் பல அங்கு மக்கள் ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) செய்கிறார்கள். கருப்பு கொடி துக்கத்தை குறிக்கும் என்றாலும், சிவப்பு கொடி எதற்க்காக ?. கூட்டத்தில் நானும் ஒருவனாக இன்றுதான் இணைந்தேன். என் மனதில் முதல் தோன்றியது அது தான். ஏன் சிவப்பு ? எல்லோரையும் பார்க்கிறேன், அவர்களின் வறுமை எல்லையை தாண்டி இருப்பதை அவர்களின் கண் காட்டுகிறது. கோப ஆவேசத்தில் அது சிவந்து இருப்பதை காண்கிறேன்! மா சே துங் [M…
-
- 0 replies
- 578 views
-
-
மலரின் மலரும் கதைகள் வரிசையில் 2 வது கதை. தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம் இது. பெற்றோரும், பேரர்களும் தொலைக்காட்சிகளின் முன்னே தொலைந்துவிட, செல்போன்களில் சிக்கிக்கொண்ட சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை. இவ்வாறான நிலையில் புதியகதை சொல்லியாக வருகிறாள் மலர்.
-
- 0 replies
- 533 views
-
-
தேக வலை - சிறுகதை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம் அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்…
-
- 0 replies
- 2.9k views
-
-
எனக்கு 'அகிலா'வைப் பிடிக்கும் ரிஷபன் திருவானைக்காவல்வாசியான எனக்கு 'அகிலா'வைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. புதிதாய் டிரையினிங்கிற்கு வந்திருந்த நான்கு பெண்களில் அகிலாவும் ஒருத்தி. ரோஸ்மேரி, அகிலா, வனஜா, தமிழ்செல்வி நான்கு பேரும் எதிரில் நிற்க என்னை அறைக்குள் அழைத்த என் பாஸ் அகிலாவைக் காட்டினார். "யூ டேக் கேர் ஆஃப் ஹர்" என்றார். பார்த்த உடன் முதலில் பதிவான தகவல்கள் இரண்டு. அகிலா சற்று அமைதியான சுபாவம். பெரிய அகலமான ஆழமான கண்கள். "உங்களுக்கு ஏதாச்சும் நிக் நேம் உண்டா, ஸ்கூல் டேய்ஸ்ல " என் அறைக்கு வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி. மனசுக்குள் 'முட்டைக் கண்ணு' அகிலா கேள்வி புரியாமல் விழித்தபோது கண்கள் இன்னும் அழகாய்…
-
- 0 replies
- 625 views
-
-
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை ஜெயமோகன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யாநட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு `அது சாத்தியமா?' என்ற சந்தேகம்தான் எனக்கு முதலில் எழுந்தது. பையில் இருந்து செல்பேசியை எடுத்து கணக்கிடத் துடித்த விரல்களை, கஷ்டப்பட்டுத் தான் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டி யிருந்தது. கணக்குகள் போடப்படும்போது எல்லா கதைகளும் தப்புக்கணக்காகி நின்றிருக்கும் துயரத்தை, நானும் பலமுறை அனுபவித்தவன்தான். விசித்திரமாகவோ, விபரீதமாகவோ நமக்கு ஏதாவது நிகழும்போதுகூட, பத்து நிமிடங்களுக்கு மேல் மகிழ்ச்சி அடைய முடியாதபடி அவை அனைத்தும் பலமுறை பொதுத் தகவல் குவியத்தில் எழுதப்பட்டு பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருப்பதைக் காணும் ஏமாற்றம் நிறைந்த சூழலில் வாழ…
-
- 0 replies
- 949 views
-
-
வியாபாரத்தில் தர்மம் பார்க்கலாமா? http://www.muthukamalam.com/images/2021/vegetablesaleswomen.jpg தெருவொன்றில், ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு சென்றாள் . வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிட்டு, "ஒரு கட்டு கீரை என்ன விலை...?" என்று கேட்டாள். "ஐந்து ரூபாய்" என்றாள் கீரைக்காரி. “ஐந்து ரூபாயா...? மூன்று ரூபாய்தான் தருவேன்... மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டுப் போ" என்றாள் அந்தப் பெண்மணி. "இல்லம்மா... அந்த விலைக்கு வராதும்மா" என்றாள் கீரைக்காரப் பெண். “அதெல்லாம் முடியாது. மூன்று ரூபாய்தான்...” பேரம் பேசினாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறித…
-
- 0 replies
- 433 views
-
-
கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. ‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான ப…
-
- 0 replies
- 732 views
-
-
12/21/2022 மனத்தடை எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are! எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வ…
-
- 0 replies
- 656 views
- 1 follower
-
-
ஒரு நிமிடக் கதைகள் வல்லவன் வல்லவன் செ ல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி. “சார், சொல்லுங்க சார்!” “ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு என் சிஸ்டம் ஹேங் ஆயிருச்சு. என்ன பண்றது?” ‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர்’ என்று மன…
-
- 0 replies
- 1.5k views
-