Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அந்தரச் செடி - சிறுகதை விஷால் ராஜா - ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகம் முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, எதிர்வீட்டு வாசலில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதைக் கவனித்தேன். அந்த இடத்தில் இரைச்சலோடுகூடிய பதற்றமான அசைவுகள் தெரிந்தன. எனக்கு முதலில் அக்கறைகாட்டத் தோன்றவில்லை. கூட்டத்தை விலக்கிச் சென்ற ஒருவர், கடப்பாரையால் கதவை உடைத்துத் திறக்க முயல்வதைக் கண்டதும்தான் எனக்கும் தீவிரம் உறைத்தது. பைக்கை நிறுத்திவிட்டு அங்கே சென்றேன். வாசல் தூணையொட்டி பிரமைதட்ட நின்றிருந்தார் வீட்டுக்காரர். குழப்பத்திலும் பயத்திலும் எதையோ பற்றிக்கொள்ளத் தேடுவதுபோல் அவர் கண்கள் அகல விரிந்திருந்தன. அத்தனை பெரிய ஆகிருதி கையறுநிலையில் நிற்பதைப் பார்க்கவே கூசியது. நிர்க்கதி மிகுந்து பரித…

  2. மலர்களை அணைத்து... மன்மதி காலையில் ஆபீசுக்கு பத்து நிமிடம் லேட். லிஃப்ட் கதவைத் திறந்து வைத்து, ஸ்டூலில் ஆபரேட்டர் சித்திரக் கதை படித்தான். அவள் லிஃப்டினுள் நுழைந்து "5' என ஒரு கதவு மூடி, இன்னொன்றும் மூட இருந்தது. வியூ ஃபைண்டரில் பார்த்து, கதவுகளைத் திறந்து ஓர் ஆளை அனுமதித்தான் ஆபரேட்டர். வந்த ஆள் "3' என்றான். லிஃப்ட் ஏறியது. அவனின் இடதுகை சரியாகத் தொங்கவில்லை என்பதை மன்மதி கவனித்தாள். புஜம் அருகிலேயே விரல்கள் முளைத்திருந்தன. அவன் மன்மதியைப் பார்த்து, ""எக்ஸ்கியூஸ் மி'' என்றான். ஒரு கடிதம் தந்தான். அதற்குள் லிஃப்ட் மூன்றாவது மாடியில் பொருந்தி நின்றது. "" ஸீ யூ'' என்று அவன் புன்னகைய…

  3. Started by நவீனன்,

    புகழேந்தி! விஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டு படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்ததைக் கூற வேண்டுமா? ஷாஜகானின் குணாதிசயங்களை ஒன்று விடாமல் சொல்ல வேண்டுமா? நாசர் காலமா? சீசர் வீரமா? எல்லாமே அவனுக்கு மனப்பாடம். சுருங்கச் சொன்னால் அவனே ஒரு சரித்திரப் புத்தகம். இலக்கியத்திலே எது பற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும்? எதற்கும் தயார். கவிதைத் துறையிலே கம்பனா? ஷெல்லியா? காளிதாசனா? டென்னிசனா? பைரனா? பாரதியா ? யாரைப் பற்றியும் கருத்துரைகள் வழங்குவதிலே அவனுக்கு நிகர் யாருமில்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கவிதா…

  4. பரபாஸ் - ஷோபாசக்தி “பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” (மத்தேயு 27:18) நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது. சந்தியாப்புலத்தின் மணலில் மனிதர்களின் வெற்றுப் பாதங்கள் பதிந்து இருபத்தொரு வருடங்களாகின்றன. படையினரின் பூட்ஸ் தடயங்கள் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் பதிந்திருக்கின்றன. கால்களால் நடந்து செல்லும் மிருகங்கள்கூட சந்தியாப்புலத்தில் கிடையாது. வயிற்றினால் ஊர்ந்து போகும் ப…

  5. Started by anni lingam,

    மீண்டும் ஒரு தடவை குப்புற படுத்துக் கனவுகண்ட இந்தியக் கனவான்களின் வல்லரசுக் கனவு எனும் கோவணம் கழன்று உலக அரங்கில் அம்மணமான கோலம் அரங்கேறியது.அதுதான் பீகார் பள்ளிக் குழந்தைகளின் மரணம். வீதிகள் எங்கும் அழுக்கு'கங்கையில் பிணவாடை'கிராமங்கள் தோறும் நோய் பசி மூதாட்டி முதல் சிறு குழந்தைவரை பாலியல் துன்புறுத்தல்கள். இத்தனை அழுக்குகளையும் உள்ளாடைகளுக்குள் வெளியே அழகான ஆடைகளுடன் அரசியல் நாடகம் ஆடியவர்களை நாடு வீதிகளில் வைத்து அம்மணமாக்கினர் அந்தச் சிறுகுழந்தைகள்.அநேக குழந்தைகள் மதிய உணவுக்காகவே பள்ளிக்கு சென்றிருப்பார்.அவர்களுக்கு மரண உணவு கொடுத்தது இந்திய அரசியல் கூட்டம்.ஒவ்வொரு மரணமும் எவ்வளவு கொடுமை என்பது நாம் அறிவோம்.அதிலும் குழந்தைகளின் மரணம் சோகத்தின் உச்சம்.பிள்ளைகளே உங்கள…

  6. பொன்மனசசெம்மல் எம்ஜிஆர் அவர்கள் லணடன் வாணெலியில். தமிழீழ மக்களின் நெஞ்சங்களை ஆக்கிரமித்க்குடிகொண்ட மக்கள் திலகத்தின் பேட்டி நன்றி சின்னக்குட்டி பேட்டியைக் கேட்க http://sinnakuddy1.blogspot.com/2010/01/mgr.html

    • 0 replies
    • 1.5k views
  7. இலுப்பைப் பூ ரகசியம் இலுப்பைப் பூ ரகசியம் தமயந்தி ப ண்ருட்டி வழியாகப் போகும்போது காற்றில் சிறகு கட்டி அலைந்த இலுப்பைப் பூவின் வாசம் ஏனோ அமுதாவை நினைவு படுத்தியது. அமுதாவும் நானும் அந்தப் பெண்கள் விடுதியைவிட்டு வெளியேறியது ஒரு துரதிர்ஷ்டம் சார்ந்த சுவாரஸ்யமான அனுபவம். ஓர் அதிகாலையில், எங்கள் அறைக்குள் இருவர் நின்றிருந்தனர்.அன்றைக்கு நான் 12 மணிக்கு மேல் தூங்கியதாக ஞாபகம். எங்கள் அறையிலிருந்த காமாட்சிதான் மு…

  8. எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவைக்க அவளால் கூடவில்லை. அங்கேயே நடந்திருந்ததும், வெவ்வேறுஇடங்களில் நடந்ததாய்க் கேட்டிருந்ததுமான அதுபோன்றசம்பவங்கள்கூட எம்மாவுக்கும் சண்முகநாதனுக்குமிடையே உள்ளோடியிருந்த மனவுணர்வைப் புரிந்துகொள்ளபோதுமானவையல்ல என்பதாய் அவளுக்குத் தெரிந்தது. பழகியவர்களும் புரிந்திட முடியாதளவு அதில் புதிர்கள் நிறைந்து கிடந்தன. அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் ஆறு வருஷ அனுபவத்தில் ஒரு ஆணினதும் பெண்ணினதுமான நெருக்கத்தில் எழுந்த கதைகள் வெறும் வதந்திகளாய்க் கரைந்தழிந்ததை அவள் நிறையக் கண்டிருந்தாள். இருந்தும் அவர்கள் விஷயத்தில்ஏதோவொன்று இருக்…

  9. பூதக்கண்ணாடி கதையாசிரியர்: ஜே.பி.சாணக்யா பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப…

  10. இமயமலை பஸ் டிக்கெட் - சிறுகதை சிறுகதை எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சின்னரேவூப்பட்டியைக் கடந்து கம்பத்துக்குப் போகும் பேருந்தின் சத்தத்தில் சங்கரன் கண் விழித்தான். ஆலமரத்தைத் தாண்டி ரோட்டு வளைவில் பேருந்து சென்றது, அதன் ஹெட்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. சங்கரன் பிளாஸ்டிக் குடத்தில் இருந்த நீரை அள்ளி முகம் கழுவியபோது ஊரில் இருந்து கும்பலாக பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். கூடைகளைத் தங்களது கக்கத்தில் இடுக்கியபடி நடந்துவருவதை சங்கரன் பார்த்தான். கோழிக்கொண்டைப் பூக்களும் செவ்வந்தியும் தோட்டத்தில் மலர்ந்து விட்டது. பூ எடுக்க கூலியாட்கள் போகிறார்கள். அவர்களுக்குப் பின்பாக இரண்டு எருமைகள் அசைந்து அச…

  11. மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் - ஒரு பகுதி உங்களுக்காக! “வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்...” - இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டி கைதூக்கி விடும் வெள்ளந்திப் படைப்பாளி. மனதை மென்சிறகால் வருடும் உன்னத எழுத்து அவருக்கு வாய்த்த வரம். ஆனந்த விகடன் இதழில் 7.11.2007 முதல் 4.6.2008 வரை ”அகம் புறம்” என்ற தலைப்பில் வண்ணதாசன் எழுதிய அனுப…

  12. நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் "பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள

    • 0 replies
    • 2.4k views
  13. மேப்படியான் புழங்கும் சாலை - சிறுகதை சிறுகதை: ஏக்நாத் - ஓவியங்கள்: ஸ்யாம் கம்பிக்கூண்டு இருக்கும் லாரி, தெருவுக்குள் இருந்து ஆடி ஆடி வந்து ஆழ்வார்க்குறிச்சி செல்லும் சாலையில் வளைந்து நின்றது. லாரியின் பின்னால் வந்த வன அதிகாரியின் ஜீப், இப்போது ஓரமாக ஏறி முன்பக்கம் வந்து நின்றது. ஜீப்பில் இருந்த பெண் அதிகாரி இறங்கி, லாரியைச் சுற்றிப் பார்த்தார். டிரைவரிடம், ``எல்லாம் சரியா இருக்குல்லா?’’ என்று கேட்டார். அவன் தலையை ஆட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில், முன்னால் நின்ற தொரட்டுவிடம் கையைக் காட்டிவிட்டு ஜீப்பில் ஏறிக்கொண்டார். ஊர்க்காரர்கள், எக்கி எக்கி லாரிக்குள் இருக்கும் கூண்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது தெரிய…

  14. மேஜர் சபர்வால் என்பவர் இந்திய இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடிமருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும் கூட. இவர் தனது அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும் ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்! ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக…

  15. பிராது மனு - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம் கொளஞ்சியப்பர் கோயிலுக்குள் வந்த தங்கமணி, சீட்டு கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஓர் ஆளிடம் கேட்டாள். அவன் சொன்ன மாதிரியே நடந்து சீட்டு கட்டுகிற இடத்துக்கு வந்தாள். ஒரு வன்னிமரத்தைச் சுற்றி, ஆள் உயரத்துக்கு இருபது முப்பது சூலங்கள் ஊன்றப்பட்டி ருந்தன. ஒவ்வொரு சூலத்திலும் ஐந்நூறு, ஆயிரம் சீட்டுகள் கட்டப் பட்டிருந்தன. சூலத்தில் இடம் இல்லாததால், கட்டப்பட்டிருந்த சீட்டுகளின் நூலிலேயே கொத்துக்கொத்தாக சீட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். தான் கொண்டுவந்திருந்த சீட்டை எந்த சூலத்தில் கட்டுவது எனப் பார்த்தாள். குண்டூசி குத்துகிற அளவுக்குக்கூட காலி இடம் இல்லை. …

  16. பாஸ்வேர்டு சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தன. சாலையைக் கடக்க வழி கிடைக்காமல், ஐந்து நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்தனர். அது சாலையைக் கடப்பதற்கான தடம் அல்ல. வாகனங்களுக்கு இடையே அரிதாக இடைவெளி விழும்போது, தற்கொலை முயற்சிபோல பாய்ந்து சென்று சாலையைக் கடந்துவிட வேண்டும். ஆனால், இடையில் வெளியே இல்லாத வாகனச் சுவர். சற்று தூரத்தில் சிக்னல் இயந்திரம் இருந்தது. ஆனால், அது வேலைசெய்யவில்லை. போக்கு வரத்து போலீஸாரும் இல்லை. இரண்டு பேருக்காகப…

  17. வால்வாயணம் - சிறுகதை தென்றல் சிவக்குமார் - ஓவியம்: ரமணன் “உங்க அபார்ட்மென்ட்ல சிசிடிவி இல்லையா?” “இருக்குப்பா... அது எதுக்கு இப்ப?” - திகிலுடன் நான். “சிம்பிள்டி... டேப்ஸ் எடுத்துப் பார்த்துட்டு அதை ப்ரூஃபா வெச்சு லோக்கல் போலீஸ், இல்லன்னா மகளிர் காவல் நிலையம், அதுவும் வேணாம்னா ஹ்யூமன் ரைட்ஸ் வரைக்கும்கூட காக்ரோச் பண்ண முடியும்...” ‘அப்ரோச்’ என்று அவள் சொன்னதுதான் குழப்பத்தின் ஏதோ ஒரு சுழற்சியில் எனக்கு ‘காக்ரோச்’ என்று கேட்டது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சுதாரிப்பதற்குள், “நம்ம கீதாவோட தம்பி லாயர்தான்... நா வேணா பேசிப் பார்க்கவா...” என்று அடுத்த சுற்றைத் தொடங்கினாள். வேறு வழியே இல்லாமல் “செகண்ட் கால்ல வினோத் வராருப்பா... அப…

  18. பாடம் ‘‘எதிர் வீட்டுல இருக்கறவங்க நம்மகிட்ட தாயா புள்ளையா பழகுறாங்க. அவங்க மனசு வருத்தப்படுற மாதிரி நடந்துக்கலாமா?’’ - மனைவி கடுகடுத்தாள். ‘‘விஷயத்தைச் சொல்லு?’’ ‘‘அவங்க பையன் நாலு நாளைக்கு முன்னாடி உங்ககிட்ட சைக்கிள் இரவல் வாங்கிப் போனானாம். போன இடத்துல சாவியைத் தொலைச்சுட்டு பூட்டை உடைச்சி எடுத்துக்கிட்டு வந்தானாம். ‘புதுப் பூட்டு வாங்கி சைக்கிளை சரி பண்ணிக் கொடுத்துட்டுப் போ’ன்னு கறாரா சொன்னீங்களாமே! வேலைக்குப் போகாத பையன்கிட்ட பணம் ஏது? வீட்ல காசு வாங்கி புதுப் பூட்டு போட்டிருக்கான். அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே சொல்லி வருத்தப்பட்டாங்க...’’ ‘‘அப்படியா? நான் போய் மன்னிப்புக் கேட்டு வர்றேன்’’ எனக் கிளம்பினேன். ‘‘வாங்க சார்’…

  19. ஒரு மனிதன் பல கதைகள்! கே.எஸ்.சுதாகர் மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டி…

  20. தமிழனை மீட்கும் ஆண்டு 19/01/2009 -------------------------------------------------------------------------------- பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் தந்த ஆண்டாக 2008ஆம் ஆண்டு கடந்து 2009 என்னும் புதிய ஆண்டில் தடம்பதித்திருக்கிறோம். இந்த புதிய ஆண்டு பெரும்பாலும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும் என பல்வேறுபட்ட தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது எந்தளவிற்கு சாத்தியப்பாடானதாக அமையும்? அவ்வாறு சாத்தியப்பாடானாலும் அது எந்தவகையில் அமையும்? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்பொழுது உலகமெங்கும் இருக்கும் கண்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும், எமது விடுதலைப் போராட்டம் உச்சக்கட்ட நிலையை எட்டியிருக்கும் இந்த நிலையில், தம…

  21. அவள். அவன். அப்புறம்..... அப்புறம் ............................................... என்ன ஒண்ணுமில்லை சரி ஒண்ணுமில்லையா ஆமா ஒண்ணுமில்லை சரி வைச்சிடறேன் வைக்கப் போறியா நீ தான் ஒண்ணுமில்லைன்னு சொல்றியே ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லைன்னு அர்த்தமா அதுக்கென்ன அர்த்தம் ஒண்ணுமில்லைன்னு (சிரிக்கிறாள்) நீ தானே என் பொன்வசந்தம் ஏன் ப்ளாப் ஆச்சுன்னு இப்ப தெரியுது என்ன தெரியுது? ஏன் நீயும் தானே படம் பார்த்தே நான் பார்த்தேன். எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா ஏன் ப்ளாப் ஆச்சு ம்ம்ம்ம்ம். நீ நூறு தடவை பார்க்கலை, அதனால. இல்ல நீ ப்ளாப்புக்கு காரணம் சொல்லு ஒண்ணுமில்லை என்னது இல்ல படத்துல ஒண்ணுமில்லைனு சொன்னேன். …

    • 0 replies
    • 1.7k views
  22. ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1 முதலில் சில வார்த்தைகள். சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்த…

  23. நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம். ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார். யோகி அல்லவா!…

    • 0 replies
    • 1.8k views
  24. சீட்டாட்டம் by எஸ். ராமகிருஷ்ணன் இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும், அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.