Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு வழங்கப்படும் பல்லோன் தோர் (Ballon d'Or) தங்கப் பந்து விருதை தொடர்ந்து நான்காவது ஆண்டாக அர்ஜெண்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி வென்றுள்ளார். பார்சலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கு விளையாடிவரும் மெஸ்ஸி, அந்த அணிக்காக விளையாடும் இத்தாலியின் அந்த்ரெஸ் இனியஸ்தாவையும், ரியல் மட்ரிட் கழகத்துக்காக விளையாடும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை முந்திக்கொண்டு இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டில் மட்டுமே 91 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் நடந்த வைபவத்தில் மெஸ்ஸியே விருதுக்குரியவர் என்பது அறிவிக்கப்பட்டது. பல்லோன் தோர் விருதை தொடர்ந்து நான்கு முறை வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையைய…

  2. உலகின் தலைசிறந்த வீரராக இருக்கவே விருப்பம்: வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே எப்போதும் தாம் விரும்புவதாக இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பாலி உம்ரீகர் விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த விருதை மூன்றாவது முறையாக பெற்ற வீராட் கோஹ்லி கூறுகையில், நான் எப்போதும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பதையே விருப்புகிறேன். அது சாத்தியமாக, மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் சிறப்பான செயல்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங…

    • 0 replies
    • 421 views
  3. உலகின் நம்பர் 1 அணி என்று ஆஸி. நிரூபித்து விட்டது: பிரியாவிடை பேச்சில் பிரெண்டன் மெக்கல்லம் கடைசி முறையாக நியூஸிலாந்து அணியை வழிநடத்திச் செல்லும் மெக்கல்லம். | படம்: ஏ.பி. நியூஸிலாந்து கேப்டனும் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம்மின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ரன்களை 38.64 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ள மெக்கல்லம், அதிகபட்ச ஸ்கோராக 302 ரன்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். இதில் 12 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இந்த ரன்களில் 776 பவுண்டரிகளையும் 107 சிக்சர்களையும் சாதித்துள்ளார் மெக்கல்லம். 198 கேட்ச்களை பிடித்ததோடு 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 2004-ம் ஆண…

  4. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா: என்ன காரணம்? முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங்,'அடிலெய்ட் டெஸ்ட் தோல்வியை பார்க்கும் போது,இந்தியா இந்த தொடரில் ஒயிட் வாஷ் ஆகிவிடும்' என தெரிவித்திருந்தார்.ஆனால் நடந்ததே வேறு. https://www.facebook.com/BBCnewsTamil/videos/398622391203863 புதிய உச்சம் - சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி. எப்படி சாத்தியமானது இந்த வெற்றி? 36 ரன்களில் ஆல் அவுட் ஆன அணி தொடரை வென்றது எப்படி? https://www.facebook.com/186742265162/videos/413423799768237/

    • 0 replies
    • 646 views
  5. உலகின் பணக்கார கால்பந்து அணிகளுக்கு இப்போது இவர்கள்தான் குருநாதர்கள்! கிளப் கால்பந்து வரலாற்றில் பார்சிலோனா ரியல்மாட்ரிட் அணிகளுக்கிடையேயான 'எல்கிளோசிகோ 'மோதல் பிரசித்தி பெற்றது. ஸ்பெயினில் கட்டலான் மாகாணத்தை பிரித்து தனிநாடாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலு பெற இந்த 'எல்கிளாசிகோ' மோதலும் ஒரு காரணமாக நிச்சயமாக இருக்கும். எல்கிளாசிகோவில் பார்சிலோனா வெற்றி பெற்று விட்டால் அன்று அந்த நகரமே அல்லலோப்படும். உடனடியாக நகரில் குவியும் லட்சக்கணக்கான மக்கள், கட்டாலானை பிரித்து தர வேண்டுமென்று கோஷம் எழுப்புவார்கள். மொத்தத்தில் ஸ்பெயின் அரசியலே எல்கிளாசிகோ மோதலால் அலறும். அதேவேளையில் ரியல் வெற்றி பெற்று விட்டால், ஹாலா மாட்ரிட் என்ற கோஷம் எழும்பும். எனினும் சமீ…

  6. உலகின் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வு டெலாய்ட் நிறுவனம் வருமானம் அடிப்படையில் உலகின் தலைசிறந்த பணக்கார கால்பந்து கிளப்-ஐ தேர்வு செய்தது. இதில் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் மான்செஸ்ர் யுனைடெட் அணி 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 10-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 2016-17 சீசனில் ஈட்டிய வருமானம் அடிப்படையில் கிளப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. யூரோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 1. மான்செஸ்டர் யுனைடெட் (676.3 மில்லியன்) 2. ரியல் …

  7. உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆண்டர்சன்: இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம் டிரெவார் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலகின் மிகச் சிறந்த பவுலராக வலம் வருகிறார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவார் பேலிஸ் கூறினார். இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஓராண்டில் அதிக அளவில் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையொட்டி அதிக பயிற்சி ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. இதுவும் அந்த அணி தோல்விகளைப் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கல…

  8. உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர் யார் தெரியுமா? பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கு இன்று 43வது பிறந்தநாள். இந்த தருணத்தில் அவரை பற்றிய சில அரியத் தகவல்கள் இங்கே... ஜினடேன் ஜிடேன் பிரான்ஸ் நாட்டின் ஹீரேவாக கருதப்படுபவர். கடந்த 1998ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும், 2000ஆம் ஆண்டு ஐரோப்பா கோப்பை கால்பந்து போட்டியிலும் இவர் தலைமையில் பிரான்ஸ் கோப்பையை வென்றது ஜினடேனுக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை கிடையாது. ஆனாலும் உலகின் மிகச்சிறந்த முஸ்லீம் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜிடேன் தனது மனைவி வெரோனிகா ஃபெர்னான்டசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் ஜிடேன் வெரோனிக்காவை சந்தித்ததார். இந்த த…

  9. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் உருவாகிறது குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக இருக்கிறது. இந்தியாவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மோதிராவில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானமும் ஒன்று. இந்த மைதானத்தை உலகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பழைய மைதானத்தை இடித்து புதிய மைதானத்தை கட்டுவதற்கான வேலையை லார்சன் அண்டு டூப்போ (L…

  10. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விடவும் பெரியதாக இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. இந்திய ரூபாவில் சுமார் 700 கோடி செலவில் கட்டப்படும் இம் மைதானம் குறித்து கூறியுள்ள குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமள் நாத்வானி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டம். இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டி கண்டுகளிக்க வசதி இருக்கும். என்று தெரிவித்துள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட பெரிய இந்த மைதானத்தி…

  11. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம…

  12. உலகின் முதல்நிலை வீரராக வில்லியம்ஸன் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில், துடுப்பாட்டத் தரப்படுத்தலின் முதலிடத்தை, நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த நியூசிலாந்துத் தலைவர் பிரென்டன் மக்கலம், 'அரசர்" என வில்லிம்ஸனை வர்ணித்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வது போல, சிறிதுநேரத்தில் வெளியான தரப்படுத்தலில், உலகின் முதல்நிலை வீரராக வில்லிம்ஸன் அறிவிக்கப்பட்டார். முதலிடத்தில் ஜோ றூட், இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். புதிய தரப்படுத்தலின்படி, கேன் வில்லியம்ஸன், ஜோ றூட், …

  13. உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி: விஸ்டன் இதழ் புகழாரம் கடந்த 2016-ம் ஆண்டின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக விராட் கோலியை விஸ்டன் அறிவித்து அவருக்கு புதிய மகுடத்தை சூட்டியுள்ளது. இந்திய அணியில் தற்போது சூப்பர் மேனாக திகழ்ந்து வருபவர் கேப்டன் விராட் கோலி. ரன் எடுக்கும் எந்திரம் என்று தற்போது எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் மேலும் இவரது ரன் குவிக்கும் வேக சூடுபிடித்தது. நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து மற்ற…

  14. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரேயொரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளதாக ‘போர்ப்ஸ்’ (Forbes) பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உலகின் அதிக சம்பளம் பெறும் வீரராக உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ப்ளோய்ட் மேவெதர் (Floyd Mayweather) முதலிடத்தையும், கால்பந்து உலகின் நட்சத்திர ஜாம்பவான்களான லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் உலகில் அதிக…

  15. உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…

  16. உலகிலேயே கூலான கேப்டன் யார்? ஷாகித் அஃப்ரீடி பதில் படம்.| அகிலேஷ்குமார் கேப்டன்சியில் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் செயல்படுபவர் தோனி என்பது உலகறிந்த விஷயம், என்ன பதற்றமான சூழலிலும் அவர் கிரிக்கெட்டை அணுகும் விதம் அறிவின்பாற்பட்டதால் எளிதில் உணர்ச்சிவயப்பட மாட்டார். அவர் சிந்திக்கும் கேப்டன் என்பது பலரும் அறிந்ததே. இந்நிலையில் கனடாவில் உள்ள டொராண்டோவில் தன் சொந்த கிரிக்கெட் கிளப்பைத் தொடங்கிய ‘பூம் பூம்’ அப்ரீடி ஒன் லைனர் பதில் அளிக்கும் கேள்விகளை எதிர்கொண்டார். அதில் அவரிடம் உலகிலேயே கூலஸ்ட் கேப்டன் யார் என்று கேட்கப்பட்டது, உடனே பட்டென்று அதற்கு எம்.எஸ்.தோனி என்று பதில் அளி…

  17. உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் யாரால் அடிக்க முடியும்? by : Anojkiyan உலகிலேயே ரி-20 கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் முதல் வீரராக, இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இருப்பார் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் வீரர் பிரட் ஹோக் கூறியுள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் இரட்டைச் சதம் அடித்துள்ளார்கள். ஆனால், ரி-20 போட்டிகளில் எந்த வீரரும் இன்னும் இரட்டைச் சதம் அடிக்கவில்லை. அவுஸ்ரேலிய அணியின் ஒருநாள் தலைவர் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் சேர்த்த போதிலும் இரட்டைச் சதம் அடிக்…

  18. உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை November 09, 2015 கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான துடுப்பு மட்டை எது தெரியுமா? நியூயோர்க்கில் நடைபெற்ற முதலாவது சகல நட்சத்திரங்களின் ஆட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நட்சத்திரங்களும் கையொப்பமிட்ட இந்த துடுப்புமட்டைதான். நியூயோர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=3224&cat=2

    • 1 reply
    • 880 views
  19. உலகி்ன் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதுகள்: பத்து ஆண்கள், பத்து பெண்கள் முன்மொழிவு 2016-10-21 14:36:59 சர்­வ­தேச மெய்­வல்­லு­நர்கள் சங்­கங்­களின் சம்­மே­ள­னத்­தினால் வரு­டாந்தம் ஏற்­பாடு செய்­யப்­படும் வரு­டத்தின் அதி சிறந்த ஆண் மெய்­வல்­லுநர், பெண் மெய்­வல்­லுநர் விரு­து­க­ளுக்­கான பெயர்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. இந்த இரண்டு விரு­து­க­ளுக்கும் முறையே பத்து ஆண் மெய்­வல்­லு­நர்­க­ளி­னதும் பத்து பெண் மெய்­வல்­லு­நர்­க­ளி­னதும் பெயர்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. சர்­வ­தேச மெய்­வல்­லுநர் சங்­கங்­களின் சம்­மே­ளனப் பேரவை உறுப்­பி­னர்கள், சம்­மே­ள­னத்தில் அங்கம் வகிக்கும் அமைப்­களின் உறுப்­பி­னர்கள், சமூக ஊடக வாயி­லாக இர­சி­கர்கள…

  20. கால்பந்தாட்ட சூதாட்டங்கள் ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சூதாட்டங்கள் பெருமளவில் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் கிட்டத்தட்ட 400 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக சந்தேகம் இருப்பதாக யூரோபோல் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது. அதே அளவான எண்ணிக்கைகொண்ட மேட்ச்-ஃபிக்சிங் சூதாட்டங்கள் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடந்துள்ளதாக பல நாடுகளையும் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய யூரோபோல் தெரிவித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டித் தொடர், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடருக்கான …

  21. உலகை உதையாலும் வெல்லலாம்! (வீடியோ) கடந்த 2015 -ம் ஆண்டு ஜுலை மாதம் நடந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அமெரிக்க அணி ஜப்பான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த அமெரிக்க வீராங்கனை கார்லி லாயிடுக்கு மகளிர் பிரிவுக்கான 'பல்லான் டி ஆர்' விருது வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிராக ஆஃப் லைனில் இருந்து லாயிட் அடிக்கப்பட்ட அற்புதமான கோல் இது.! http://www.vikatan.com/news/sports/57587-carli-llyod-wins-womens-ballon-dor.art

  22. ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை இவருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. ப…

  23. உலகை உலுக்கிய விளையாட்டு மைதான மரணங்கள்! இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 125 போ் உயிரிழந்த நிலையில், இதேபோன்று கடந்த காலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கிய சம்பவங்கள் குறித்த விவரம்: ஜன. 20, 1980 கொலம்பியாவில் காளைச் சண்டையைப் பாா்ப்பதற்காக மரத்தால் அமைக்கப்பட்ட நான்கடுக்கு பாா்வையாளா்கள் காலரி இடிந்து விழுந்ததில் 200 போ் உயிரிழப்பு. அக். 20, 1982 ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கால்பந்து மைதானத்திலிருந்து ரசிகா்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் 62 போ் உயிரிழப்பு. மே 28, 1985 பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரசிகா்களுக்கு இடையே ஏற்பட்ட வ…

    • 2 replies
    • 688 views
  24. உலகை நெகிழ வைத்த ஒரு சந்திப்பு: ஹைதரும் ரொனால்டோவும்! பெய்ருட் நகரில் அண்மையில் ஐ.எஸ். இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஹைதர் அலி என்ற 4 வயது சிறுவன், பெற்றோரை இழந்து அனாதையானான். கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹைதருக்கு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் ஹீரோ. ஹைதர் குறித்து சர்வதேச பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணி, ஹைதரை இரு நாட்களுக்கு முன், மாட்ரிட் நகருக்கு அழைத்து வந்தது. தற்போது ரியல்மாட்ரிட் அணியின் கவுரவ விருந்தினராக தங்கியுள்ள ஹைதர், நேற்று தனது ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் சந்தித்தான். அப்போது ஹைதரும், ரியல்மாட்ரிட் அணிக…

  25. உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். உலுக்கும் உபாதைகளால் அவதிப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் அண்மைய நாட்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், சிலவேளைகளில் அடுத்துவரும் சிம்பாவே தொடருக்கான அணியில் இளையவர்கள் அழைக்கப்படலாம் எனும் கருத்து வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சேனநாயக்கவை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்,ஆயினும் அவரும் இன்னும் குணமாகவில்லை என அறியக் கிடைக்கிறது. இலங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.