விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
அடுத்த SAGஇல் இந்தியாவை வீழ்த்துவோம் – கபடி வீரர் SINOTHARAN By Admin - நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா (SAG) ஆண்களுக்கான கபடியில் முதல்தடவையாக வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்த இலங்கை கபடி அணியின் நட்சத்திர வீரர் கணேசராஜா சினோரதனுக்கு விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன், தனது வெற்றி குறித்து The Papare.com இற்கு தெரிவித்த கருத்தை இந்த காணொளியில் பார்க்கலாம். http://www.thepapare.com/video-eastern-kabaddi-star-sinotharans-arrival-the-sag-2019-tamil/
-
- 1 reply
- 552 views
-
-
பரபரப்புக்கு பறக்கும் டிவி நிருபர்கள்: கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே விளாசல் ஹர்ஷா போக்ளே | படம்: பாக்ய பிரகாஷ் தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு ஒன்லைனர்களுக்காக அலைந்து திரிந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு இணங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் தொகுப்பாளர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இன்று டிவி நிருபர்களின் சில கேள்விகளில் கடும் எரிச்சலடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சற்று முன் திரும்பினேன். அதன் பிறகு நான் மனவருத்தத்தில் ஆழ்ந்தேன். அதாவது நான் தொந்தரவுக்குள்ளானேனா அல்லது விளையாட்டில் த…
-
- 2 replies
- 552 views
-
-
சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக விளையாடும் புதிய அணிகள்: செவ்வாய்க்கிழமை தெரியும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட இரண்டாண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு பதிலாக இரு புதிய அணிகளை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுப்பதற்காக கடும்போட்டி நிலவியது. இந்நிலையில், டெண்டர் படிவங்களை பெறும் கடைசி திகதி கடந்த 30-ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் இந்த இரு புதிய அணிகளுக்கு யார் உரிமையாளர்களாக போகின்றார்கள்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் இரசிகர்களிடையே மேலோங்கி வருகின்றது. அதிகமான விலைப்புள்ளி கோரி, இந்த டெண்டரை பெறும் அணிகள் அதன்பின்னர் ஏலம் முறையில் தத்தமது அணிக…
-
- 0 replies
- 552 views
-
-
தேசிய நகர்வல ஓட்டத்தில் மலையக வீரர் சிவராஜனுக்கு வெண்கலப் பதக்கம் By Mohammed Rishad விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடுசெய்துள்ள 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் முதல் தடவையாக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். கடந்த வருடத்தைப் போல இம்முறையும் தேசிய நகவர்ல ஓட்டப் போட்டிகள் இன்று (15) காலை நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது. எனினும், கடந்த மாதம் …
-
- 0 replies
- 552 views
-
-
உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய வீழ்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளினால் ஒரு நிலையான அணியை தெரிவு செய்ய முடியாமல் போனமையும் ஒரு முக்கிய காரணம் என்பது நிதர்சன உண்மையாகும். பொதுவாக உலக விளையாட்டு அரங்கினை நோக்கும்போது அவ்விளையாட்டுக்களில் ஜாம்பவான்களாக கொடி கட்டிப் பறந்த மற்றும் பறக்கின்ற பல வீரர்களை நோக்கினால், அவர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் வீதம் மிக மிகக் குறைவு. அதற்கு உதாரணங்களாக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விராத் கோஹ்லி, கால்பந்து உலக…
-
- 0 replies
- 552 views
-
-
உலகக்கோப்பை: அதிரடி பேட்களுக்கு வருகிறது கட்டுப்பாடு உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பயன்படுத்தப்படும் மட்டைகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது. நவீன விதிமுறைகளின்படி, ஆட்டம் ஒரேயடியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகி, பவுலர்களை கோமாளியாக்கி வருகிறது என்ற விமர்சனங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுபற்றி ஐசிசி தலைமை அதிகாரியும் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “பிரமாதமான ஷாட்களை ஆடிவரும் டீவிலியர்ஸ், குமார் சங்கக்காரா, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வீர்ர்கள் மீது யாருக்கும் எந்த வித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற வீரர்கள் அசாதாரணத் திறமை உடையவர்கள் இவர்கள் சிக்சர்க…
-
- 1 reply
- 552 views
-
-
ஜெர்மனி கேப்டன் ஓய்வு ஜூலை 18, 2014. பெர்லின்: ஜெர்மனி கால்பந்து அணி கேப்டன் பிலிப் லாம், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில், ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரில் ஜெர்மனி அணியின் கேப்டனாக பிலிப் லாம், 30, செயல்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, இவரது ஏஜென்ட் ரோமன் கிரில் தெரிவித்தார். சிறந்த தற்காப்பு ஆட்டக்காரரான இவர், ஜெர்மனிக்காக இதுவரை 113 போட்டிகளில் பங்கேற்று 5 கோல் அடித்துள்ளார். பேயர்ன் முனிக் அணியுடனான இவரது ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை உள்ளதால்…
-
- 1 reply
- 551 views
-
-
சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தியது பார்சிலோனா சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #UCL #Barcelona #Chelsea சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஒரு போட்டியில் பார்சிலோனா - செல்சியா அணிகள் மோதின. இரண்டு லெக்காக நடைபெறும் இந்த சுற்றின் முதல் ஆட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி செல்சிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. 2-வது லீக் நேற்று நள்ளிர…
-
- 1 reply
- 551 views
-
-
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெறுகிறது. குறித்த போட்டியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிரிஸ் கெய்ல் விளையாடும் 300வது போட்டியாகும். இந்த போட்டியில் அவர் 9 ஓட்டங்களை பெறும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனை வீரரான பிரையன் லாராவின் 10,405 என்ற இலக்கை முறியடிக்க முடியும். அதேவேளை, இன்றைய போட்டிக்கு முன்னதாக, கனடாவில் இடம்பெற்ற குளோபல் இருபதுக்கு இருபது தொடரில் கெய்ல் ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களையும் 94 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக இந்திய தொடரில் அவர் முழு அளவில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, …
-
- 2 replies
- 551 views
-
-
செய்தித்துளிகள்: டி 20 ஆட்டங்களுக்கு சர்வதேச அந்தஸ்து சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோரும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறினார்கள். 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை உலகக் கோப்பை டி 20 தொடராக நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. 50 ஓவர் வடிவிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே கலந்து கொள்ளும். இம்முறை டி 20 உலகக் கோப்பை தொடராக நடத்தப்படுவதால் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து கொள்ளும் …
-
- 0 replies
- 551 views
-
-
காசாவிற்கு ஆதரவான செய்தி - ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடுவேன் - உஸ்மான் கவாஜா காசாவிற்கு ஆதரவான செய்திகளை வெளிப்படுத்தக்கூடாதுஎன்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் உஸ்மன் கவாஜாதெரிவித்துள்ளார். குரலற்றவர்களிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் ஐசிசியின் உத்தரவிற்கு எதிராக போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதனை தெரிவித்துள்ள உஸ்மான் கவாஜா தனது செய்தி அரசியல் செய்தியல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் தன்னை ஏசுவதற்காக தன்னுடன் தொடர்புகொள்பவர்களே பெரும் பிரச்சினையாக உள்ளனர் எனவும் தெரிவித்…
-
- 0 replies
- 551 views
-
-
விளையாட்டாய் சில கதைகள்: செஸ் பாதி பாக்ஸிங் பாதி செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளை யாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ் பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்து கொள்வோம். வீரர்களின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் …
-
- 0 replies
- 551 views
-
-
பிளட்டருக்கு 90 நாட்களுக்கு இடைக்காலத் தடை? சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விவகாரத்தால், அச்சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத் தலைவர் மைக்கல் பிளட்டினி இருவருக்கும் 90 நாள் இடைக்காலத் தடை விதிக்கப்படுமெனத் தெரியவருகிறது. இவ்வாறானதொரு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், பெப்ரவரியில் இடம்பெறவுள்ள பீபா தேர்தலுடன் பதவி விலகவுள்ள பிளட்டர், தனது 17 வருடகாலப் பதவியின் இறுதிப் பகுதியை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டவராகவே நிறைவு செய்ய வேண்டியேற்படும். மறுபுறத்தில், பிளட்டரின் இடத்துப் போட்டியிட எதிர்பார்க்கும் பிளட்டினியின் வாய்ப்புகளுக்கும் இது எதிரானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 1 reply
- 550 views
-
-
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, தொடரை சமநிலையில் முடித்த பங்களாதேஷ் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியானது பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கிலும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தது. அத்துடன் இவ் விரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள…
-
- 0 replies
- 550 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 100 வது வெற்றி பெற்றது பங்களாதேஷ். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் அரங்கில் பங்களாதேஷ் அணி தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய 3 வது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (118), சபிர் ரஹ்மான் (65) ஆகியோர் கைகொடுக்க பங…
-
- 0 replies
- 550 views
-
-
ஒற்றைக் காலுடன் உசேன் போல்டுக்கே சவால் கொடுத்த சாம்பியன்! உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் தொடரில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சார்ந்த ஜானி பீகாக். பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சபட்சத் தொடர். வாழ்க்கையில் எத்தனையோ இழந்தாலும் …
-
- 0 replies
- 550 views
-
-
இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது இலங்கை அணிக்கு பயிற்சியளிப்பதற்கு மஹேல ஜயவர்தனவால் தற்போதைக்கு முடியாது என்றும், தேசிய அணியொன்றுக்கு பயிற்சியாளராவதற்கு அவருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அதேபோல் அவருடன் விளையடிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளையாடி வருவதால் அவரை உடனடியாக பயிற்சியாளராக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்பிலிருந்து நேற்றும…
-
- 3 replies
- 550 views
-
-
வீரர்களை மோசமாக திட்டி அசிங்கப்படுத்திய பயிற்சியாளர்: கெவின் பீட்டர்சன் குற்றச்சாட்டு கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் அந்த விளையாட்டை மையப்படுத்தி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், விக்கெட் கீப்பர் மேட் பிரையர், மூத்த பந்து வீச்சாளர்கள் ஆகியோர் சகவீரர்களை மோசமாக திட்டியதாகவும், வீரர்களின் அறையில் எப்போதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும். வீரர்களை திட்டி அச்சுறுத்தும் புதிய கலாச்சாரத்தை ஆண்டி பிளவர் புகுத்தியதாகவும் பீட்டர்சன் குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இருநாடுகளுக்கு இடையிலான ஆயுதம் ஏந்தாத போராக அந்நாட்டு தீவிர கிரிக்கெட் ரசிகர்களால் ப…
-
- 0 replies
- 550 views
-
-
இலங்கையுடன் இணையும் இந்தியா ; ஐ.சி.சிக்கு எதிர்ப்பு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் “டு டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய கிரிக்கெட் சபையின் முடிவினை வரவேற்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் சர்வதேச அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. எவ்வாறாயினும் இந்த தீர்மானத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் பின்தங்கி இருக்கும் அணிகளுக்கு தீங்கு ஏற்படுவதோடு, ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்ற காரணத்தினால் இலங்கை கிரிக்கெட் சபை குறித்த “டு டையர் டெஸ்ட்” முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. …
-
- 0 replies
- 550 views
-
-
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை சனி, 30 ஜனவரி 2016 (17:52 IST) ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்திய கேப்டன் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது தோனி தலைமையிலான அணி. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் தோனி வசம் இரண்டு சாதனைகள் வந்துள்ளன. ஏற்கனவே தோனி அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் …
-
- 0 replies
- 550 views
-
-
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்- பிராவோ அறிவிப்பு மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். பிராவோ ஒருநாள் அணியி;ன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் நான் உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றுள்ளேன் என்பதை கிரிக்கெட் உலகிற்கு அறிவிக்க விரும்;புகின்றேன் என பிராவோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 14 வருடத்திற்கு முன்னர் நான் மேற்கிந்திய அணிக்காக எனது முதல்போட்டியை ஆடிய தருணம் நினைவிலுள்ளது என பிராவோ குறிப்பிட…
-
- 0 replies
- 550 views
-
-
618 விக்கெட்டுகள் எடுத்தால் அதுவே எனது கடைசி போட்டி: அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார். இதனால் உலகளவில் தலைசிறந்த வீரராகத் திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 292 விக்கெட்டுகளும் (சராசரி 25.26), ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளும் (சராசரி 32.91) வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து தொடர்களுக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. இவ்விகாரம் தொடர்பாகவ…
-
- 0 replies
- 550 views
-
-
லூயிஸ் சுவாரெஸ் 75 மில்லியன் பவுண்டுக்கு பார்சிலோனா அணிக்கு கைமாறினார் பார்சிலோனா, ஜூலை 11- லிவர்பூல் கிளப் அணியில் விளையாடி வந்த லூயிஸ் சுவாரெஸ் பார்சிலோனா அணிக்கு 5 ஆண்டுகள் விளையாடுவதற்காக 75 மில்லியம் பவுண்டுக்கு கைமாறியுள்ளார். பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மறக்க முடியாத போட்டி ஒன்று எதுவென்றால், அது இத்தாலி-உருகுவே அணிகள் மோதிய போட்டிதான். இப்போட்டியில் உருகுவே வீரர் சுராஸ் இத்தாலி வீரரின் தோள்பட்டையில் கடித்தார். இதனால் இவர் 10 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இது விஷயம் இல்லை. லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த இவரை பார்சிலோனா கிளப் அணி 75 மில்லியன் பவுண்டு கொடுத்து இப்போது வாங்கியுள்ளது. இந்த பணம் இந்திய மதிப்…
-
- 1 reply
- 550 views
-
-
2020 ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இலங்கையராக மெட்டில்டா கார்ல்சன் By Mohammed Rishad - ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச்சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக்கொண்டுள்ளார். சொப்பின் வீஏ (Chopin VA) என்ற பெயரைக்கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச்சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச்சவாரி சம்மேளனம்…
-
- 0 replies
- 550 views
-
-
பார்சிலோனாவை விட்டுச் செல்கிறார் மஷரானோ ஆர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்தாட்ட அணியின் பின்கள வீரரான ஸ்கேவியர் மஷரானோ, ஏறத்தாழ எட்டு ஆண்டுகளின் பின்னர் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவிலிருந்து விலகவுள்ளதுடன், சீன சுப்பர் லீக் அணியான ஹெபெய் சைனா போர்ச்சுனேட் அணியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலிடமிருந்து 17 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு 2010ஆம் ஆண்டு பார்சிலோனாவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்கேவியர் மஷரானோ இவ்வாரம் பார்சிலோனாவை விட்டு விலகவுள்ளார். பார்சிலோனாவுக்காக 334 போட்டிகளில் விளையாடி ஒரு கோலைப் பெற்ற ஸ்கேவியர் மஷரானோ, நா…
-
- 0 replies
- 550 views
-