விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
அனித்தாவுக்கு வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது (நெவில் அன்தனி) வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இவ்வருடம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தேசத்துக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமையும் புகழும் ஈட்டிக்கொடுத்த வடக்கு மாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வர்ண விருது விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அனித்தா இவ்வருடத்திற்கான வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு வழங்கப்படவுள்ளது. இவ் வருடம் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்…
-
- 1 reply
- 486 views
-
-
ஏமாற்றி, மோசடி செய்வதுதான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலையா? ஸ்டீவ் ஸ்மித் - REUTERS ப ந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும், ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மீதான கோபம் ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இன்னும் வடுவாகவே உள்ளது. இது விரைவில் மறக்கப்படக்கூடும் என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. சரி, பந்தை சேதப்படுத்துவதால் என்னதான் நிகழும், அதனால் குறிப்பிட்ட அந்த அணி எந்த வகையில் ஆதாயம் பெறும் என்பதற்கு விடை கண்டுபிடித்தால், அது வெற்றிக்காக குறுக்கு வழி பாதையில் பயணிப்பதையே தோலுரித்து காட்டுகிறது. வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எப்படியென்றால் ஏமாற்ற…
-
- 0 replies
- 486 views
-
-
வட மாகாண வல்லவன் தொடர்: சுப்பர் 8இல் நாவாந்துறை சென். மேரிஸ் பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு முதலாவது அணியாக நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது. நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் வதிரி மனோகரா விளையாட்டுக் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். மேரிஸ், முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அவ்வணி சார்பாக, மதிவதனன், அமிட்டன…
-
- 0 replies
- 486 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-25#page-12
-
- 0 replies
- 486 views
-
-
கால்பந்து மன்னர் பெலே காலமானார் பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார். 1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும். கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 197…
-
- 11 replies
- 486 views
- 1 follower
-
-
டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் புதிய உலக சாதனை அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் 278 ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். ஹஸ்ரத்துல்லாவின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=111610
-
- 0 replies
- 486 views
-
-
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11758
-
- 1 reply
- 486 views
-
-
தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …
-
- 0 replies
- 486 views
-
-
வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள் By T YUWARAJ 05 SEP, 2022 | 04:42 PM K.B.சதீஸ் வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (04.09.2022) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத…
-
- 3 replies
- 486 views
- 1 follower
-
-
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 569 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது. அதிகபட்சமாக பெல் 167 ஓட்டங்களும் மற்றும் பேலன்ஸ் 156 ஓட்டங்களும் குவித்துள்ளனர். இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகனே 54 ஓட்டங்களும் தோனி 50 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்நிலையில் 261 ஓட்…
-
- 0 replies
- 486 views
-
-
தாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற சொன்ன கபில்தேவ்! கடந்த 1986ஆம் ஆண்டு ஷார்ஜாவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் அது. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம் இந்திய வீரர்களின் டிரெஸ்சிங் அறைக்குள் வந்தார். அப்போது இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று இந்திய அணியின் கேப்டன் கபில்தேவுக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் டிரெஸ்சிங் அறைக்குள் தாவூத்தை பார்த்த கபில்தேவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, உடனடியாக வீரர்கள் அறையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். கபில்தேவை பார்த்து சிரித்துக் கொண்டே தாவூத் வீரர்கள் அறையை விட்டு வெளியேறி விட்டார். இந்த சம்பவம் குறித்து பின்…
-
- 0 replies
- 486 views
-
-
சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி 27-12-2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460 இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 …
-
- 0 replies
- 485 views
-
-
டெல்லி டி20 போட்டியின்போது வாக்கி டாக்கியை பயன்படுத்திய கோலி: ஐ.சி.சி. விதியை மீறினாரா? டெல்லியில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். இது ஐ.சி.சி. விதிமுறை மீறலா? என்ற விவாதத்தை எழுப்பியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது வெளியில் இருந்த கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிக்கொண்டிருந்தார். இதை பல செய்தி நிறுவனங்கள் படம் எடுத்தனர்.…
-
- 1 reply
- 485 views
-
-
அக்ரமைக் கடந்த டேல் ஸ்டெய்ன் சாதனையுடன் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா ராஸ் டெய்லரை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன். | படம்: ராய்ட்டர்ஸ். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 2-வது இன்னிங்சில் 195 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு சற்றே கடினமாக இருந்த நிலையில் கன மழை, மைதான நிலைமை காரணமாக கைவிடப்பட்டது. ரிச்சர்ட் ஹேட்லியை மீண்டும் பார்ப்பது போன்ற ஒரு அபாரமான ஸ்விங் பவுலிங்கை டேல் ஸ்டெய்ன் நேற்று வெளிப்படுத்…
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பாது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் ஓட்டங்களை 233 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் 234 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித் துடுப்பாட்ட வீரர்கள் சொப்ப ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப…
-
- 0 replies
- 485 views
-
-
சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜோன்சன் லீக் போட்டிகளில் விளையாடிவந்தார். 2016-17 பிக்பாஸ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அவர் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாகயிருந்தார். மேலும் ஜோன் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் உடல்உபாதைகள் தொடர்வதன் காரணமாக அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். என…
-
- 0 replies
- 485 views
-
-
குமார் சங்கக்காரவின் ஓய்வு நெருங்குகிறது இந்தியாவுக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் என கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் தேசிய தெரிவுக் குழுவினர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இடைக்கால சபை உறுப்பினர்களுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்புக்குப் பின்னரே குமார் சங்கக்காரவின் ஓய்வு குறித்த திட்டவட்டமான முடிவு அறிவிக்கப்படவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் மாத்திரமே தான் விளையாடவுள்ளதாக ஏற்கனவே குமா…
-
- 2 replies
- 485 views
-
-
வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடையலாம்: ஜோக்கோவிச் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்றுள்ள உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், கலெண்டர் கிரான்ட் ஸ்லாமைக் கைப்பற்ற முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரேயை எதிர்கொண்டிருந்த ஜோக்கோவிச், 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, தனது முதலாவது பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை வென்றிருந்தார். இதன்மூலம், நான்கு வகையான கிரான்ட் ஸ்லாம்களையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஜோக்கோவிச் பெற்றுக் கொண்டதோடு, தனது 12ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தையும…
-
- 0 replies
- 485 views
-
-
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/201210173131-covid-19-vaccinations-live-video-1-720x450.jpg 2020-21ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித்தின் முன்னைய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இந்த நியமனம் அமைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளநிலையில், இத்தொடரில் விளையாடும் தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், சரேல் எர்வி…
-
- 0 replies
- 485 views
-
-
40 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் மிகப் பெரிய துரதிர்ஷ்டசாலி யார் தெரியுமா....? பெங்களூரு: 40 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய துரதிரஷ்டசாலி என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரஹாம் கூச்சைக் கூறலாம். காரணம், அவரது வரலாறு அப்படி. உலக கிரிக்கெட் அணிகளிலேயே இங்கிலாந்து அணியைப் போல சோக வரலாறு கொண்டது எதுவும் இருக்க முடியாது. கிரிக்கெட்டின் தாயகமாக கூறப்படுவது இங்கிலாந்து. ஆனால் இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. மேலும் உலககக் கோப்பை வரலாற்றில் 3 முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட ஒரே அணி இங்கிலாந்துதான். அந்த மூன்று இறுதிப் போட்டியிலும் கிரஹாம் கூச்சும் ஆடியுள்ளார். இதுதான் மிகப் பெரிய சோகம். 1979 இறுதிப் போட்ட…
-
- 0 replies
- 485 views
-
-
121 மீட்டர் மெகா சிக்ஸர் அடித்த கிறிஸ் லின்! (வீடியோ) ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் லின் அடித்த சிக்ஸர் தற்போது வைரலாகி வருகிறது. ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஹோபர்ட் ஹரிக்கேன் அணி பேட்டிங் பிடித்தது. ஹரிக்கேன் அணியில் ஜோனாதன் வெல்ஸ், குமார் சங்கக்காரா, ஜார்ஜ் பெய்லி, டேனியல் கிறிஸ்டியன், ஸ்டூவர்ட் பிராட், ஷான் டெயிட் என நட்சத்திர வீரர்கள் இருந்தனர். பிரிஸ்பேன் அணியில் பவுலிங்கில் சாமு…
-
- 0 replies
- 485 views
-
-
தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி! உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அந்தவகையில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. லண்டனிலுள்ள கென்னிங்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 31…
-
- 0 replies
- 485 views
-
-
யாழ்ப்பாணம் இந்து. வென்றது கிண்ணம் யாழ்ப்பாணம் மாவட்ட பளுதூக்கல் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய பளுதூக்கல் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் துரையப்பா உள்ள விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 39 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணம் பளுதூக்கும் கழகம் 9 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும், மலாயன் சாண்டோ அணி 2 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றன. http://ut…
-
- 0 replies
- 485 views
-
-
சங்கா, மஹேலவை இன்று சந்திக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது அமைச்ர் கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலமாக அடைந்து வரும் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனமும் விளையாட்டுத்துறை அமைச்சரும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அ…
-
- 0 replies
- 485 views
-
-
வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ By Mohamed Shibly - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் …
-
- 0 replies
- 485 views
-