விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சாம்பியன்ஸ் லீக்: 100 கோல்களைப் போட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 100 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் பேயார்ன் மியுனிக் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டினார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாவது காலிறுதிப் போட்டி ரியல் மெட்ரிட் மற்றும் பேயார்ன் மியுனிக் அணிகளுக்கு இடையில் நேற்று (12) நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது…
-
- 0 replies
- 471 views
-
-
(பாகிஸ்தான், கராச்சியிலிருந்து நெவில் அன்தனி) தமது சொந்த மண்ணில் பத்து வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியினர் வெற்றியீட்டி தமது தேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இலங்கைக்கு எதிராக கராச்சியில் இன்று நிறைவுபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 263 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. வல்லவர் தொடர்களை 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தனதாக்கிக் கொண்டது. போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 212 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 16 பந்துகளில் மேலதிக ஓட்டம் எதுவும் பெறாமல் தனது எஞ்சிய 3 விக்கெட்களை இழந்து தோல்வ…
-
- 0 replies
- 471 views
-
-
பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி By Mohamed Shibly ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் ஒசாசுனா ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியை 4-1 என்ற கோல் கணக்கில் இலகுவாக வென்ற ரியல் மெட்ரிட் அணி லா லிகா புள்ளிப்பட்டியலில் 3 புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. யுனை கார்சியா தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் ஒசாசுனா அணி 14 ஆவது நிமிடத்தில் முன்னிலை பெற்றபோதும் ஐந்து நிமிட இடைவெளியில் இஸ்கோ மற்றும் …
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு உளவியல் ஆலோசகர் 2014-10-31 12:18:20 இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகரும் இங்கிலாந்தின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளருமான ஜெரெமி ஸ்னேப் என்பவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக இலங்கை வீரர்களினது ஆற்றல்களை அதிகரிக்கும் நோக்கில் ஜெரெமி ஸ்னேப்பை உளவியல் ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அஷ்லி டி சில்வா உறுதிபடத் தெரிவித்தார். இதேவேளை, இந்தியா…
-
- 0 replies
- 471 views
-
-
மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. " மகளிருக்கான; 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்…
-
- 0 replies
- 471 views
-
-
சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்! கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான். ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்…
-
- 0 replies
- 471 views
-
-
ஊக்கமருந்து பயன்படுத்தினார்களாம் வில்லியம்ஸ் சகோதரிகள் வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று, வில்லியம்ஸ் சகோதரிகள் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமொன் பைல்ஸ் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்தின் பட்டியலையும் செய்தியாக வெளியிட்டிருந்தது. இதனையடுத்து வில்லியம்ஸ் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட…
-
- 0 replies
- 470 views
-
-
அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அசோசியேட் அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழையும் புதிய திட்டத்தை ஐசிசி வகுத்திருப்பது வாக்கு அரசியலே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்பதாக அது அமையாது என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள பத்தி ஒன்றில் கூறியிர்ப்பதாவது: முதலில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணி, டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் ஆகியவற்றை முன்னேற்றும் வழியை ஐசிசி பார்க்கவேண்டும், புதிய அணியை இந்த நிலையில் கொண்டு வருவது அதன் வேலையாக இருக்க முடியாது. மேலும் புதிய அணி சேர்க்கை என்ற இந்த அலங்காரப் பேச்சு, மற்றும் திட்டம் ஏற்கனவே இருக்கும் அணிகளில் எதுவும் தகுதி இழக்கச் செய்யப்படமாட்டாது என்பதை தெளிவாக பறை சாற்றுகிறது. அயர்…
-
- 0 replies
- 470 views
-
-
திராவிட் பாணியில் ஆஸி. வீரர்களுக்கு டீன் ஜோன்ஸ் அறிவுரை பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்து வீச்சில் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலியா மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சனுக்கு அளித்த அறிவுரையை எதிரொலித்து டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது முதலில் வலைப்பயிற்சியில் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்காப்பு அணியாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ். இதே அறிவுரையைத்தான் ராகுல் திராவிட் தனது மின்னஞ்சலில் கெவின் பீட்டர்சனிடம் தெரிவித்தார்: “கால்காப்பு அணியாமல் விளையாடும் போது, காலுக்கு முன்னால் பேட்டைக் கொண்டு வந்து ஆட அதிகம் முயற்சி செய்வோம். மேலும் பந்தை …
-
- 0 replies
- 470 views
-
-
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா சம்பியன் பட்டம் வென்றுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் லாராவுக்கும், ராமோன் அல்வரேஸுக்கும் இடையே மின்னியாபொலிஸ் நகரில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாரா, 2 ஆவது சுற்றில் விட்ட சரமாரி குத்துகளால் நிலைகுலைந்த அல்வரேஸ் கீழே விழுந்தார். கடந்த 2018 இல் இழந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் பெற்றார் லாரா. https://www.virakesari.lk/article/63873
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்க…
-
- 1 reply
- 470 views
- 1 follower
-
-
விளையாட்டுத்துறை ஊழலை தடுக்கும் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம் By Mohammed Rishad - 13/11/2019 இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஆட்டநிர்ணயம், ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட குற்றங்களை புரிகின்றவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் சமர்பிக்கப்பட்ட விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற விசேட அமர்வின் போது இந்த சட்டமூல…
-
- 0 replies
- 470 views
-
-
டி20-யில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி சாதனை டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழக்காமல் 209 ரன்கள் குவித்து லாகூர் ஒயிட்ஸ் அணியின் கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ‘நேஷனல் டி20 கோப்பை’ தொடரில் லாகூர் ஒயிட்ஸ் - இஸ்லாமாபாத் அணிகள் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. லாகூர் ஒயிட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கம்ரான் அக்மல் - சல்மான் பட் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் நிலைத…
-
- 0 replies
- 470 views
-
-
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: சிம்பாப்வே அணி வெற்றி சிம்பாப்வே கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள சிம்பாப்வே அணி, பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்நிலையில் முதலாவதாக இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடர் நடைபெற்றது. இதில் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி, தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த் 3ஆம் திகதி சில்…
-
- 0 replies
- 470 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 NOV, 2023 | 12:04 PM ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இலங்கை நாணய மதிப்பில் 330 கோடி ரூபா) ஏலம் விடப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது. அதில், பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். குறித்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்ப…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
லாராவின் சாதனையை எட்ட 86 ரன்களே தேவை : சங்கடத்துடன் விடைபெற்றார் சந்தர்பால் ! மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஷிவ்நாராயண் சந்தர்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். சுமார் 22 வருடங்கள் கிரிக்கெட்டுடன் பயணித்த அவருக்கும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களை போல, ஓய்வு பெறும் தருணம் இனிப்பாக இல்லை. கடந்த 1994-ம் ஆண்டு சந்தர்பால், கினியாவில் நடந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக முதன் முறையாக களம் இறங்கினார். இந்த போட்டியில் சந்தர்பால் அரை சதம் அடித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவரது இறுதி டெஸ்ட் போட்டியும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே அ…
-
- 1 reply
- 470 views
-
-
அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள் அதிர்ச்சி முடிவுகளைக் கொடுத்த பிரீமியர் லீக்கின் இவ்வாரப் போட்டிகள் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளிற்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னராக, மீண்டும் தற்போது பிரீமியர் லீக் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் கடந்த நாட்களில் தமது நாட்டிற்காக எதிரணியாக இருந்து விளையாடிய பல வீரர்கள், இச்சுற்றுப் போட்டியில் மீண்டும் ஓன்றிணைத்துள்ளனர். ஏற்கனவே, அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தன. அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை மென்சஸ்டர் யுனைடட் அணி பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 469 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 'சாம்பியன்'! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 'சாம்பியன்' பட்டம் வென்றார். ஞாயிறு காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகிய இருவரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினாவைத் தோற்கடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றார். 28 வயதான கெர்பர் வெல்லும் இரண்டாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. முன்னதாக இந்த ஆண்டு …
-
- 0 replies
- 469 views
-
-
ஹொங்கொங்கில் கலக்கும் சங்கா ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் சங்கக்கார கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த போட்யில் 178 என்ற வெற்றியிலக்கை நோக்கி கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. http://www.virakesari.lk/article/17595
-
- 0 replies
- 469 views
-
-
பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம். 2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான். 2021 Big Match ஐயு…
-
- 0 replies
- 469 views
-
-
10 விக்கெட்களால் இலங்கையை இலகுவாக வென்றது அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸை 22.5 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு சுருட்டிய அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர்கள் தமது அணிக்கு மிக இலகுவான 10 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். காலி சர்வதேச விளையாட்டரங்கில் இரண்டரை தினங்களுக்குள் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பகுதிநேர சுழல்பந்துவீச்சாளரைக்கூட இலங்கை துடுப்பாட்ட வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பொனது. பொதுவாக உப கண்ட ஆடுகளங்களில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அவுஸ்திரேலியா சிரமப்படும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கு எதிர்மாறாக அவுஸ்திரேலியாவின் சுழல்பந்துவீச்சில் இலங்கை திணறிப்போனது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர…
-
- 0 replies
- 469 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக சங்ககார? February 26, 2016 பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவை நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்ற சங்ககார அங்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ரி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சங்ககாரவை ஆலோசகராக நியமிப்பது குறித்து ஷகார்யார் கான் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும்; இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகி…
-
- 1 reply
- 469 views
-
-
54 பந்துகளில் சதம்: கடைசி டெஸ்டில் மெக்கல்லம் உலக சாதனை! வெலிங்டன்: வெலிங்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும். இந்நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் ச…
-
- 0 replies
- 469 views
-
-
4-4-0-10: ஒரு ரன்னும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 15 வயது ராஜஸ்தான் வீரர்! ராஜஸ்தானைச் சேர்ந்த 15 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர், ஒரு சாதனை செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியில் டிஷா கிரிக்கெட் அகாடமி அணி சார்பாக விளையாடிய ஆகாஷ் செளத்ரி 4 ஓவர்கள் வீசி ஒரு ரன்னும் கொடுக்காமல் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். முதலில் விளையாடிய டிஷா கிரிக்கெட் அகாடமி, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பேர்ல் அகாடமி ஆகாஷ் செளத்ரியின் அட்டகாசமான பந்துவீச்சால் 32 ரன…
-
- 2 replies
- 469 views
-
-
இந்திய ஒலிம்பிக் வீராங்கனைக்கு பன்றி காய்ச்சல்..! ரியோ ஒலிம்பிக் கலந்து கொண்டு நாடு திரும்பிய இந்திய தடகள வீராங்கனை ஒ.பி.ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் தலைநகர் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் ஒ.பி.ஜெய்ஷா பங்கு பெற்று 89வது இடத்தை பிடித்தார். பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விட்டு இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். அப்போது, அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஜெய்ஷா மட்டும் அதற்கு ஒத்துழைக்காமல் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டார். ஆனாலும், அவரிடம் பரிசோதனை மேற்கொள்ள…
-
- 0 replies
- 469 views
-