Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கொண்டாட்ட பாணியை மாற்றுங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்­கி­லாந்­திற்கு எதி­ராக வெற்­றி­பெற்­ற­போது வெற்­றியைக் கொண்­டா­டிய விதம் குறித்து கருத்­துக்கள் வெளியா­கி­யுள்­ளன. டெஸ்ட் கிரிக்­கெட்டில் வெற்றி பெற்­றதும், அதை கொண்­டாடும் வித­மாக மைதா­னத்­திற்­குள்­ளேயே பாகிஸ்தான் வீரர்கள் ‘உடற்பயிற்சி’ எடுக்கும் வித்­தி­யா­ச­மான பாணியை அவ்­வப்­போது கடைப்­பி­டிக்­கி­றார்கள். இங்­கி­லாந்து சுற்­றுப்­ப­ய­ணத்தின் போது இந்த பாணியில் வெற்­றியை கொண்­டாடி மகிழ்ந்­தனர். இது இப்­போது சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது. பாகிஸ்­தானின் ஆளுங்­கட்­சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், ‘இது போல் நடந்து கொள்­வது பாகிஸ்தான் மீது எதிர்­மறை எண்­ணத்தை உர…

  2. கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்… - பரவசமூட்டிய தருணங்கள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்காக ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள். நம் நாட்டு ரசிகர்களுக்கு உலகக் கோப்பைக் கிரிக்கெட் என்றால் சாப்பாடு, தூக்கம் எதுவுமே வேண்டாம். போட்டிகள் முடியும்வரை ஒட்டுமொத்த நினைப்பும் மட்டையையும் பந்தையும் சுற்றியே இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் நினைவலைகள் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும். நினைவுகளின் வண்ணத்துப் பூச்சிகளைப் பின் தொடர்வோமா? இதோ இன்றிலிருந்து தொடங்கிவிட்டது உலகக் கோப்பைக்கான முன்னோட்டம். மறக்கவே முடியாத தருணங்கள் 10 உலகக் கோப்பைப் போட்டிகள். பதினாயிரம் நினைவுகள். கிரிக்கெட்டின் ஆகப்பெரிய சவால…

  3. கொத்மலை கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ் ஹென்றியரசர் சம்பியன்; இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராவை வென்றது 2016-02-19 19:04:45 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் அணிகளுக்களுக்கிடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்லூரி சம்பியனாகியுள்ளது. யாழ். இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடை­யி­லான கொத்­மலை கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப் பந்­தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் புனித ஹென்­றி­ய­ரசர் அணி 3:1 கோல்களால் வென்றது. …

  4. கொமன்வெல்த் போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்த செல்லத்துரை பிரசாந்த் கலந்து கொண்ட போட்டியில்(Gymnastics Artistic Men's Pommel horse), இவரது குழு 2 வது(SILVER) இடத்தினைத்தட்டிக்கொண்டது. இவரது பெற்றோர்கள் ஈழத்தில் பிறந்த தமிழர்கள். மேலதிக தகவல்களினை கீழ் உள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.melbourne2006.com.au/Participan...pants?ID=110224 http://www.melbourne2006.com.au/Schedule%2...uleItemID=29625 இவர் கலந்துகொண்ட(Pommel Horse) போட்டியில் இவர்தான் அதிக புள்ளிகளினைப்(15.350) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

    • 22 replies
    • 5.2k views
  5. கொமென்வெல்த் போட்டியில் யாழ் மாணவிக்கு வெண்கலப் பதக்கம் 2016இற்கான இளைஞர் பாரம் தூக்கும் போட்டியில், யாழ் சுண்டிக்குளி மகளிர் பாடசாலை மாணவியான வீ.அர்ஸிகா வெண்கலப் பத க்கத்தை வென்றெடுத்துள்ளார். 58 கிலோ எடை தூக்கும் போட்டியிலேயே இச் சாதனையை இவர் புரிந்துள்ளார். மலேசியாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பதக்கத்தை வென்ற அர்ஸிகா தரம் - 10 மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயின் அனுசரணையுடன் இந்த மாணவிக்கானபாராட்டு விழாவை யாழ் மாவட்ட பாரந்தூக்கும் அமைப்பு , யாழ் வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. http://onlineuthayan.com/news/20633

  6. இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் கொரோனா அச்சம் காரணமாக ரத்தானது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. கடந்த 13ம் தேதி தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி வரும் 15ல் லக்னோவிலும், மூன்றாவது போட்டி வரும் 18ம் தேதி கோல்கட்டாவிலும் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த இரு போட்டிகளையும் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது. தற்போது புதிய திருப்பமாக இத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வரும் 29ல் துவங்க இரு…

    • 0 replies
    • 449 views
  7. சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். https:/…

  8. கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான் By Mohammed Rishad கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்லரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிற்போடுவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜப்பான் ஒலிம்பிக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் பிறகு அறிவிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழ…

    • 0 replies
    • 538 views
  9. கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 11 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஐப்பான் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்று அமைக்கப்படுள்ளதாக தெரிவித்தார். ஒலிம்பிக்கில் போட்டியிடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா நோய் இல்லை என்பதை கமிட்டி உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.polimernews.com/dnews/100313/கொரோனா-வைரஸ்-காரணமா…

    • 0 replies
    • 433 views
  10. கொரோனாவைக் கட்டுப்படுத்த நன்கொடை வழங்கினார் நோவக் ஜோகோவிச் by : Benitlas உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நன்கொடை அளித்துள்ளார். இதற்கமைய அவர் 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். செர்பியாவையும் பாதிக்கும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருத்துவ உபகரணங்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்காக அவர் குறித்த நிதியுதவியை வழங்கியுள்ளார். http://athavannews.com/கொரோனாவைக்-கட்டுப்படுத-2/

    • 0 replies
    • 705 views
  11. கொலையா? தற்கொலையா? பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரான தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொப் வூல்மர் சில வாரங்களுக்கு முன் இறந்ததைப் பலர் அறிவர். அயர்லாந்து அணியுடன் மோதி தோற்ற பாகிஸ்தான் அணியினரின் கைகள் இந்த இறப்பில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உலகம் பூராவும் சந்தேகக் கண்கள். தோற்ற அடுத்த நாளே வூல்மர் இறந்ததால், அது இயற்கையான மரணமல்ல என்று புலனாகிறது. ஆகவே, ஒன்று கொலையாக இருக்கலாம் அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. பொப் வூல்மரின் இறப்புக்கு அகோனைட் என்ற விஷம்தான் காரணமென்று ஜமேக்கா பொலிஸார் தகவல் வெளியிட இந்தச் சம்பவம் குறித்து இந்திய அரசின் FORENSIC துறையின் முன்னாள் இயக்குநரான பி. சந்திரசேகரன் கூறும்போது, …

    • 9 replies
    • 2.9k views
  12. கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம் கொல்கட்டா முதல் பல்லேகல வரை வெறுப்புக்கு பதில் அன்பை வெளிக்காட்டுவோம் 1996, மார்ச் 13: ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா- இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கவலைக்குரிய ஓர் இரவு – சில ரசிகர்கள் மைதானத்திற்குள் போத்தல்களை வீசியும் இருக்கைகளுக்கு தீ வைத்தும் போட்டிக்கு இடையூறு செய்தனர். அந்த ரசிகர் கூட்டம் அமைதி கொள்ளாத நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி அளிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 35 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியில் வெற்றி பெற 15.5 ஓவர்கள் எஞ்சி இருக்க மேலும் 132 ஓட்டங்களை…

  13. மொகமது ஷமி. | கோப்புப் படம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹன் என்பவரைத் திருமணம் செய்தார். ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனைச் சந்தித்திருந்தார் மொகமது ஷமி. மொராதாபாதில் நடைபெற்ற எளிமையான இந்த திருமணத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் ஒருவரும் திருமணத்திற்கு வரவில்லை. இதற்கான காரணத்தை மொகமது ஷமியின் தந்தை கூறுகையில், “ஷமியின் சக இந்திய வீரர்களை நாங்கள் அழைக்கவில்லை, காரணம் அவர்களது நிலைமை பற்றி தெரியவில்லை. எனினும் கொல்கத்தா அல்லது டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இந்திய வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்” என்றார். வங்கதேசத் தொடருக்கு ஷமிக்கு ஓய்வு அளிக்கப…

    • 0 replies
    • 536 views
  14. கொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா?- இன்று கங்குலிக்கு பிறந்தநாள் கொல்கத்தாவின் இளவரசர் என்ற செல்லப்பெயருடன் இருந்து தற்போது இந்திய கிரிக்கெட்டின் “தாதா“வாக வலம் வரும் சவுரவ் கங்குலி இன்று பிறந்தநாள் காண்கிறார். இந்திய கிரிக்கெட்டின் மரபுகளை தயங்காமல் தகர்த்தவர். ஆஃப் சைடில் அசுரன், இமாலய சிக்ஸர்களின் எந்திரன். இந்திய அணியின் இயல்பை மாற்றியவர், இயல்பிலேயே ஆளுமை பண்பு நிறைந்தவர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்றோருடன் தனது 19-வது வயதில் ஆடிய அந்த போட்டியில் 3 ரன்களுடன் ஆட்டமிழந்தார்…

  15. கொல்கத்தாவின் பயிற்சியாளரானார் October 24, 2015 அடுத்த ஆண்டுக்கான ஐ.பி .எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாபிரிக்க முன்னாள் வீரர் கலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பெலிஸ், ஜூன் மாதம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட் டார். இதையடுத்து கலிஸ் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தமாகியுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2481&cat=2

  16. கொழும்பு இந்துவுக்கு சாமர சில்வா, பிரசன்ன பயிற்சி இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட் வீரர்களுக்கு, இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களான சாமர சில்வா, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் பயிற்சியளிக்கவுள்ளனர். இந்துக் கல்லூரி, கொழும்பு 04க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரிக்குமிடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டே, இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (17) இடம்பெறவுள்ள இந்தப் பயிற்சிகள், அரை நாள் இடம்பெறத்தக்கதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தேசிய அணியில் விளையாடிய அனுபவமுள்ளவர்களான இவ்விருவரும், தங்களது அனுபவங்களையும் கிரிக்கெட் நுணுக்கங்களையும் இந்துக் கல்லூரி, கொழும்பு 04இன் கிரிக்கெட…

  17. கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி அணியினை 10 ஓட்டங்களால் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி கிரிக்கெட் அணி. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவு 2இன் (டிவிஷன் ll) குழு D அணிகளுக்கான ஒரு போட்டியாக இவ்விரு அணிகளும் மோதிய இந்த ஆட்டம் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் நணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு றோயல் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோ…

  18. கொவிட் தொற்றால் இந்திய நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் மரணம் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர மெய்வல்லுநர் மில்கா சிங் 91ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பறக்கும் சிக்’ என புகழ்பெற்ற மில்கா சிங், ஆசிய விளையாட்டு விழாவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். டோக்கியோ 1958 ஆசிய விளையாட்டு விழாவில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் ஜகார்த்தா 1962 ஆசிய விளையாட்டு விழாவில் 400 மீற்றர் மற்றும் 4×400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் மில்கா சிங் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். ரோம் 1960 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 400 மீற்றர் இறுதிப் போட்டி…

  19. கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் டு ப்ளெசிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பாப் டு ப்ளெசிஸ் நிதி திரட்ட முன்வந்துள்ளார். டு ப்ளெசிஸ் தன்னுடைய IXU ரக புதிய துடுப்பு மட்டை மற்றும் தான் அணிந்த 18ஆம் இலக்க இளஞ் சிவப்பு நிற சீருடை என்பவற்றை கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக ஏலம் விட தீர்மானித்துள்ளார். குறித்த சீருடையானது 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது டு ப்ளெசிஸ் அணிந்திருந்த சீருடையாகு…

    • 0 replies
    • 468 views
  20. கொஸ்டாவின் கோலினால் வென்று முதலிடத்துக்குச் சென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டியில், மிடில்ஸ்பேர்க் அணியைத் தோற்கடித்த செல்சி, தாம் பிறீமியர் லீக் சம்பியன்களான 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் முதற்தடவையாக, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தது. சாதாரணமாக போட்டியை ஆரம்பித்த செல்சி, நேரம் செல்லச் செல்ல தமது ஆட்டத்தை வேகப்படுத்தியதுடன், போட்டியின் 41ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்ற கோலின் மூலம் இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து கோல் பெறும் வாய்ப்…

  21. கோடிகளில் கொழிக்கும் கிரிக்கெட் வீரர்கள்... கிறுகிறுத்துக்கிடக்கும் ஹாக்கி வீரர்கள்! விளையாட்டு என்பது ஒன்றுதான். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு சம்பளம், ஹாக்கி, கால்பந்து விளையாட்டுக்கு ஒரு சம்பளம் என ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள். ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாக்கி விளையாட்டுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப்போகிறதோ என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? …

  22. கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்! ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. 33 விளையாட்டுகளுக்கு டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,500 யென் தொடங்கி 3,00,000 யென் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த இரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் தங்கள் நாட்டிலேயே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். www.ticket.tokyo2020. org என்ற இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடர்பாக விபரங்களை இரசிகர்கள் பார்க்கலாம். … கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்,…

  23. கோபத்தில் ஸ்டீவ் வாஹ்-ஐ தாக்கச் சென்றேன்: சுயசரிதையில் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் 'Curtly Ambrose - Time to Talk' என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார். 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹிற்கும் ஏற்பட்ட தகராறு பற்றி எழுதியுள்ளார். கைகலப்பு அளவுக்கு சென்றது அந்த வாக்குவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சி ரிச்சர்ட்ஸன் மட்டும் தடுக்கவில்லை என்றால் அன்று ஸ்டீவ் வாஹ்-ஐ ஆம்ப்ரோஸ் தாக்கியிருப்பார். ஸ்டீவ் வாஹ் எதிரணி வீரர்களை தனது வார்த்தைகளால் முடக்கும் வாய் சாதுரியம்…

    • 2 replies
    • 421 views
  24. கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்! தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயாக கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நாளை சிலியில் தொடங்குகிறது. போட்டியை நடத்தும் சிலி அணி முதல் ஆட்டத்தில் ஈகுவடார் அணியை எதிர்கொள்கிறது. 44வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. 3 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'ஏ' பிரிவில் சிலி,மெக்சிகோ, ஈகுவடார், பொலிவியா அணிகளும் 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் உருகுவே, அர்ஜென்டினா,பாரகுவே, ஜமைக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா அணிகள் 'சி' பிரிவில் உள்ளன. இதில் மெக்சிகோவும் ஜமைக்காவும் வட மத்திய அ…

  25. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.