விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ட்ரிபிள் ஹிட் சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்..! டி20 உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனாக மகுடம் சூடியது.முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது டி 20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கொண்டாட்டம்: புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க... கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்ட…
-
- 0 replies
- 463 views
-
-
டோக்கியோ விமான நிலையத்தில் மெஸ்சியிடம் தகராறில் ஈடுபட்ட ரிவர்பிளேட் ரசிகர்கள் (வீடியோ) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணியுடன் அர்ஜென்டினாவை சேர்ந்த ரிவர்பிளேட் அணி மோதியது. பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரிவர்பிளேட் ரசிகர்கள் யோகஹாமா நகருக்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததையடுத்து நேற்று பார்சிலோனா அணி டோக்கியோவில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டது. இதற்கான டோக்கியோ விமான நிலையத்துக்கு பார்சிலோனா அணி வீரர்கள் நேற்று இரவு வந்தனர். அப்போது விமான நிலையத்தில…
-
- 0 replies
- 463 views
-
-
இன்று ஆரம்பிக்கிறது ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ் உலகில் இடம்பெறும் டென்னிஸ் கிரான்ட் ஸ்லாம் தொடர்களில், ஆண்டின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள டென்னிஸ் உலகம், இந்தத் தொடரில் யார் வெல்வார்க் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீரர்களான அன்டி மரே, நொவக் ஜோக்கோவிச், ஸ்டான் வவ்றிங்கா, கீ நஷிகோரி, மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர். ஏற்கெனவே பலர் விலகியிருந்த நிலையில், அன்டி மரேயும், போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் இருக…
-
- 3 replies
- 463 views
-
-
பரபரப்பாக நடைபெற்றுவரும் ஆறாவது ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சூதாட்ட புகாரில் ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்துடன் சேர்த்து சண்டிலா, சவான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் மற்ற வீரர்களான அங்கித் சவான் மற்றும் அஜித் அந்தூலியா ஆகியோரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு ஸ்ரீசாந்த் மும்பையில் உள்ள அவரது நண்பரின் வீட்டிலிருந்தும், பிற வீரர்கள் ராஜஸ்தான் அணி வீ…
-
- 0 replies
- 463 views
-
-
செல்சி, ஆர்சனல் தோல்வி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், இன்றைய போட்டிகளில் ஆர்சனல், செல்சி அணிகள் தோல்வியடைந்தன. பார்சிலோனா அணி வெற்றிபெற்றது. ஒலிம்பியாகொஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் அணி, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 33ஆவது நிமிடத்தில் ஒலிம்பியாகொஸின் பெலிப் பார்டோ பெற்ற கோலுக்கு, உடனடியாகப் பதிலடி வழங்கிய ஆர்சனலின் தியோ வொல்கொட், 1-1 என்ற கணக்கில் கோல் நிலையை மாற்றிய போதிலும், 40ஆவது நிமிடத்தில் டேவிட் ஒஸ்பினாவின் 'ஒவ்ண் கோல்" காரணமாக, ஒலிம்பியாகொஸ் அணி, 2-1 என முன்னிலை வகித்தது. 65ஆவத நிமிடத்தில் அலெக்ஸிஸ் சன்செஸ் கோலொன்றைப் பெற்று, ஆர்சனலுக்கு 2-2 என் சமநிலையை வழங்கிய போதிலும், அடுத்த நிமிடத்தில் அர்பிரட் பின்பொகாசொன் பெற்ற …
-
- 0 replies
- 463 views
-
-
பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்! பார்சிலோனா அணியின் கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்து உலகின் நாயகனாக வலம் வருபவர் லயோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ஆன்ட்ரே இனியஸ்டா. இந்த அணியின் துணை கேப்டனாக லயோனால் மெஸ்ஸி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து 2017-18 சீசனுடன் விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் ஜப்பானின் வெசல் கோப் அணிக்காக விளையாட இருக்கிறார். இதையடுத்து, துணை கேப்டனாக இருந்த லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனா அணியின் க…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தேர்தல் – வவுனியாவிற்கு உதவிபொருளாளர் பதவி! இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகசபை தேர்தல் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு அ. நாகராஜன் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று குறித்த பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு வருடங்கள் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இரண்டு வருடங்கள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன…
-
- 2 replies
- 462 views
-
-
லெய்செஸ்டர் சிற்றி கழக உரிமையாளர் உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கினார்! லெய்செஸ்டர் சிற்றி காற்பந்தாட்ட கழக உரிமையாளர் விச்சாய் சிறிவத்தானபிரபா பயணித்த உலங்கு வானூர்தி ஒன்று கழக மைதானத்திற்கு வௌியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரிமியர் லீக் விளையாட்டு போட்டியொன்று நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வௌியேறிய போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உலங்கு வானூர்தி விமானம் விபத்துக்குள்ளான தருணத்தில் கழக உரிமையாளர் அதில் இருந்ததாகவும், பிரித்தானிய நேரப்படி சனிக்கிழமை இரவு 20:30 அளவில் இந்த சம்பவம் நடத்ததாக அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் இடம்பெற்ற போது லெய்செஸ்டர் அணி போட்டியாளர் கெஸ்பர் ஸ்கெமிசெல் மைதானத்தை…
-
- 1 reply
- 462 views
-
-
பாகிஸ்தானில் உருவாகும் இரண்டு கைகளிலும் வீசக்கூடிய அரிய வேகப்பந்து வீச்சாளர் இரண்டு கைகளிலும் நல்ல வேகத்துடன் வீசும் பாக். வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான்.! வலது கையிலும் இடது கையிலும் நல்ல வேகத்துடன் வீசும் இருகை வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான் என்பவர் பாகிஸ்தானில் உருவாகி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் திறன் வேட்டையில் யாசிர் ஜான் என்ற இந்த இருகை வேகப்பந்து வீச்சாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் தலைமையாளருமான ஆகிப் ஜாவேத் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, யாசிர் ஜான் வலது கையில் வீசும் போது மணிக்கு 145 கிமீ வேகத்திலும்…
-
- 2 replies
- 462 views
-
-
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது. டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலியா, துடுப்பாட்டம் மற்று…
-
- 1 reply
- 462 views
-
-
தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர்; அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன: கங்குலி புகழாரம் தோனியை ‘கிரேட்' என்று புகழ்ந்த சவுரவ் கங்குலி. | படம்: பிடிஐ. தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார…
-
- 0 replies
- 462 views
-
-
தமிழ்மகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் டைக்கொண்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டுப் பொட்டியில் இடம்பெற்ற தைக் கென்டோ போட்டியில் கிளிநொச்சி பெண் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் டைக்கொண்டோ போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார். இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28:17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார். விளையாட்ட…
-
- 0 replies
- 462 views
-
-
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை எனது ஆட்டம் தொடரும் - மெத்தியூஸ் Published by J Anojan on 2019-11-22 15:01:25 எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாளக் உலகக் கிண்ணத் தொடர்வரை விளையாடுவதே எனது குறிக்கோள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளதுடன், அதுவரை சிறப்பாக விளையாடுவதற்கு நான் எனது உடற் தகுதியை பேண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய இலங்கை டெஸ்ட் அணியில் மிக வயதான (32) வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமான அவர், அன்றிலிருந்து இலங்கை அணியின் அதிக வெற்றிகளுக்கு பங்களிப்பு செய்தவர். துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் இரண்…
-
- 0 replies
- 462 views
-
-
ரன்களை வாரி வழங்கிய வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், 4 பந்தில் மொத்தம் 92 ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர் வேண்டுமென்றே ரன்களை வாரி வழங்கிய சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியது. ஆக்சியம் கிரிக்கெட்டர…
-
- 1 reply
- 462 views
-
-
ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் சாதனை கோரி ஆண்டர்சன் விரைவில் 50 சிக்சர்கள் சாதனை. | படம்: ஏ.எப்.பி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்சர்களை குறைந்த இன்னிங்சில் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்தின் அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன். இன்று ஆக்லாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோரி ஆண்டர்சன் 51 சிக்சர்களை அடித்து மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலின் சாதனையை முறியடித்தார். ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி அரைசதம் கண்ட மார்…
-
- 0 replies
- 462 views
-
-
''தேவையற்ற கட்டுப்பாடுகள்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி மாணவர்களா?''- வாசிம் அக்ரம் ஒழுக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை பள்ளி மாணவர்களைப் போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றச்சாட்டியுள்ளார். வாசிம் அக்ரம் உருவாக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை தொடக்க விழா நேற்று கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாசிம் அக்ரம்'' கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் 'மேட்ச் பிக்சிங்' ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சுதந்திரத்தை பாதிக்கும்…
-
- 0 replies
- 462 views
-
-
நூற்றாண்டின் சிறந்த செஞ்சுரி.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லிஸ்டில் வீரேந்திர சேவாக் சதம்! மெல்போர்ன்: இந்த நூற்றாண்டில், ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த செஞ்சுரிகளில் ஒன்றாக வீரேந்திர சேவாக்கின் 195 ரன் விளாசல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (வாரியம்) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட 15 பெஸ்ட் செஞ்சுரிகளை தேர்வு செய்து வருகிறது. 2000வது ஆண்டு முதல் இப்போதுவரையிலான செஞ்சுரிகள் அதில் அடங்கும். முதல்கட்டமாக 15 முதல், 10 வரையிலான பெஸ்ட் செஞ்சுரி பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 13வது இடத்தை சேவாக்கின் 195 ரன் பெற்றுள்ளது. டேவிட் வார்னர் நியூசிலாந்த…
-
- 1 reply
- 462 views
-
-
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார். நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா 2 செட்களை வென்ற 5வது செட்டை நடால் கடுமையாகப் போராடி கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.85 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அவருடன் மோதிய மெட்வதேவ் 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 1…
-
- 0 replies
- 462 views
-
-
12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி… உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் டொலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட குறித்த முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஓர் அறிக்கை …
-
- 3 replies
- 462 views
-
-
1983ல் உலக கோப்பையை அதிருஷ்டத்தால் இல்லை.. திறமையால்தான் வென்றது இந்தியா: விவ் ரிச்சர்ட்ஸ் துபாய்: 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் அளவுக்கு தகுதியானதாகவே இருந்தது என்று விவ் ரிச்டர்ஸ்ட் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையில், கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்யன் பட்டத்தை வென்றது. இறுதி போட்டியில், அப்போதைய நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது இந்தியா. 2 உலக கோப்பைகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள், 3வது உலக கோப்பையை இந்தியாவிடம் பறிகொடுத்தது. அதிருஷ்டத்தால் கிடைத்த வெற்றியா.. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத பலம் கொண்டதாக இருந்தது. எனவே இந்தியாவின் வெற்றியை பலரும் அதிருஷ்டத்த…
-
- 0 replies
- 462 views
-
-
ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு புதுடில்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி, கோஹ்லி உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (ஜூலை 10, 12, 14), இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகளில் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தோனி ஓய்வு: கடந்த 7 மாதங்களாக கேப்டன் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே தொடரில் …
-
- 3 replies
- 462 views
-
-
ஆசை இல்ல பசி சார்... புனே அணியில் ரவிச்சந்திர அஸ்வின் போல் ஒருவன்! ‘எந்தக் குப்பனோ சுப்பனோ இத செய்ய முடியுமா?’- உன்னைப்போல் ஒருவன் படத்திற்காக எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய ஃபேமஸ் டயலாக். நேற்று நடந்த ஐ.பி.எல் ஏலத்தைப் பார்க்கும்போது நமக்கும் இந்தக் கேள்வி நமக்கும் எழுகிறது. தமிழக அணிக்காக வெறும் 3 ரஞ்சி போட்டிகள், இரு 50 ஓவர் போட்டிகள், 6 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடிய ஒரு வீரரால், ஐ.பி.எல்யில் நான்கரைக் கோடிக்கு ஏலம் போக முடியுமா என்று நினைக்கையில் நமக்குள்ளும் அக்கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், அது சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார் அதை எழுதிய வசனகர்த்தாவின் மகன் அஸ்வின் முருகன். ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணி இவரை அவ்வளவு பெரிய தொகைக்கு அஸ்வின…
-
- 0 replies
- 462 views
-
-
சச்சித்ர சேனநாயக்க பந்துவீசுவதற்கு ஐ.சி.சி. தடை 2014-07-12 19:50:00 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவின் பந்துவீச்சுப்பாணி விதிகளுக்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பிரிட்டனின் கர்டிவ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைடுத்து அவர் அனுமதிக்கப்பட்ட சச்சித்ரவுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான சச்சித்ர சேனநாயக்க 37 சர்வதேச போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில் அவர் 13 ஓட்டங்களு…
-
- 1 reply
- 462 views
-
-
மைதானத்தை அதிரவைத்த சங்காவின் அற்புதமான பிடியெடுப்பு (வைரல் காணொளி) பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது சங்காவின் பிடியெடுப்பு மைதானத்தை அதிரவைத்துள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கராச்சி அணிக்கு தலைமை தாங்கி வருகின்றார். நேற்றைய முக்கியமான போட்டியில் சங்கக்காரவின் பிடியெடுப்பொன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இஸ்லாமாபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவைன் சுமித்துக்கு, மொஹமட் அமீர் வீசிய பந்து பிடியெடுப்பாக சங்காவிடம் வர அதனை இலாவகமாக பிடித்து அசத்தினார் சங்கக்கார. குறித்த பிடியெடுப்பு தற்போது சமுக வ…
-
- 2 replies
- 462 views
-
-
வட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம் வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 12 ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 27 ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது. இம்முறைப் போட்டித் தொடரில் தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற பல வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், 7 புதிய போட்டி சாதனைகளும் இங்கு நிகழ்த்தப்பட்டன. இதில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களான எம். பிரேம்தாஸ் (100 மீற்றர்), ஏ. அபிஷான் (400 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), பி. ந…
-
- 0 replies
- 462 views
-