விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சனத்தின் சாதனையை முறியடித்தார் டில்ஷான் January 02, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நெல்சனில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் டில்ஷான் 91 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டு சனத் ஜெயசூரியா எடுத்த 1202 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இவர் 33 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்தார். ஆனால் டில்ஷான் 24 இன்னிங்சிலே 1207 ஓட்டங்கள் எடுத்து அவ…
-
- 0 replies
- 544 views
-
-
சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. சனோகீத் சண்முகநாதன், சம்மு அஷான் அதிரடியில் தொடரை வென்றது இலங்கையின் இளையோர் அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள தென் ஆபிரிக்க, மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கையின் 19 வயத்துக்குட்படந்தோர் அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்த தென் ஆபிரிக்க இளையோர் அணி, அதன் பின்னர் மீதமான இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ளது. தீர்மானம் மிக்க ‘காமினி திஸாநாயக்க’ தொடரின் இறுதி போட்டி கொழும்பு,பி, சரவணமுத்து மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் ப…
-
- 0 replies
- 345 views
-
-
சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்! கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான். ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்…
-
- 0 replies
- 471 views
-
-
சன்ரைஸர்ஸ் அணியின் தலைவராக மீண்டும் டேவிட் வோர்னர் By Mohamed Azarudeen - Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI ஐ.பி.எல். (IPL) டி20 கிரிக்கெட் தொடரின் 13 ஆவது அத்தியாயம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடும் அணியான சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் தமது தலைவராக சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னரை மீண்டும் நியமனம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 597 views
-
-
சபாஷ்!...அந்த 463 பேரில் ஒருவனை உருவாக்கியவரே தமிழர்தான்!! அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து தொடரான என்.பி.ஏவில் விளையாட இந்தியாவை சேர்ந்த சத்னம்சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சங்கரன் சுப்பிரமணியம் என்ற கூடைப்பந்து பயிற்சியாளர்தான் சத்னம் சிங்கின் இந்த அளப்பரிய சாதனைக்கு காரணமாக இருந்துள்ளார். இந்தியாவுக்கு கிரிக்கெட், தென் அமெரிக்காவுக்கு கால்பந்து எப்படியோ அப்படிதான் வட அமெரிக்கர்களுக்கு கூடைப்பந்து என்றால் உயிர். கடந்த 1946ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பாகத்தான் என்.பி.ஏ கூடைப்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 29 அமெரிக்க அணிகளும் கனடாவை சேர்ந்த ஒரு அணி மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன…
-
- 0 replies
- 355 views
-
-
சபையையும் தேர்வாளர்களையும் விமர்சிக்கிறார் இலங்கைப் பயிற்றுநர் இலங்கை கிரிக்கெட் அணி, அண்மைக்காலமாகவே தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையில், அதன் நிலைமை குறித்து, அணியின் இடைக்காலப் பயிற்றுநர் நிக் போதாஸ், இலங்கை கிரிக்கெட் சபை, அணியின் தேர்வாளர்கள் ஆகியோர் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இவ்வாண்டில், தென்னாபிரிக்காவில் வைத்து தென்னாபிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்த இலங்கை அணி, அதன் பின்னர் பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கெதிராகவும் குறிப்பிடும் படியான தோல்விகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர், இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவ்வணி, தற்போது முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில…
-
- 0 replies
- 299 views
-
-
இம்முறை உலகக் கிண்ண போட்டிகளில் வெல்லக் கூடியவர்கள் என்று எதிர்வுகூறப்பட்ட இரு அணிகளே இறுதிப் போட்டிக்கு வந்துவிட்டதால் போட்டி தொடங்குமுன்னரே எந்த சஸ்பென்சுகளும் இல்லாமலேயே எனது இறுதிப் போட்டி தொடங்கியது. இல்லாத ஒரு எதிர்பார்ப்பை இருப்பதாக நினைத்து நானே சில விடயங்களைப் பலவந்தமாக எதிர்பார்த்திருந்தேன். அதாவது மக்கலம் அடித்து நொறுக்குவார், போல்ட்டும் சவுத்தியும் புடுங்கி எறிவார்கள்...அதேபோல பதிலுக்கு வோர்னரும் பிஞ்சும் பிரித்து மேய மக்ஸ்வெலும், வாட்சனும் இறுதியில் வந்து கமறுவார்கள்...இப்படிப் பலவந்தமாக என்னால் எனக்குள் திணிக்கப்பட்ட செயற்கைத்தனமான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு நண்பர் ஒருவரும், "மச்சான், ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வேலை ஒண்டும…
-
- 9 replies
- 1.1k views
-
-
சமநிலையில் குரோஷியா – ஆர்மேனியா போட்டி ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான முன்னோட்டமான, குரோஷியாவில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்மேனியாவுக்கும் இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் பெரிசிச் பெற்றதோடு, ஆர்மேனியா சார்பாகப் பெறப்பட்ட கோலை வெபேமர் அங்குலோ பெற்றிருந்தார். இதேவேளை, போலந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ரஷ்யாவுக்குமிடையிலான சிநேகபூர்வ போட்டியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. போலந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜகுப் ஸ்வியெர்ஸ்ஸொக் பெற்றதோடு, ரஷ்யா …
-
- 0 replies
- 471 views
-
-
சமநிலையில் முடிந்த சென் ஜோன்ஸ் – புனித தோமியர் இடையிலான மோதல் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் மற்றும் கொழும்பு, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கு இடையில் பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இம்முறை போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இந்தப் போட்டி சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (13) ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அனுபவம் மிக்க பந்து வீச்சாளர்களான கபில்ராஜ் மற்றும் அபினாஷ் ஆகியோரது அபாரப் பந்து வீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் கொழும்பு தரப்பினர் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். …
-
- 0 replies
- 275 views
-
-
சமபல அண்டைய நாடுகளுக்கிடையிலான மோதல் - ச.விமல் சமபலமாக உள்ள அயல் நாட்டு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி அணிகள் இரண்டும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகள், போட்டித்தன்மை மிக்கவையாக மாறியுள்ளன. நியூசிலாந்து அணி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பலமான நிலையிலேயே உள்ளது. இந்த வருடத்தில் ஏற்கெனவே இரண்டு அணிகளும் மோதியுள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில், 2-1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி வென்றிருந்தது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரிலும் நியூசி…
-
- 0 replies
- 354 views
-
-
சமரியை அழைக்கும் இங்கிலாந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்தபத்துவை தங்கள் அணியில் இணைந்து விளையாடுமாறு இங்கிலாந்தின் முன்னணி அணியான யோக் ஷையர் அணி அழைப்பு விடுத்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள முதல்தர கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கவே சமரிக்கு மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 178 ஓட்டங்களை விளாசினார். சமரியின் இந்த துடுப்பாட்டம் அனைவ…
-
- 0 replies
- 379 views
-
-
சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடாத்தப்படுகின்ற மிகப் பெரிய போட்டித் தொடராக இது அமையவுள்ளது. எனினும், இப்போட்டித் தொடரில் இலங்கை அணியுடன் மோதவுள்ள பிரபல இந்திய அணி, இலங்கை அணியை அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அண்மைக்காலமாக வீழ்த்தி ஆதிக்கம் …
-
- 0 replies
- 237 views
-
-
சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி? பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல். ஏழ்மை நிலையில் இருந்து …
-
- 4 replies
- 515 views
-
-
26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று சமையல்காரர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (29) அதிகாலையில் வந்தடைந்தனர். இந்தப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில், மே.21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது, இதில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் மற்றும் அந்தப் பகுதியில் சமையல்காரர் படிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார…
-
- 0 replies
- 253 views
-
-
சம்பள விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டால்தான் வங்கதேசத் தொடர்: ஆஸி. கேப்டன் ஸ்மித் திட்டவட்டம் ஸ்டீவ் ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் சம்பள விவகாரம் முடிவுக்கு வந்தால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவானால்தான் வங்கதேசத் தொடருக்குச் செல்வோம் என்கிறார் ஸ்மித். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுக்கு அவர் கூறும்போது, “நீண்ட நாட்களாக இதைத்தான் கூறிக்கொண்டு வருகிறோம், முத…
-
- 0 replies
- 392 views
-
-
சம்பியனாகியது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனானது. தமது கல்லூரி வலைப்பந்தாட்டத் தொடரில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை 34-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றே தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சம்பியனாகியிருந்தது. http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனாகியது-தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி/88-234413 சம்பியனானது விநாயகபுரம் விநாயகர் வி. க சரவனை கந்தையா வெற்…
-
- 0 replies
- 393 views
-
-
சம்பியனாகியது மன்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, தமது கிண்ணத்தை தக்க வைத்து சம்பியனாகியது. வெம்ப்ளி மைதானத்தில், நேற்று முன்தினமிரவு விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில், பெனால்டியில் செல்சியை வென்றே மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்தது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியிருந்ததுக்கு மேலாக, செல்சியின் முகாமையாளர் மெளரிசியோ சரியால், அவ்வணியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலகாவை பிரதியீடு செய்ய முயன்றமையை அவர் மீறியமையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. மேலதிக நேரத்தின் இறுதி நிமிடங்களி…
-
- 0 replies
- 463 views
-
-
சம்பியனானது அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் அவுஸ்திரேலிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடராக பிக் பாஷ் லீக்கில், 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான சம்பியனாக அடிலெய்ட் ஸ்ரைக்கஸ் தெரிவானது. அடிலெய்ட்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஹோபார்ட் ஹரிகேன்ஸை 25 ஓட்டங்களால் வென்றமையையடுத்தே அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ் சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸின் அணித்தலைவர் ட்ரெவிஸ் ஹெட், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸ், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜக் வெதர்லான்ட் 115 (70), ட…
-
- 0 replies
- 242 views
-
-
சம்பியனானது அரசடித்தீவு விக்னேஸ்வரா வி.க -வடிவேல் சக்திவேல் மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், பெனால்டி மூலம் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தொடரில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியிருந்தன. இக்கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ…
-
- 0 replies
- 261 views
-
-
குணசேகரன் சுரேன் 2019 செப்டெம்பர் 02 திங்கட்கிழமை, பி.ப. 06:14 யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளின் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது. சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியை வென்றே சென். ஜோன்ஸ் கல்லூரி சம்பியனானது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி, 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரணவன் 36, டினோசன் 30, சங்கீர்த்தனன் 29, வினோஜன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவ…
-
- 0 replies
- 578 views
-
-
சம்பியனானது சென்றலைட்ஸ் கொக்குவில் மத்திய சனசமூக நிலையத்தின் கிரிக்கெட் தொடரின் வெள்ளி விழாக் கிண்ணத்தை, ஜொனியன்ஸ் அணியை வீழ்த்தி யாழ். சென்றலைட்ஸ் அணி கைப்பற்றியதுடன், இத்தொடரை அதிக தடவைகளாக ஐந்தாவது தடவையாக வென்ற அணியாக தம்மை மாற்றிக் கொண்டது. யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கொண்ட தொடராக ஆண்டுதோறும் நடைபெறும் இத்தொடர், இம்முறை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இவ்வாண்டு தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றி, சென்றலைட்ஸ…
-
- 0 replies
- 646 views
-
-
சம்பியனானது டில்கோ கொன்கியூறோஸ் டில்கோ கொன்கியூறோஸ் அணியின் அல்பேர்ட் தனேஸ் அதிரடியாகவும் சிறப்பாகவும் செயற்பட்டு இரண்டு கோல்களைப் பெற வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகாலத்தின் சம்பியன்களாக டில்கோ கொன்கியூறோஸ் அணி முடிசூடிக் கொண்டது. இத்தொடரின் தகுதிச் சுற்றின் முதலாவது போட்டியில், டில்கோ அணி, கிளியூர் கிங்ஸ் அணியை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது போட்டியில் வல்வை கால்பந்தாட்டக் கழக அணி, மன்னார் கால்பந்தாட்டக் கழக அணியை வென்றது. இரண்டாவது இறுதிப் போட்டி அணியை தீர்மானிக்கும் மற்றுமொரு போட்டியில் கிளியூர் அணியை எதிர்த்து வல்வை அணி மோதியது. இதில் கிளியூர் அணி வெற்றிபெற்றது. டில்கோ, கிளியூர் அணிக…
-
- 0 replies
- 630 views
-
-
சம்பியன் கிண்ணத்திற்காக கோல் மழை பொழிந்த புனித பத்திரிசியார் கல்லூரி ஐந்தாவது முறையாக இடம்பெறும் மைலோ கிண்ண போட்டியில் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தையும், மூன்றாமிடத்தினை சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றன. இறுதிப் போட்டி பல கல்லூரிகளுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்த உத்வேகம் மிகு அணியான மணற்காடு றோமன் க…
-
- 0 replies
- 302 views
-
-
சம்பியன் கிண்ணத்துக்கான விஷேட தூதுவராக குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, தற்போதைய காலத்தில் கிரிக்கெட்டில் ஜாம்பவன்களாக காணப்பட்டிருந்த எட்டு முன்னாள் வீரர்களை இந்த வருட கோடை காலத்தில் ஆரம்பமாகவிருக்கும் சம்பியன் கிண்ணத்திற்கு விஷேட தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சின் முக்கிய மூன்று மைதானங்களில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்திற்கான மாபெரும் மோதலிற்கு இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவும், பாகிஸ்தான் சார்பாக சஹீட் அப்ரிடியும், பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹபிபுல் பஷாரும் தொடரை நடத்தும் நாடான இங்…
-
- 1 reply
- 1.5k views
-
-
https://www.thepapare.com/thepapare-football-championship-2022-final-jaffna-central-st-joseph-preview-tamil/
-
- 2 replies
- 706 views
- 1 follower
-