விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச் உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார். உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி 3-ந் தேதி ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அரியணையில் ஏறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளார். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கும் 33 வயதான ஜோகோவிச் 2011-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி முதல்முறையாக தரவரிசையில் நம்பர் ஒன் …
-
- 0 replies
- 424 views
-
-
அமுல்படுத்திய 24 மணிநேரத்தினுள் விதிமுறையை மீறிய கிரிக்கெட் வீரர் (காணொளி) சர்வதேச கிரிக்கெட் சபை அமுல்படுத்திய மாற்றப்பட்ட புதிய ஆட்ட விதிமுறைகளை மீறிய முதலாவது வீரர் என்ற ‘பெருமையை’ குவீன்ஸ்லாந்து அணி வீரர் மார்னஸ் லாபுஷானியா பெற்றார். புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருபத்து நான்கு மணிநேரம் ஆவதற்குள் அந்த விதிமுறை மீறப்பட்டது கவனிக்கத்தக்கது. அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளான குவீன்ஸ்லாந்து புல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா லெவன் அணிகள் நேற்று (29) ஜே.எல்.டி. ஒருநாள் கோப்பைக்கான போட்டியில் விளையாடின. இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குவீன்ஸ்லாந்து புல்ஸ் அணியின் மார்னஸ், பந்து கையில் இல்லாத நிலையிலேய…
-
- 0 replies
- 424 views
-
-
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் -ச.விமல் ஆசியக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இன்று ஆரம்பிக்கவுள்ளது. முதற் தடவையாக 5 அணிகள் பங்குபற்றும் தொடராக அமையவுள்ள அதேவேளை முதற் தடவையாக இருபதுக்கு-20 தொடராக நடைபெறவுள்ளது. 1986ஆம் ஆண்டு ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தினால் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சாஜாவில் நடாத்தப்பட்டது. இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு இறுதியாக பங்களாதேஷில் இந்த தொடர் நடைபெற்றது. நான்கு நாடுகள் பங்குபற்றிய இந்த தொடரில் இந்த வருடம் ஆசியக் கண்ட நான்கு துணை அங்கத்துவ நாடுகளில் இருந்து ஒரு நாடு தெரிவுகாண் போட்டிகள் மூலம் தெரிவாகி ஐந்தாவது நாடாக இணைந்துள்ளது. …
-
- 0 replies
- 424 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேமராவால் கவர் செய்ய முடியாத சிக்ஸ் அடித்த குப்தில் ( வீடியோ) ஆக்லாந்தில், சேப்பல் ஹார்ட்லி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 307 ரன்கள் அடித்தது. மார்ட்டின் குப்தில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில், கானே ரிச்சர்ட்சன் பந்தில் குப்தில் அடித்த அபார சிக்சர், 113 மீட்டர் தொலைவு போய் ஸ்டேடியத்தின் மேற் கூரையில் விழுந்தது. இந்த போட்டியில் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 24.2 ஓவரில் 148 ரன்களில் ஆல் அவுட்டாகி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. http://www.vikatan.com/news/sports/58517-martin-guptill-hits-six-onto-eden-park-roof.art
-
- 0 replies
- 423 views
-
-
ஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில் நடந்த 10 சுவாரஸ்ய நிகழ்வுகள்! கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வான்கடே மைதானத்தில் வென்றது. அதற்கடுத்து 2016ம் ஆண்டில் இந்தியாவில் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெறவுள்ளது. அதன் இறுதி போட்டிக்கான மைதனாத்தையும் மற்ற மைதானங்களையும் ஐசிசி அறிவித்தது. இறுதி போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்றுதான் ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று. 1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகள…
-
- 0 replies
- 423 views
-
-
இந்தியாவின் முதல் பெண் 'பாடிபில்டர் ': ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி அஸ்வினி! பொதுவாக பாடி பில்டிங் என்பது ஆண்கள் பங்கேற்கும் விளையாட்டு. இந்திய பெண்கள் அந்த பக்கமே திரும்புவதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை உடைத்து எறிந்திருக்கிறார் ஆணழகர்களுக்கு சவால் விடும் பெண்ணழகி ஒருவர். மும்பையை சேர்ந்த அஸ்வினி வாஸ்கர் என்பவர்தான் அவர். இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் பாடிபில்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரை அஸ்வினி சாதாரண இந்திய பெண்களை போலத்தான் இருந்தார். ஓவர் வெயிட் காரணமாக மிகுந்த சோகத்தில் இருந்தார். தோழிகள் கூறியதன் பேரில், உடல் வெயிட்டை குறைக்க ஜிம்முக்கு சென்றவர்தான் தற்போது பாடிபில்டராக மாறி விட்டார். ஜிம்மில் முத…
-
- 2 replies
- 423 views
-
-
சங்ககராவுக்கு ‘டுவிட்டரில் ஷாக்’ புதுடில்லி: இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககராவின் ‘டுவிட்டர்’ கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. இலங்கை அணி முன்னாள் வீரர் சங்ககரா, 37. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச அரங்கிலிருந்து விடை பெற்றார். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவரின் ‘டுவிட்டர்’ கணக்கை யாரோ ஒருவர் ‘ஹேக்’ செய்துவிட்டார். தவிர, இதில் ஆபாச படமும் ஏற்றப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்ககரா ரசிகர்களிடம் உடனடியாக இதை தெரிவித்தார். இது குறித்து சங்ககரா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட அறிக்கையில்,‘‘என் ‘டுவிட்டர்’ கணக்கை ‘ஹேக்’ செய்துவிட்டனர். இதற்கு முன் வந்த செய்திகளை அழ…
-
- 1 reply
- 423 views
-
-
உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் : மிட்செல் ஜான்சன் எதிரணியை அச்சுறுத்த உளவியல் ரீதியான போர்முறை அவசியமானது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். ‘மிட்சல் ஜான்சன்: பவுன்சிங் பேக்’ என்கிற புதிய டிவிடியில் வேகப்பந்து வீச்சின் உத்திகள் பற்றி ஜான்சன் விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சிலநேரங்களில் ஆடுகளங்களில் மோசமாகப் பேசிவிடுகிறோம். சிலநேரங்களில் நாம் பேசுவது பேட்ஸ்மேனிடம் சிறிது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய கால்நகர்த்தல்களைப் பற்றி யோசிக்கவைக்கிறோம், அல்லது ஷார்ட் பந்து வீசுவதை அவர்கள் அறியும்படி செய்கிறோம். இவை எல்லாமே மனஉறுதியை தீர்மானிக்கும் விளையாட்டு. சிலநேரங்களில் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஒருவருக்…
-
- 1 reply
- 423 views
-
-
தோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்! ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி, தற்போது தனது கேப்டன் கேரியரில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கிறார். இந்த ஆண்டில் தோனியின் தலைமையில் இதுவரை இந்தியா ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. "தோனியை ஓரங்கட்டுங்கள், இளம் பாய்ச்சலை புகுத்துங்கள்...!" என ஆளாளுக்கு தோனியின் மீது சொற்கற்களை வீச ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுக்கும் தோனியால், இந்த முறை சமாளிக்கவே முடியவில்லை. தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் சரித்திரத்தில், முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற…
-
- 3 replies
- 423 views
-
-
சொந்த அரங்கில் மென்சஸ்டர் சிடியிடம் தோல்வியுற்ற செல்சி Courtesy - Getty Images ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டியின் ஜாம்பாவன்களான மென்சஸ்டர் சிடி மற்றும் செல்சி கழகங்கள் மோதிய போட்டியில் மென்சஸ்டர் சிடி கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதிரணியான செல்சி அணியின் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான ஸர்ஜீயோ அக்வேரோ விளையாடாத நிலையில் இவ்வெற்றியை மென்சஸ்டர் சிடி அணி தனதாக்கிக் கொண்டது. நேற்றைய தினம் நடைபெற்ற (30) செல்சி மற்றும் மென்சஸ்டர் சிடி அணிகள் மோதிய போட்டியானது, செல்சி கழகத்தின் அரங்கமான ஸ்டம்பொர்ட் பிரிட்ஜ் (Stamford Bridge) அரங்கில் நடைபெற்றது. மென்சஸ்டர்…
-
- 0 replies
- 423 views
-
-
6 வருடத்திற்குப் பின் பாக்.கில் கிரிக்கெட்... அன்று தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானவரே இன்றும் நடுவர்! இஸ்லாமாபாத்: ஆறு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடும் அணி ஒன்று பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்யப்போகிறது. ஆம்.. ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கிறது. 2009ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த இலங்கை கிரிக்கெட அணியினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் காயமின்றி தப்பினர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின…
-
- 0 replies
- 423 views
-
-
(எம்.எம்.சில்வெஸ்டர்) 19 வயதுக்குபட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 5 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை ஈட்டியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 32.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. https://www.virakesari.lk/article/64786
-
- 0 replies
- 423 views
-
-
80 முறை 300 ரன்களைக் கடந்த இந்திய அணி: சுவையான தகவல்கள் தரம்சலாவில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 330 ரன்களை எடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 80வது முறையாக 300 ரன்களைக் கடந்தது. 80 முறை 300 ரன்களைக் கடந்த அணி என்ற வகையில் அதிகம் 300 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே அணி இந்திய அணியே. ஆனாலும் 300 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் வெற்றி விகிதம் பார்த்தால் குறைவாகவே உள்ளது. அதாவது 10 அணிகளில் இந்தியா அல்லாத டாப் 6 அணிகள் 300க்கும் மேல் ரன்கள் எடுத்த போது அதிக வெற்றிகளை சாதித்துள்ளன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் 300 ரன்களுக்கும் மேல் எடுத்தும் வெற்றி விகிதத்தில் குறைவாக உள்ள அணிகளாகும். 20வது ஒருநாள் ச…
-
- 0 replies
- 423 views
-
-
பிரான்சில் முதன்முறையாக இடம்பெற்றிருந்த தமிழீழ வெற்றிக்கிண்ணத்திற்கான துடுப்பெடுத்தாட்ட போட்டியில், பாகிஸ்தான் வீழத்த்தி வெற்றிக்கிண்ணத்தினை தமிழீழ அணி தனதாக்கி கொண்டுள்ளது. தெரிவு அணிகளாக இடம்பெற்றிருந்த இப்போட்டியில் 11 அணிகள் இரண்டு நாள் ஆகளத்தில் துடுப்பாடியிருந்தன. தமிழர் விளையாட்டு; செயலகம் - பிரான்சு நடத்தியிருந்த இந்நிகழ்வில் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நாகலிங்கம் பாலசந்திரன் , மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை பிரென்சு தேசிய துடுப்பெடுத்தாட்ட தேசிய அணிக்கு ஆறு ஆண்டுகள் அணித்தலைவராக பங்காற்றியிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த சாசீர் அவர்களும் இந்நிகழ்வில் சி…
-
- 1 reply
- 423 views
-
-
பிறிஸ்பேன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சானியா- ஹிங்கிஸ் ஜோடி January 09, 2016 பிறிஸ்பேன் இன்டர்நஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சானியா- ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது. சர்வதேச டென்னிஸ் அரங்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் சானியா- ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டின் முதல் போட்டியாக பிறிஸ்பேன் இன்டர்நஷனல் தொடரில் பங்கேற்றது. இத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவாக்கிய மற்றும் ரஷ்ய ஜோடியான அன்ட்ரேஜா கிளேபாக் மற்றும் அல்லா குட்ரியாவ்ட்சேவா ஜோடியை எதிர்கொண்டு 6 க்கு 3 மற்றும் 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சானியா- ஹிங்ஹிஸ் ஜோடியின் தொடர்ச்சியான 25 ஆவது இறுதிப் போட்டி இதுவெ…
-
- 1 reply
- 423 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 12:16 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஒய்வுபெறுவதாக இந்திய டெஸ்ட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, தனது இன்டக்ராம் கணக்கில் பதவிட்டுள்ளார். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் புதன்கிழமை (07) இரவு பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்க டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார். அவரது இந்தத் தீர்மானம் ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. அவுஸ்திரேலியாவுக்கான டெஸ்ட் தொடர் விஜயத்தில் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியிருந்தார். எனினும் அந்தத் தொடர் 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு தோல்வியில் முடிவடைந்து நான்கு மாதங்கள் கழித்தே ரோஹித் ஷர்மா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'அனை…
-
- 2 replies
- 423 views
- 1 follower
-
-
மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மிண்டன் உலகில் 2019ஐ கலக்கியவர்கள் By Mohammed Rishad - 21ஆம் நூற்றாண்டின் முதாலவது தசாப்தமானது முடிவடைந்து அதன் இரண்டாவது தசாப்தத்துக்கு காலடி வைத்துள்ள நிலையில், கடந்த வருடம் விளையாட்டு உலகில் பிரகாசித்த ஒருசில முக்கிய வீரர்களை இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது. இதன்படி, மெய்வல்லுனர், டென்னிஸ், பெட்மின்டன், போர்முயூலா ஒன் போன்ற முக்கிய விளையாட்டுக்களில் சாதித்த வீரர்கள் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம். ஜனவரி வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3…
-
- 0 replies
- 423 views
-
-
எமது எதிர்கால திட்டத்தில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க Your browser does not support iframes. இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தற்காலிகமாக தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார். அதேநேரம், 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரையான இலங்கை அணியின் எதிர்கால திட்டங்களில் மாலிங்க ஒரு பகுதியாக இருப்பார் என ஹத்துருசிங்க உறுதிப்படுத்தினார். இலங்கையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றும் சுதந்திரக் க…
-
- 0 replies
- 423 views
-
-
மரியாதை குறைவாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்துகிறது : யூனிஸ்கான் மூத்த வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தும் விதம் வேதனையளிக்கிறது. நான் உடற்தகுதியுடன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் மொயீன் கான் எப்படி கூற முடியுமென பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரும், மூத்த வீரருமான யூனிஸ்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவரும், மூத்த வீரருமான யூனிஸ்கான், 15 மாதங்களுக்குப் பின்னர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அதில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய யூனிஸ்கான், உறவினரின் மரணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குத் திரும்பினார். இந்நிலையில் அடுத்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எத…
-
- 0 replies
- 423 views
-
-
-
- 1 reply
- 423 views
-
-
மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு! பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாக். சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் செல்வதற்கு பல வீரர்கள் ஆதரவளித்துள்ள போதும், முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர். பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர் என்கிற கேள்வியோடு இலங்கை அணியின் போராடும் தன்மையும் இப்போதைய நாட்களில் குறைந்து வருவதை பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளை மாற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பய…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு? இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவும் அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த விளையாட்டுக் கழக அதிகாரிகளுமே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது அநேகமானவர்களின் கருத்தாகும். இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி தொடர்பான ஆராய்வு….. இலங்கை கிரிக்கெட் அணி இவ்வருடத்தில் மாத்திரம் 03 தொடர்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இந்த வருடம் 26 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி அவற்றில் 12 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. அதிலும் சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தோல…
-
- 0 replies
- 422 views
-
-
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெற பாரீஸ் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஆகிய நகரங்கள் இடையே நேரடி போட்டி நிலவியது. இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேலும் 4 ஆண்டுகள் காத்திருந்து 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ்ஏஞ்சல்ஸ் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் பெரு தலைநகர் லிமாவில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தில் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை பாரீசுக்கும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் உரிமத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் வழங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. ஒலிம்பிக…
-
- 0 replies
- 422 views
-
-
ரொஹித் சர்மா அதிரடி சதம்: 6 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி! தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரொஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. சௌத் அம்ரனிலுள்ள, ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227…
-
- 0 replies
- 422 views
-