விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சம்பியனாகுவதற்கு முயற்சி - இலங்கை மகளிர் அணித் தலைவி By DIGITAL DESK 5 28 SEP, 2022 | 03:00 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி சம்பியனாவதற்கு முயற்சிப்பதாக இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து தெரிவித்தார். பங்களாதேஷில் அக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மகளிர் இருவது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து இன்று புதன்கிழமை (28) அதிகாலை புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார…
-
- 1 reply
- 317 views
- 1 follower
-
-
மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே புதுப்பித்தார் By DIGITAL DESK 5 26 SEP, 2022 | 03:07 PM (என்.வீ.ஏ.) ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற பி எம் டபிள்யூ பேர்லின் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 01 நிமிடம் 09 செக்கன்களில் நிறைவு செய்த கென்ய வீரர் எலியுட் கிப்சோகே தனது முன்னைய உலக சாதனையை 30 செக்கன்களால் முறியடித்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர் பேர்லின் நிலைநாட்டிய 2 மணி. 01 நி. 09 செக்கன்கள் என்ற தனது சொந்த சாதனையையே கிப்சோகே முறியடித்துள்ளார். இந்த வெற்றியுடன் இதுவரை அவர் பங்குபற்றிய 17 மரதன் போட்டிகளில் 15 வெற்றிகளை ஈட்டியுள்ளார். மரதன் ஓட்டப் போட்டியின் சரி அரைவாசி தூரத்தை 5…
-
- 0 replies
- 494 views
- 1 follower
-
-
இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 5 21 SEP, 2022 | 09:59 AM (என்.வீ.ஏ.) மொஹாலி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (20) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 4 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று கடினமான 209 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 4 பந்துகள் மீதிமிருக்க 6 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆரொன் பின்ச், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், மெத்யூ வேட் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவை…
-
- 2 replies
- 336 views
- 1 follower
-
-
ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை - இந்திய 'வேகப் பெண்' சாதித்தது என்ன? வந்தனா பிபிசி 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயத…
-
- 0 replies
- 204 views
-
-
'மன்கட் ரன்-அவுட் சரியானது; பந்துமீது எச்சில் தேய்க்க நிரந்தர தடை;' புதிய விதிமுறைகளை கொண்டுவரும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் 1-ந்தேதி அமலுக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. தினத்தந்தி துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் அதிரடியான சில மாற்றங்கள் வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சவுரவ் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி, தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்டுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய விதிமுறை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மாற்றம் செய்யப்பட்ட விதிமுற…
-
- 0 replies
- 379 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டி : இராணுவ வீரரான புவிதரன் கோலூன்றிப் பாய்தலில் சாதனை By T YUWARAJ 18 SEP, 2022 | 10:18 PM (நெவில் அன்தனி) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இராணுவ வீரர் ஏ. புவிதரன் 5.15 உயரம் தாவி புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார். தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியிலேயே சாவகச்சேரி இந்து கல்லூரியின் முன்னாள் பழைய மாணவன் புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார். விமானப்படை வீரர் இஷார சந்தருவன் 2017ஆம் ஆண்டு நிலைநாட்டிய 5.11 மீற்றர் என்ற முந்தைய த…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
கோலூன்றிப் பாய்தலில் அபிஷாலினி புதிய சாதனை ; வெண்கலம் வென்றார் திகன வினயா By T YUWARAJ 15 SEP, 2022 | 11:06 PM (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 90ஆவது ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி உட்பட மேலும் இருவர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.00 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் அபிஷாலினி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். இந்த வயதுப் பிரிவில் 3.00 மீற்றர் உயரத்தை …
-
- 4 replies
- 407 views
- 1 follower
-
-
நியூசிலாந்து கிரிக்கெட்டை விட நாமே பணக்காரர் - இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா By PRIYATHARSHAN 16 SEP, 2022 | 12:11 PM இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டை விட பணக்காரர்களாக உள்ளது என அதன் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வைப்புத்தொகை தற்போது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் காணப்படுகின்றது. இது கடந்த 2 - 3 வருடங்களாக தற்போதைய நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஷம்மி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் கூறுகையில், தற…
-
- 6 replies
- 425 views
- 1 follower
-
-
ஆசியக் கிண்ணம்: இன்றைய தொடக்கப் போட்டியில் ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை Digital News Team 2022-08-27T11:18:53 -சி.எல்.சிசில்- டுபாயில் இன்று இரவு நடைபெறும் ஆசியக் கிண்ண தொடக்கப் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரு முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக களமிறங்குவா் என எதிர்பார்க்கப்படுகிறது. சாமிக்க கருணாரத்ன சகலதுறை வீரராக விளையாடவுள்ளார். இலங்கை (சாத்தியம்) அணி விபரம்: 1 பத்தும் நிஸங்க 2 தனுஷ்க குணதிலக்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மெண்டிஸ் (WK), 5 பானுக ராஜபக்ஷ , 6 தசுன் ஷானக (கப்டன்), 7 வனிந்து…
-
- 65 replies
- 2.9k views
- 2 followers
-
-
கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பால் மரணம் By VISHNU 15 SEP, 2022 | 11:47 AM (எம்.எம். எஸ்.) பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவரான அசாத் ரவூப், இன்று (15) லாஹூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். 66 வயதான அசாத் ரவூப், 64 டெஸ்ட் போட்டிகளில் (49 கள நடுவராகவும் 15 டிவி நடுவராகவும்), 139 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவராக பணியாற்றியிருந்தார். 2000 களின் நடுப்பகுதியில் பாகிஸ்தானின் மிக முக்கியமான நடுவர்களில் ஒருவராக இருந்த அசாத் ரவூப், 2006 இல் ஐ.சி.சி.யின் எலைட் பேனலுக்கு தரமுயர்த்தப்பட்டார். எனினும், 2013…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
இலங்கையை வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது நேபாளம் By VISHNU 13 SEP, 2022 | 01:08 PM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றுவரும் 6 நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்ட தெற்காசிய கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நேபாளமும் இந்தியாவும் தகுதிபெற்றன. இலங்கையை 2ஆவது அரை இறுதியில் 6 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நேபாளமும் பங்களாதேஷை முதலாவது அரை இறுதியில் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றிகொண்டு புதன்கிழமை (14) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக நேபாளம் இறுதிப் போட்டிக…
-
- 3 replies
- 370 views
- 1 follower
-
-
ஆசியக் கிண்ணத்தை... சுவீகரித்த, கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள்... நாட்டை வந்தடைந்தன! ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன அணிவகுப்பில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிங்கப்பூரில் நடைபெற்ற 12ஆவது ஆசிய சம்பியன்ஷிப் வலைப…
-
- 1 reply
- 288 views
- 1 follower
-
-
தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது. சிங்களவன் இப்படத்தை முகநூல்களில் பகிர்கிறான் என்றால் எங்கட தமிழருக்கு எங்கே போய்விட்டது அறிவு ? தர்சினி சிவலிங்கம் இல்லாவிடில் இந்த சிறீலங்கா அணியினால் காலிறுதி போட்டிக்கேனும் சென்றிருக்கமுடியாது . கடந்த தடவையும் ஆசிய கிண்ணத்தை வென்றது தர்சினி சிவலிங்கத்தினாலேயே . இம்முறையும் அவரில்லாமல் கிண்ணத்தை வென்றே இருக்கமுடியாது . நூற்றுக்கு 98 வீதமான கோல்களை அவரே போட்டிருந்தார் . தர்சினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்ரேலியாவிலுள்ள பிரபல கழகமொன்றுக்கு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் சிறீலங்கா அணி அனைத்துப்போட்டிகளிலும் படுதோல்வியடைந்துகொண்டிருந்தது .இ…
-
- 1 reply
- 557 views
- 1 follower
-
-
ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசம்! 2022 ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர். ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சிங்கப்பூரை தோற்கடித்து ஆசிய வலைப்பந்து சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். http://tamil.a…
-
- 1 reply
- 781 views
- 1 follower
-
-
ஆசிய வலைப் பந்தாட்டத்தில், இந்தியாவை... இலகுவாக வீழ்த்தியது, இலங்கை. தர்ஜினி சிவலிங்கம்... 75 முயற்சிகளில் 72 புள்ளிகளை, பெற்றுக் கொடுத்திருந்தார். சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டத…
-
- 4 replies
- 387 views
- 1 follower
-
-
16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …
-
- 0 replies
- 224 views
- 1 follower
-
-
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் – அரை இறுதியில் இலங்கை தொடரும் தர்சினியின் கோல் மழை சிங்கப்பூர் ஓ சி பி சி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 நாடுகளுக்கு இடையிலான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.ஹொங்கொங் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் 62 – 51 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. போட்டியின் முதலிரண்டு ஆட்டநேர பகுதிகளில் மிகத் திறமையாகவும் வேகமாகவும் விளையாடி கோல்களை இலகுவாக குவித்த இலங்கை, கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் ஹொங்கொங்கின் கடும் சவாலை எதிர்கொண்டது. …
-
- 1 reply
- 287 views
-
-
இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்! தோமியன் 1ஆவது XI துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவர் கனிஸ்டன் குணரத்னம், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் மாகாண போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர், இந்த வார இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தோமியன் துணைக் தலைவரும், தொடக்க வேகப்பந்து வீச்சாளருமான கனிஸ்டன் குணரத்னம், சமீபத்தில் முடிவடைந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட…
-
- 2 replies
- 437 views
-
-
வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள் By T YUWARAJ 05 SEP, 2022 | 04:42 PM K.B.சதீஸ் வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (04.09.2022) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத…
-
- 3 replies
- 474 views
- 1 follower
-
-
செரீனா வில்லியம்ஸ்: உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் 'ராணிகளின் ராணி' ஜோனாதன் ஜுரேகோ பிபிசி ஸ்போர்ட் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 வெற்றிகளைப் பெற்ற அவருடைய 27 ஆண்டுக்கால தொழில்முறை டென்னிஸ் வாழ்வில் இதுவே தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். நியூயார்க்கில் பரபரப்பான இரவில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ஜனோவிச்சிடம் தோல்வியடைந்த பிறகான உணர்ச்சிகரமான சூழலுக்கு நடுவே, செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் ஆட்டதுக்கு விடை கொடுத்தார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ஸ்லாம…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
ஒரே போட்டியில் முதலிடத்தை பெற்ற இலங்கை! சாதனை முறியடிப்பு! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வௌியேறுகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணி 184 என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் கடந்திருந்தது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை இடம்பெற்ற ரி20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய …
-
- 2 replies
- 321 views
-
-
ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி அப்துல் ரஷீத் ஷக்கூர் பிபிசி செய்தியாளர், கராச்சி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம். கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மா…
-
- 3 replies
- 639 views
- 1 follower
-
-
கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து! இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 310 views
-
-
FIFA உலக கோப்பை 2022: கத்தாரில் நடைபெறும் போட்டி - முழு விவரம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFODI IMAGES 2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை. நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும். இந்த உலகக் கோப்பை தொடர்பான முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்: 2022 FIFA உலகக் கோப்பையில் எத்தனை நாடுகள் பங்கேற்கும்? இந்த 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன. டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன? இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக…
-
- 11 replies
- 774 views
- 1 follower
-