விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பல் இல்லாத சிங்கம் போல டி வில்லியர்ஸ் இல்லாத தென்ஆப்ரிக்கா திணறல் ! வங்கதேச அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மிர்பூரில் நடந்த இந்த போட்டியில் உலகக் கோப்பை தொடரில் விதிக்கப்பட்ட தடை காரணமாக தென்ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் விளையாடவில்லை. ஏற்கனவே அவருக்கு விடுப்பளிக்கப்பட்டு நாடு திரும்பி விட்ட நிலையில் தென்ஆப்ரிக்க அணி வங்கதேசத்தை மிர்பூரில் எதிர்கொண்டது. பகலிரவு போட்டியான இதில், டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி கேப்டன் ஹாசிம் ஆம்லா பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 2 ரன்னில் அவுட் ஆனார். 22 ரன்னில் ஆம்லா வெளியேறினார். டுப்லெசிஸ் மட்டும் ஓரளவுக்கு சமாளித்து 44 ரன்கள் எடுத்தார். ரூசவ் 4, மில்லர்…
-
- 6 replies
- 570 views
-
-
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் 2 ஆம் இடம் By NANTHINI 15 DEC, 2022 | 10:23 AM (என்.வீ.ஏ.) பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஹொக்கி போட்டியில் யாழ். பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பெற்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் இந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் ஹொக்கி போட்டி பொலிஸ் பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. முதல் சுற்று லீக் அடிப்படையிலும், இறுதிச் சுற்று நொக்-அவுட் அடிப்படையிலும் நடைபெற்ற இப்போட்டியில் தோல்வி அடையாமல் யாழ். பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தை பெற்றது. இறுதிப் போட்டி வெற்றி தோ…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
பல்கேரிய வீரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தினார் ரபேல் நடால்- இறுதியில் பெடரருடன் மோதல் டிமிட்ரோவை வீழ்த்திய நடால். | படம்.| ஏஎப்பி. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மேடக், செக் குடியரசின் லூசி சபரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆட…
-
- 0 replies
- 416 views
-
-
பல்லான் டி ஆர் விருது : இறுதி பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் இந்த ஆண்டுக்கான பல்லான் டி ஆர் ( தங்கபந்து ) விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் மெஸ்சி, நெய்மர் மற்றும் ரியர்மாட்ரிட்டின் ரொனால்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இறுதி 3 பேர் பட்டியலில் இருந்து விருதுக்குரிய வீரர், கால்பந்து பத்திரிகையாளர்கள், தேசிய அணியின் பயிற்சியாளர்கள் வாக்கெடுக்கின் மூலம் தேர்வு செய்வார்கள். ஜனவரி 11ஆம் தேதி இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய வீரர் அறிவிக்கப்படுவார். சிறந்த பயிற்சியாளருக்கான பல்லான் டி ஆர் விருதுக்கு பேயர்ன் மியூனிச்சின் பெப் கார்டியாலாவும் பார்சிலோனாவின் லுயீஸ் என்ரிச்சும் அர்ஜென்டினாவின் ஜோர்ஜ் சம்போலியும் முதல் 3 பட்டியலில் இடம் பெற்றுள…
-
- 1 reply
- 882 views
-
-
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே முதன் முதலாக பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை யாழ் பல்கலைக்கழக மாணவிகள் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை ஆணொருவரும் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273303
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும்,…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
தங்கம் வென்று அசத்தியது யாழ்மத்தியகல்லூரி இந்திய புனேயில் நடைபெற்ற பொதுநலவாயநாடுகளுக்கு இடையிலா பளுதூக்கும் போட்டியில்S. விஷ்ணுகாந்த் 227Kgமொத்த நிறையினை தூக்கி தமிழ் வீரர் ஒருவர் பெற்ற அதி உச்ச சாதனையை பதிவு செய்துள்ளா இவருக்கான பயிற்சிகளை விதன் வழங்கி இருந்தார்.
-
- 4 replies
- 410 views
-
-
பள்ளி நாட்களில் நன்றாக விளையாடியதற்காக புறக்கணிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மென் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடியதன் காரணமாகவே அவர் படித்த பள்ளி அவரைப் புறக்கணித்தது. இன்று ரிவர்ஸ் ஷாட்டில் பெரிய அளவுக்கு பவுலர்களை மிரட்டி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் அவரது பள்ளியினால் ஒதுக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வலது கை பேட்ஸ்மெனாக தொடக்கப் பள்ளி காலத்திலேயே பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்த கிளென் மேக்ஸ்வெலை அழைத்து இனி இடது கையில் விளையாடினால்தான் அணியில் இருக்கப்போகிறாய் என்று பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் இவரை ஒடுக்கியுள்ளனர். அதன் பிறகு இடது கையில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் மேக்ஸ்வெல்.…
-
- 0 replies
- 474 views
-
-
பரபரப்பாக நடைபெறும் கால்பந்து போட்டியின் ஒரு முக்கியமான ஆட்டத்தின் மும்முரமான தருணத்தில், ரசிகர் ஒருவர் ஆடுகளத்தில் இருக்கும் வீரரின் மீது வாழைப்பழம் ஒன்றை வீசி எறிந்தால் என்ன செய்வது ? வாழைப்பழத்தை லாவகமாகக் கையாண்ட ஆல்வெஸ் ஆட்டத்தை நிறுத்திவிட்டு வீசி எறிந்தவர் யாரென்று தேடி அவரை வசைபாடலாம், நடுவரிடம் முறைப்பாடு செய்யலாம், வீசி எறியப்பட்ட பழத்தை மீண்டும் ரசிகர்களை நோக்கி வீசலாம் அல்லது போனால் போகட்டும் என்று பழத்தை ஓரமாக எறிந்துவிட்டு ஆட்டத்தைத் தொடரலாம். ஆனால் பார்சிலோனா அணிக்கும் வில்லாரியல் அணிக்கும் இடையே நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தன் மீது வீசிய வாழைப்பழத்தை என்ன செய்தார் தெரியுமா பார்சிலோனா அணியின் வீரர் டானி ஆல்வெஸ்? அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வீசப்பட்ட பழத…
-
- 1 reply
- 633 views
-
-
அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் இந்தப் பழுதூக்கும் போட்டி இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டரில் ஸ்டீபன் 18 வயதுக்குட்பட்ட 74 கிலோ எடைப்பிரிவில் 155 கிலோவைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றதோடு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் செல்வராஜா அக்ஸயன் 20 வயதுக்குட்பட்ட 59 எடைப் பிரிவில், 110 கிலோ எடையினை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார். https://thinakkural.lk/article/271007
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு By Mohamed Azarudeen இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான “பழுப்பு வர்ணங்களின் சமர்” (Battle ot the Maroons) என அழைக்கப்படும் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கனிஷ்க ரன்திலக்க தலைமையிலான ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரி வீ…
-
- 0 replies
- 780 views
-
-
பழைய பெருச்சாளியை இப்போது ஏன் "பிட்ச்"சுக்கு நடுவே ஓட விடுகிறார் சச்சின்? மும்பை: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த முறை எந்த சாதனைக்காகவும் அவர் பரபரப்பைக் கிளப்பவில்லை. மாறாக பெரும் சர்ச்சை மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். குறிப்பாக கிரேக் சேப்பல் மீது இவர் கூறியுள்ள சரமாரியான புகார்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் பொய் என்று சேப்பல் கூறியுள்ளார். ஆனால் முன்னாள் வீரர்கள் பலரும் சச்சின் சொன்னது உண்மை. அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று அடித்துக் கூறி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் ஏன் இப்பப் போய் சொல்கிறார் சச்சின் என்பதுதான் புரியவில்லை. சேப்பல் கதை முடிந்து அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்ட நிலையில் இப்போது பழைய…
-
- 1 reply
- 945 views
-
-
பவர்பிளேவில் அசத்துவது அதிர்ஷ்டம்: மனம் திறக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர் - THE HINDU பவர்பிளேவில் விக்கெட்கள் எடுக்கும் திறனை தான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 18 வயதான வாஷிங்டன் சுந்தர், ம…
-
- 0 replies
- 239 views
-
-
பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…
-
- 1 reply
- 361 views
-
-
பவுன்சரைப் போட்டு சேவாகை காலி செய்து விடுவார்கள் என்று கேலி பேசினர்: சேவாக், தோனியை செதுக்கி வளர்த்தது பற்றி கங்குலி ருசிகரப் பதிவு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் இந்தியக் கிரிக்கெட்டில் இரு பெரும் சாதனையாளர்களான வீரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கட்டமைத்ததிலும், செதுக்கியதிலும் முன்னாள் கேப்டன், வீரர் சவுரவ் கங்குலிக்கு முக்கியப்பங்கு உண்டு இந்தியக் கிரிக்கெட்டில் கேப்டன்களாக இருந்தவர்களில் கங்குலியின் காலம் என்பது மிக அற்புதமான காலமாகும். இளைஞர்கள் அதிகமானோர் வெளிக்கொண்டு வரப்பட்டனர். அதிகமான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறத் தொடங்கி இருந்த காலம். …
-
- 0 replies
- 298 views
-
-
பவுன்சர் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மரணம் பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜுபைர் அகமது என்ற வீரர், பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். கைபர் பதுன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுபைர் அகமது, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பஹர் ஜமனின் கிரிக்கெட் அகாடமியைச் சேர்ந்தவர். கிளப் அணிகள் இடையிலான போட்டியின்போது ஹெல்மெட் அணியாமல் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டதால், அவர் உயிரிழக்க நேரிட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் விளையாட்டின்போது பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை நி…
-
- 0 replies
- 306 views
-
-
பவுன்சர்களை சுதந்திரமாக வீசிய இந்திய, ஆஸ்திரேலிய பவுலர்கள் பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர். அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில் மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர். பிலிப் ஹியூஸ் மரணம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளியதோடு, பவுன்சர்கள் வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்பது போல் வீசினர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர் செப் காட்ச்…
-
- 0 replies
- 558 views
-
-
பவுலர்களுக்கு சாதகமாக கிரிக்கெட்டில் பல விதிமுறைகள் மாற்றம்: பார்படோஸ்: பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் தற்போதுள்ள ஒருநாள், கிரிக்கெட் விதிமுறைகள் சிலவற்றில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றம் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறைகள், ஜூலை மாதம் 5ம் தேதிமுதல் அமலுக்கு வரும். ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறிக்கொண்டே வருகிறது. இதனால், ஒரு அணி 400 ரன்களுக்கு மேல் எடுப்பது கூட சர்வ சாதாரணமாகிவிட்டது. பரிதாப பவுலர்கள் பவுலர்கள் பரிதாபமான ஜீவன்கள் போல மைதானத்தில் காணப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக, அனில்கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கடந்த மாதம், ஒரு பரிந்துரையை அளித்திருந்தது. ஃபீல்டர்கள் எண்…
-
- 1 reply
- 696 views
-
-
பவுலர்கள் என்னை ‘ஒர்க் அவுட்’ செய்யத் தொடங்கி விட்டனர்: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கவலை பௌலர்கள் ஒர்க் அவுட் செய்கின்றனரா? ஸ்மித் கவலை. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சதமெடுக்கவில்லை. மாறாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம், டிவில்லியர்ஸ் சதம் எடுத்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் 900 தாண்டிய புள்ளிகளுடன் டான் பிராட்மேனை நெருங்கும் தருணத்தில் இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் இடது கை ஸ்பின்னர்களிடம் வீழ்ந்து வருகிறார், மஹராஜிடம் இருமுறை, டீன் எல்கரிடம் ஒருமுறை தவிர ரபாடாவிடம் ஒருமு…
-
- 0 replies
- 190 views
-
-
பவுலிங்கில் கலக்கிய அர்ஜுன் டெண்டுல்கர்... எதிரணியை திணற அடித்தது எப்படி! மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அண்டர்-19 போட்டி ஒன்றில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து எதிரணியை திணற அடித்து இருக்கிறார். ஒரே போட்டியில் இவர் எடுத்த 5 விக்கெட்டுக்கள் காரணமாக எதிரணி மிக சொற்ப ரன்களில் சுருண்டு இருக்கிறது. மும்பையில் அண்டர்-19 பிளேயர்கள் விளையாடும் 'பேஹர் கோப்பை' கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடும் பலர் ரஞ்சி போட்டிகளுக்கும், இந்திய அண்டர்-19 அணிக்கும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் உலகில் இந்த தொடர் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் …
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கை அணியினரின் பஸ்ஸில் பெற்றோல் திருட்டு இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின் பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அ…
-
- 2 replies
- 1.6k views
-
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவி…
-
- 0 replies
- 228 views
-
-
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானின் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள்,இலங்கை அல்லது ஐ.அ.இராச்சியத்தில் நடைபெறும் வாய்ப்பு? தமது அணி பங்குபற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ சி. சி.) உலக இருபது கிரிக்கெட் போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கான் முன்வைத்துள்ளார். தமது அணி இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு பாகிஸ் தான் அரசாங்கம் அனுமதிக்காத பட்சத்தில் தமது நாட்டு அணி சம்பந்தப்பட்ட போட்டிகளை நடுநிலையான மைதானங்களில் நடத்துவதற்கான பிரேரணை ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக ஷஹாரியார் கூறினார். ‘‘இந்தி…
-
- 0 replies
- 323 views
-
-
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹனிஃப் முகமது மரணம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நீண்ட இன்னிங்ஸை விளையாடிய வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேனுமான ஹனிஃப் முகமது கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார். அவருக்கு வயது 81. 1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டியில், ஹனிஃப் முகமது 16 மணி நேரங்கள் விளையாடி 337 ரன்களை குவித்தார். ஆசிய பேட்ஸ்மேன் ஒருவர் துணை கண்டத்திற்கு வெளியே பெற்ற அதிகபட்ச ரன்னாக இன்றுவரை இருக்கிறது. இந்தியாவில் பிறந்த ஹனிஃப் முகமது, குழந்தை பருவத்தின் போதே கராச்சிக்கு சென்றுவிட்டார். 1952 இல், தன்னுடைய 17 வயதில், தான் பிறந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதல…
-
- 0 replies
- 336 views
-