Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கிலாந்து இந்தியாவினை 31 ஓட்டங்களினால் வென்றுள்ளது. July 1, 2019 ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டங்களினால் இந்தியாவினை வென்றுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் நேற்றையதினம் பேர்மிங்காம் மைதானத்தில் போட்டியிட்ட நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 338 என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டங்களினால் உலககிண்ணத் தொடரில…

  2. பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமனம் பார்சிலோனா கால்பந்து கிளப் அணயின் புதிய பயிற்சியாளராக அத்லெடிக் பில்பாயோ அணியின் பயிற்சியாளரான எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமிக்கப்பட்டுள்ளார். பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தவர் லூயிஸ் என்ரிக். இவர் பார்சிலோனா அணியின் மானேஜராக கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார். தற்போது வரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் இந்த சீசனோடு பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பார்சிலோனா ஆணி கோப…

  3. பிறீமியர் லீக்: செல்சியை வென்றது லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் பிறீமியர் லீக் தொடரின், நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில், செல்சியை லிவர்பூல் தோற்கடித்துள்ளது. செல்சியை, 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்கடித்திருந்தது. லிவர்பூல் சார்பாக, டெஜான் லெவ்றோன், போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்ததுடன், அணித்தலைவர் ஜோர்டான் ஹென்டர்ஸன், 25 அடி தூரத்திலிருந்து, போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றிருந்தார். இந்நிலையில், பிரான்ஸின் பரிஸா ஜேமா கழகத்திலிருந்து 32 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, மீண்டும் செல்சிக்கு திரும்பிய டேவிட் லூயிஸ் கொடுத்த பந்தை டியகோ கொஸ்டா கோலாக்கி, செ…

  4. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கிய…

  5. ஐபிஎல் கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்கள் பங்கேற்பை பிசிசிஐ மறு பரிசீலனை பணமழை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டது பிசிசிஐ-யிடத்தில் கடும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் நிச்சயம் இந்த விவகாரம் எழுப்பப்படும். ஒரு சீசனுக்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும். கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், டிவைன் ஸ்மித், சுனில் நரைன் ஆகியோருக்கு ஐபிஎல் மூலம்தான் பணம் குவிந்துள்ளது. நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இவர்கள் மீது இந்திய ர…

  6. தோனி நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்: மைக் ஹஸ்ஸி ஆதரவுக்கரம் தோனி தன்னால் முடியவில்லை என்ற மனநிலைக்கு வந்தால் நிச்சயம் ஆட்டத்தை கைவிடுவார் ஆனால் அவரால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும்-ஹஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். 'வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஆச்சரியமிக்க திறன் கொண்டவர் தோனி' என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சென்னை அணியில் தோனியின் கீழ் ஆடியவருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மைக் ஹஸ்ஸி, மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுவதற்கேற்ப தனது 40 வயதிலும் பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணியை வழி நடத்திச் சென்று அ…

  7. ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர் இந்த சீசனில் ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் சொதப்பலாக ஆடியுள்ளார். அவருக்கு சூதாட்டத்தரகர்களுடன் தொடர்பு இருக்கக்கூடும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஒருவர் மீதும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். போட்டிகளின் போது இல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நடுவர் சூதாட்டத்தரகர்களை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என போலீசார் http://di…

    • 0 replies
    • 349 views
  8. மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் கோலாலம்பூரில் நடந்த மகளிருக்கான ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனும், 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக கோப்பையை வென்றது வங்கதேச அணி. கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகாடெமி ஓவல் மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக ஆசியக்கோப்பை டி20 போட்டி நடந்து வந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணியை எதிர்கொண்டது வங்கதேச அணி. டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 …

  9. தஸ்கீன் அஹ்மதுக்கு தொடர்ந்தும் தடை! சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு (டெல்­லி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பங்­க­ளாதேஷ் சுழல்­பந்­து­வீச்­சாளர் தஸ்கின் அஹ­மத்­துக்கு பந்­து­வீச விதிக்­கப்­பட்­டுள்ள தடை அவ்­வாறே அமுலில் இருக்கும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று அறி­வித்­தது. தஸ்கின் அஹ்மத் மீதான பந்­து­வீச்சுப் பாணி தொடர்­பாக தொலை­பேசி மூலம் விசா­ரணை ஆணை­யாளர் நடத்­திய விசா­ர­ணையின் மூலம் தஸ்­கினின் பந்­து­வீச்­சுப்­பாணி (பெரும்­பா­லா­னவை) தவ­றா­னது என்­பது ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சர்­வதேச கிரிக்கெட் பேரவை தெரி­வித்­தது.…

  10. ‘‘இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முறையாக கவனிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டால் சிறந்த குழு கிடைத்துவிடும்’’ - கிறஹம் ஃபோர்ட் 2016-06-07 11:10:17 இலங்­கையில் வேகப்­பந்­து­வீச்சில் பிர­கா­சிக்­கக்­கூ­டிய இளம் வீரர்கள் இருப்­ப­தா­கவும் அவர்கள் உரி­ய­மு­றையில் கவ­னிக்­கப்­பட்டால் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்­களைக் கொண்ட ஒரு குழாம் உரு­வாகும் எனவும் கிரிக்கெட் தலைமைப் பயிற்­றுநர் கிறஹம் ஃபோர்ட் தெரி­வித்­துள்ளார். இங்­கி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்­தின்­போது இரண்டு வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் உபா­தைக்­குள்­ளாகி நாடு திரும்­பிய நிலையில் மேலும் ஒரு பந்­து­வீச்­சா­ள­ரது பந்­து­வீச்சுப் பாணி குறித்து எழுப்­பப்­பட்­டுள்ள சந்­தேகம் ஆகி­ய­வற…

  11. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான் சமரவீர நியமனம். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். அடுத்து வரவுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கெதிரான தொடருக்காகவே 39 வயதான திலான் சமரவீரவின் இந்த நியமனம் அமைந்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நசிமுல் ஹாசனின் பணிப்புரையின் பேரில்,தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தனக்கு உதவியாக துறைசார்ந்த பயிற்சியாளர்களை பரிந்துரைத்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அண்மையில் மேற்கிந்திய தீவ…

  12. ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு மரியா ஷரபோவா - USA Today Sports அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றில் கலந்து கொள்ள ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வரும் 28-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் கலந்து கொள்ள 5 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. …

  13. நெய்மர் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்: ஸ்பெயின் கோர்ட் பார்சிலோனா அணியின் முன்னணி வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனுமான நெய்மர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் கோர்ட் அறிவித்துள்ளது. 24 வயதே ஆகும் பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானா ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக வ…

  14. ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக தடவும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு ராகுல் திராவிட் கூறுவது என்ன? ராகுல் திராவிட். | கோப்புப் படம். நடப்பு இந்திய அணி ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுவது குறித்து இந்தியா ஏ பயிற்சியாளர் ராகுல் திராவிட் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி. இந்திய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக திணறுகிறது... ஸ்பின் பந்துவீச்சை விளையாடுவது நமது பெரிய பலம். இந்திய பிட்ச்கள் மாறிவிட்டன, சர்வதேச அணியில் இருக்கும் போது நிறைய சுழற்பந்து வீச்சை வீரர்க்ள் எதிர்கொள்வதில்லை. கால்களை நகர்த்துவதில் பிரச்சினையா? கால்களை சுறுசுறுப்பாக பயன்படுத்துவது உதவும். ஆனால் ஒவ்வொரு வீரரும் ஸ்பின் பந்து வீச்சை ஒவ்வொரு விதமாக விளையாட…

  15. சுவிஸ் சம்பியன் கால்பந்தாட்ட அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் ஹனீப் சுவிட்­சர்­லாந்தில் நடை­பெற்­று­வரும் இன்டர் கன்ட்ரி கால்­பந்­தாட்ட லீக் போட்­டி­களில் சம்­பி­ய­னான எவ். சி. வெட்­டிஞ்சென் அணியில் இலங்­கையைச் சேர்ந்த ஹசீப் ஹனீப்பும் இடம்­பெற்று நாட்­டிற்கு பெருமை சேர்த்­துக்­கொ­டுத்­துள்ளார். திஹா­ரி­யவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஹனீப் விளை­யாடும் எவ். சி. வெட்­டிஞ்சென் கழகம் 26 போட்­டி­களில் 14 இல் வெற்­றி ­பெற்­ற­துடன் 6 போட்­டி­களை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது. 6 போட்­டி­களில் தோல்வி அடைந்­தது. இக் கழகம் மொத்­த­மாக போட்ட 60 கோல்­களில் 15 கோல்­களை ஹனீப் போட்டு அணியின் சிறந்த வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கின்றார். இ…

  16. அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா : யாழ். மாணவன் புதிய சாதனை (நெவில் அன்தனி) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவக்கச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. புவிதரன் புதிய போட்டி சாதனை நிலைநாட்டி வட மாகாணத்துக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார். போட்டியின் முதலாவது நாளான நேற்றைய தினம் புவிதரனின் சாதனையுடன் மேலும் 3 சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன. நேற்று காலை நடைபெற்ற கோலாகல ஆரம்ப விழா வைபவத்தின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்…

  17. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோலண்ட்-ஜோன்ஸ் அறிமுகமாகியுள்ளார். அவருடன் ஃபின், வில்லே ஆகியோர் ஆடும் லெவனில…

  18. விராட் கோலியின் அணுகுமுறை சரியா? டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதுமே பலர் மனதில் எழுந்திருக்கக்கூடிய கேள்வி இதுதான். “வெற்றிபெற வேண்டும் என்று ஆடியது சரியா?” இந்திய அணித் தலைவர் விராட் கோலி, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த ஒரு கருத்து இதற்குப் பதிலாக அமைந்தது. “டிராவுக்காக ஆடியிருந்தால் 150 ரன் வித்தியாசத்தில் தோற்றிருப்போம்.” இது சரிதானா? டிராவுக்காக ஆடியிருந்தால் இந்தியா படு கேவலமாகத் தோற்றிருக்குமா? இப்போது வெற்றிக்காக ஆடியதால்தான் வெற்றிக்கு மிக அருகில் வர முடிந்ததா? கடைசியில் தோல்விதான் கிடைத்தது என்றாலும் இந்த அணுகுமுறையில் ஏதேனும் பலன் இருக்கிறதா? ஒரு போட்டியை எப்போது டிரா செய்ய முயற்சிக்க வேண்டும்? அடிக்க வேண்டிய ரன் விகிதம் 5 அல்லது அதற்கு மேல்…

  19. இவரை உலகறிய செய்வோம் . கஷ்டப்பட்டு சாதனை படைத்த தமிழன்

  20. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில்! 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளை ஸிம்பாப்வேயில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. மேலும், இந்தப் போட்டிகள், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது. இத்தகுதிகாண் போட்டிகளை பங்களாதேஷில் நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் நேரடியாகத் தகுதிபெற்றதால், அதற்கு அடுத்தபடியாக இருந்த ஸிம்பாப்வேயில் தகுதிகாண் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மைதானங்கள் குறித்து ஆய்வு நடத்த சர்வதேச கிரிக்க…

  21. திசர பெரேரா அதிரடி : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குணதிலக ஆகியோர் அரைச்சதத்தை கடந்து முதல் விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களைய…

  22. ஜேர்மனியில் அகதிகளுக்கெதிரான கட்சியின் உப தலைவரின் கறுப்பின வீரருக்கெதிரான கருத்தால் சர்ச்சை ஜேர்மனி தேசிய அணியினதும் பயேர்ண் மியூனிச் அணியினதும் வீரரான ஜெரோம் போடெங் தொடர்பாக, ஜேர்மனியின் அகதிகளுக்கெதிரான கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் உப தலைவர் தெரிவித்த கருத்தால், கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கானாவைச் சேர்ந்த அப்பாவுக்கும் ஜேர்மனியைச் சேர்ந்த அம்மாவுக்கும் ஜேர்மனியின் பேர்ளினில் பிறந்த போடெங், ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் முக்கிய வீரராக உள்ளதோடு, அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரில், ஜேர்மனுக்காக விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஜேர்மனிக்கான மாற்றீடு க…

  23. நட்சத்திரங்களின் உதைபந்தாட்டம் மானிப்பாய் இந்து ஹற்றிக் வெற்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடாத்திவரும் அழைக்கப்பட்ட பாடசாலைக ளுக்கிடையிலான நட்சத்திரங்களின் உதைபந்தாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியனானது. குறித்த போட்டியின் இறுதியாட்டமானது நேற்றைய தினம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் கல்லூரியின் அதிபர் மு. செல்வஸ்தான் தலைமையில் ஆரம்பமானது. மானிப்பாய் இந்துக்கல்லுரி எதிர் மகாஜன கல்லுரி அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3:0 என்ற கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது. குறித்த பாடசாலையானது தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாக வெற்றி பெ…

  24. எனது வெற்றியை என்னுடைய மக்களுடன் பகிர்கிறேன்: ரியோவில் சாக்‌ஷி மகிழ்ச்சி பதக்கத்துடன் சாக்‌ஷி மாலிக் | படம்: ஏஎஃப்பி '12 ஆண்டு உழைப்பின் பலன்' ரியோவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்‌ஷி மாலிக் மகிழ்ச்சி "ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை நான் வென்றெடுப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை!" ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், தனது 12 ஆண்டு கடின உழைப்பின் பலனாக வெற்றி கிட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று கணக்கைத் தொடங்கியுள்ளது. மகளிர் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்…

  25. ஜஸ்ப்ரீத் பும்ராவைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் தாத்தா மரணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.