விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பிரபல கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ உள்பட பிற வீரர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் பிரபல வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிற வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமாக மில்லியன் கணக்கான டாலர் வருவாயை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிஸ்டியானோ ரொனால்டோ மின்னஞ்சல்கள், ரகசிய உடன்படிக்கைகள், ரகசிய ஒப்பந்தங்கள் என சுமார் 18 மில்லியன் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை பல ஐரோப்பிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ரொனால்டோவை தவிர்த்து ஜோஸ் மொரின்ஹோ, மான்செஸ்டர் யுனைடட் அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் மெண்டீஸ் ஆகிய பி…
-
- 0 replies
- 243 views
-
-
பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் உயிரிழப்பு கிரிக்கட்டின் குரல் என்று அனைவராலும் போற்றப்பட்ட வர்ணனையாளர் டோனி கோசியர் உடல்நிலை பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு 75 வயது. சமீபகாலமாக கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டோனி கோசியர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எழுத்தாளரர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார். 1965ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியா சென்ற போது தனது வர்ணனையாளர் பணியை தொடங்கிய அவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வர்ணனை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். டோனி கோசி…
-
- 0 replies
- 359 views
-
-
பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …
-
- 0 replies
- 438 views
-
-
பிரபல குத்துச் சண்டை வீரர் கிளிட்ஸ்கோ ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரபல குத்துச் சண்டை வீரர் விளாடிமிர் கிளிட்ஸ்கோ(wladimir-klitschko), போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுள்ளார். உக்ரேய்ன் நாட்டைச் சேர்ந்த 41 வயதான கிளிட்ஸ்கோ அதிபார உலக சம்பியன் குத்துச் சண்டை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பிரித்தானிய வீரர் அன்ரனி ஜொஸ்வா ( Anthony Joshua )உடன் நடைபெற்ற போட்டியில் 11ம் சுற்றில் கிளிட்ஸ்கோ தோல்வியைத் தழுவினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி மீளவும் கிளிட்ஸ்கோவுடன் போட்டியிட முடியும் எனவும் லோஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் போட்டியை நடத்த முடியும் எனவும் ஜொஸ்வா நம்பிக்கை வெளியிட்டிருந்தார். …
-
- 0 replies
- 341 views
-
-
பிரபல கொல்ப் வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார் பிரபல கொல்ப் (Golf) வீரர் ஆர்னல்ட் பால்மர் காலமானார். கொல்ப் விளையாட்டு வரலாற்றில் உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் பால்மர் தனது 87ம் வயதில் காலமானார். பால்மர் பென்சல்வேனியாவின் பிட்ஸ்பெர்க் வைத்தியசாலையில் காலமானார். மிக நீண்ட காலமாக கொல்ப் போட்டிகளில் பங்கேற்று வந்த பால்மர் சர்வதேச ரீதியில் 90 போட்டித் தொடர்களில் வெற்றியீட்டியுள்ளார். பால்மரின் இழப்புக்கு உலகின் கொல்ப் வீரர்கள் கொல்ப் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136343/language/ta-IN/article.…
-
- 0 replies
- 304 views
-
-
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணக்கிறார் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவை சேர்ந்த அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். நீண்ட நாள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸ் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் தொழில் அதிபர் அலெக்சிஸ் ஒஹனியனை மணப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து உள்ளார். அலெக்சிஸ், ரெட்டிட் இணையதளத்த…
-
- 1 reply
- 403 views
-
-
பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்? ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல் கீச்சை வரும் பெப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே யுவராஜும் ஹேசல் கீச்சும் நெருக்கமாக பழகி வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹர்பஜன் சிங் வரவேற்பில் யுவராஜ்-ஹேசல் கீச் ஜோடியாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=74134
-
- 4 replies
- 1.9k views
-
-
பிரபல பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வீதி விபத்தில் பலி இந்தியாவின் முன்னணி பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஜெய்பூரைச் சேர்ந்த வேணு பலிவால் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 44 வயதான வேணு பாலிவால் மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூர் அருகே தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர் வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளார். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு க…
-
- 0 replies
- 607 views
-
-
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பெருங்குடல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஹீத் ஸ்ட்ரீக்கின் மனைவி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,”இன்று அதிகாலையில், செப்டம்பர் 3, 2023 ஞாயிற்றுக்கிழமை, என் வாழ்க்கையின் மிகப்பெரிய அன்பும், என் அழகான குழந்தைகளின் தந்தையும், தனது கடைசி நாட்களைக் கழிக்க விரும்பிய அவரது வீட்டிலிருந்து தேவதூதர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அன்பு மற்றும…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
பிரமிக்க வைத்த போல்ட்டின் கேட்சை முறியடிக்கும் கேட்சை எடுப்பேன்: புகழாரத்துடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் உறுதி ஏ.பி.டிவில்லியர்ஸ். - படம். | கே.முரளிகுமார். ஆர்சிபி அணிக்காக அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியை புரட்டி எடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இதே போட்டியில் முக்கியக் கட்டத்தில் விராட் கோலியை வெளியேற்ற பவுண்டரி அருகே இன்னமும் கூட நம்ப முடியாத பிரமிக்க வைத்த கேட்சைப் பிடித்த டிரெண்ட் போல்ட்டின் முயற்சியை முறியடிக்கும் கேட்சுக்குச் செல்வேன் என்று கூறுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பீல்டிங்கைப் பற்றி முதன் முதலில் ஒரு வீரர் பேசுகிறார், அதுவும் அந்தக் கேட்சை முறியடிப்பேன் என்று கூறும் ஒரு ஆளுமை ஏ.ப…
-
- 0 replies
- 317 views
-
-
பிரமோதய விக்கிரமசிங்கவின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அணி வீரர்கள் கடிதம் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர். இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார். போட்டிக்கு முன்ன…
-
- 0 replies
- 308 views
-
-
பிரவீன் தாம்பே பிடித்து கொடுத்த' சூதாட்ட' கிரிக்கெட் வீரர் 'சஸ்பெண்ட்' சூதாட்டப் புகார் காரணமாக மும்பை கிரிக்கெட் வீரர் ஹைஹென் ஷா கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் பிரவீன் தாம்பேவை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கும் நோக்கத்துடன் ரஞ்சி போட்டியில் விளையாடியுள்ள வீரர் ஒருவர் அணுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பிரவீன் தாம்பே ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனடியாக இது குறித்து பி.சி.சி.ஐக்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம் புகார் அளித்தது. பி.சி.சி.ஐ சூதாட்ட கண்காணிப்புக் குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி பி.சி.ச…
-
- 0 replies
- 422 views
-
-
பிராட் ஹாடின் ஓய்வு சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் பிராட் ஹாடின் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், 37. இதுவரை 66 டெஸ்ட் (3266 ரன்), 126 ஒரு நாள் (3122), 34 ‘டுவென்டி–20’ (402) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த உலக கோப்பை (2015) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் பின் ஒரு நாள போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், இவரின் 4 வயது மகள் மியா கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற ஹாடின், அடுத்த 4 போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், சர்வதே…
-
- 0 replies
- 515 views
-
-
பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார். பி.ஜே. என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ஹாட்டின் இடது கை துடுப்பாட்ட வீரராவார். இதுவரை 126 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 115 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். 2 சதங்களையும், 16 அரை சதங்களையும் அடித்துள்ள இவர், இதுவரை 3122 ஓட்டங்களை குவித்துள்ளார். அதே போல் விக்கெட் காப்பாளர் பொறுப்பில் 170 பிடிகளை எடுத்துள்ளதுடன் 11 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து இவர் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். htt…
-
- 0 replies
- 438 views
-
-
பிராட்மேனுக்கு எதிரான 'பாடி-லைன்' உத்தியுடன் கோலியின் உத்தியை ஒப்பிட்டு பேடி காட்டம் நாக்பூர் பிட்ச் விவாதம் இன்னும் முடிந்துவிடவில்லை, ஏற்கெனவே எரியும் நெருப்பில் முன்னாள் கேப்டன், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி எண்ணெய் வார்த்துள்ளார். மும்பை, மிட் டே பத்திரிகைக்கு அவர் கூறும்போது, “வெள்ளைச் சீருடையைக் கழற்றி விட்டு மல்யுத்த உடைகளை அணிந்து கொண்டு ஆடுங்கள் இந்தக் குழியில். உள்நாட்டில் விளையாடுவதன் அனுகூலம் இதுதான் என்று என்னை நம்பச் சொல்கிறீர்களா? முதல் நாளே திரும்புவதற்கானதல்ல ஆடுகளம் என்பது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான, பவுன்ஸ் பிட்ச் அமைக்க குறிப்பிட்ட மண் தன்மை பற்றிய அறிதல் அவசியம். ஆனால் இங்கு எதுவுமே தே…
-
- 0 replies
- 612 views
-
-
பிராட்மேன் சாதனையை முறியடித்த 18 வயது ஆஃப்கானிஸ்தான் வீரர்! கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்திருந்தவர் என்ற ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயது வீரர் முறியடித்துள்ளார். Photo Credit: Afgan Cricket board ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பீன்கர் பகுதி அணிக்காக விளையாடி வருபவர் பஹீர்ஷா மெஹ்பூப். கடந்த 2017 சீசனில் அறிமுகமான 18 வயது வீரரான பஹீர்ஷா, இதுவரை 7 முதல்தர போட்டிகளில் (12 இன்னிங்ஸ்கள்) 1,096 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆமோ ரீஜன் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே 256 ரன்கள் குவித்தார். உலக அளவில் அறிமுகப் போட்டி…
-
- 0 replies
- 343 views
-
-
பிராட்மேன், லாரா, சச்சினை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி சாதனை! இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், விராட் கோலி ஜோடி 3- வது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது கோலி 156 ரன்களுடன் களத்தில் நின்றார். இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த…
-
- 2 replies
- 610 views
-
-
தமிழீழம் காரைநகர் களபூமியை பிறப்பிடமாக கொண்ட திரு. திருமதி. சிறிஸ்கந்தராசா தம்பதிகளின் புதல்வி செல்வி. நிருசா பிரான்சு நாட்டில் பிறந்து இப்பினி சூ சென் என்னும் இடத்தில் வளர்ந்து கல்வி கற்று வரும் இவர் சதுரங்கப்போட்டியில் il du france அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2011 ஆண்டுக்கான சிறந்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே champiton de france ஆக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் 2007ம் ஆண்டு இவர் வாழும் இப்பிணி சூ சென் மாநகரசபையாலும், அதன் முதல்வர் Hervé CHEVEAU அவர்களால் Sportif Méritant என்ற மதிப்பளிக்கப்பட்டது. ஐரோப்பிய ரீதியில் 15 வயதிற்குட்பட்டோரின் பிரிவில் சுவிஸ்ல் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் கலந்து க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவீரர் நினைவு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடக்கம் பிரான்சில் தமிழர்விளையாட்டுத்துறைபிரான்சுஈழத்தமிழர்உதைபந்தாட்டச்சம்மேளனஆதரவுடன் நடாத்தும் மாவீரர்நினைவுசுமந்தபோட்டிகளிலில் உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியின் இறுதிசுற்றான 1வது 2வது இடத்திற்கானபோட்டிகள் இன்றுசெவரோன் மாநகரத்தில் இடம் பெற்றிருந்தது. நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழத்தினருக்கும்,ஈழவர்விளையாட்டுக்கழகத்தினருக்கும் நடைபெற்றபோட்டியில் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகத்தினர்வெற்றிபெற்றிருந்தனர். உதயசூரியன் விளையாட்டுக்கழகத்திற்கும்,தமிழர்விளையாட்டுக்கழகம் 93 ற்கும் நடைபெற்றபோட்டியில் தமிழர்விளையாட்டுக்கழகம் -93 வெற்றியீட்டியிருந்தது. Bபிரிவுக்கானபோட்டி…
-
- 0 replies
- 384 views
-
-
மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் - 2014 பிரான்சில் பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டு தோறும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் மற்றும் உள்ளரங்கப்போட்டிகள் நடாத்தி வருகின்றது. 2014 ம் ஆண்டுக்கான போட்டிகள் 12.01.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு செல் மாநகரத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடனும் ஈகைச்சுடர் ஏற்றலுடனும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை கரம் மற்றும் சதுரங்கப்போட்டிகளின் ஒருங்கமைப்பாளர் திரு. நிமலன் அவர்களும் ஈகைச்சுடரினை 1991 ல் வீரமரணத்தை தழுவிக்கொண்ட மாவீரர் சுரேசு அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த போட்டி பற்றியும் அதன் அவசியம் தேவை முக்கியத்துவம் பற்றி தமிழ்ச்சங…
-
- 0 replies
- 484 views
-
-
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் தொடர்ந்தும் பலம்பொருந்திய அணிகளுக்கு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணி அதிர்சி வைத்தியம் அளித்து வருகிறது. சுவிற்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற குழு ‘சீ;கான போட்டிகளில், பிரான்ஸை மிக இலகுவாகத் தோற்கடித்து நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதிபெற்றது. மற்றுமொரு ஆட்டத்தில் இத்தாலியும், ரோமானியாவும் சமநிலை பெற்றன. விபரம்: http://swissmurasam.info/content/blogcategory/72/54/
-
- 0 replies
- 795 views
-
-
பிரான்ஸ் அணியில் பிரச்சினை தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவரும் பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் இடையில் எழுந்துள்ள ஒரு தகராறு பிரான்ஸில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டு அணியின் வீரரான நிக்கோலா அனேல்கா தமது அணியின் பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அனுமதிக்கப்படாமல் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியின் இடைவேளையின் போது நிக்கோலா அனேல்கா தமது பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதை அணியில் இருந்த…
-
- 1 reply
- 832 views
-
-
பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம் Published By: SETHU 21 MAR, 2023 | 02:58 PM பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார், இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது. பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முடிவுகள் சில Share பிரான்ஸ் தமிழர் கால்பந்தாட்டச் சம்மேளனம் வடக்கு மாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் சில யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. அவற்றில் சிலவற்றின் முடிவுகள்: காலை 8 மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து புங்குடுதீவு நசரேத் விளையாட்டுக் கழக அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவுசெய்ததை அடுத்து ஆட்…
-
- 2 replies
- 501 views
-
-
CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி, கிழக்கு துர்கிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றிவாகை பெறும் நம்பிக்கையோடு தமிழர்கள் காத்திருக்கின்றனர். சனிக்கிழமை (14 – 12 – 2019) பிரான்சில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி வெற்றிகொள்ளும் பட்சத்தில் இறுதிச்சுற்றுக்கு தேர்வாவதோடு, வெற்றிக்கிண்ணத்துக்கான இறுதியாட்டம் மசிடோனியா நாட்டில் இடம்பெற இருக்கின்றது. தற்போது பிரான்சில் நிலைகொண்டுள்ள தமிழீழ உதைபந்தாட்ட அணி, தேர்வுச்சுற்றுக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், உதைபந்தாட்ட இரசிகர்கள், சமூக-அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் அணிக்கு தோழமையினை தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ…
-
- 0 replies
- 446 views
-