விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
டிவில்லியர்ஸின் சொந்த ஊரு எந்த "கிரகம்"னே தெரியலையே... ! சென்னை: நிச்சயம் ஆப்ரகாம் டிவில்லியர்ஸின் சொந்த ஊர் இந்த பூமி கிடையாது. வேறு ஏதோ கிரகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் இந்த மனிதர் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸின் சாதனை முகத்தைப் புகழ்ந்து பேசுகிறவர்கள். காரணம் டிவில்லியர்ஸின் பன்முக திறமைகள்தான். கிரிக்கெட்டில் மட்டுமே அவர் சாதனையாளராக இருக்கவில்லை... தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக என்று அடிக்கடி ஜெயா டிவியில் வரும் பாட்டு போல, இவர் தொட்ட இடமெல்லாம் தூள் கிளப்பியுள்ளார். இவரது திறமைகள், சாதனைகள், வெற்றிகளைப் பார்க்கும் யாருக்குமே மனுஷனாய்யா நீ என்று ஆச்சரியம்தான் வரும். அப்படித்தான் இருக்கிறது ட…
-
- 3 replies
- 750 views
-
-
136ஆவது ரோயல் - தோமியன் 'பிக் மெட்ச்' போட்டி ஆரம்பம் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 136 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1879ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் உலக கிரிக் கெட் வரலாற்றில் நீண்டகாலமாக இடை விடாது நடத்தப்பட்டுவரும் பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டியாகும். இவ்விரு கல்லூரிகளினதும் உத்தியோகபூர்வ வர்ணம் நீல நிறமாகக் காணப்படுவ தால் நீலங்களுக்கிடையிலான சமர் என அழைக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 367 views
-
-
தோனியிடம் சிக்கித் திணறிய மூத்த புகைப்பட பத்திரிகையாளர் பெர்த்தில் நேற்று தோனியிடம் பேச்சு கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் சரியாக அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பேடு கட்டிக் கொண்டு வலை வேலி அருகே இந்திய கேப்டன் தோனி நின்று கொண்டிருந்த போது மூத்த புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், தோனியிடம் பேச்சுக் கொடுத்த போது, “மாஹி (தோனி) நீங்கள் 2004-05-ல் இருந்தது போல் இல்லை. அப்போதெல்லாம் அட்டகாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பீர்கள்.” என்றார். அதற்கு தோனி, “பொய் சொல்லாதீர்கள். 2004ஆம் ஆண்டு உங்களுக்கு என்னை தெரியவே தெரியாது, நீங்கள் என்னவென்றால் புகைப்படத்துக்கு நான் போஸ் கொடுப்பது பற்றி கூறுகிறீர்கள்.” என்றார். உடனே அந்த புகைப்பட பத்திரிகையாளர் தன…
-
- 0 replies
- 517 views
-
-
அசோசியேட் அணிகளுக்கு தோனி முழு ஆதரவு நடப்பு உலகக்கோப்பையில் அசோசியேட் அணிகளின் ஆட்டம் குறித்து தோனி புகழ்ந்து பேசியதோடு அந்த அணிகளை மேம்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட் ஆட்டம் உலகளாவிய தன்மையை எட்ட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வணிக நோக்கத்தை விடவும் முக்கியமானது கிரிக்கெட் ஆட்டம் எங்கு வளர்கிறது என்பதை அறுதியிடுவது. அங்கெல்லாம் கிரிக்கெட் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பதையும் நாம் பார்க்கவேண்டும். எங்கேனும் சிறு தீப்பொறி இருந்தால் கூட அதனை பெருந்தீயாக மாற்ற வேண்டும், அதாவது அதன் தீவிரத்தை. ஆப்கானிஸ்தான் அல்லது வேறு சில அணிகளை …
-
- 0 replies
- 540 views
-
-
பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்பு: உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டது பற்றி உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனிவாசன் இதனைச் செய்திருக்கக் கூடாது. அவரது நடவடிக்கைகளில் முரண்பட்ட லாப நோக்குடைய இரட்டை நலன் இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்படியிருக்கையில் அவர் பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொள்வது எங்ஙணம்? சீனிவாசனின் இந்த நடவடிக்கை பற்றிய நிலைப்பாட்டை வழக்கறிஞர் கபில் சிபல் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சீனிவாசனுக்கு இரட்டை லாப நோக்க முர…
-
- 1 reply
- 385 views
-
-
இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்த்தான் அணிக்கும் இலங்கையணிக்குமிடையிலான உலகக் கிண்ணப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தாவீதும் கோலியாத்தும் மோதும் போட்டி என்று பலரும் வர்ணித்திருந்தாலும்கூட, இப்போட்டியிலும் சில அதிசயங்கள் நிகழலாம் என்று ஆருடம் கூறியவர்களும் இருக்கிறார்கள். அப்படி கூறப்பட்ட ஆருடங்களுக்கு ஏற்ப, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி ஆப்கானிஸ்த்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நியுசிலாந்தில் படாத பாடு பட்டு விளையாடி வரும் இலங்கையணிக்கு ஆப்கானிஸ்த்தானுடனான இந்தப் போட்டி மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவும், தொலைந்துபோன தமது விளையாட்டுத் திறனையெல்லாம் மீண்டும் கண்டுபிடிப்பதற்கான தேடல்க்களமாகவும் நிச்சயம் இருந்திருக்…
-
- 23 replies
- 1.6k views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓவர்களை 40-ஆக குறைக்க ஐசிசி திட்டம்! அடுத்த உலக கோப்பையில் அமுல்? லண்டன்: அடுத்த உலக கோப்பை போட்டியை 40 ஓவர்கள் கொண்டதாக மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு மொத்தம் 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் 60 ஓவர்களாகவே நடத்தப்பட்டன. முதல் முறை 1987ம் ஆண்டுதான் உலக கோப்பையில் முதல்முறையாக 50 ஓவர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடப்பு உலக கோப்பை வரையிலும் 50 ஓவர்களே நடைமுறையில் உள்ளது. டி20 பிரபலம் தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ள…
-
- 1 reply
- 432 views
-
-
போட்டிகளின் முடிவுகளை புரட்டி போடும் 'அம்பயர் கால்'! உலக கோப்பை கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை!! மெல்போர்ன்: டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. டிஆர்எஸ் நடைமுறைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவிப்பது சரிதான் என்ற பேச்சு பரவலாக எழுவதற்கு, இந்த சர்ச்சைகளே காரணமாக அமைந்துள்ளன. கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள இரு நடுவர்களுக்கும், பேட்ஸ்மேன் அவுட் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், மூன்றாவது நடுவரை தொடர்பு கொண்டு கேட்பது நடைமுறை. மூன்றாவது நடுவர் தொலைக்காட்சியில் மீண்டும் அந்த காட்சியை போட்டு பார்த்து முடிவை அறிவிப்பார். சிவப்பு விளக்கை ஆன் செய்தால், பேட்ஸ்மேன் அவுட் என்றும், பச்சை விளக்…
-
- 0 replies
- 665 views
-
-
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை: தேதிகளை முடிவு செய்ய கூட்டம் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணையை உறுதி செய்வதற்காக சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் அதிகாரிகள் கத்தாரில் கூடுகிறார்கள். தொடக்கம் முதலே கத்தார் போட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்தப் போட்டிகளை குளிர்காலத்தில் நடத்துவதே யதார்த்தமாக இருக்கும் என்று தேதிகளை முடிவு செய்யும் சிறப்புக் குழுவின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை எந்தெந்தத் தேதிகளில் நடத்துவது என்பது குறித்து ஃபிஃபாவின் குழு ஆராய்ந்து வருகிறது. கத்தாரில் அப்போட்டியை 2022ஆம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்படு…
-
- 0 replies
- 460 views
-
-
ஓய்வுபெறும் எண்ணமில்லை! சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் என்னால் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக்கிண்ணத் தொடரோடு இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர். இந்நிலையில் தற்போது தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று டில்ஷான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்இ ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் எண்ணம் எனக்கிருக்கிறது. உலகக்கிண்ணத் தொடர் முடிந்த பின்னர் இது க…
-
- 0 replies
- 624 views
-
-
உலககோப்பை அரங்கை நிர்மாணிக்கும் பணியாளர்களின் அவலம் - காணொளி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடும் வெப்பத்தை தவிர்க்க, 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலககோப்பையை நவம்பர் , டிசம்பரில் நடத்துமாறு உலக கால்பந்து சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. டோஹாவில் நடந்த ஒரு சந்திப்பை அடுத்து இந்த பரிந்துரை வந்திருக்கிறது. அதேவேளை, இந்த போட்டிக்கான அரங்கத்தை நிர்மாணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாரில் படும் கஸ்டங்கள், பாதுகாப்பின்மை குறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது. பிபிசி ரகசியமாக சேகரித்த சில தகவல்கள். <iframe width="400" height="500" frameborder="0" src="http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F02%2Femp…
-
- 0 replies
- 315 views
-
-
துணை அங்கத்துவ நாடுகளின் கையில் அவமானப்படும் ஐசிசி அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவமுடைய நாடுகளாகக் காணப்படுகின்றன. இவை டெஸ்ற் விளையாடும் தகுதியையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக 38 நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபையானது துணை அங்கத்துவ நாடுகளாக அங்கீகரித்துள்ளது. இந்த 38 நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹொங் கொங், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தினைக் கொண்ட துணை அங்கத்துவ நாடுகளாகக் காணப்படுகின்றன. இரண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு இட…
-
- 0 replies
- 354 views
-
-
சதுரங்கத்தில் மட்டுமன்றி கராத்தேயிலும் சளைக்காத ஹரிகிஷன் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய, சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்கiயும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய கண்டி, புனித திருத்துவ கல்ல}ரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், கராத்தேயிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை சோடோகன் கராத்தே கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8ஆவது தேசிய கராத்தே சம்பியன் கிண்ண போட்டி, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்ற…
-
- 0 replies
- 404 views
-
-
ஐ.சி.சி. மனநிலை குறித்து அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்ட் வருத்தம் 2019 உலகக்கோப்பை போட்டிகளுக்கு 10 டாப் அணிகள் மட்டுமே விளையாடுமாறு செய்யும் ஐசிசி திட்டத்தின் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் ஐசிசி நிர்வாகிகளின் மனநிலை பற்றி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அசோசியேட் அணிகளுக்கான வாய்ப்புகள் ஏற்கெனவே குறைக்கப்பட்டு வரும் நிலையில் உலகக்கோப்பை, ஐசிசி போட்டிகளில் மட்டுமே அந்த அணிகள் ஆடி வருகின்றன. தற்போது அதிலிருந்தும் இந்த வளரும் அணிகளை கழற்றி விடும் முடிவு குறித்து போர்ட்டர்ஃபீல்ட் கூறும்போது, "வெறும் டாப் 10 அணிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டால் அதனை உலகக்கோப்பை என்று அழைக்க முடியாது. எப்போதும் …
-
- 1 reply
- 543 views
-
-
பாக். ரசிகர்களை கடுப்பேத்துகிறதா புதிய 'மோக்கா' வீடியோ? இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது. தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இணையத்தில் ஹிட் ஆனது. முதல் வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டத்தை முன்வைத்து ஒரு விளம்பரத்தை பதிவேற்றம் செய்தது. அது, இந்திய ரசிகர்களின் ஏக்கத்தைக் குறிப்பாதாக நையாண்டியுடன் இருந்தது. அந்த வீடியோவுக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ரசிகர்கள் ஒரு …
-
- 0 replies
- 854 views
-
-
சந்திமால், திரிமான மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஜனித் போன்ற திறமையான வீரர்கள் இல்லாமல் இலங்கை எவ்வாறு கிண்ணத்தை வெல்லும்?: அர்ஜுன ஆதங்கம் இலங்கை அணியில் சந்திமால், திரிமான, கருணாரத்ன போன்ற இளம் வீரர்களுக்கு கடந்த 4 மாதங்கள் சரியாக விளையாட வாய்ப்புகள் வழங்கவில்லை. இவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி தன்மையை மாற்ற கூடிய ஜனித் பெரேரா போன்ற திறமை வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் எவ்வாறு இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என பாரக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை அணி தொடர்பில் இன்று அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை அணியானது…
-
- 0 replies
- 356 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு 'பாலக்காட்டு மாதவன்'.... கிருஷ்ண சந்திரனின் பிளாஷ்பேக்! சென்னை: தமிழக தலைநகர் சிங்கார சென்னையில் பள்ளி கல்வி பயின்ற மலையாளத்து கிருஷ்ண சந்திரன், இன்று ஐக்கிய அரபு எமிரேட்டின் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் கிருஷ்ண சந்திரன் விளையாடும்போது அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இவருக்காகவும் கைத்தட்டல் ஒலிக்கப்போகிறது. ஐக்கிய அரபு எமிரேட் இந்த உலக கோப்பையில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், அந்த அணியின் ஒரு வீரரின் பெயரை பார்த்ததும் இந்தியர்களுக்கு.. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம். இது.. நம்மூர்காரர் பெயர் மாதிரி உள்ளதே என்பதுதான் அந்த சந்தேகம். அந்த பெயருக்கு சொந…
-
- 0 replies
- 642 views
-
-
குமார் தர்மசேனவின் தீர்ப்பு அவருக்கு உலை வைக்குமா? இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பர்னில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண குழு ஏ போட்டியில் இங்கிலாந்தின் கடைசி ஆட்டக்காரருக்கு மத்தியஸ்தர் குமார் தர்மசேன வழங்கிய தீர்ப்பு முழு கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறப்பு மத்தியஸ்தர்கள் குழாமில் இடம்பெறும் மத்தியஸ்தர் ஒருவரிடமிருந்து இத்தகைய தீர்ப்பு ஒன்று வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்…
-
- 0 replies
- 686 views
-
-
வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் காபூல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே அடியாக மூழ்கிப் போய் ஆர்வ மிகுதியால் ஜெயிப்பதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி, வங்க தேசத்தை வீழ்த்தியதாக டுவிட் போட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம். ஆப்கானிஸ்தான் - வங்க தேசத்திற்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியானது கான்பெராவில் இன்று நடைபெற்று வருகின்றது. வங்கதேசத்தை வெல்வதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் ஜெயித்து விட்டதாக டிவிட் போட்ட அமரிக்க தூதரகம் போர்களுக்கு பெயர் போன நாட்டின் கிரிக்கெட் களமும் பல கோடி பேரினை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வளைதளங்களில் கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலையில், நடைபெற்று வருகின்ற…
-
- 2 replies
- 492 views
-
-
பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் கெட்ட வார்த்தையிலேயே என்னை திட்டுராங்க... ஃபீல்டிங் கோச் பரபரப்பு புகார் கராச்சி: கெட்ட வார்த்தைகளால் சீனியர் வீரர்களை தன்னை திட்டுவதால், ராஜினாமா செய்யப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் கிரான்ட் லுடென் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 2007 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் தோற்ற நிலையில்தான், அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமாக உயிரிழந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் ஆடுவதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களும் சரியான நேரத்திற்கு ஹோட்டலுக்கு திரும்பவில்லை என்பதற்காக அபராதத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் புதிய ச…
-
- 0 replies
- 563 views
-
-
பெப்ரவரியில் ஏலம் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் யுவராஜ் சிங், கெவின் பீற்றர்ஸன் மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். எனினும் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகளில் யுவராஜ் சிங்கை றோயல் சலஞ்சர்ஸ் அணியும் கெவின் பீட்டர்ஸன், தினேஸ் கார்த்திக், உள்ளிட்ட 14 வீரர்களை டெல்லி அணியும் நீக்கியுள்ளது. இந்நிலையில் பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஏலத்தில் எத்தனை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/01/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8…
-
- 4 replies
- 757 views
-
-
6 விக்கெட்டுகளால் சென்.ஜோன்ஸ் வெற்றி பி.துவாரகசீலனின் சகலதுறை ஆட்டத்தின் காரணமாக சென்.ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கெட்களால் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணியை வெற்றிபெற்றது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு 3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த சுற்றுப்போட்டியின் போட்டியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணிக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) மற்றும் சனிக்கிழமை (04) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 60.4 ஓவர்களில் அ…
-
- 2 replies
- 744 views
-
-
ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்களில் அதிகம் பணம் ஈட்டுபவராக உள்ளார், 2014ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.டபிள்யூ.வின் டாப் 50 பணக்கார ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மிட்செல் ஜான்சன் 10-வது இடத்திலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 11-வது இடத்திலும், டேவிட் வார்னர் 12-வது இடத்திலும் உள்ளனர். ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஈட்டிய தொகை 4.5 மில்லியன் டாலர்கள். மிட்செல் ஜான்சன் 4.1 மில்லியன் டாலர்களையும், மைக்கேல் கிளார்க் 4 மில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூ…
-
- 0 replies
- 403 views
-
-
தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…
-
- 0 replies
- 876 views
-
-
கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும். இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் கு…
-
- 12 replies
- 1.1k views
-