விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இலங்கைக்கு ஆறுதல் வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் இன்று நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கையணி சார்பாக துடுப்பாட்டவீரர்கள் கமில் மிஷாரவும், ஜனித் லியனகேயும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, மத்தியூ வேட்டின் ஆட்டமிழக்காத 43 (27), கிளென் மக்ஸ்வெல்லின் 29 (21), ஜொஷ் இங்லிஷின் 23 (20), டே…
-
- 1 reply
- 327 views
-
-
பிரக்ஞானந்தா: 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னை சிறுவனின் புதிய சாதனை #Praggnanandhaa விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் 25 ஜூன் 2018 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRAGGNANANDHAA R./ FACEBOOK படக்குறிப்பு, பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய் ஆன்லைனில் நடந்துவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்திருக்கிறார். தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கார்ல்சன…
-
- 1 reply
- 600 views
- 1 follower
-
-
2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதற்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அத்துடன், சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். வைரலாகும் ஜெயலலிதாவின் கோரிக்கை கடிதம் கடந்த 2013ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட தடை விதிக்க வேண்டும் என அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்க்கு கடிதம் எழுதி இருந்தா…
-
- 0 replies
- 381 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை ராணுவ வீரர் மஹீஷ் தீக்ஷன? BoycottChennaiSuperKings ட்ரெண்டாவது ஏன்? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GARETH COPLEY-ICC VIA GETTY IMAGES படக்குறிப்பு, டி20 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை - நமீபியா இடையிலான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மஹீஷ். (கோப்புப்படம்) அண்மையில் நடந்து முடிந்த ஐபில் மெகா ஏலம் 2022ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்தற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. …
-
- 9 replies
- 824 views
- 1 follower
-
-
என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது | இந்துகாதேவி February 15, 2022 இந்துகாதேவி என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்ட முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இந்துகாதேவி கணேஷ் அவர்களுடனான நேர்காணல்…. நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் “பெண்கள் அதிகம் இத் துறையைத் தெரிவு செய்வதில்லை இருப்பினும் நான் இத் துறையைத் தெரிவு செய்தால், அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்ற ரீதியிலே இத் துறையை தெரிவு செய்திருந்தேன்.” கேள்வி : உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றினை வழங்க முடியுமா? பதில் : என்னுடைய பெயர் இந்துகாதேவி கணேஷ். என்னுட…
-
- 0 replies
- 436 views
-
-
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும் சாமிக, பினுர மற்றும் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்க…
-
- 0 replies
- 289 views
-
-
உதைபந்து,ஆபிரிக்க கோப்பையை செனகல் வென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் செனகல் எகிப்துக்கு எதிராக விளையாடியது. இறுதிவரை யாரும் கோலை போடாததால் பனால்டி உதை மூலம் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
-
- 0 replies
- 639 views
-
-
IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கோப்புப் படம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ: நேற்றைய போட்டியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமை…
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறை சாம்பியன் ஆனது - வரலாற்று சாதனை அஷ்ஃபாக் அஹ்மத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய கேப்டன் யஷ் துல் அண்டர்-19 (U19) உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த நாடும் படைத்திராத சாதனையை இந்தியா பதிவு செய்திருக்கிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யஷ் துல் தலைமையிலான இந்திய இளம் பட்டாளம் நாட்டிற்காக 5வது முறை கோப்பையை வென்றுள்ளது. U19 உலகக்கோப்பை தொடரில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை கோ…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
பெரும் எதிர்பார்ப்பு- எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்! பெரும் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றன. இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக குளிர்கால ஒலிம்ப…
-
- 1 reply
- 367 views
-
-
இந்தியா vs இங்கிலாந்து அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று இறுதிப்போட்டி 46 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்திய அண்டர் 19 அணி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு 19 வயதுக்கும் குறைவானவர்களுக்கான அண்டர்-19 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஓர் அங்கமான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. 1988ஆம் ஆண்டு முதல் முறையாக அண்டர்-19 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தமிழர்; U19 உலக கோப்பை அணியில் நிவேதன் ராதாகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, நிவேதன் ராதாகிருஷ்ணன் (கீழ் வரிசையில் இடமிருந்து 2ஆவது) கிரிக்கெட் ஆடுகளத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் ஆல்ரவுண்டராக ஜொலிப்பதற்கு பெரும் உழைப்பு தேவை. ஆனால் இங்கு ஒரு 19 வயது தமிழர், இரண்டு கைகளாலும் மிகத்துல்லியமாக சுழற்பந்து வீசுவதோடு U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியவுக்காக விளையாடி பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அத்தியாயம் படைக்க முனைப்பு காட்டும் அந்த தமிழக வீரரின் பெயர் நிவேதன் ராதாகிருஷ்…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி! இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக Rovman Powell 107 ஓட்டங்களையும், Nicholas Pooran 70 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 225 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓ…
-
- 3 replies
- 406 views
- 1 follower
-
-
ரஃபேல் நடால் 21 டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் வென்று உலக சாதனை - ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TPN/GETTY IMAGES ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோருக்கு இடையே நடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ரஃபேல் நடால். மெல்பர்னில் 5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்றார் நடால். இதன்மூலம் 21 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால். அமெரிக்காவின் டென்னிஸ் …
-
- 7 replies
- 588 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆஷ்லே பார்டி மகுடம் சூடினார்! அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று மகுடம் சூட்டியுள்ளார். 44 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த தொடரில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்ரேலிய வீராங்கனை என்ற பெயரையும் ஆஷ்லே பார்டி வென்றுள்ளார். மெல்போனில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துபெற்ற குறித்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று இடம்பெற்றது. இதில் அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்ஸை எதிர்கொண்ட ஆஷ்லே பார்டி போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனை அடுத்து…
-
- 0 replies
- 303 views
-
-
ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்! நடப்பு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, லக்னோ அணிக்கு ‘லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றபோது புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைஸிங் புனே சுப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ள கோயங்கா, இதற்கும் சுப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர்…
-
- 0 replies
- 280 views
-
-
ஸ்மிருதி மந்தனா: 2021ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஐ.சி.சி. தேர்வு செய்த இவர் யார்? 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஓபனரான ஸ்மிருதி மந்தனா 2021ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவர் ரேச்சல் ஹேகோ ஃபிளின்ட் கோப்பையையும் பெறுகிறார் என்று அறிவித்துள்ளது ஐ.சி.சி. இது தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டிலும் 2021ம் ஆண்டில் சிறப்ப…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
கே.எல். ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் - டிராவிட்டின் மனம் திறந்த கருத்தால் அடுத்து என்ன நடக்கும்? 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@KLRAHUL11 இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு இன்னும் மிடில் ஆர்டர் கிடைக்கவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் அணியின் திறமையை சரியாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மறுபுறம், வீரர்களின் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களின் திறமைகளை பயன்படுத்துவதில் சமமின்மை இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆம்…
-
- 1 reply
- 330 views
- 1 follower
-
-
ஒருநாள் தொடரில் இந்தியாவை வைட் வோஷ் செய்தது தென்னாபிரிக்கா! இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி தொடரை வென்று இந்தியா அணியை, வைட் வோஷ் செய்துள்ளது. கேப் டவுனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அத…
-
- 0 replies
- 222 views
-
-
அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம் 2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், தொடரை மார்ச் மாதத்தில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் நடத்துவதானால் மும்பை நகரத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இரண்டாவதாக அஹமதாபாத் நகரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்திற்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில், போட்டியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 289 views
-
-
முல்லைத்தீவு வீராங்கனைக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்! பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இ…
-
- 15 replies
- 746 views
- 1 follower
-
-
மனோஜ் சதுர்வேதி விளையாட்டு செய்தியாளர் பிபிசி இந்திக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா நடந்து முடிந்த இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில், 2 - 1 என்கிற கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது. அடுத்த சில நாட்களில் பல்லாண்டு காலமாக இந்தியாவுக்கு பல முக்கிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை ஈட்டிக் கொடுத்த விராட் கோலி, டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அடுத்தது யார் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்த உள்ளார் என்கிற கேள்விதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முன் எழுந்துள்ளது. தென்னாப்ப…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி மறுப்பு; கொரோனா தடுப்பூசி போடாததால் வெளியேற்றப்படுவார் 16 ஜனவரி 2022, 07:12 GMT பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நோவாக் ஜோகோவிச் ஆண்கள் தரவரிசையில் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது. 34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால…
-
- 8 replies
- 573 views
-
-
சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் பங்குகொள்ளும் முல்லை யுவதி! பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொள்ளும் முல்லைத்தீவு யுவதிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி என்பவரே பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார். இவரது குடும்ப நிதி நிலமைகள் காரணமாக போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் இருந்த யுவதி விடுத்த கோரிக்…
-
- 2 replies
- 1k views
-
-
4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து ஆஷஸ் கிண்ணத்தை கைப்பற்றிய ஆஸி. ஹோபார்ட்டில் நடந்த ஐந்தாவது இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 146 ஓட்டங்களினால் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் அவுஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதில் ஒரு போட்டி சமனிலையில் முடிந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட போட்டி ஹோபர்ட்டில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு …
-
- 1 reply
- 507 views
-